காதலர் தினம்!...நிறைய பேருக்கு புதியதாய் காதல் முளைக்கும் தினம். நிறைய பேருக்கு இருக்கும் காதலை புதுப்பிக்கும் தினம். ஆனால் எனக்கு இது புதுசு. காதலர் தினத்தில் காதல் வர தான் செய்யணுமா? காதல் போக கூடாதா? ஆம் என்றால் இதற்குமேல் படிக்காமல் கிளம்புறது நல்லது.
அவனுக்கு எல்லாமே அவள் தான். எப்படியோ இருந்த வாழ்க்கையை புரட்டி போட்டவள் அவள் தான். அவள் வந்த பிறகு தான் அவனுக்கு வாழனும் என்கிற ஆசை கூட வந்தது எனலாம். காலையில் அவள் சொல்லும் ஹாய் -இல் தான் கண் விழிப்பான். இரவில் அவளின் குட்நைட் - உடன் தான் படுக்கைக்கு செல்வான். திக்கு தெரியாமல் தடுமாறும் பொழுது எல்லாம் அவள் மடியில் விழுவான். அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு வேதம். அவன் கண்ணீர் துடைக்க அவள் கரம் நீட்டினாள். அவளுக்கு நன்றி கடனாக ஏதாவது செய்யணும். அவள் காதலிப்பதை விட 100 மடங்கு அவளை காதலிக்கனும் என்று வெறி கொண்டான் அவன். அவளை திகட்ட திகட்ட காதலித்தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணராமல் அவளை காதலில் திக்குமுக்காட செய்தான். அது அவனுக்கே ஒரு நாள் வினையாக வர ஆரம்பித்தது.
அவனின் அளவு கடந்த காதல் அவளுக்கு ஒரு தொல்லையாக தெரிந்தது. அவனை கொஞ்சம் கொஞ்சமா விட்டு விலக ஆரம்பித்தாள். அதற்காக 1008 காரணம் எல்லாம் அதுவாகவே அவள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தது. அவனுக்கு அவள் பிரிவு ஒரு கொடுமையாக தோன்றியது. உடல் இளைத்தான் உள்ளம் நொந்தான். அவளின் ஒரு பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தான். அவளுக்கு எல்லாமே ஜஸ்ட் லைக் தட் மாதிரி தான். இதையும் அவள் அப்படி தான் எடுத்துகொண்டாள்.
இப்படிக்கு
ஜீவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக