ஞாயிறு, நவம்பர் 10, 2013

சதிஷ் மாமாவும் சில பல்புகளும்...


காலையில இருந்து மூளை ரொம்ப பிரெஷா இருக்கு. மூஞ்சி ரொம்ப பிரகாசமா இருக்கு..என்னனு தெரியல கை எல்லாம் பரபரன்னு அரிக்குது. யாரையாச்சும் புடிச்சி கலைக்கலாம்னு பார்த்தா ...எளவு எடுத்த சாட்ல இன்னைக்கு எவனும் / எவளும் வரமாட்டாங்க. ஞாயிற்றுகிழமை.. மொள்ளமாரிங்க எல்லாம் பல்லு விளக்காமலே படுத்திருக்கும் இன்னைக்கு.

என்ன பண்ணலாம்னு டிவி ல நமீதா சுலோமோசன் - ல ஓடி வர காட்சிய பார்த்துகிட்டே யோசிச்சப்ப..சிக்குனான் நம்ம சதிஷ் மாமா. சரி மாமா தான் ரொம்ப நல்லவராச்சே..எம்புட்டு அடிச்சாலும் காதல் பட முருகன் மாதிரி சிரிக்கிறானே..அவர கொஞ்சம் வம்புக்கு இழுப்போம்னு சதிஷ் மாமா பல்பு வாங்குனா எப்படி இருக்கும்னு ....இதை  சமர்ப்பணம் பண்றேன்.(மாமா நோ பீலிங் டா...அழ கூடாது செல்லம்)




சதீஷ் மாமாக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும். ஒன்னு பால்கோவா , இன்னொன்னு பால்கோவா மாதிரியான ஃபிகர். ஆனா பாருங்க இவனுக்கு ஃபிகருங்களை எவ்வளோ பிடிக்குமோ அதுல அஞ்சு பர்சன்ட் கூட ஃபிகருங்களுக்கு இவனை பிடிக்கிறதில்லை.ஏன்னு காரணம் கேட்டா என்னத்தை சொல்றது? மாப்ள ராசி அப்படி! வடிவுக்கரசி மாதிரி இருக்கற ஃபிகருங்க கூட இவனை மதிக்கிறதில்லைன்னா மனுஷனுக்கு எப்படி இருக்கும்?

ஃபிகர் உஷார் பண்றது ஒரு கலை.அதுவும் ஆய கலைகளில் ஃபர்ஸ்ட். அதுக்குன்னு வாழ்க்கைல நிறைய இழக்க வேன்டி வரும். காலைல நேரமே எழுந்து குளிக்கனும்,குறிப்பா பல் தேய்க்கணும்.இதுலயெல்லாம் நம்ம ஆளு செம கில்லாடி. ஃபிகர் வர்றதுக்கு முன்னாடி மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிப்பான், ஆனா அவ இவனைப் பார்த்து கேவலமா ஒரு லுக் விடும் பாரு...நீயா இருந்தா தொங்கிடுவ...பட் மாப்ள கவலைப்பட மாட்டான்.எனக்கு தெரிஞ்சு டெடிகெஷன்னா அது சதிஷ் மாமா தான்.

இப்படிதான் ஒரு நாள் கீழ்பாக் கார்டன் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.நல்லா பேசிட்டு இருந்தவன் திடீர்னு ஜே.டி சாலிங்கர் , ஓ.ஹென்றின்னு என்னென்னவோ பெனாத்துனான்,சைட்ல பாத்தா ஒரு சக்கை ஃபிகர்.சரி அடிச்சு விடுறான்னு நானும் விட்டுட்டேன். 

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கொஞ்ச நேரத்துல கரெக்ட் ஆயிடுச்சி... இவன் ஜாதகத்துல இப்படி நடக்க வாய்ப்பே இல்லையேன்னு யோசிச்சா இந்த பக்கமா ஒருத்தன் வந்து ரேட் பேசிட்டு இருக்கான். சே...ஐட்டம்! ஐட்டம்  உஷார் பண்ண ஓ.ஹென்றி பத்தி பேசுன ஒரே ஆளு நம்மாளுதான்யா!

சரி அதாவது போகட்டும்...ஒரு நாள் ரங்கநாதன் தெருவுல சுத்திட்டு இருந்தோம்.தீபாவளி கூட்டம் வேற. ஃபிகருங்க கூட்டம் கூட்டமா சுத்திட்டு இருக்காங்க.மாப்ளைக்கு எதை எடுப்பது எதை விடுப்பதுன்னே தெரியலை.ஒரு வழியா கூட்டத்துக்கு வெளியில வந்து வாங்கினதெல்லாம் பைக்குள்ளதான் இருக்கான்னு பாத்துட்டு இருக்கேன். போலீஸ்காரர் ஒருத்தர் எல்லாரையும் வெரட்டிக்கிட்டு இருந்தார். சரி வாடா போகலாம்னு திரும்பறதுக்குள்ள சார் ஏதோ பொண்ணைப் பார்த்து வழிஞ்சிட்டு இருக்கார்.டென்ஷன்ல போலீஸுக்கும் கூட்டத்துக்கும் தகராறு நடக்க , அந்த தள்ளுமுள்ளுல " இந்த போலீஸ்கார ....... மவனுங்களே இப்படிதான்டா"ன்னு கத்திக்கிட்டே ஒரு ஆட்டோக்குள்ள போய் விழுந்தான்.ஆட்டோ ல ஒருத்தர் முடியைப் பிடிச்சி மேல தூக்கினார்.பார்த்தா அவரும் போலீஸ். ஷ்ஷ்...யப்பா அவனால நானும் தீபாவளியை வேடிக்கை தான் பாக்க முடிஞ்சது. கொண்டாட முடியலை. அப்பப்போ காதுல ஜெட் ஏர்வேஸ் போகும் ரெண்டு பேருக்குமே.

இவ்வளவு ஏங்க ! கிரடிட் கார்ட் வேணுமான்னு கேட்ட பொண்ணுக்கிட்டு நம்பர் கேட்டு உஷார் பண்றேன்னு அவளை நேர்ல பாக்கப் போய் பேஸ்த் அடிச்சமாதிரி வந்தான். ஃபிகர் எப்படி இருந்துச்சுன்னு கேட்டா ஒன்னுமே சொல்லலை. ஒரே புலம்பல். கூட போனவன் கிட்ட எப்டிடா இருந்தா ஃபிகர்னு கேட்டோம். மேடம் கருணாஸ்க்கு லேடி கெட்டப் போட்டமாதிரி இருந்திருக்காங்க. சரி இன்னிக்கு குவார்ட்டருக்கு மேட்டர் கிடைச்சிடுச்சினு சந்தோஷமா இருந்தா மேட்டர் அது இல்லையாம். இவன் ஃபோன்ல நான் பம்பாய் அரவிந்த்சாமி மாதிரி இருப்பேன்னு புருடா விட்டிருக்கான்..கடைசில அது கோவிச்சுட்டு போயிடுச்சாம்..

இப்போ சாட்-ல  வந்து என்னை சைனா ஃபிகர் டேட்டிங் கூப்பிடுது ஆஸ்திரேலியா ஃபிகர் பார்ட்டிக்குக் கூப்பிடுதுன்னு கலர் கலரா ரீல் விட்டுட்டு அலையுது. அட! சேட்டுக் கட்டை வேணாம்.. ஒரு நாட்டுக்கட்டை...ம்ஹூம்...

இவனைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு. அது அப்பாலிக்கா..


மேலே சொல்லியிருக்கும் அத்தனை உண்மைகளுக்கும் சதீஷ் மாமாவின் ..வீணா போன விளக்கம் கீழே!

உஸ்.அப்பாடா...மாப்ள...நல்ல வேலை...நம்ம கூட வேலை பார்த்த பொண்ணு என் லவ் லேட்டர படிச்சு பார்த்துட்டு நீங்க என் பெரியப்பா மாதிரின்னு சொன்ன மேட்டர எல்லாம் நீ எழுதல. என் மானம் போயிருக்கும்..
(டேய்..மயிறு...அது ஐட்டம்னு எனக்கு எப்டிடா தெரியும்..சினேகா டச்ச்ல இருந்தாலேன்னு அப்ரோச் பண்ணேன்...அவ நெஜமாவே சினேகா போலருக்கு...அதுக்கு நான் என்ன பண்ணுவேன்.அப்பறம் அந்த கிரெடிட் கார்டு பிகர் என் அழகு புடிக்காம கோச்சுகிட்டு போனத சொல்லிடான அந்த பய லோகு..யார்கிட்டையும் சொல்லிடாதடானு சரக்கெல்லாம் வாங்கி குடுத்தனேடா .ச்சே...இந்த பிரெண்ட்ஸ்சுங்களே இப்டிதான் பாஸ்...)


இப்போ முக்கியமான பின் குறிப்பு: இத படிச்சிட்டு சதிஷ் மாமா ஆதரவாளர்கள் ஒன்னு கூடி தொடப்ப கட்டையால என்னை அடிக்கனும்னு நினைச்சா.. தயவு செய்து ஊருக்கு ஒதுக்குபுறமா வச்சு அடிக்கவும்.

சதிஷ் மாமா மேல கருணை உள்ளவர்கள் மனசு தாங்கலேன்னா..சதீஷ் மாமா பெயர எச்சி தொட்டு அழிச்சிட்டு அந்த இடத்துல ராஜ்ஜ் மாமா பெயர போட்டுக்கலாம். எல்லார்க்கும் சான்ஸ் குடுப்பான் இந்த களவாணி!


இப்படிக்கு..
நல்ல நண்பன் சொல்லி குடுத்ததை எழுதும்..
ஜீவா



3 கருத்துகள்: