ஏண்ணே ...நீ எல்லாம் பேஸ்புக்-ல என்னண்ணே பண்ணுவே?
காதலிச்சுகிட்டு இருந்தா கவிதையா போட்டு கொல்லுவே. காதலிச்சு கண்டம் ஆனா கருத்து கந்தசாமியா மாறி எங்கள காண்டம் மாதிரி யூஸ் அண்ட் த்ரோ பண்ணுவே. சிலபேரு வேல வெட்டி எதுமே இல்லேன்னா..காலையில கக்கா போறதுல இருந்து ராத்திரி உச்சா போறதுவர ஸ்டேட்ஸ் - ல போட்டு எங்கள நாரடிப்பே..
இதை எல்லாம் விட ...புது ரகம் ஒன்னு இருக்குண்ணே. அது தான் ...பேஸ்புக் போராளிகள் சங்கம். அப்படின்னா என்னனு புரியல-னு மண்டைய சொறியாதண்ணே...நான் சொல்றேன் கேளு...அதாவது புரட்சி புரட்சி-னு புளிமூட்டைய உருட்டுரவைங்க. இந்த நாறிப்போன சமூகத்தை பேர் & லவ்லி போட்டு திருத்த வந்தவங்க. நம்ம ஆளு பேஸ்புக் போராளி தமிழ் "அரசி" இந்த சங்கத்த சேர்ந்தவங்க. புல்லரிக்குதா? மேல படின்னே...உனக்கு தலையே கிரு கிரு - னு சுத்தும்.
சரி அதுக்கு முன்னால...நான் எப்படி இந்த சங்கத்துல சேர்ந்தேன்-னு ஒரு சின்ன பிளாஸ் பேக்!
நானும் ஒரு பேஸ்புக் அக்கௌன்ட் ஓபன் பண்ணி...கடைய சுத்தமா கூட்டி பெருக்கி ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி வச்சுக்கிட்டு வெயிட் பண்ணேன். அட வெண்ணைகளா...ஒருத்தியாச்சும் வரணுமே. ம்ஹும் யாரும் வர மாதிரி தெரியல. அதனால நானே 4 -5 பொம்புள புள்ளைங்க ஐடி-யா தேடி புடிச்சி ஆட் பண்ணேன். என் கிரகம் வந்தது எல்லாம் வெத்து பீசுங்க. ஒருநாளாச்சும் ஒரு மெசேஜ் போட்டு...ராசா நல்லாருக்கிய சாப்டியா-னு கேட்கணுமே. எல்லாம் அகராதி புடிச்ச கழுதைங்க. சரி போங்கடி...னு நானும் அக்கௌன்ட் டி - அக்டிவேட் பண்ணிட்டு போயிட்டேன். இருந்தாலும் மனசுக்குல உறுத்தலா இருந்துச்சு. அது எப்படி..அவன் அவன் பேஸ்புக் வச்சுகிட்டு 4 - 5 பிகரு உஷார் பண்றானுவ. நம்மால முடியாதா?
தன்மான சிங்கம் மறுபடியும் பேஸ்புக்-கு ஓடி வந்துச்சு. ஆனா பாருங்க...என்னோட பேஸ்புக்-ல இருக்கிறவளுக எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி எதாச்சும் ஸ்டேட்ஸ் போட்டுட்டு ஒடிருவாளுக. நானும் விடாம எல்லாத்துக்கும் லைக் போட்டு விடுவேன். நமக்கு கெளரவம் முக்கியமுண்ணே. சிலது கலியாணம் முடிஞ்ச கேஸ். புருசனுக்கு ஆப்பு வைப்பது எப்படி, புள்ளைக்கு டயப்பர் மாத்துறது எப்படி-னு விளக்கமா போட்டு போவாளுக. (விளக்குமாறு பிஞ்சிரும்டி). சிலது வந்து குட் மார்னிங் போடும். நானும் ஆசையா ஒரு லைக் போட்டு பதிலுக்கு குட் மார்னிங் போட்டா எதாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணனுமே? ம்ஹும்..அதோட ஓடி போறவதான் அடுத்தநாள் குட் மார்னிங் ஸ்டேட்ஸ் போட மட்டும் வரும்.
ஒரு நாள் ஒருத்தி வசமா சாட் -ல சிக்குனா. அடிச்சாண்ட ஜீவா லக்கி பிரைஸ் -னு புயல் வேகத்துல மெசேஜ் போட்டேன். நமக்கு தெரிஞ்ச ஹலோ, ஹௌ ஆர் யு? எல்லாம் போட்டேன். இங்க்லீஷ் - ல தஸ்ஸு புஸ்சு- னு அவளும் மெசேஜ் போட்டா. சரிதான் நமக்கு எங்கிட்டு இங்க்லீஷ் வரும். அப்புறம் நான் டக்குனு மாறி..நீங்க தமிழா..?
நீங்க தமிழா...
'------------------'
ஹலோ ...நீங்க தமிழா?
'------------------'
ஹல்லல்லோ....நீங்க தமிழா..ஆ ஆ ஆ
போயிட்டா ...போச கெட்டவ...சிங்கம் அசிங்க பட்டு நின்னுசுண்ணே !
இப்படி பல தடவ சத்தமே இல்லாம பல மொக்க வாங்குனதால...அடிக்கடி அக்கௌன்ட் டி - அக்டிவேட் / அக்டிவேட் பண்ண வேண்டியது போச்சு. கடைசியில பேஸ்புக் காரனே கடுப்பாகி எனக்கு ஈமெயில் அடிச்சான்.
"டேய் ...எளவு எடுத்தவனே....டோமரு...இனி உன் அக்கௌன்ட் ஒருவாட்டி டி - அக்டிவேட் ஆச்சு..உன் பேஸ்புக் அக்கௌன்ட் ஒரேடியா தூக்கிடுவோம்.. ஒழுங்கா பொத்திகிட்டு இரு"
அப்படின்னு ஒரு ஈமெயில் வந்திச்சு..
இந்த கவலையில வாடி வதங்கி...நார் நார கிழிஞ்சி தொங்கிக்கிட்டு இருந்தபோ தான்...நம்ம ஆளு பேஸ்புக் போராளி தமிழ் "அரசி" நட்பு கிடைச்சுது. ஆஹா...அருமையான பெயரு..தமிழ் அரசி. கண்டிப்பா தமிழு தெரிஞ்ச புள்ளையாத்தான் இருக்கணும்-ணு என்னோட 7 ஆம் அறிவு சொன்னதால அவளையும் ஆட் பண்ணேன். கொஞ்சம் நாள் நல்ல தான் போச்சு...சில பல ஸ்டேட்ஸ்கள்..அன்புடன் நலம் விசாரிப்புகள்...இப்படி போய்கிட்டு இருந்தப்போ..திடீர்-ணு ஒரு நாள்....
பிதாமகன் படத்துல சூர்யா டிரெயின் ல சொல்லுவாரே...."சத்தியம் தோற்பதில்லை" அப்படின்னு ஒரு சவுண்ட். என்னடா இதுன்னு பார்த்தா..நம்ம ஆளு பேஸ்புக் போராளி விடுதலை புலிகள் பத்தி ஸ்டேட்ஸ் போட்டிருக்கு. அலறி அடிச்சுகிட்டு லைக் போட்டா ..வரிசையா பயபுள்ள தமிழ் ஈழம், விடுதலை, சமூகம், அறிவியல் - னு பாடம் எடுக்க ஆரம்பிசிடிச்சு.
அடங்கொன்னியா...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை...
சரி இருந்தாலும்...அவங்க நாட்டுப்பணி சிறக்க...மொக்கராசுவின் சில ஐடியாக்கள்...
அண்ணன் ஒன்னொன்னா சொல்றேன்..ஆரவாரம் செய்யாம அமைதியா கேட்டுக்க...!
மொதல்ல பேஸ்புக்ல இருக்கற ப்ரோபைல் போட்டோவ மாத்துங்க...ஈழ போராட்ட வரலாறு தெரிஞ்சவங்க பிரபாகரன் போட்டோவ வெச்சுக்கங்க...”எல்டிடி”னா அப்டீங்க்ரவங்க அண்ணன் சீமான் போட்டோவ வெச்சுக்கங்க...உங்கள இன்னும் அதிதீவிர போராளியா காட்டிக்கணும்னா உடனே ச்சேகுவேரா போட்டோவ வெச்சுக்கங்க..அப்பத்தான் மக்கள் மத்தியில ஒரு க்ரிப்பு கெடைக்கும், போராட்டகாரங்க மத்தியில ஒரு கெத்தா இருக்கும்..என்னது ச்சேகுவேரா ன்னா யாரா...? அடியே ..அது தெரியாதா உனக்கு...சரி விடு..போராளியாஇருக்கறதுக்கு அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டியதில்ல..போட்டோ வெச்சிருந்தா போதும்..! ஆச்சா...!
இப்ப என்னா பண்ணு..டெய்லி நாலு ஸ்டேடஸ் போடு.. “ஈழம் மலரும்” அப்டீன்னு ஒன்னு... ரெண்டாவது“ராஜபக்சே பாடைல போவான்” அப்டீன்னு..மூணாவது “கலைஞர் கட்டைல போவாரு” அப்டீன்னு... நாலாவதா இத்தாலிய சோனியா காந்திய கழுவி ஊத்து...! ஆச்சா...!
அடுத்தது என்ன பண்ற அம்மா வெளிய எங்காச்சும் போகிறப்ப அவங்க பார்க்காதப்ப அப்டியே ஜஸ்ட் ஒரு டூ மினிட்ஸ் (பத்து மணிலேர்ந்து சாயங்கலாம் அஞ்சு மணி வரைக்கும்) பேஸ் புக்ல ஒரு லுக்க போடு... யாரெல்லாம் ராஜபக்சேவுக்கு எதிரா ஸ்டேடஸ் போட்ருக்காங்கலோ அவேங்களுகேல்லாம் ஒரு லைக்க போடு...அப்டியே மனசுக்குள்ள நேரா கொழும்புக்கு போய் ராஜபக்சே தலைல ஒரு கொட்டு கொட்னா மாதிரி ஒரு பீலிங் வரும்..வருதா.?..வருதா ?
அப்படி பீலிங் வந்தா..நீ ராஜபக்சேவ ஜெய்ச்சிட்ட...இப்ப நீனும் ஒரு போராளி.(ஆனா, ராஜபக்சேங்கறவன் நம்ம தமிழின தலைவர் கலைஞர் அவர்களையே அடிச்சு சுருட்டி கவுட்டிக்குள்ள வாங்கி கொல்லப்பக்கம் வழியா குப்பைகுழிக்குள்ள வீசுனவன்னு..) ஆச்சா...இப்ப அடுத்த பேராவுக்கு போ..!
தோழர் தோழர்னு பேசி பழகிக்க.. (இது தெரியாம கப்பிதனமா மாமு, மச்சான், அண்ணன்னு சொல்லிக்கிட்டு இருக்கே நீ) அப்பத்தான் உன்னை கம்யுனிஸ்ட்ன்னு மக்கள் நம்புவாங்கே..கம்யுனிஸ சித்தாந்தம்னா என்னான்னே தெரியாத கம்னாட்டி கப்போதியா கூட நீ இருக்கலாம்..ஆனா தோழர்னு கூப்டறது ரொம்ப முக்கியம்...அப்பத்தான் ஊருக்குள்ள நாலு பேரு உன்னை நம்புவாங்கே..உன் ஸ்டேடச்க்கு லைக் போடுவாங்கே..உன் போராட்டம் வெற்றி அடையறதுக்கு ஏதுவா இருக்கும்...ஆச்சா...?
எதாச்சும் ஒரு ஸ்டேடஸ்ல நெஜமாவே சரக்கு உள்ளவன் நாலு பேரு தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பான்..வாய்ப்ப மிஸ் பண்ணிராத...நேரா உள்ள போ..! அது எந்த டாபிக்கா இருந்தாலும் சரி...டக்குனு“தமிழின துரோகி கலைஞர்க்கு வவுத்தால போவ”ன்னு ஒரு கமேன்ண்ட போடு..போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அங்கேயே வெயிட் பண்ணி பாரு...உன்னை எவனும் மதிக்கிரானன்னு..எவனும் மதிக்கலைனா உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிருச்சு...! இல்ல திடீர்னு எவனாச்சும் யோவ்..யாருய்யா அது லூசு மாதிரி பேசுறேன்னு கேக்ரான்னு வையி...! திரும்பி அதே கேள்விய அவன்ட்ட கேளு..என்ன லூசு மாதிரி பேசுறேன்னு..! அவன் ஷாக் ஆகி உன்னை விட்டுட்டு போயிருவான்...உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிரும்...! ஆச்சா
இப்ப நீனும் ஒரு போராளி...தமிழ்ஈழத்த எப்டியாச்சும் மலர வெச்சுறனும்ங்கற ஒரு நெருப்பு உனக்குள்ள எரிஞ்சுகிட்டே இருக்கணும்..அதுதான் ஒரு உண்மையான போராளிக்கு அழகு...! நேத்து மத்தியானம் ஒரு மூணு மணி வாக்குல கூட எனக்கு பயங்கரமா தோணுச்சு..எப்டியாச்சும் ஈழத்த மலர வெய்ச்சிரனும்னு...அப்பன்னு பார்த்து ஒரு பிரெண்டு வாடா வெளிய போய் சும்மா சுத்திகிட்டு வரலாம்னு ..அர்ஜென்ட்டா கெளம்பி போயிட்டேன்..இல்லேன்னா நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்...!
ஆனா ஒன்னுடி ..பேஸ்புக்ல நம்ப பண்ற கூத்தெல்லாம் பார்த்து ஈழத்துல இருக்கற தமிழர்கள் கண்டிப்பா வாயால சிரிக்க மாட்டாங்கே...!!
நீ அதுக்காக உன் போராட்டத்த விட்றாத...! விடாம போராடு...!
லைக்குகள் அலறும்...ஸ்டேடசுகள் தொடரும்...!
குறிப்பு: இது யார் மனசையும் புண் படுத்துவதற்காக எழுதலீங்கோ. வழக்கம் போல குவாட்டர் கோவிந்தனின் அலப்பரைகள்-னு நினைச்சு படிச்சிட்டு மறந்துடனும்.
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக