சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
நிலா, வானம், கடல்தீரம்,
வெற்றுத்தாள்களில் மந்திரம்
உச் கொட்டும் கதவுகள்...
அலமாரியில் உறங்கும் நினைவுகள்..
யாருக்காக இதெல்லாம்?
இந்நாள் காதலிக்கும் புரியாது..
முன்னால் காதலிக்கும் போய் சேராது..
அவன் பொய் சொல்வதரிது
அவன் காதலில் தோற்றவன்
மீண்டும் மீண்டும் தோற்றவன்
தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன.
காதல்கள் தெய்வீகமானவை
தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
பொய்களால் காதல் உருவாகிறது.
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
உண்மைதான்..!
காதல் கவிதைகள் காதலிகளை போல..!
சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
அவ்வபோது சில காதலிகளும்..!
எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
எனினும் நண்பர்களே கேளுங்கள் ..
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை!
இப்படிக்கு,
காதலை மட்டும் காதலிக்கும்
J.e.e.v.a
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக