நல்ல நண்பன் என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. நான் சாட் வந்த புதுசுல பயபுள்ள அதே சாட் ல வெங்காயம் வித்துகிட்டு இருந்தான். கூடவே நண்பா நண்பா-னு பேசிக்கிட்டு இருப்பான். எனக்கும் பய மேல அம்புட்டு பாசமுன்னே. சரி நம்ம கூட சரிக்கு சமமா மொக்க போடுறானே-னு அவனையும் கூடவே வச்சுகிட்டு வர்ற போற பொட்டை புள்ளைங்க கைய புடிச்சி இழுத்துகிட்டு இருந்தோம். ஆனா நம்ம ஆளு நண்பன் இருக்கானே சொக்க தங்கமுன்னே. பொண்ணுகள நிக் நேம் பார்த்தா பயபுள்ள அப்புடியே பொங்கிருவான். ஆனா பாருங்க, இலவம் மரத்த தேடி தான் கிளிகள் போகுது. அவன தேடி தான் போட்ட புள்ளைங்க போகுது. எனக்கெல்லாம் வயித்தேரிச்சல்னே! இருந்தாலும் அங்கையே டேரா போட்டு மல்லுக்கட்டிக்கிட்டு கிடந்தோம். பேசிக்கலி நாங்க ரெண்டு பேருமே வெட்டி முண்டம் வீணாப்போன தன்டமுங்க. ஹி..ஹி..ஹி.
என்னைய விட 3 வயசு கம்மின்னே அவனுக்கு. பாக்குறதுக்கு சின்ன பையன் போல தான் இருந்தான். “என்ணண்ணே..இங்கிட்டு ஒரு எழவும் புரிய மாட்டிங்குது. இவிங்க இப்படித்தான் இருப்பாயிங்களா..” என்றான். சிரித்துக் கொண்டன். அந்த தமிழை கேட்க ஆசையாய் இருந்தது. வாய் நிறைய “அண்ணே..அண்ணே..” என்றுதான் கூப்பிடுவான்..
“அண்ணே..எப்படிண்ணே இருக்கீங்க..”
“அண்ணே..சாப்ட்டியாண்ணே ..”
“அண்ணே..கிளம்பலாமாண்ணே..”
“அண்ணே..ரொம்ப நன்றிண்ணே..”
இப்படி வாய் முழுக்க அண்ணன்கள். ரொம்பவும் மரியாதை கொடுத்தான்..
“டேய் நண்பா . என்னை பெயரை சொல்லியே கூப்புடுடா..”
“போங்கண்ணே..உங்களைப் போயி..” (அப்படியே மட்டையா மடங்குனான்). பெரியவங்களுக்கு மரியாத குடுக்கிறத அந்த காமராஜரே இவன்கிட்ட தான் கத்துக்கணும் போல.
ரொம்ப ரொம்ப நெஞ்சை நக்கினான். நானும் அவனை விட 3 வயது மூத்தவன் என்பதையே மறந்துவிட்டேன். என் நண்பனாகவே பழக ஆரம்பித்தேன். முடிந்தவரை அவனுக்கு உதவி செய்தேன். சாட் ல எந்த கம்முனாட்டி கபோதி எந்த நிக் நேம் வச்சு வராங்க-னு எல்லாம் சொல்லி குடுத்தேன். நம்ம ஊர்க்காரனாச்சே என்ற பாசம்தான் அதிகம் இருந்தது. இப்படி போய் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் என்னிடம் கேட்டான்..
“அண்ணே..தண்ணியடிப்போமா..”
என்னிடம் உள்ள ஒரே கெட்டபழக்கம் தண்ணியடிக்க பழகாததுதான். (ஹி..ஹி..ஹி..) அடிபம்பில் கூட இரண்டு வாளி தண்ணியடிப்பேன், ஆனால் மருந்துக்குகூட மது(தியேட்டர் இல்லைண்ணே) பக்கம் செல்ல மாட்டேன். ஒரு புடலங்காய் சத்தியமும் இல்லை. நான் அந்த பக்கம் செல்ல நினைத்தாலே, அய்யனார் வேஷம் போட்ட வினுசக்கரவர்த்தி மாதிரி எங்கப்பா கையில் அருவாளோடு நாக்கை துருத்திக் கொண்டு ஓடிவரும் காட்சி என்முன் தோன்றுவதால். ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும். கேட்க, கேட்க கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றும் தண்ணியடித்தவர்களின் உளறலை கேட்க சிரிப்பாக இருக்கும். அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். நண்பன் வீட்டில் பாட்டில் ஓபன் பண்ணுவது என்று முடிவானது.
கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..
“சாமி..நல்லா போதை ஏறணும்..” (ரொம்ப பயபக்தி...நாதாரி)
ஓபன் பண்ணுவதற்கு முன்னால், மரியாதை தெரிஞ்ச பய, பவ்யமாக என்னிடம் கேட்டான்..
“அண்ணே..உங்க முன்னாடி சரக்கு அடிக்கபோறேன் தப்பா எடுத்துக்க மாட்டிங்கள்ள..”
எனக்கு புல்லரித்துப்போனது. என்ன ஒரு பாசம்..என்ன ஒரு பாசம்..
“தம்பி..நீ எனக்கு தம்பி இல்லைடா..நண்பேண்டா..ஒரு வார்த்தை கேட்ட பார்த்தியா…அதுவே எனக்கு போதும்டா..தைரியமா அடி..”
கண்ணை மூடிக்கொண்டு முதல் ரவுண்டு உள்ளே விட்டான்..நானும் இருக்கிற சைடுடிஷ்களை காலி பண்ண ஆரம்பித்தேன்.
“அண்ணே..எனக்கு நீங்கதாண்ணே உண்மையிலேயே அண்ணே..நீங்க இல்லாம எனக்கு யாருமே இல்லேண்ணே..நீங்க ஹெல்ப் பண்ணலைண்ணா..ப்ச்..” (பீல் ஆக ஆரம்பிச்சான்).
ரொம்ப பீல் பண்ணினான்..
“விடுடா தம்பி..நம்ம ஊர்க்காரனாயிட்ட..”
இப்போது ரெண்டாவது ரவுண்டு உள்ளே விட்டான்..
“அண்ணே..நீங்க அண்ணே..நானு தம்பி..”
“ஆமாண்டா தம்பி..”
“இல்லை..நீங்க ஒத்துக்க மாட்டீங்குறீங்க..நீங்க தம்பி..நான் அண்ணே..சாரி..சாரி..நீங்க அண்ணே..நான் தம்பி..”
“ஓகே தம்பி..நான் வரட்டா..”
என்ன நினைத்தானென்று தெரியவில்லை..மூன்றாவது ரவுண்டையும் உள்ளே விட்டான்..
“டே..அண்ணே..உக்காரு..”
சரி பயபுள்ள வேற யாரையாவது சொல்லுறான்னு அங்கிட்டு பார்த்தா ஒருத்தனையும் காணோம். ஆஹா..அப்ப என்னையத்தான் சொல்லுறானா..
“டே..தம்பி..என்ன இது..”
“டே..வெளக்கெண்ண..உக்காருடா..ஒரு தடவை சொன்னா கேட்காது..புடிங்கி” ங்கிறான்..எனக்கு ஆடிப்போயிருச்சுண்ணே..
“டே..தம்பி..உனக்கு தலைக்கு போதை ஏறிருச்சு..ஒழுங்கா தூங்கு..”
“போடா..சொம்பு..ஒருதடவை சொன்னா தெரியாது..வூட்டுல போயி என்னத்த புடுங்க போற..உக்காரு ஒழுங்கா..இல்லைண்ண்ணா…இந்த பாட்டில வுட்டு மண்டையில ஆட்டிப்புடுவேன்”
ஆத்தாடி..எனக்கு கொலைநடுங்கிப்போச்சுண்ணே..உசிருக்கு பயந்து அப்படியே உக்கார்ந்துட்டேன்.. இன்னொரு ரவுண்டு உள்ளே விட்டான்..
“என்ணண்ணே..தப்பா எடுத்துக்காதண்ணே..நீ அண்ணே..நான் தம்பி.. சொல்லு..நீ யாரு..”(ஐயோ ..கூப்ட்டு வச்சு எளவு எடுக்கிறானே..).
உசிரு பயத்துல தானா வார்த்தை வந்தது..
“அ…ண்…ணே..”
“நானு..”
“த..ம்…பி..”
உடனே ஆரம்பித்தான்..
“அண்ணே..உங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்கேன்..நாம சின்னபுள்ளையில எம்புட்டு பாசமா இருந்துருப்போம்..”
“டே..நண்பா ..ஒரு மாசமா தாண்டா உன்னோட பழக்கம்..அதுவும் சாட் - ல..சும்மா குடிச்சுப்புட்டு உளறாதே..”
“என்னது..நான் குடிகாரனா..நான் உளறுனா..டே…ய்….”
அவ்வளவுதாண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தையை ஒரே வாயிலிருந்து அப்பதான் முததடவையா கேக்குறேன். சிலவார்த்தையெல்லாம் சின்னபுள்ளையில கேட்டது..காதை பொத்திக்கொண்டேன்..திடிரென்று பயபுள்ள இறங்கிட்டான்..
“அண்ணே..சாரிண்ணே..நல்லா..ஏறிரு..ச்..சிண்ணே..நீங்க கூட ரெண்டு..ரெண்டா..தெரியிறீங்க..ண்ணே..”
சொல்லிக்கொண்டே..பொத்தென்று கீழே விழுந்தான்..ஆஹா..பயபுள்ளைக்கு அடிபட்டுட போகுதுன்னு அவனை அப்படியே தூக்கினேன். அந்த நேரம் பார்த்து எடுத்தான் பாருங்க..ஒரு வாந்தி.. அவ்வளவுதான்.. அவ்வளவு சாக்கடையும் என்மேல்தான்..ஏறக்குறைய குளித்தேவிட்டேன்…அந்த நாத்தம் தாங்கமாட்டாமல் நானும் எடுத்தேன் வாந்தி..
பின்பு என்ன..அவனை எழுப்பி குளிக்கவைத்து..படுக்கையில் போட்டு விட்டு..நானும் குளித்து திரும்ப வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..வாழ்க்கையே வெறுத்துப்போனேன்..திரும்ப வந்து பார்த்தால் ஆளைக்காணோம்..கட்டிலுக்கு கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்..திரும்பவும் உளறினான்..
“ஆ….ஏய்..யா..ரு..யா..அங்க..நிக்க்கு..ற..து..ஐ…லவ்..யூ…என் ..வா..ழ்க்க்..கை..யில்..நடந்த…சம்ப்ப..வங்க..ள்.. நான்...சவுதி....ஒட்டகம்...போ..டா ..மேய்க்க மா..ட்...டேன்"
திரும்பவும் அவனை படுக்கபோட்டுவிட்டு அவனருகில் ஒரு சேர் போட்டு உக்கார்ந்து கொண்டேன்..பய போதையில் எங்கயாவது போய் விட்டால் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம்தான்..காலை 5 மணிவரைக்கும் முழித்தே இருந்தேன்..அசதியில் அப்படியே தூங்கிப்போனேன்..துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம நண்பன் நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..
“அண்ணே..துண்ணூரை எடுத்துக்கங்கண்ணே..”
எனக்கு இருந்த கொலைவெறியில் ஒன்றும் பேசவில்லை..அவனே பேசினான்..
“என்னண்ணே..இம்புட்டு நேரமா தூங்குறது..உடம்புக்கு ஏதும் பிரச்சனையாண்ணே..ஏதோ வாந்தி எடுத்த மாதிரி தெரியுது..
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு. கையில் எதுவும் கிடைக்கலை..அங்கிட்டு கிடந்த பாட்டிலை எடுத்து அவனைநோக்கி ஓடினேன்..அன்னிக்கு ஓடி ஒளிஞ்ச பையன்..இன்னும் என் கையில சிக்கலை..
“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…"
பின்குறிப்பு: நண்பா எங்க இருந்தாலும் ஓவரா தண்ணி அடிக்காதே டா. உன்னைய நம்பி பொண்டாட்டி புள்ளைகுட்டிங்க இருக்கு. அத்தாச்சி வாழ்க்கையும் பார்க்கொணுமில்ல. ஓவரா தண்ணி அடிச்சா உடனே உச்சா போகணும் நண்பா. கொஞ்சம் போதை கம்மி ஆகுமில்ல...
இப்படிக்கு
உன் நலம் விரும்பும்..
ர.சி.க.ன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக