மரங்களடர்ந்த சாலையில்
யாரும் காணாத பின்மதியத்தில்..
கைகள் பிணைத்து நடக்கையில்
ஸ்னேகம் நனைத்த பொழுதுகள்..
வெயிலுணர்த்திய நிழலும்
நிழல் கொடுத்த சுகமும்
சுகம் கொடுத்த அவஸ்தைகளுமாய்
பூமி மறந்த பொழுதுகள்..
உன் கண்ணில் விழுந்த தூசியை
ஊதிக் கலைத்தபின் நிலம் விழுந்த கண்ணீரை
கையில் ஏந்திய பொழுதுகள்..
நம் தாகம் தணித்த அந்த தர்பூசணி விதைகளை
உன்னையறியாமல் பத்திரப்படுத்திய
அந்த ஸ்வர்ணப் பொழுதுகள்..
இட்லி சுட்டு இஸ்திரி போட்டு உன்னை வழியனுப்பி
உன் நிழல் மறையும் வரை..நிலைப்படிகளில் நான்..
என் ஜீவன் ரட்சித்து...என் ஜீவனுக்கு ஒரு ஜீவன் குடுத்து
கொஞ்சமே கொஞ்சமாக எனக்காக வாழும்
என் முன்னாள் காதலனே..
நீ வைத்த மருதாணி சிவக்கும் முன்னே..
உன் நேசம் கலைந்ததென்ன..
வெயிலுணர்த்திய பொழுதுகளை..
நீ மறந்ததென்ன?
இப்படிக்கு
ர.சி.க ன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக