வெள்ளி, நவம்பர் 29, 2013

காயத்ரி மந்திரம்..


வாசமில்லா மலரானேன்...
வானவில்லின் நிறம் எனக்கெதற்கு?

நேசமில்லாத அனாதை நான்
நேசிக்கும் உறவுகள் யார் எனக்கு?

பாசம் என்றுதான் ஓடிவந்தேன்..
பச்சோந்திகளின் கூட்டத்திலே..!

நாசமானது என் பொழுது.
நாயாய் அலைந்ததொன்றே மிச்சம்...

பூசி மினுக்கிப் பேசிடுவார்..
பாசி உள்ளே படர்ந்திருக்கும்...கூசும் செயல்கள் செய்வதற்கு
சிறிதும் தயக்கம் இல்லாதார்..!

காலங்கூட எந்தனுக்காய்
கண்கள் திறந்து பார்க்காதோ...!

வாழும் வாழ்வை வளமாக்கும்
வகையை எனக்காய்ச் சேர்க்காதோ...!

நாவும் வறண்டு போகிறதே...
நல்லவர் யாரெனத் தேடுகின்றேன்..
நோகும் மனத்தை யாரறிவார்..?

நேயம் இல்லா உலகத்திலே..!!!?


இப்படிக்கு 
மருதாணி 

1 கருத்து: