சனி, நவம்பர் 30, 2013

மீண்டும் அவள்..?



முடிந்துபோன கதை ஒன்றை
தொடர்வதிலென்ன லாபம்?
என் தூக்கம் கலைப்பது உன் பாவம்!

நமக்கான காதல் கவிதைகளில்
முற்றுப்புள்ளியுடன் முடிந்துபோயின உன் வரிகள்
கேள்விகுறிகளுடன் நான் மட்டும்?

மண்டியிட்டு கேட்டுகொள்கிறேன்
என் மரணப்படுக்கையிலும்...
உன் இதழ் திறந்து என் பெயரை உச்சரிக்கதே...
உயிர்தெழுந்து மீண்டும் உன்னை காதலித்துவிடுவேன்..
என்ற பயம் எனக்கு!






நான்..ரசிகன்!

வெள்ளி, நவம்பர் 29, 2013

மீரா வருவாளா..கண்ணன் கேட்கிறான்!


மனதை மயக்கிய ஒரு பாடல்....மீராவுக்காக!





காயத்ரி மந்திரம்..


வாசமில்லா மலரானேன்...
வானவில்லின் நிறம் எனக்கெதற்கு?

நேசமில்லாத அனாதை நான்
நேசிக்கும் உறவுகள் யார் எனக்கு?

பாசம் என்றுதான் ஓடிவந்தேன்..
பச்சோந்திகளின் கூட்டத்திலே..!

நாசமானது என் பொழுது.
நாயாய் அலைந்ததொன்றே மிச்சம்...

பூசி மினுக்கிப் பேசிடுவார்..
பாசி உள்ளே படர்ந்திருக்கும்...கூசும் செயல்கள் செய்வதற்கு
சிறிதும் தயக்கம் இல்லாதார்..!

காலங்கூட எந்தனுக்காய்
கண்கள் திறந்து பார்க்காதோ...!

வாழும் வாழ்வை வளமாக்கும்
வகையை எனக்காய்ச் சேர்க்காதோ...!

நாவும் வறண்டு போகிறதே...
நல்லவர் யாரெனத் தேடுகின்றேன்..
நோகும் மனத்தை யாரறிவார்..?

நேயம் இல்லா உலகத்திலே..!!!?


இப்படிக்கு 
மருதாணி 

செவ்வாய், நவம்பர் 26, 2013

வேர்வரைக்கும் சாரல் மழை ....



முறைப்படி கற்கவில்லை

முன்னெபோதும் இப்படி ஆனதில்லை

முத்தம் முடித்த உஷ்ண உதடுகளில்

வெட்கம் சற்றும் தீரவில்லை

ஆடைகள் சரி செய்யத் தோன்றவில்லை

பின்னெப்போதும் காண வாய்த்திராத

கனவொன்றின் நடுவில்

தேவதைகள் ஊளையிடுவதின்

அர்த்தம் தெரியவில்லை

உன் மார்புக்கு மத்தியில்

மையம் கொண்டிருக்கும்

காதலழுத்தத் தாழ்வு மண்டலம்

கரையைக் கடக்கு முன்

மீண்டு(ம்) பதுங்கிகொள்வோம்

நீர்க்குடையாய் விரிகிறது மழை…!

மருதாணி..



மரங்களடர்ந்த சாலையில் 
யாரும் காணாத பின்மதியத்தில்..
கைகள் பிணைத்து நடக்கையில் 
ஸ்னேகம் நனைத்த பொழுதுகள்..

வெயிலுணர்த்திய நிழலும்
நிழல் கொடுத்த சுகமும்
சுகம் கொடுத்த அவஸ்தைகளுமாய்
பூமி மறந்த பொழுதுகள்..

உன் கண்ணில் விழுந்த தூசியை
ஊதிக் கலைத்தபின் நிலம் விழுந்த கண்ணீரை
கையில் ஏந்திய பொழுதுகள்..

நம் தாகம் தணித்த அந்த தர்பூசணி விதைகளை
உன்னையறியாமல் பத்திரப்படுத்திய 
அந்த ஸ்வர்ணப் பொழுதுகள்..

இட்லி சுட்டு இஸ்திரி போட்டு உன்னை வழியனுப்பி
உன் நிழல் மறையும் வரை..நிலைப்படிகளில் நான்..

என் ஜீவன் ரட்சித்து...என் ஜீவனுக்கு ஒரு ஜீவன் குடுத்து 
கொஞ்சமே கொஞ்சமாக எனக்காக  வாழும்
என் முன்னாள் காதலனே..
நீ வைத்த மருதாணி சிவக்கும் முன்னே..
உன் நேசம் கலைந்ததென்ன..
வெயிலுணர்த்திய பொழுதுகளை..
நீ மறந்ததென்ன?

இப்படிக்கு
ர.சி.க ன் 

திங்கள், நவம்பர் 25, 2013

அந்த 3 நாட்கள்..(18+ மட்டும்)



தலைப்பை பார்த்ததும் "எடா கோபி ..ஈ பாலக்காட்டு மாதவன ஒரு தமிழ் பெண்குட்டி பரிசோதிச்சோ.." அப்படின்னு பாக்யராஜ் சார் மூக்கால பேசுற அந்த 7 நாட்கள் படம் உங்க நினைவுல வந்தாலோ..புளிப்பு மாங்காய் கடிச்ச பொண்ணுக மாதிரி சீ...சீ இதெல்லாம் எனக்கு புடிக்காதுப்பா-னு மூஞ்ச கொரங்கு மாதிரி வச்சுகிட்டாலோ, இப்பவே சொல்றேன் ஹலோ..இது உங்க ஏரியா இல்ல. உடனே விண்டோ க்ளோஸ் பண்ணிக்கிட்டு பச்ச தண்ணிய பல்லுல படாம குடிச்சுகிட்டு ஓடிபோய் கவுந்து படுத்துகோங்க!

மேலும்..

வயசுக்கு வராதவங்க (சதிஷ் வகையறா), இதயம் பலகீனமானவங்க, புள்ளதாச்சி பொண்ணுக நான் மேலே சொல்லிருக்கிற மாதிரி செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம். இவளவு சொன்ன பிறகும் கண்டிப்பா இத படிப்பேன்னு அடம் புடிகிரவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன், படித்தபின் ஏற்படும் "பின்" விளைவுகளுக்கு "சங்கம்" எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. ஏன்னா...இது மெய்யாலுமே பெண்களின் "அந்த 3 நாட்கள்" பத்திய பதிவு.

இனி...அந்த 3 நாட்கள்!

சின்ன வயதில் நிறைய சந்தேகம் வரும் எனக்கு. விளக்கில் ஏன் விளகெண்ணையை ஊற்றாமல் நல்லெண்ணையை ஊற்றுகிறார்கள், ஆரஞ்சுப் பழக் கொட்டையை முழுங்கி விட்டால் வயற்றிலிருந்து செடி வளருமா, பசுஞ்சாணியில் மின்னல் இறங்கினால் தங்கமாக மாறுமாமே எப்படி என்று ஏகப்பட்ட சந்தேகங்கள். இவற்றில் தலையாயதாக இந்தது 'மாதவிடாய்' என்றால் என்ன என்பது தான்.  எங்க ஏரியால நிறைய பொண்ணுக இருந்ததால இந்த பெண்கள் சமாச்சாரம் நிறையவே அடிபடும். ஆனால் பரிபாஷையில் குசுகுசுவென்று பேசிக்கொள்ளப்படும் இந்த விஷயத்தை டீகோட் செய்வதற்கு நிறைய பிரயத்தனப் படவேண்டியிருக்கும். வீட்டுக்கு விலக்கு, தீட்டு என்று தமிழிலும், அவுட் ஆஃப் டோர், ப்ரீயட்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்திலும் சொல்லப்படும் அந்த மூன்று நாட்கள் எங்க ஏரியாவில் "தூரம்" என்று வழங்கப்பட்டு வந்தது.

ஒருவாட்டி.. ட்யூப் லைட்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுது? சாதா ப்ல்புக்கும் ட்யூப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம்"ன்னு எங்க தெரு டீச்சரிடம் கேட்க அவர்கள் அவர்களுக்கும் விடைதெரியாது என்பதை "வெரி குட் இப்படித் தான் தெரியலைன்னா பெரியவங்களிடம் கேள்வி கேட்டு புரிஞ்சிக்கனும்"ன்னு முதுகில் தட்டிக் சொல்லிக் கொடுத்த தெம்பில், நாலு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அப்பாவிடம் பொதுவில் "தூரம்ன்னா என்னாப்பா...எப்படி ஆவாங்க?"ன்னு எல்லார் முன்னாடியும் நம்ப சந்தேகத்தைக் கேட்டேன். அவரும் பையன் ஐன்ஸ்டீன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கிறானே என்று ரொம்ப பெருமைப் பட்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்ன்னு பார்த்தா கோபம் வந்து நான் என்னம்மோ எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கின மாதிரி முதுகில் ரொம்ப பலமாக தட்டிக் கொடுத்து காதைத் திருகிவிட்டார்.

பக்கத்துக்கு வீட்டு அக்காக்களிடம் கேட்டால் நைன்டி சிக்ஸ் டிவைட்டட் பை சிக்ஸ் என்னவென்று எதிர் கேள்வி கேட்டு இம்போசிஷன் எழுதச் சொல்லி கையை ஒடித்துவிடுவார்கள் என்பதால் மெதுவாக அம்மாவிடம் போய் கேட்டேன். எங்கம்மா நான் என்னம்மோ வயசுக்கு மீறின கேள்விகளை கேட்ட மாதிரி பதறிப் போய்விட்டார்கள். "யாருடா உனக்கு இந்தமாதிரி கேக்க சொல்லிக் குடுத்தாங்க?"ன்னு கேட்க..நான் ரொம்ப பெருமையா ட்யூப் லைட் மேட்டர சொல்லி...சரி போ நீ சொல்லாட்டா நான் அந்த டீச்சர் கிட்டயே போய் கேட்டுக்கிறேன்னு சொல்ல, ஈன்ற பொழுதில் பெரிதுவத்த என் தாய்..." அடப்பாவி இதையெல்லாம் எல்லார்கிட்டயும் கேட்காதடான்னு சொல்லி "அது வந்து கடவுள் ஒரு கல்லை மிதிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கார், அந்த கல்லு பாத்ரூமில இருக்கும். அதை தெரியாமல் மிதித்துவிட்டால் அது தான் தூரம் அப்புறம் மூன்று நாட்களுக்கு யாரையும் தொடக்கூடாது வீட்டில் தனியாக இருக்கவேண்டும் என்று தேவன் (சாமி) கட்டுப்பாடு வைத்திருக்கிறார். ஆனால் இது தேவரகசியம்.. இதப் பத்தி யாருகிட்ட்யும் கேட்க்கவோ சொல்லவோ கூடாது ரகசியமா வெச்சிக்கோன்னு" என்று பதமாக சொல்ல. எனக்கு மேலும் கேள்விகள். அதெப்படி நம்ம வீட்டு பாத்ரூமில தான் கல்லே இல்லீயே அப்புறும் எப்படின்னு எதிர் கேள்வி கேட்க, எங்கம்மா பருப்பு கடையும் மத்தை திருப்பி பிடித்து தேவரகசியத்தின் பொறுமையின் எல்லை இதுதான்னு ரெண்டு காட்டு காட்ட...அப்புறம் தேவரகசிய சந்தேகங்களை கொஞ்ச நாள் ஒத்திப்போட்டுவிட்டேன்.

ஆனால் ஒருநாள் அவசரமாய் டாய்லெட்டுக்கு கடமையாற்ற சென்று கொண்டிருந்த போது ஓட்டிலிருந்த விழுந்திருந்த கல்லை மிதித்து விட்டேன். "ஐய்யைய்யோ நான் தூரம் ஆகிட்டேன்"ன்னு வீட்டுக்கு வந்து பொதுஅறிக்கைவிட, எங்கம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையிலடித்துக் கொண்டு பெருமைப்பட, எங்கப்பா நான் என்னம்மோ நமீதா  கூட ஓடிப் போகப்போறென்னு சொன்ன மாதிரி கோபப்பட ஆரம்பித்துவிட்டார். சின்ன வயதில் எனக்கு கொஞ்சம் தன்னடக்கம் (ஹி..ஹி..ஹி) ஜாஸ்த்தி. வீட்டில் தேள் வந்தாலோ, இல்லை புது சட்டை போட்டாலோ சின்னத்தம்பி பைத்தியம் மாதிரி "எனக்கு கலியாணம் எனக்கு கலியாணம்"ன்னு தெருவில் சந்தோஷமாக அறைகூவல் விடுவேன். அன்றைக்கும், நான் தூரமான மேட்டரை தெருவெல்லாம் அறைகூவல் விட, எங்கப்பாவுக்கு தேரடி சுடலைமாடசாமி உடம்பிலேறிவிட்டது. வீட்டு வாசலை நான் எட்டுவதற்குள் எங்கிருந்தோ வந்து ஒரே அமுக்காக அமுக்கி போட்டு, இந்த அறிவு ஜீவியை எப்படி சமாளிக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் கவலையோடு பார்க்க, இவனை யாருக்காச்சும் வித்துரலாமானு யோசிக்க.. (நம்மளை எல்லாம் எவன் வாங்குவான்) மீண்டும் சாம தான பேத தண்ட முறைகள் (அதாவது பருப்பு கடையும் மத்து, விளக்குமாறு, அப்பாவின் பெல்ட்) என் உடம்பில்  பரீட்சிக்கப்பட்டன.

அதை எல்லாம் எச்சி தொட்டு அழிச்சிட்டு நல்ல புள்ளையா  புக் எடுத்து அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார்னு படிக்க ஆரம்பிச்சேன். அப்போ கூட  சும்மா இருக்காம "அம்மா..இந்த அசோகா மரங்களை எல்லாம் அசோகரா நட்டாருன்னு" அடுத்த கொஸ்டின் கேட்டேன். என் அன்பு அம்மா தலையில அடிச்சிட்டு கிச்சன்  பக்கம் ஓடிட்டாங்க.

அந்த தரம் 'தண்ட' முறை (அப்பாவின் பெல்ட்) மட்டும் கொஞ்சம் பலமாக பிரயோகிக்கப் பட்டதில் உண்மையாகவே அந்த தேவ ரகசியம் பற்றி அப்புறம் ஆர்வக் கோளாறு கொஞ்ச நாள் அடங்கியிருந்தது. கூட இருந்த நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தும் எங்கள் அறிவுஜீவித்தனத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த மேட்டர் இருந்தது. அப்புறம் டீ.வி வந்த காலத்தில் கேர்ஃப்ரீகாரர்கள் புண்யத்தில் கேர்ஃபிரீக்கும் தேவரகசியத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்தோம். இருந்தாலும் அந்த விளம்பரத்தில் வரும் அம்மாக்களெல்லாம் ப்ரில் இங்க் ஏன் யூஸ் பண்ணுகிறார்கள்? எங்க வீட்டிலாவது ப்ரில் இங்க் வாங்குவார்கள், ஆனா இந்த சோனமுத்தா வீட்டில் இங்க் வாங்கமாட்டார்களே.. இவங்களுக்கெல்லாம் பாத்ரூமில் ப்ரில் இங்க் எப்படி கிடைக்கிறது என்று பலவிதமான சந்தேகங்கள். அப்புறம் இந்த மாதிரி விளம்பரங்களில் பரதநாட்டியம், டேன்ஸ், ஊஞ்சலில் ஆடுவது, ரோட்டில் ஆடுவது என்று குழப்பி எடுத்துவிட்டார்கள். இந்த 'விஸ்பர்'காரர்கள் மட்டும் ஒரு பாப் வெட்டிக் கொண்ட பீட்டர் ஆண்டியைப் போடுவார்கள். அந்த ஆண்டியும் ஐந்து நிமிஷம் கட கடவென இங்கிலிபிஸில் பேசிவிட்டு, கடைசியில் அதுவும் பிரில் இங்க்கை கொட்டிவிட்டுப் போகும். இருந்தாலும் ரகசியம் புலப்படவில்லை. அதிலும் பெண்களின் சுதந்திரத்தை வேறு லிங்க் செய்ய ஆரம்பித்தவுடன் கொஞ்ச நஞ்ச புரிதலும் போயே போச்சு.

அப்புறம் பின்னாளில் இந்த ரகசியம் எப்படியோ தெரிந்தது(எப்படி தெரிந்து கொண்டேன் என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன் நியாபகத்துக்கு வரமாட்டேங்கிறது). இந்த லட்சணத்தில் தான் நண்பன் ஒருத்தன்  சொல்லிக் கொடுத்த மாதிரி ஆணும் பெண்ணும் கைய கோர்த்துக் கொண்டு கசக்கினால் குழந்தை பிறந்துவிடுமென்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த டவுட்டையெல்லாம் யாரிடமும் கேட்கவில்லை.

இப்படிக்கு 
ரசிகன் 

சந்தித்தோம் - பிரிவோம்




காதலர் தினம்!...நிறைய பேருக்கு புதியதாய் காதல் முளைக்கும் தினம். நிறைய பேருக்கு இருக்கும் காதலை புதுப்பிக்கும் தினம். ஆனால் எனக்கு இது புதுசு. காதலர் தினத்தில் காதல் வர தான் செய்யணுமா? காதல் போக கூடாதா? ஆம் என்றால் இதற்குமேல் படிக்காமல் கிளம்புறது நல்லது.


அவனுக்கு எல்லாமே அவள் தான். எப்படியோ இருந்த வாழ்க்கையை புரட்டி போட்டவள் அவள் தான். அவள் வந்த பிறகு தான் அவனுக்கு வாழனும் என்கிற ஆசை கூட வந்தது எனலாம். காலையில் அவள் சொல்லும் ஹாய் -இல் தான் கண் விழிப்பான். இரவில் அவளின் குட்நைட் - உடன் தான் படுக்கைக்கு செல்வான். திக்கு தெரியாமல் தடுமாறும் பொழுது எல்லாம் அவள் மடியில் விழுவான். அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு வேதம். அவன் கண்ணீர் துடைக்க அவள் கரம் நீட்டினாள். அவளுக்கு நன்றி கடனாக ஏதாவது செய்யணும். அவள் காதலிப்பதை விட 100 மடங்கு அவளை காதலிக்கனும் என்று வெறி கொண்டான் அவன். அவளை திகட்ட திகட்ட காதலித்தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணராமல் அவளை காதலில் திக்குமுக்காட செய்தான். அது அவனுக்கே ஒரு நாள் வினையாக வர ஆரம்பித்தது.

அவனின் அளவு கடந்த காதல் அவளுக்கு ஒரு தொல்லையாக தெரிந்தது. அவனை கொஞ்சம் கொஞ்சமா விட்டு விலக ஆரம்பித்தாள். அதற்காக 1008 காரணம் எல்லாம் அதுவாகவே அவள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தது. அவனுக்கு அவள் பிரிவு ஒரு கொடுமையாக தோன்றியது. உடல் இளைத்தான் உள்ளம் நொந்தான். அவளின் ஒரு பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தான். அவளுக்கு எல்லாமே ஜஸ்ட் லைக் தட் மாதிரி தான். இதையும் அவள் அப்படி தான் எடுத்துகொண்டாள்.

எதோ ..சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன்...அவளோதான் டியர் !

இப்படிக்கு
ஜீவா

வியாழன், நவம்பர் 21, 2013

ரெஜினா ...





"ஏண்டா ..இப்படி தறுதலையா வளருரே!  சொல்பேச்சு எதாச்சும் கேட்கிறியா?  எங்க போனாலும் எதாச்சும் வம்பு இழுத்துட்டு  வந்துடுறே. உன்னைய என்ன பண்றேன் பாரு.  நாலு நாள் பட்டினி போட்டா தான் நீ  எல்லாம் அடங்குவே"

 ஜீவா அம்மாவின் குரல் அந்த தெருவெங்கும் .கேட்டது.

"ஏனக்கா ..ஏன் அவன போட்டு இப்படி கரிச்சு  கொட்டுறீங்க" என்று கேட்டுகொண்டே பக்கத்துக்கு வீட்டிலிருந்து ரெஜினாவோட  அம்மா வந்தாங்க.

"எப்போ பார்த்தாலும் அவனை திட்டுறதே  உங்களுக்கு வேலையா போச்சு.."

"பின்ன என்னக்கா..காலேஜ் கட் அடிசிட்டு இவன் படம் பார்க்க போயிருக்கான். பக்கத்துக்கு வீட்டு சேகர் மாமா இவன தியேட்டர்-ல பாத்திருக்காங்க.. இவனெல்லாம் எங்க படிச்சு பாஸ் பண்ண போறான்.  எனக்கு இவனை நினைச்சு தான் ஒரே கவலையா இருக்குக்கா"

"அட  வயசு பசங்கன்னா கொஞ்சம் அப்பிடி அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வாங்க..அதுக்காக வயசுக்கு வந்த புள்ளையபோட்டு இப்படியா ஏசுவீங்க"

" இன்னைக்கு இவனுக்கு இந்த  வீட்டில சாப்பாடு கிடையாது...போ எங்காச்சும் போய் சாப்புடு"

அம்மாவின் குரல் கண்டிப்பாகவும் அதே நேரம் கண்கள் ஈரமாகவும் இருந்தது. ஜீவா தலைய தலைய தொங்கபோட்டுகிட்டே மெளனமாக உட்காந்திருந்தான்

"டேய் ..ஜீவா நீ மொதல்ல எழும்பு"

ரெஜினாவோட அம்மா அவன்  கையபுடிச்சி நேரா  அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போனாங்க.

 இது வழக்கமா நடக்கிறது தான். வீட்டில எதாச்சும் பிரச்சினைனா ஜீவாவிற்கு அடைக்கலம் ரெஜினா வீடுதான். ரெஜினாவின் வீட்டில் தான் அன்னைக்கு முழுதும் பொழுது கழியும். ரெஜினாவின் அம்மாவை மாமி என்றும், அவளுடைய அப்பாவை மாமா என்றும் தான் கூப்பிடுவான்.  இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அவர்கள் அந்த வீட்டிருக்கு குடிவந்ததிலிருந்து இவனும் அப்படியே கூப்பிட்டு பழகிட்டான். அவர்களும் அதை ஒன்றும்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அனால் இந்த ஊருக்காரங்க தான்  ரெஜினாவை ஜீவாவிற்கு கட்டிகுடுகிறதுக்காக இந்த பொம்பளை அவனை கைக்குள்ள போட்டு வச்சிருக்குன்னு ரகசியம் பேசிகிட்டாங்க. இது சிலநேரம் ஜீவாவோட அம்மா  காதுக்கு போனாலும் அவங்க இதை  பற்றி அலட்டிகிறதில்லை.

"என்ன தொரை..இன்னைக்கு வீட்டில  செம பரேடு போலிருக்கு?"

ரெஜினா வீட்டு வாசலில் கையால முட்டு குடுத்துகிட்டு நின்றுகொண்டிருந்தாள்.

"போடி கூறுகெட்டவளே!... ஏண்டி அவனே ஏச்சு வாங்கிட்டு வந்திருக்கான்...நீ வேற..தள்ளு...வழிய மறிச்சுக்கிட்டு.."

"ரெஜினா..மொதல்ல நீ அவனுக்கு சாப்பாடு போடு.... "  என்று சொல்லிக்கிட்டு ரெஜினாவோட அம்மா வீடு பின்பக்கம் போயிட்டாங்க.

"சரிம்மா"... சொல்லிகிட்டே ரெஜினா ஜீவா பார்த்து பளிப்பு காட்டிகிட்டே கிச்சன் பக்கம் போனாள்.

ரெஜினா.! அந்த தெருவின் ஒரு அழகு தேவதை. ரொம்ப கலர்னு ஒன்னும் சொல்ல முடியாது இருந்தாலும் பார்த்த உடனே வசீகரிக்கும் முகம். கண்கள் சில நேரம் கவிதை பேசும். அவள் பேசும்போது காதில் ஊஞ்சலாடும் கம்மல்கள் அவள் காதோடு ரகசியம் பேசும். சிரிப்பில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்..சின்னதாக கன்னத்தில் குழி விழும். அந்த தெருவில் பலபேரின் தூக்கம் கெடுத்த ஒரு கியூட் டெடி பியர்! குடும்ப சூழ்நிலை காரணமாக பனிரெண்டாம் வகுப்புக்குமேல் படிக்கல. வீட்டில் ஒரு தையல் மெசின் வைத்துகொண்டு எதோ அவளுக்கு தெரிஞ்ச மாதிரி தைத்துக்கொண்டிருக்கிறாள். அவளின் வீட்டுக்குள் போக வர முழு சுதந்திரம் உள்ள ஒரே ஆண்மகன் ஜீவா மட்டும் தான். வேற யாரையாச்சும் அந்த பக்கம் பார்த்தா..அவளோட அம்மாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு யாரா இருந்தாலும் அந்த தெருவை காலி பண்ணிட்டு வேற வீடு பார்த்து போயிடுவாங்க.

ஜீவாவுடன் அவள் பழகுவதில் எந்த கண்டிசனும் கிடையாது. சிலநேரம் அடிச்சுக்குவாங்க, சிலநேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் சிரிச்சு ஜாலியா பேசிக்கிட்டு இருப்பாங்க. ரெஜினா என்ன டிரஸ் என்ன கலர் டிரஸ் போட்டா  அழகா இருக்கும், என்ன நெயில் பாலிஸ் போட்டா நல்லாருக்கும்னு இவனும் அவளுக்கு ஐடியா சொல்வான், அவளும் இதுமாதிரி என்ன கலர் டிரஸ் போடணும், தலைய இப்படி வாராதே அந்த மாதிரி சீவு-னு எல்லாம் ஐடியா குடுப்பாள். ஜீவாவை பார்க்காமல் ரெஜினாவும் இருக்க மாட்டாள். ரெஜினாவிடம் பேசாமல் இவனும் இருக்க மாட்டான். "போடி நான் உன் கட்டில்ல இன்னைக்கு கொஞ்சம் நேரம் படுக்கிறேன்"னு அவளுடைய பதிலுக்கு காத்திருக்காமல் இவனே போய் படுத்துகொள்வான்.ரெஜினாவின் சில ரகசியங்கள் எல்லாம் ஜீவாவிற்கும், இவனின் சில ரகசியங்கள் எல்லாம் அவளுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியங்கள்.

ரெஜினா - ஜீவா பழக்கத்தில் காதலும் இல்லை காமமும் இல்லை...

சாப்பாடு எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு...அவன் முன்னால் செயர் போட்டு நாடியில் கைவைத்து ஜீவா சாப்பிடுவதை பார்த்துகொண்டிருந்தாள். அவன் சாப்பாட்டு தட்டில் இருந்து ஒரு கத்தரிக்காயை எடுத்து கடித்துக்கொண்டே..

"டேய்...ஜீவா...என்ன படம் பார்த்தே?"

"--------------"

"டேய்...கேட்கிறேன் இல்ல...பதில் சொல்லேன்"

"இங்க்லீஷ் படம் டி"

"அப்படின்னா A படமா?"

"உஷ் ...சத்தம் போடதே...அம்மா இருக்காங்க. ஆக்சன் மூவி டி...அப்படின்னா தெரியுமா? சண்டை படம்."

ஹ்ம்ம் ரொம்ப பீத்திகாதே உனக்கு தான் எல்லாம் தெரியும்னு....ஆக்சன் மூவி-னா சண்டை படம்-னு எனக்கும் தெரியும்.


ஜீவா அவளையே கொஞ்சம் நேரம் பார்த்தான்..

"ஆமா...சுரேஷ் உனக்கு லவ் லெட்டெர் குடுத்தானே...என்ன பதிலே சொல்லலியாம் நீ. அவன் என்கிட்டே...கெஞ்சுராண்டி..ஒரு பதில சொல்லலாலம்ல..."

"ப்ச்....போ ...ஜீவா ...எனக்கு விருப்பமில்லடா..அவனும் ஜாடை மாடையா என்னமோ சொல்றான். எனக்கு பார்க்க பாவமா இருக்கு. அதுக்காக லவ் எல்லாம் பண்ண முடியாது ஜீவா.."

"ஹ்ம்ம்...ஒவ்வொரு ஆளா உன்னை ப்ரொபோஸ் பண்றாங்க...நீ தான் ரொம்ப அடம் புடிக்கிறேடி.."

"பேசாம சாப்பிடுடா....நீ ஏன் யாரையும் லவ் பண்ண மாட்டேன்கிற? "

"என்னடி இப்படி சொல்றே..என்னோட கதை தான் உனக்கு தெரியுமே.." சரி சரி...சாப்பிட்டுட்டேன்...தட்டு எடுத்து வை..

"ஹ்ம்ம்...வெளிய எங்காச்சும் போறியாடா?"

"இல்லடி..ஏற்கனவே வீட்டில ஏச்சு வாங்கியாச்சு. இனி ஊரு சுத்த போனா அவளோதான். அம்மா ஒரேடியா வீட்டை விட்டு தொரத்திடுவாங்க".

ரெஜினா...எல்லாம் எடுத்து வச்சிட்டு ஏதோ தையல் வேலை தொடங்க..அவ பக்கத்துலையே உட்காந்து இவன் அரட்டை அடிச்சிகிட்டு சிரிச்சு பேசிகிட்டு இருந்தான்.

இன்னொருநாள்...

ஜீவா வெளிய எங்கையோ போயிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான்... ரெஜினா வீட்டை கடக்கும்போது கவனித்தான். அவள் என்னமோ பண்ணிக்கிட்டு இருந்தாள்.

"ஹே...ரெஜினா...என்னடி இது...கையில குச்சியும் தலை எல்லாம் கலைஞ்சு..."

"ஒண்ணுமில்லடா..வீட்டில அங்கங்க சிலந்தி வலை பிடிச்சிருக்கு..அம்மா சத்தம்போடாங்க. அது தான் வலை அடிச்சுகிட்டு இருக்கேன்"

"அதுக்காக இப்படியாடி..லூசு மாதிரி...யாரையாச்சும் கூப்பிட்டிருக்கலாம் இல்ல"...சொல்லிக்கொண்டே அவ தலையில, தோள்மேல, முகத்துல இருந்த தூசி தட்டி விட்டுகொண்டிருந்தான்.

"டேய்....பரவால்ல..விடுடா..குளிக்க தான் போறேன்..எல்லா இடத்துலையும் தட்டிட்டேன். இந்த பேன் தான் எட்ட மாட்டங்குது ஜீவா. எதாச்சும் எடுத்துபோட்டு ஏறலாம்னு பார்த்தா...ஒன்னும் வசதியா இல்லடா.."

"ஹே....லூசு அதுக்கென்ன...நான் உன்னை தூக்குறேன்..நீ வலை அடி"

"அட ச்சி போ...விளையாடாதே..."

"இல்லடி நிஜமாத்தான் சொல்றேன்"...சொல்லிக்கொண்டே...அவளின் பிருஷ்டங்களின் கீழே கைய குடுத்து..அவளை அப்படியே தூக்கினான்..

"ஏய்..ஏய்...ஜீவா சொன்னா கேளு...விடு டா...விடு டா..விழுந்துடுவேண்டா... சொன்னா கேளு ஜீவா..விளையாடாதே.."

"ஒன்னும் விழமாட்டே ...நான் ஒழுங்கா தான் புடிச்சிருக்கேன்...நீ மொதல்ல வலை அடி..."

"விடமாட்டே இல்ல..?"

"விடமாட்டேன்...ஹ்ம்ம் அடி டி..எரும எரும...கொஞ்சம் கூட கைய மேல தூக்கு...குச்சிய நீட்டமா புடிடி.."

திடீர் என்று என்ன நினைத்தாளோ ..

"ஜீவா...டேய்....விடுடா என்னை ...இறக்கி விடுடா..."

"ஹேய் ...என்னாச்சுடி ரெஜினா?"

"இறக்கிவிடுன்னு சொல்றேன்ல".....முகத்தில் கோபம் காட்டினாள்.

ஜீவா தன்னோட பிடியை தளர்த்தினான்....ரெஜினா கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடம்போடு வ....ழு ...க்கி ..னா..ள் !

"போதும் வலை அடிச்சது போதும்...நான் குளிக்க போறேன்"னு படபடப்போடு ஓடி போனாள்.

காலம் தன் இறக்கையை விரித்து பறந்து கொண்டிருந்தது... அப்போதுதான்...யாருமே எதிர்பார்க்காத..அந்த நாள் வந்தது..

என்ன மாமி சொல்றீங்க...ரெஜினாவுக்கு கல்யாணமா?

ஆமா ஜீவா....ரெஜினா அப்பாக்கு தூரத்து சொந்தமாம். பையன் ஏதோ வெளிநாட்டுல வேலை பார்கிறானாம். பையன் பெயரு கூட எட்வின். கைநிறைய சம்பளம்..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல அவள வெளிநாடு கூட்டிட்டு போறேன்னு சொன்னானாம். ரெஜினா அப்பாவும் வாக்கு குடுத்துட்டு வந்திருக்காரு. சீக்கிரம் கல்யாணம் வச்சுக்கனுமாம். பையனுக்கு லீவு முடிஞ்சு போறதுக்குள்ள கலியாணம் முடிக்கணுமாம்.

மாமி சொல்ல சொல்ல....ஜீவாவுக்கு....மனசுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சோகம் வந்து திரை போடுவதை உணர்ந்தான். கேட்டது பாதி கேட்காதது பாதியாக...

"ரெஜினா எங்க மாமி?"

"அவ அங்க ரூமுக்குள்ள தான் இருக்கா ....கல்யாண செய்தி கேட்டு முகத்துல ஒரு சந்தோசமே இல்ல...பொய் பாரு ஜீவா."

"ரெஜினா ....ரெஜினா"...கூப்பிட்டுகொண்டே ஜீவா அவளின் ரூமுக்குள் பிரவேசித்தான்...

என்ன ஜீவா என்பதுபோல அவள் அவனை பார்த்தாள்.

ரெஜினா உனக்கு கல்யாணமாமே..? அம்மா சொன்னாங்க..

"-------------------"

சொல்லுடி எதாச்சும்....உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?

"-------------------"

"ப்ளீஸ்...பேசுடி ரெஜினா...உனக்கு கலியாணம் பண்ண சம்மதம் தானே?"

அவளின் முகத்தை மெதுவாங்க...நிமிர்த்து பார்த்தான்...கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது..

"ரெஜினா....என்னமா...ஏண்டி கண்ணு கலங்கிருக்கு? வரன் பிடிக்கலியா உனக்கு? என்ன இருந்தாலும் என்கிட்டே சொல்லுவே இல்ல...சொல்லுமா ரெஜினா.." ஜீவா அழாத குறையாக அவளிடம் கெஞ்சினான்..

"ஒண்ணுமில்லடா ....எனக்கு சம்மதம்தான்" என்று சொல்லிக்கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு விடு விடுவென ரூமை விட்டு வெளியேறினாள்.

ஜீவாவின் மனதுக்குள் என்னவோ அனல் அடித்தது போலிருந்தது...

சீக்கிரமே..அவளின் நிச்சயதார்த்தம் முடிந்தது...கல்யாண நாளும் நெருங்கி வந்தது. இப்போதெல்லாம் ஜீவாவும் ரெஜினாவும் சிரிப்பது குறைவு. பேசுவது குறைவு. பேசினாலும் சம்பிரதாயமாக எதோ பேசினார்கள். இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. இருந்தாலும் ரெஜினாவின் கல்யாணம் என்று ஜீவாவும் எல்லா வேலையும் இழுத்துபோட்டு செய்துகொண்டிருந்தான். பத்திரிகை அடிப்பதிலிருந்து, பந்தல் போடுவதுவரை எல்லாத்துக்கும் அவள் குடும்பத்தாருடன் முடிந்தவரை ஓடியாடி வேலை செய்தான். இடை இடையே ரெஜினாவை சிரிக்கவைக்க முயன்று தோற்றான். இவனும் சிரிக்க முயன்றது தோற்றான்.

நாளை ரெஜினாவின் கல்யாணம்..

வீடெங்கும் கல்யாணகளை. எல்லார் முகத்திலும் சந்தோசம். ஜீவாவும் ஓடியாடி எல்லாம் பார்த்துகொண்டிருந்தான். ரெஜினாவின் ரூமை கடக்கும்போதெல்லாம் அவளின் முகத்தை பார்க்க தவறவில்லை. அவளும் அவளின் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சிரித்து பேசி சந்தோசமாக இருப்பதை பார்த்து பூரித்துபோனான். அவளும் இவன் கடந்து போகும்போதெல்லாம் ஜீவாவின் கண்களை சந்திக்க தவறவில்லை. சிநேகமாக இரண்டுபேரும் சிரித்துகொண்டார்கள்.

கண்டிப்பாக ரெஜினா அழகு தான்...இது கல்யாண சந்தோசத்துல வந்த அழகா இல்லை ஏற்கனவே அவகிட்ட இருந்த அழகா...குழம்பினான் ஜீவா....ஹ்ம்ம் எதுவாக இருந்தாலும் ரெஜினா அழகுதான்...மனதுக்குள் நினைத்துகொண்டான்.

"ஜீவா...மழை லேசாக தூறல் போடுது. ரெஜினாவோட பெரியப்பா குடும்பம் திருச்சில இருந்து வராங்களாம். இன்னும் பத்து நிமிசத்துல நம்ம பஸ்டாண்ட் வந்துருவாங்களாம். நீ இரண்டு குடை எடுத்துகிட்டு போய் அவங்கள கொஞ்சம் பத்திரமா கூட்டிகிட்டு வந்துடுறியா?" ரெஜினா அம்மாவின் குரலுக்கு "சரி மாமி என்று சொல்லிக்கொண்டு சிட்டாக பறந்தான் ஜீவா"..

வந்த சொந்தங்களில்..பாதிபேர் தூங்க...கொஞ்சம் பேர் தூங்கலாமா வேண்டாமா என யோசித்துகொண்டிருக்க...கொஞ்சம் பேர் தூங்கவே மாட்டோம்-னு அடம் பிடித்து அரட்டை அடித்துகொண்டிருந்தார்கள்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி....

ஸ்பீக்கரில் பாட்டு வழிந்து அந்த மழை தூறலுடன் கரைந்துகொண்டிருந்தது.

யாரோ ஜீவாவின் கையை பிடித்து இழுக்க...திரும்பி பார்த்தான். ஒரு சின்ன பொண்ணு அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள்.

"என்னம்மா செல்லம்?"

"ரெஜினா அக்கா உங்களை கூப்பிடாங்க..."

ஜீவா திரும்பி பார்த்தான்...ரெஜினா ஜன்னல் வழியே பார்த்துகொண்டிருந்தாள். ஜீவாவிடம்  மாடிக்கு வா என்று சைகை மொழியில் காட்டினாள்.

ஜீவா பதிலுக்கு எதுக்கு என்று சைகையில் கேட்டான்...

அவள் முகத்தை கொஞ்சம் கோபமாக வைத்துகொண்டு...வா என்று மீண்டும் சைகை காட்டினாள்.

இவனும் சரி வரேன் என்று பதிலுக்கு சைகை காட்டினான்.

எதுக்கு வர சொல்றா...என்று குழப்பத்துடன் மாடிக்கு சென்று காத்திருந்தான் ஜீவா.

மழை கொஞ்சமாக தூறல் போட்டுகொண்டு இருந்தது. கொஞ்சம் நேரத்தில் ரெஜினா மாடிக்கு வந்தாள்.

"ஹே ..ரெஜினா என்னை எதுக்கு இந்த நேரத்தில இங்க வரசொன்னடி?"

ஸ்ஸ்ஸ் ...ஒன்றும் பேசாதே என்று உதட்டின் குறுக்கே விரலை வைத்து காட்டினாள்..அவன் முன்னால் வந்து நின்றாள்.

ஜீவா ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான். அங்கிருந்த டியூப் லைட்டின் வெளிச்சத்தில் ரெஜினாவின் கண்களை பார்த்தான்.

"ஜீவா ...நான் பேசுறத மட்டும் கேட்டால் போதும்...நீ ஒன்றும் பேசாதே."

"--------------------"

"நாளைக்கு எனக்கு கலியாணம் ஜீவா. இதனை நாள் என் கூட நீ இருந்தே..என்னுடைய சந்தோசம், துக்கம், நல்லது, கெட்டது, ரகசியம், பரசியம் எல்லாமே உன்கிட்ட நான் சொல்லிருக்கேன். உன்னை ஒருநாள் பார்க்கலைனாகூட எனக்கு அந்த நாள் விடிந்ததாகவே தோணாது ஜீவா. என்னை நீ அவளவு அன்பா பார்த்துகிட்டே. உன்னுடைய ஒரு பார்வையில கூட நீ என்னை தப்பாக பார்த்ததில்லை. நான் உன்கூட இருந்த ஒவ்வொரு நிமிடமும் என்னை நீ சந்தோசமா வச்சுகிட்டே ஜீவா. நான் உன்னை சந்தோசமா வச்சிருந்தேனா-னு எனக்கு தெரியாதுடா. ஆனாலும் ரெஜினாக்கு ஒண்ணுன்னா நீ கலங்கிடுவே. எத்தனயோ ஆம்புளைங்க இருக்கிற இந்த தெருவில எனக்கு ஜீவா வரான்-னு தெரிஞ்சாலே மனசுக்குள்ள ஒரு சந்தோசம் அதுவா வந்துடும். நீ பேசுற பேச்சு, நீ பண்ற குறும்புத்தனம் எல்லாமே ரசிச்சேன் ஜீவா. வீட்டில அம்மா அப்பா இல்லைனாலும் நீ பக்கதுல இருந்தா  நான் ரொம்ப பாதுகாப்பா உணர்ந்தேன் ஜீவா. இது எல்லாம் சேர்ந்து எப்பவோ நீ என் மனசுக்குள்ள வந்துட்ட ஜீவா.

ஆமா ஜீவா நான் உன்னை காதலிச்சேன். நாளைக்கு கல்யாணம் இன்னைக்கு இவன்கிட்ட இப்போ சொன்னா  ஒன்னும் செய்ய மாட்டான்-னு நான் இப்போ இதை சொல்லல ஜீவா. இப்போ கூட என்னோட காதலை நான் சொல்லலேன்னா நான் அழுதே செத்துருவேண்டா. ஊர்ல யார் யார் எல்லாமோ என்னை லவ் பண்றாங்கன்னு வந்து சொன்னே. நீ என்னை லவ் பண்றேன்னு ஒருவார்த்தை என்னைக்காவது உன்கிட்ட இருந்து வரும்னு எதிர் பார்த்தேன் ஜீவா. யாருக்கெல்லாமோ என்னை லவ் பண்ண தோணிச்சு. உனக்கு ஏன் தோணலடா? நான் உன்னை லவ் பண்றத  சொல்லிருக்கலாம். ஆனா ஜீவா அதை சொல்லி நீ என் காதலை மறுத்துட்டா? உன்கூட சந்தோசமா இருக்கிற நாள்கள் எனக்கு கிடைக்காம போயிடுமோன்னு தான் சொல்ல வந்த வார்த்தையும் எனக்குள்ளே போட்டு புதைச்சுகிட்டேன். என் காதலை நான் சொல்லாம இருந்தது தப்புன்னா என்னை மன்னிசிடு ஜீவா..

ரெஜினாவின் கண்கள் கலங்கியது...அவள் மனதுக்குள் இருந்த காதல் அவள் வார்த்தைகளில் சொல்ல நினைத்து வார்த்தைகள் தடுமாறியது.

அப்படியே ஜீவாவை...கண்ணீருடன் கட்டி அணைத்துகொண்டாள்.

ஜீவா ...ஐ லவ் யு டா...என்னை மன்னிசிருடா செல்லம்.

ஜீவாவை விட்டு விலகினாள்...விருட்டென்று திரும்பி கண்ணீரை துடைத்தபடியே...விடுவிடு என திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினாள்.

ஜீவா என்னமோ சொல்ல வாயெடுத்தான்..

"மனதில் நின்ற காதலியே...மனைவியாக வரும்போது...
சோகம் கூட சுகமாகும்...வாழ்க்கை இன்ப வனமாகும்.."

கீழே வீட்டிலிருந்து கேட்ட பாடல்..நாளைக்கு அவளுக்கு கல்யாணம் என்பதை உணர்த்தியது.

பிறந்து....ஐந்தே நிமிடம் ஆனா காதல் ஒன்று அங்கே மழையோடு மழையாக கரைந்து செத்துகொண்டிருந்தது. கூடவே ஜீவாவும்!


குறிப்பு: இந்த காதலில் வேறு ஒரு திருப்புமுனையும் நீங்கள் நினைத்தால் செய்யலாம். அது எப்படி என்று உங்கள் கற்பனைகளை வார்த்தைகளில் வண்ணக்கோலமிட்டு அனுப்ப வேண்டிய முகவரி jeeva_ rtp@yahoo.es என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். அனால் ஒரே ஒரு நிபந்தனை, "கண்டிப்பாக ஜீவாவும் ரெஜினாவும் காதல் செய்யவே கூடாது"


இப்படிக்கு
நான்...ரசிகன் 


ஸ்டார்ட் ...தி ...மியூசிக்





சில நாட்கள் இங்கே எழுதவில்லை. இருந்த போதும் இங்கே வந்து பார்த்து நினைவூட்டி,  மிரட்டிய உங்களின் அன்பிற்கு கோடானு கோடி நன்றி, இதயப் பூர்வமாய் மன்னிப்பும் கோருகிறேன். வராததற்கு காரணங்கள் நிறைய ஒன்றும் இல்லை. ஒரே ஒரு காரணம் தான் (இங்கே சொல்ல முடியாது)  இந்த மாதிரியான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பது நின்று போன பஸ்ஸை தள்ளி ஸ்டார்ட் செய்வது மாதிரி. தள்ள ஆரம்பித்திருக்கிறேன் பார்ப்போம் :)

இப்படிக்கு
ஜீவா

திங்கள், நவம்பர் 18, 2013

பிடிக்கல...பாஸ்!




எழுத பிடிக்கல..

எழுத பிடிக்கல..

எழுத பிடிக்கல..


என்னையே..எனக்கு பிடிக்காத..
ரசிகன்

சனி, நவம்பர் 16, 2013

பேஸ்புக் போராளி - அவள் பெயர் தமிழ் "அரசி"




ஏண்ணே ...நீ எல்லாம் பேஸ்புக்-ல என்னண்ணே பண்ணுவே? 


காதலிச்சுகிட்டு இருந்தா கவிதையா போட்டு கொல்லுவே. காதலிச்சு கண்டம் ஆனா கருத்து கந்தசாமியா மாறி எங்கள காண்டம் மாதிரி யூஸ் அண்ட் த்ரோ பண்ணுவே. சிலபேரு வேல வெட்டி எதுமே இல்லேன்னா..காலையில கக்கா போறதுல இருந்து ராத்திரி உச்சா போறதுவர ஸ்டேட்ஸ் - ல போட்டு எங்கள நாரடிப்பே..


இதை எல்லாம் விட ...புது ரகம் ஒன்னு இருக்குண்ணே. அது தான் ...பேஸ்புக் போராளிகள் சங்கம். அப்படின்னா என்னனு புரியல-னு மண்டைய சொறியாதண்ணே...நான் சொல்றேன் கேளு...அதாவது புரட்சி புரட்சி-னு புளிமூட்டைய உருட்டுரவைங்க. இந்த நாறிப்போன சமூகத்தை பேர் & லவ்லி போட்டு திருத்த வந்தவங்க. நம்ம ஆளு பேஸ்புக் போராளி தமிழ் "அரசி" இந்த சங்கத்த சேர்ந்தவங்க. புல்லரிக்குதா? மேல படின்னே...உனக்கு தலையே கிரு கிரு - னு சுத்தும்.

சரி அதுக்கு முன்னால...நான் எப்படி இந்த சங்கத்துல சேர்ந்தேன்-னு ஒரு சின்ன பிளாஸ் பேக்!


நானும் ஒரு பேஸ்புக் அக்கௌன்ட் ஓபன் பண்ணி...கடைய சுத்தமா கூட்டி பெருக்கி ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி வச்சுக்கிட்டு வெயிட் பண்ணேன். அட வெண்ணைகளா...ஒருத்தியாச்சும் வரணுமே. ம்ஹும் யாரும் வர மாதிரி தெரியல. அதனால நானே 4 -5 பொம்புள புள்ளைங்க ஐடி-யா தேடி புடிச்சி ஆட் பண்ணேன். என் கிரகம் வந்தது எல்லாம் வெத்து பீசுங்க. ஒருநாளாச்சும் ஒரு மெசேஜ் போட்டு...ராசா நல்லாருக்கிய சாப்டியா-னு கேட்கணுமே. எல்லாம் அகராதி புடிச்ச கழுதைங்க. சரி போங்கடி...னு நானும் அக்கௌன்ட் டி - அக்டிவேட் பண்ணிட்டு போயிட்டேன். இருந்தாலும் மனசுக்குல உறுத்தலா இருந்துச்சு. அது எப்படி..அவன் அவன் பேஸ்புக் வச்சுகிட்டு 4 - 5 பிகரு உஷார் பண்றானுவ. நம்மால முடியாதா? 


தன்மான சிங்கம் மறுபடியும் பேஸ்புக்-கு ஓடி வந்துச்சு. ஆனா பாருங்க...என்னோட பேஸ்புக்-ல இருக்கிறவளுக எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி எதாச்சும் ஸ்டேட்ஸ் போட்டுட்டு ஒடிருவாளுக. நானும் விடாம எல்லாத்துக்கும் லைக் போட்டு விடுவேன். நமக்கு கெளரவம் முக்கியமுண்ணே. சிலது கலியாணம் முடிஞ்ச கேஸ். புருசனுக்கு ஆப்பு வைப்பது எப்படி, புள்ளைக்கு டயப்பர் மாத்துறது எப்படி-னு விளக்கமா போட்டு போவாளுக. (விளக்குமாறு பிஞ்சிரும்டி). சிலது வந்து குட் மார்னிங் போடும். நானும் ஆசையா ஒரு லைக் போட்டு பதிலுக்கு குட் மார்னிங் போட்டா எதாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணனுமே? ம்ஹும்..அதோட ஓடி போறவதான் அடுத்தநாள் குட் மார்னிங் ஸ்டேட்ஸ் போட மட்டும் வரும்.

ஒரு நாள் ஒருத்தி வசமா சாட் -ல சிக்குனா. அடிச்சாண்ட ஜீவா லக்கி பிரைஸ் -னு புயல் வேகத்துல மெசேஜ் போட்டேன். நமக்கு தெரிஞ்ச ஹலோ, ஹௌ ஆர் யு? எல்லாம் போட்டேன். இங்க்லீஷ் - ல தஸ்ஸு புஸ்சு- னு அவளும் மெசேஜ் போட்டா. சரிதான் நமக்கு எங்கிட்டு இங்க்லீஷ் வரும். அப்புறம் நான்  டக்குனு மாறி..நீங்க தமிழா..?

நீங்க தமிழா...

'------------------'

ஹலோ ...நீங்க தமிழா?

'------------------'

ஹல்லல்லோ....நீங்க தமிழா..ஆ ஆ ஆ 

போயிட்டா ...போச கெட்டவ...சிங்கம் அசிங்க பட்டு நின்னுசுண்ணே !

இப்படி பல தடவ சத்தமே இல்லாம பல மொக்க வாங்குனதால...அடிக்கடி அக்கௌன்ட்  டி - அக்டிவேட் / அக்டிவேட் பண்ண வேண்டியது போச்சு. கடைசியில பேஸ்புக் காரனே கடுப்பாகி எனக்கு ஈமெயில் அடிச்சான்.

"டேய் ...எளவு எடுத்தவனே....டோமரு...இனி உன் அக்கௌன்ட் ஒருவாட்டி  டி - அக்டிவேட் ஆச்சு..உன் பேஸ்புக் அக்கௌன்ட் ஒரேடியா தூக்கிடுவோம்.. ஒழுங்கா பொத்திகிட்டு இரு"

அப்படின்னு ஒரு ஈமெயில் வந்திச்சு..

இந்த கவலையில வாடி வதங்கி...நார் நார கிழிஞ்சி தொங்கிக்கிட்டு இருந்தபோ தான்...நம்ம ஆளு பேஸ்புக் போராளி தமிழ் "அரசி" நட்பு கிடைச்சுது. ஆஹா...அருமையான பெயரு..தமிழ் அரசி. கண்டிப்பா தமிழு தெரிஞ்ச புள்ளையாத்தான் இருக்கணும்-ணு என்னோட 7 ஆம் அறிவு சொன்னதால அவளையும் ஆட் பண்ணேன். கொஞ்சம் நாள் நல்ல தான் போச்சு...சில பல ஸ்டேட்ஸ்கள்..அன்புடன் நலம் விசாரிப்புகள்...இப்படி போய்கிட்டு இருந்தப்போ..திடீர்-ணு ஒரு நாள்....

பிதாமகன் படத்துல சூர்யா டிரெயின் ல சொல்லுவாரே...."சத்தியம் தோற்பதில்லை" அப்படின்னு ஒரு சவுண்ட். என்னடா இதுன்னு பார்த்தா..நம்ம ஆளு பேஸ்புக் போராளி விடுதலை புலிகள் பத்தி ஸ்டேட்ஸ் போட்டிருக்கு. அலறி அடிச்சுகிட்டு லைக் போட்டா ..வரிசையா பயபுள்ள தமிழ் ஈழம், விடுதலை, சமூகம், அறிவியல் - னு பாடம் எடுக்க ஆரம்பிசிடிச்சு.

அடங்கொன்னியா...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை...

சரி இருந்தாலும்...அவங்க நாட்டுப்பணி சிறக்க...மொக்கராசுவின் சில ஐடியாக்கள்...

அண்ணன் ஒன்னொன்னா சொல்றேன்..ஆரவாரம் செய்யாம அமைதியா கேட்டுக்க...!

மொதல்ல  பேஸ்புக்ல இருக்கற ப்ரோபைல் போட்டோவ மாத்துங்க...ஈழ போராட்ட வரலாறு தெரிஞ்சவங்க பிரபாகரன் போட்டோவ வெச்சுக்கங்க...”எல்டிடி”னா அப்டீங்க்ரவங்க அண்ணன் சீமான் போட்டோவ வெச்சுக்கங்க...உங்கள இன்னும் அதிதீவிர போராளியா காட்டிக்கணும்னா உடனே ச்சேகுவேரா போட்டோவ வெச்சுக்கங்க..அப்பத்தான் மக்கள் மத்தியில ஒரு க்ரிப்பு கெடைக்கும், போராட்டகாரங்க  மத்தியில ஒரு கெத்தா இருக்கும்..என்னது ச்சேகுவேரா ன்னா யாரா...? அடியே ..அது தெரியாதா உனக்கு...சரி விடு..போராளியாஇருக்கறதுக்கு அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டியதில்ல..போட்டோ வெச்சிருந்தா போதும்..! ஆச்சா...!

இப்ப என்னா பண்ணு..டெய்லி நாலு ஸ்டேடஸ் போடு.. “ஈழம் மலரும்” அப்டீன்னு ஒன்னு... ரெண்டாவது“ராஜபக்சே பாடைல போவான்” அப்டீன்னு..மூணாவது “கலைஞர் கட்டைல போவாரு” அப்டீன்னு... நாலாவதா இத்தாலிய சோனியா காந்திய கழுவி ஊத்து...! ஆச்சா...!

அடுத்தது என்ன பண்ற அம்மா வெளிய எங்காச்சும் போகிறப்ப அவங்க பார்க்காதப்ப அப்டியே ஜஸ்ட் ஒரு டூ மினிட்ஸ் (பத்து மணிலேர்ந்து சாயங்கலாம் அஞ்சு மணி வரைக்கும்) பேஸ் புக்ல ஒரு லுக்க போடு... யாரெல்லாம் ராஜபக்சேவுக்கு எதிரா ஸ்டேடஸ் போட்ருக்காங்கலோ அவேங்களுகேல்லாம் ஒரு லைக்க போடு...அப்டியே மனசுக்குள்ள  நேரா கொழும்புக்கு போய் ராஜபக்சே தலைல ஒரு கொட்டு கொட்னா மாதிரி ஒரு பீலிங் வரும்..வருதா.?..வருதா ?

அப்படி பீலிங் வந்தா..நீ ராஜபக்சேவ ஜெய்ச்சிட்ட...இப்ப நீனும் ஒரு போராளி.(ஆனா, ராஜபக்சேங்கறவன் நம்ம தமிழின தலைவர் கலைஞர் அவர்களையே அடிச்சு சுருட்டி கவுட்டிக்குள்ள வாங்கி கொல்லப்பக்கம் வழியா குப்பைகுழிக்குள்ள வீசுனவன்னு..) ஆச்சா...இப்ப அடுத்த பேராவுக்கு போ..!

தோழர் தோழர்னு பேசி பழகிக்க.. (இது தெரியாம கப்பிதனமா மாமு, மச்சான், அண்ணன்னு சொல்லிக்கிட்டு இருக்கே நீ) அப்பத்தான் உன்னை கம்யுனிஸ்ட்ன்னு மக்கள் நம்புவாங்கே..கம்யுனிஸ சித்தாந்தம்னா என்னான்னே தெரியாத கம்னாட்டி கப்போதியா கூட நீ இருக்கலாம்..ஆனா தோழர்னு கூப்டறது ரொம்ப முக்கியம்...அப்பத்தான் ஊருக்குள்ள நாலு பேரு உன்னை நம்புவாங்கே..உன் ஸ்டேடச்க்கு லைக் போடுவாங்கே..உன் போராட்டம் வெற்றி அடையறதுக்கு ஏதுவா இருக்கும்...ஆச்சா...?

எதாச்சும் ஒரு ஸ்டேடஸ்ல நெஜமாவே சரக்கு உள்ளவன் நாலு பேரு தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பான்..வாய்ப்ப மிஸ் பண்ணிராத...நேரா உள்ள போ..! அது எந்த டாபிக்கா இருந்தாலும் சரி...டக்குனு“தமிழின துரோகி கலைஞர்க்கு வவுத்தால போவ”ன்னு ஒரு கமேன்ண்ட போடு..போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அங்கேயே வெயிட் பண்ணி பாரு...உன்னை எவனும் மதிக்கிரானன்னு..எவனும் மதிக்கலைனா உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிருச்சு...! இல்ல திடீர்னு எவனாச்சும் யோவ்..யாருய்யா அது லூசு மாதிரி பேசுறேன்னு கேக்ரான்னு வையி...! திரும்பி அதே கேள்விய அவன்ட்ட கேளு..என்ன லூசு மாதிரி பேசுறேன்னு..! அவன் ஷாக் ஆகி உன்னை விட்டுட்டு போயிருவான்...உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிரும்...! ஆச்சா 

இப்ப நீனும் ஒரு போராளி...தமிழ்ஈழத்த எப்டியாச்சும் மலர வெச்சுறனும்ங்கற ஒரு நெருப்பு உனக்குள்ள எரிஞ்சுகிட்டே இருக்கணும்..அதுதான் ஒரு உண்மையான போராளிக்கு அழகு...! நேத்து மத்தியானம் ஒரு மூணு மணி வாக்குல கூட எனக்கு பயங்கரமா தோணுச்சு..எப்டியாச்சும் ஈழத்த மலர வெய்ச்சிரனும்னு...அப்பன்னு பார்த்து ஒரு பிரெண்டு வாடா வெளிய போய் சும்மா சுத்திகிட்டு வரலாம்னு ..அர்ஜென்ட்டா கெளம்பி போயிட்டேன்..இல்லேன்னா நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்...!

ஆனா ஒன்னுடி ..பேஸ்புக்ல நம்ப பண்ற கூத்தெல்லாம் பார்த்து ஈழத்துல இருக்கற தமிழர்கள் கண்டிப்பா வாயால சிரிக்க மாட்டாங்கே...!!

நீ அதுக்காக உன் போராட்டத்த விட்றாத...! விடாம போராடு...!

லைக்குகள் அலறும்...ஸ்டேடசுகள் தொடரும்...!


குறிப்பு: இது யார் மனசையும் புண் படுத்துவதற்காக எழுதலீங்கோ. வழக்கம் போல குவாட்டர் கோவிந்தனின் அலப்பரைகள்-னு நினைச்சு படிச்சிட்டு மறந்துடனும்.

இப்படிக்கு
ரசிகன் 

பூ கொடியின் புன்னகை...



பூ கொடியின் புன்னகை ..அலை நதியின் புன்னகை..
மழை முகிலின் புன்னகை ...நீ காதலின் புன்னகை..
அந்த பௌர்ணமி என்பது...ஒரு மாதத்தின் புன்னகை..
உன் வருகையில் பூத்ததென்ன...
என் வாழ்க்கையின் புன்னகை..

உனது நிழல் தரை விழுந்தால்....என் மடியில்..ஏந்திகோள்வேன்..
வான் மழையில நீ நனைந்தால்...தென்றல் கொண்டு நான் துடைப்பேன்...
ஒரு நாள் என்னை சோதித்துப்பார்...ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்..

பூ கொடியின் புன்னகை ..அலை நதியின் புன்னகை..
மழை முகிலின் புன்னகை ...நீ காதலின் புன்னகை..
அந்த பௌர்ணமி என்பது...ஒரு மாதத்தின் புன்னகை..
உன் வருகையில் பூத்ததென்ன...
என் வாழ்க்கையின் புன்னகை..

நீலம் மட்டும் இழந்துவிட்டால்...வானில் ஒரு கூரை இல்லை..
சூரியனை இழந்துவிட்டால்.. கிழக்குக்கொரு திலகம் இல்லை..
நீ ஒருமுறை திரும்பிகொண்டால்...என் உயிருக்கு உறுதி இல்லை..
என் உயிருக்கு உறுதி இல்லை...

பூ கொடியின் புன்னகை ..அலை நதியின் புன்னகை..
மழை முகிலின் புன்னகை ...நீ காதலின் புன்னகை..
அந்த பௌர்ணமி என்பது...ஒரு மாதத்தின் புன்னகை..
உன் வருகையில் பூத்ததென்ன...
என் வாழ்க்கையின் புன்னகை..

நன்றி..கவிஞர் வைரமுத்து 


Nothing...ஒன்றுமில்லை!!!



அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
அர்த்தமில்லாமல் முடிகின்றன..

அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
தாமரை இலை தண்ணீர் போல் ஆகின்றன..

அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
மௌனமாகவே முடிகின்றன...

அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
விடை தெரியாத விடுகதைகளாய் நீள்கின்றன..

அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
"ஒன்றுமில்லை"...என்றே முடிகின்றன....



இப்படிக்கு
ரசிகன்

வியாழன், நவம்பர் 14, 2013

கன்னிராசிக்கார நேயரே...



ஒரு இனிய காலை பொழுது. புத்தாண்டு! அன்றைய சுப தினத்தில் ராஜ் மாமாவின் கன்னிராசி ...பப்பரப்பே - னு மல்லாக்க படுத்து மட்டை ஆனதை ராஜ் மாமா இப்போது ரைமிங்கோடு விளக்குவார்கள்..

இனி தொடர்வது ராஜ் மாமா-வின் குரல்..(நீ அசத்து மாமா 
..உன்னைய எவனும் ஆணி புடுங்க முடியாது..என்னை தவிர)


காலங்காத்தால பல்லு வெளக்குறாய்ங்களோ இல்லையோ, பயபுள்ளைங்க போனைப் போட்டு, “ராஜ் ..என்ன புத்தாண்டு சபதம் எடுத்திருக்க” ன்னு ஒரே டார்ச்சர்ணே..அதுலையும் இந்த ஐரின்-னு ஒரு அறுந்தவாலு சும்மா போன போட்டு நொயி நொயி -னு. மனுசன சபதம் எடுக்காம சாக விடமாட்டாங்க போல. சரி, பயபுள்ளைங்க ரொம்ப ஆசைப்படுறாய்ங்களே, நம்மளும் புத்தாண்டு சபதம் எடுக்கலைனா, ஊருக்குள்ள ஒரு மாதிரி பார்ப்பாய்ங்கன்னும், சாட்ல பொரளி பேசுவாங்கனும் பயந்துக்கிட்டே எடுத்தேண்ணே ஒரு புத்தாண்டு சபதம். அது என்ன தெரியுமா..”இந்த வருசமாவது காலையில 6 மணிக்கு எந்திரிக்கணும்…” (ஆஹ்ஹா சூப்பர் சபதம் மாமா. கலக்கிட்டே போ...நான் எல்லாம் சூ......ல வெயில் அடிக்கிற வரை தூங்குற ஆளு..நீ எடுத்தே பாரு மாமா சபதம்...நின்னுட்டே மாமா நீ நேஷனல் ஜியோகிராபில ..)


உலகத்துலயே புத்தாண்டு நைட்டு குறட்டைவிட்டு தூங்குன ஆளைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..அது நான்தாண்ணே..நைட்டு, 10 மணிக்கெல்லாம் தூக்கமுன்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம்…முரட்டுத்தூக்கம்..காலங்காத்தால காதுக்குள்ள “கொய்ங்” கிற மாதிரி ஒரு சத்தம். கண் முழிச்சு பார்த்த, அலாரம்..ஆஹா..புத்தாண்டு சபதம்னு அவசரம், அவசரமா டையத்த பார்க்குறேன்…மணி 10..அவசரத்துல 6 மணிக்கு வைக்கிறதுக்கு பதிலா, 10 மணிக்கு வைச்சிட்டேன் போல..கரெக்டா வூட்டுக்காரம்ம கேக்குறா..

“ஹேப்பி  நியூ இயர்ங்க..உங்க புத்தாண்டு சபதம் என்னங்க..”

“அது செத்து 4 மணி நேரமாச்சு..அது கெடக்கு கழுதை விடு..ஒரு சூடா காபி ஒன்னு கொடேன்…”


அப்படின்னு எந்திருக்க டிரை பண்ணுறேன்…

“கன்னி ராசி நேயர்களே” அப்படின்னு ஒரு சத்தம்..

“அடியே, டி.வி ஏதாவது போட்டியா..”

“ஐய்யோ..அது நாந்தாங்க..”

“ஏன்..ஏன் இப்படி..” (புத்தாண்டு அதுவுமா கொலைவெறி பண்றாளே...!)



“டி.வியல சொன்னாய்ங்க..கன்னி ராசி நேயர்களே…உங்களுக்கு இந்த வருடம் கை, காலில் சுளுக்கு, வலி போன்ற உபாதைகள் வர்ற வாய்ப்புண்டு..அதனால் பார்த்து நடந்து கொள்ளவும்..நீங்க மெதுவா, பார்த்து கைய ஊன்றி  எழுந்திருங்க” (செத்தாண்டா சேகரு....ஆரம்பமே அலைக்கழிப்பா... விளங்கிடும்)

“அடியே..நான் என்ன ஹாஸ்பிடல் பேஷண்டா..அதெல்லாம் ஒன்னுமாகாது… காபி கொண்டு வா..ப்ளீஸ்,,”

“ஏங்க..நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்..சூப் கொண்டு வர்றேன் குடிங்க..”


“அடியே கன்னி ராசி நேயர்கள் டீ.காபி குடிக்க கூடாதுன்னு சொல்லியிருக்காய்ங்களா…”

“அப்படியே நேரிடையா சொல்லலை..ஆனால் பித்த நோய்கள் வர சான்ஸ் இருக்காம்..அதனால டெய்லி உங்களுக்கு சூப்பு தான்..”


(மாமா...மனசுக்குள்ள ..ம்ஹும்ம் ...அப்படியே நாலு நாய் எலும்பு போட்டு சூப் குடுடி...குடிச்சிட்டு எங்காச்சும் ஓடிடுறேன்)


அடிப்பாவி..கன்னி ராசி என் வாழ்க்கையில் குத்த வைச்சு கும்மி அடிக்குதே..சரி..பல்லு விளக்கிட்டு வர்றேன்,..இட்லியாவது பண்ணி கொடு..அப்படியே எனக்கு புடிச்ச தேங்கா சட்னி கண்டிப்பா” ன்னு... சொல்லிட்டு பல்லு வெளக்கிட்டு, டைனிங்க் டேபிளுக்கு வந்தா சுடசுட இட்லி..உக்கார்ந்து ஆசை, ஆசையா, சட்னியப் பார்த்தா, சட்னியக் காணோம்..ஒன்லி பொடியும், எண்ணையும்…

“அடியே..சட்னி எங்க..”

“ஏங்க..கன்னி ராசிக்காரங்களுக்கு நேரம் சரியில்லையாம்…கிட்னி பெயிலியர் வர சான்ஸ் இருக்காம்..அதனால, இனிமேல் பொடிதான்..”


அடிப்பாவி..கிட்னிய காரணம் காட்டி சட்னிக்கு ஆப்பு வைச்சிட்டியா.. சரி..இவ்வளவு பேசுறியே..உன்னோட ராசிக்கு என்ன போட்டிருக்கு…”

“அத ஏன் கேக்குறீங்க..என் ராசிக்கு இந்த வருஷத்துல குடும்பத்தில பிரச்சனை வருமாம்..”

“ஆமாடி ..இப்படி புருசனக்கு இட்லி பொடியும் குடுத்தா, உன் ராசிக்கு மட்டுமில்லடி, எந்த ராசியா இருந்தாலும் குடும்பத்துல பிரச்சனைதான்..சரி கடைப்பக்கம் போயிட்டு வர்றேன்..கதவ பூட்டிக்க”


அப்படினுட்டு காரை எடுக்குறேன்…காரை மறிச்சிக்கிட்டு நிக்குறா..

“ஏங்க…”

“இப்ப என்ன…”

“கன்னி ராசிக்காரங்களுக்கு, வாகனத்தால ஆபத்து இருக்காம்…”


(மாமா கடுப்பாகி...) "அடியே ...உன்னைய கார் ஏத்தி கண்டம் பண்ணிட்டுதாண்டி மறுவேலை..."

விளையாடாதீங்க....சொன்னா கேளுங்க..


“அய்யயோ..காரும் பிரச்சனையா..காலுல வேற காயம் வரும்னு சொல்லுறா..நான் வேணா, கோயிலுல அங்கபிரதட்சணம் பண்ணுற மாதிரி, உருண்டுகிட்டே கடை வரைக்கும் போயிட்டு வரவா…”


ஐயோ ...ராமா  நான் சொல்ல வந்தது...மெதுவா போங்கனு...உங்களை கட்டிக்கிட்டு மாரடிக்கிறேன் பாருங்க...


வேற என்ன பண்ணுறதுட்டு நொந்துக்கிட்டே காரை எடுக்குறேன்..காரை 40 மைலுக்கு ஓட்டினாலே அசரீரி மாதிரி “கன்னி ராசிக்கார நேயர்களே” அப்படினுதான் சவுண்டு கேக்குது..அப்புறம் எங்கிட்டு.. நம்ம ஊருல இஷ்டப்பட்ட வேகத்துல கார் ஓட்ட முடியாது..ஸ்லோவா போனாலும் பிரச்சனைதான்..


நம்மளுக்கு வேற வழியில்லாததால, மெதுவா ஓட்டிட்டு போறேன்..பின்னாடி ஒரே ஹார்ன் சத்தம்..கண்ணாடி வழியா பார்க்குறேன்..பிரதமர் காருக்கு பின்னாடி வருமே, அது மாதிரி, ஒரு 50 காருண்ணே..வருசையா வருது..ஆக்சிலேட்டர மிதிச்சாலும் “கன்னி ராசிக்கார நேயர்களே” அப்படின்னு வேற சவுண்டு..சகிச்சுக்கிட்டு ஒரு இடத்தில காரை நிறுத்தினா..சடனா ஒரு 4 காரு என் பின்னாடி..அம்புட்டு பேரும் என் பின்னாடி வந்தவய்ங்க…அவிங்க கண்ணு முழுக்க கொலைவெறி..வந்து திட்டுனாய்ங்க பாருங்க..தமிழு & இங்கிலீசுல அம்புட்டு கெட்டவார்த்தை இருக்குன்னு அன்னிக்குதானே தெரிஞ்சுச்சு....பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க...புத்தாண்டு அன்னைக்குனு பார்த்து கண்ணுல பொல ..பொல-னு தண்ணி கொட்டுதுண்ணே...யாரு பெத்த மகாராசன்களோ...சும்மா சொல்லகூடாது ஹை லெவல் கெட்டவார்த்தைங்க....!

எனக்கே ரொம்ப டயர்டாயிட்டதால ஒரு கட்டத்துல அவிங்களே நிறுத்திட்டு கிளம்பிட்டாய்ங்க..எல்லா திட்டையும் வாங்கிட்டு காது வலியோடு வீட்டுக்கு வர்றேன்..வூட்டுக்காரம்மா சொல்லுறா…

“ஏங்க..சொல்ல மறந்துட்டேன்..கன்னிராசிக்காரங்களுக்கு தெரியாத நபர்களால் பிரச்சனை வருமாங்க..பார்த்து சூதானமா நடந்துக்குங்க…”


தெரியாத நபர்களா..?? அது தான் ஏற்க்கனவே பிரச்சனை பண்ணிட்டு போயிட்டாங்களே...அப்புறம் இனி எப்படி வ...ரு...ம்... (மாமா யோசிக்கிறார்..)

ஆஹ்ஹா ...அவிங்களே தான்...சாட்ல ...ஒரு குரூப்பா கும்மி அடிப்பாங்களே....அடி ஆத்தி ...அவிங்க பிரச்சனைய தோள்ள துண்டு மாதிரி போட்டு அலையுற களிசட கம்முனாடிங்கல்ல...அம்மாடி இன்னைக்கு சாட்டு பக்கமே போககூடாது சாமி....

ஏண்ணே…கன்னிராசிக்காரய்ங்க, இந்த வருசத்துல உசிரோட இருப்பாய்ங்களா…???


(ராஜ் மாமா...இத படிக்கிற பல ராசிக்காரைங்க....நிலைமை என்னான்னு சொல்ல முடியுங்களா ? )

இப்படிக்கு..
ரசிகன்


புதன், நவம்பர் 13, 2013

தக்காளி...டேய் ..நண்பா...



நல்ல நண்பன் என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. நான் சாட் வந்த புதுசுல பயபுள்ள அதே சாட் ல வெங்காயம் வித்துகிட்டு இருந்தான். கூடவே நண்பா நண்பா-னு பேசிக்கிட்டு இருப்பான். எனக்கும் பய மேல அம்புட்டு பாசமுன்னே. சரி நம்ம கூட சரிக்கு சமமா மொக்க போடுறானே-னு அவனையும் கூடவே வச்சுகிட்டு வர்ற போற பொட்டை புள்ளைங்க கைய புடிச்சி இழுத்துகிட்டு இருந்தோம். ஆனா நம்ம ஆளு நண்பன் இருக்கானே சொக்க தங்கமுன்னே. பொண்ணுகள நிக் நேம் பார்த்தா பயபுள்ள அப்புடியே பொங்கிருவான். ஆனா பாருங்க, இலவம் மரத்த தேடி தான் கிளிகள் போகுது. அவன தேடி தான் போட்ட புள்ளைங்க போகுது. எனக்கெல்லாம் வயித்தேரிச்சல்னே! இருந்தாலும் அங்கையே டேரா போட்டு மல்லுக்கட்டிக்கிட்டு கிடந்தோம். பேசிக்கலி நாங்க ரெண்டு பேருமே வெட்டி முண்டம் வீணாப்போன தன்டமுங்க. ஹி..ஹி..ஹி.

என்னைய விட 3 வயசு கம்மின்னே அவனுக்கு. பாக்குறதுக்கு சின்ன பையன் போல தான் இருந்தான். “என்ணண்ணே..இங்கிட்டு ஒரு எழவும் புரிய மாட்டிங்குது. இவிங்க இப்படித்தான் இருப்பாயிங்களா..” என்றான். சிரித்துக் கொண்டன். அந்த தமிழை கேட்க ஆசையாய் இருந்தது. வாய் நிறைய “அண்ணே..அண்ணே..” என்றுதான் கூப்பிடுவான்..

“அண்ணே..எப்படிண்ணே இருக்கீங்க..”

“அண்ணே..சாப்ட்டியாண்ணே ..”

“அண்ணே..கிளம்பலாமாண்ணே..”

“அண்ணே..ரொம்ப நன்றிண்ணே..”

இப்படி வாய் முழுக்க அண்ணன்கள். ரொம்பவும் மரியாதை கொடுத்தான்..

“டேய் நண்பா . என்னை பெயரை சொல்லியே கூப்புடுடா..”

“போங்கண்ணே..உங்களைப் போயி..” (அப்படியே மட்டையா மடங்குனான்). பெரியவங்களுக்கு மரியாத குடுக்கிறத அந்த காமராஜரே இவன்கிட்ட தான் கத்துக்கணும் போல.

ரொம்ப ரொம்ப நெஞ்சை நக்கினான். நானும் அவனை விட 3 வயது மூத்தவன் என்பதையே மறந்துவிட்டேன். என் நண்பனாகவே பழக ஆரம்பித்தேன். முடிந்தவரை அவனுக்கு உதவி செய்தேன். சாட் ல எந்த கம்முனாட்டி கபோதி எந்த நிக் நேம் வச்சு வராங்க-னு எல்லாம் சொல்லி குடுத்தேன். நம்ம ஊர்க்காரனாச்சே என்ற பாசம்தான் அதிகம் இருந்தது. இப்படி போய் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் என்னிடம் கேட்டான்..

“அண்ணே..தண்ணியடிப்போமா..”

என்னிடம் உள்ள ஒரே கெட்டபழக்கம் தண்ணியடிக்க பழகாததுதான். (ஹி..ஹி..ஹி..) அடிபம்பில் கூட இரண்டு வாளி தண்ணியடிப்பேன், ஆனால் மருந்துக்குகூட மது(தியேட்டர் இல்லைண்ணே) பக்கம் செல்ல மாட்டேன். ஒரு புடலங்காய் சத்தியமும் இல்லை. நான் அந்த பக்கம் செல்ல நினைத்தாலே, அய்யனார் வேஷம் போட்ட வினுசக்கரவர்த்தி மாதிரி எங்கப்பா கையில் அருவாளோடு நாக்கை துருத்திக் கொண்டு ஓடிவரும் காட்சி என்முன் தோன்றுவதால். ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும். கேட்க, கேட்க கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றும் தண்ணியடித்தவர்களின் உளறலை கேட்க சிரிப்பாக இருக்கும். அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். நண்பன்  வீட்டில் பாட்டில் ஓபன் பண்ணுவது என்று முடிவானது.

கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..

“சாமி..நல்லா போதை ஏறணும்..” (ரொம்ப பயபக்தி...நாதாரி)

ஓபன் பண்ணுவதற்கு முன்னால், மரியாதை தெரிஞ்ச பய, பவ்யமாக என்னிடம் கேட்டான்..

“அண்ணே..உங்க முன்னாடி சரக்கு அடிக்கபோறேன் தப்பா எடுத்துக்க மாட்டிங்கள்ள..”

எனக்கு புல்லரித்துப்போனது. என்ன ஒரு பாசம்..என்ன ஒரு பாசம்..

“தம்பி..நீ எனக்கு தம்பி இல்லைடா..நண்பேண்டா..ஒரு வார்த்தை கேட்ட பார்த்தியா…அதுவே எனக்கு போதும்டா..தைரியமா அடி..”

கண்ணை மூடிக்கொண்டு முதல் ரவுண்டு உள்ளே விட்டான்..நானும் இருக்கிற சைடுடிஷ்களை காலி பண்ண ஆரம்பித்தேன்.

“அண்ணே..எனக்கு நீங்கதாண்ணே உண்மையிலேயே அண்ணே..நீங்க இல்லாம எனக்கு யாருமே இல்லேண்ணே..நீங்க ஹெல்ப் பண்ணலைண்ணா..ப்ச்..” (பீல் ஆக ஆரம்பிச்சான்).

ரொம்ப பீல் பண்ணினான்..

“விடுடா தம்பி..நம்ம ஊர்க்காரனாயிட்ட..”

இப்போது ரெண்டாவது ரவுண்டு உள்ளே விட்டான்..

“அண்ணே..நீங்க அண்ணே..நானு தம்பி..”

“ஆமாண்டா தம்பி..”

“இல்லை..நீங்க ஒத்துக்க மாட்டீங்குறீங்க..நீங்க தம்பி..நான் அண்ணே..சாரி..சாரி..நீங்க அண்ணே..நான் தம்பி..”

“ஓகே தம்பி..நான் வரட்டா..”

என்ன நினைத்தானென்று தெரியவில்லை..மூன்றாவது ரவுண்டையும் உள்ளே விட்டான்..

“டே..அண்ணே..உக்காரு..”

சரி பயபுள்ள வேற யாரையாவது சொல்லுறான்னு அங்கிட்டு பார்த்தா ஒருத்தனையும் காணோம். ஆஹா..அப்ப என்னையத்தான் சொல்லுறானா..

“டே..தம்பி..என்ன இது..”

“டே..வெளக்கெண்ண..உக்காருடா..ஒரு தடவை சொன்னா கேட்காது..புடிங்கி” ங்கிறான்..எனக்கு ஆடிப்போயிருச்சுண்ணே..

“டே..தம்பி..உனக்கு தலைக்கு போதை ஏறிருச்சு..ஒழுங்கா தூங்கு..”

“போடா..சொம்பு..ஒருதடவை சொன்னா தெரியாது..வூட்டுல போயி என்னத்த புடுங்க போற..உக்காரு ஒழுங்கா..இல்லைண்ண்ணா…இந்த பாட்டில வுட்டு மண்டையில ஆட்டிப்புடுவேன்”

ஆத்தாடி..எனக்கு கொலைநடுங்கிப்போச்சுண்ணே..உசிருக்கு பயந்து அப்படியே உக்கார்ந்துட்டேன்.. இன்னொரு ரவுண்டு உள்ளே விட்டான்..

“என்ணண்ணே..தப்பா எடுத்துக்காதண்ணே..நீ அண்ணே..நான் தம்பி.. சொல்லு..நீ யாரு..”(ஐயோ ..கூப்ட்டு வச்சு எளவு எடுக்கிறானே..).

உசிரு பயத்துல தானா வார்த்தை வந்தது..

“அ…ண்…ணே..”

“நானு..”

“த..ம்…பி..”

உடனே ஆரம்பித்தான்..

“அண்ணே..உங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்கேன்..நாம சின்னபுள்ளையில எம்புட்டு பாசமா இருந்துருப்போம்..”

“டே..நண்பா ..ஒரு மாசமா தாண்டா உன்னோட பழக்கம்..அதுவும் சாட் - ல..சும்மா குடிச்சுப்புட்டு உளறாதே..”

“என்னது..நான் குடிகாரனா..நான் உளறுனா..டே…ய்….”

அவ்வளவுதாண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தையை ஒரே வாயிலிருந்து அப்பதான் முததடவையா கேக்குறேன். சிலவார்த்தையெல்லாம் சின்னபுள்ளையில கேட்டது..காதை பொத்திக்கொண்டேன்..திடிரென்று பயபுள்ள இறங்கிட்டான்..

“அண்ணே..சாரிண்ணே..நல்லா..ஏறிரு..ச்..சிண்ணே..நீங்க கூட ரெண்டு..ரெண்டா..தெரியிறீங்க..ண்ணே..”

சொல்லிக்கொண்டே..பொத்தென்று கீழே விழுந்தான்..ஆஹா..பயபுள்ளைக்கு அடிபட்டுட போகுதுன்னு அவனை அப்படியே தூக்கினேன். அந்த நேரம் பார்த்து எடுத்தான் பாருங்க..ஒரு வாந்தி.. அவ்வளவுதான்.. அவ்வளவு சாக்கடையும் என்மேல்தான்..ஏறக்குறைய குளித்தேவிட்டேன்…அந்த நாத்தம் தாங்கமாட்டாமல் நானும் எடுத்தேன் வாந்தி..

பின்பு என்ன..அவனை எழுப்பி குளிக்கவைத்து..படுக்கையில் போட்டு விட்டு..நானும் குளித்து திரும்ப வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..வாழ்க்கையே வெறுத்துப்போனேன்..திரும்ப வந்து பார்த்தால் ஆளைக்காணோம்..கட்டிலுக்கு கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்..திரும்பவும் உளறினான்..

“ஆ….ஏய்..யா..ரு..யா..அங்க..நிக்க்கு..ற..து..ஐ…லவ்..யூ…என் ..வா..ழ்க்க்..கை..யில்..நடந்த…சம்ப்ப..வங்க..ள்.. நான்...சவுதி....ஒட்டகம்...போ..டா ..மேய்க்க மா..ட்...டேன்"

திரும்பவும் அவனை படுக்கபோட்டுவிட்டு அவனருகில் ஒரு சேர் போட்டு உக்கார்ந்து கொண்டேன்..பய போதையில் எங்கயாவது போய் விட்டால் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம்தான்..காலை 5 மணிவரைக்கும் முழித்தே இருந்தேன்..அசதியில் அப்படியே தூங்கிப்போனேன்..துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம நண்பன்  நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..

“அண்ணே..துண்ணூரை எடுத்துக்கங்கண்ணே..”

எனக்கு இருந்த கொலைவெறியில் ஒன்றும் பேசவில்லை..அவனே பேசினான்..

“என்னண்ணே..இம்புட்டு நேரமா தூங்குறது..உடம்புக்கு ஏதும் பிரச்சனையாண்ணே..ஏதோ வாந்தி எடுத்த மாதிரி தெரியுது..

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு. கையில் எதுவும் கிடைக்கலை..அங்கிட்டு கிடந்த பாட்டிலை எடுத்து அவனைநோக்கி ஓடினேன்..அன்னிக்கு ஓடி ஒளிஞ்ச பையன்..இன்னும் என் கையில சிக்கலை..

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…"


பின்குறிப்பு: நண்பா எங்க இருந்தாலும் ஓவரா தண்ணி அடிக்காதே டா. உன்னைய நம்பி பொண்டாட்டி புள்ளைகுட்டிங்க இருக்கு. அத்தாச்சி வாழ்க்கையும் பார்க்கொணுமில்ல. ஓவரா தண்ணி அடிச்சா உடனே உச்சா போகணும் நண்பா. கொஞ்சம் போதை கம்மி ஆகுமில்ல...


இப்படிக்கு
உன் நலம் விரும்பும்..
ர.சி.க.ன்




செவ்வாய், நவம்பர் 12, 2013

சோனமுத்தா கலந்து கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி...




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அமெரிக்காவில் நடப்பதை அறிந்து, புரச்சித்தளபதி, தமிழர்குல தங்கம்,  நம்ம சோனமுத்தா  (பயபுள்ள இப்படிச் சொன்னாத்தேன்,  ரொம்ப  சந்தோசப்படுறான்) ஓடிப்புடித்து கலந்துகொண்டதன் நிகழ்ச்சித் தொகுப்பே இந்த பதிவு….

சூர்யா : வாங்க வணக்கம்..உங்க பேரு…

சோனமுத்தா : தன்னிகரில்லா தலைவன்..மாசு கலக்காத தங்கம்…

சூரியா : ஸ்டாப்….எங்கிட்ட வைச்சுக்காத..ஒழுங்கா பேரச் சொல்லு..

சோனமுத்தா : ஹி..ஹி..சோனமுத்தா சார்..

சூர்யா : ங்கொய்யால..சோனமுத்தானு மொக்கை பேர வைச்சிக்கிட்டு பண்ணுற அலும்ப பாரு…

சோனமுத்தா : சார், ஒரு டவுட்டு

சூர்யா : கேளுங்க…

சோனமுத்தா : எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..அப்படிங்குற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்பிங்களா சார்..

சூர்யா : அது ஒரு கோடிக்கான கேள்வி..அதெல்லாம் கடைசியில தான்..அதுவரைக்கும் மிகவும் எளிமையாத்தான் இருக்கும்.

சோனமுத்தா : தேங்க்யூ சார்

சூர்யா : சரி சோனமுத்தா..உங்களைப் பத்தி சொல்லுங்க..என்ன பண்ணுறீங்க..

சோனமுத்தா : அய்யோ சார்..இப்படியெல்லாம் கேட்பீங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கலை சார்..நீங்க நடிச்ச அவன் இவன் படம் ஒன்பது தடவை பார்த்திருக்கேன் சார்..அதுவும், பெண் வேஷத்துல நீங்க கலக்கியிருப்பீங்க..

சூரியா(டென்சனாகி) : (ஒருவேளை காதும், மூளையும் அட் எ டயத்துல டமாராமாகியிருக்குமோ)..பரவாயில்லை சோனமுத்தா..உங்கள் பொது அறிவு என்னை வியக்கவைக்கிறது..உங்கள  பத்தி சொல்லுங்க..

சோனமுத்தா : ஊருப்பக்கத்துல கஷ்டப்படுற பேமியில இருந்து வந்தவன் சார் நானு..காலையில தண்ணி கிடைக்கலைன்னு, சாராயத்துலதான் கு…

சூர்யா : யோவ்..கொல்லப்போறேன் பாரு

சோனமுத்தா : குளிப்போமுன்னு சொல்லவந்தேன் சார்

சூர்யா : அவ்வளவு எளிமையா..

சோனமுத்தா : ஆமா சார்..காலங்காத்தால, 10 பூரி, ரெண்டு பொங்கல், 4 மெதுவடை..

சூர்யா : டோட்டல் பேமிலிக்கா..

சோனமுத்தா : இல்ல சார்..எனக்கு மட்டும்தான்..சும்மா ஸ்நாக்ஸ்சுக்கு..

சூர்யா : அடீங்க..நீங்க இப்படி ஒல்லியா இருக்குறதுக்கு காரணம் புரியுது… நிக்ழ்ச்சிக்கு போகலாமா…

சோனமுத்தா : எங்க சார் போவுறது..சானல்காரங்க உக்கார்ந்துதான் நிகழ்ச்சின்னு சொன்னாங்க..

சூர்யா : யோவ் லொள்ளு சோனமுத்தா..விட்டேன்…ஒழுங்கா பர்ஸ்ட் கேள்விய கேட்டுக்க…உங்களுக்கான முதல் கேள்வி..

தமிழகத்தின் பொற்கால ஆட்சியில் கரண்டு கட்டு ஆவது, எவ்வளவு நிமிடம்…

5 நிமிடம் B) 10 நிமிடம் C) 1 நிமிடம் D) கரண்டு கட்டு ஆவதே இல்லை

யோசித்து  பதில் சொல்லுங்கள்..யுவர் டைம் ஸ்டார்ட் நௌ…

சோனமுத்தா : சார்..அமெரிக்காவுல இருக்குற எனக்கு இப்படி ஒரு கஷ்டமானா கேள்வியா இருந்தா எப்படி சார்..அதுவுமில்ல சானல்காரயங்க இந்த கொஸ்டின கேப்பீங்கன்னு சொல்லவே இல்லையே..

சூரியா : நீங்க வேணுன்ன லைப் லைன யூஸ் பண்ணுங்களேன்

சோனமுத்தா : ஓகே சார்..மதுரையில இருக்குற என் உயிர் நண்பன் ஜீவாக்கு போன் பண்ணுறேன்..

(தொலைபேசுகிறார்)

சோனமுத்தா : ஜீவா ...ராசா..நாந்தான் கோவாலு பேசுறேன்..

ஜீவா  : டே சோனமுத்தா..என்னடா காலங்காத்தால..டே..உனக்கு தெரியுமா..டாஸ்மார்க்க 11 மணிவரைக்கும் ஓபன் பண்ணி வைச்சிருக்காய்ங்க..செம குஜாலு..நீ மிஸ் பண்ணிட்டட்டா..

சோனமுத்தா : ராசா..எங்கூட சூரியா இருக்காருடா..ஒரு கேள்வி கேக்குறேன் பதிலு சொல்லு..

ஜீவா : கண்டிப்பாடா..அதுக்கு முன்னாடி ரொம்ப இருட்டா இருக்கு..லைட்ட போடுறேன்..அய்யய்யோ..கரண்ட காணோமேடா….அய்யய்யோ..டே..மூக்கு கண்ணாடி வேற கீழே விழுந்துருச்சே..இந்த இருட்டுல கண்ணு தெரியலையே..அய்யய்யோ..ஒன்னும் தெரியலையே..

சூர்யா : டைம் அப்…சோனமுத்தா..உங்களுக்கான டைம் முடிந்தது..யோசித்து பதில் சொல்லுங்கள்.

சோனமுத்தா : என்ன சார்..இப்படி கேட்டுப்புட்டிங்க..(மிகவும் யோசிக்கிறார்..யோசித்து கடைசியாக,,) சரி சார்..ஆப்சன் D) கரண்டு கட்டு ஆவதே இல்லை…

சூரியா : ஜீனியஸ்..லாக் பண்ணுங்க..வாவ் சரியான விடை..எப்படி கரெக்டா கண்டுபுடிச்சீங்க….

சோனமுத்தா : ங்கொய்ய்யால தமிழ்நாட்டுல கரண்டுன்னு ஒன்னு இருந்தாதானே கட் ஆகும்..அதுதான் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்லுறாய்ங்களே..

சூர்யா : (பயத்துடன்..ஆஹா..வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிச்சுர்வான் போலிருக்கே) சரியான விடை..உங்களுக்கான ரெண்டாவது கேள்வி இதோ..

இந்தியாவின் பிரதமர் யார்?
மன்மோகன் சிங்க் B) அன்னா ஹசாரே C) சோனியா காந்தி 4) இளைய தளபதி விஜய்

சோனமுத்தா : யூ நோ..அய் ஆம் எ என்.ஆர்.ஐ..ஐ டோண்ட் நோ இண்டியா..ப்ளடி கண்ட்ரி…ஆல் பொல்யூசன்..கரெப்ஷன்…

சூர்யா : கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடா வெண்ட்ரு..

சோனமுத்தா : சார்..லைப் லைனு யூஸ் பண்ணிக்கலாம…

சூர்யா :  ஸ்யூர்..எந்த லைப் லைனு..

சோனமுத்தா : 50 – 50.. ஆனா சார்..

சூர்யா : ஆனா..

சோனமுத்தா : இந்த லைப் லைன 75-25 ஆ மாத்த முடியுமா..3 தவறான பதில தூக்கிட்டா நல்லா இருக்கும் .

சூரியா : பேசாம ஒன்னு பண்ணுவோம்..நீ இந்த சீட்டுக்கு வந்துரு..நீயே கேள்வி கேட்டுட்டு நீயே பதில் சொல்லிக்க..அப்படியே ஒரு கோடிய எடுத்துட்டு போயிரு..வெங்கம்பயலே…

சோனமுத்தா : கோவிச்சுக்காதிங்க சார் : 50-50 யே யூஸ் பண்ணுங்க..

சூர்யா: ஓகே சோனமுத்தா: இதோ உங்களுக்கான ஆப்சன்…

A )மன்மோகன் சிங்க் B) இளைய தளபதி விஜய்…

சோனமுத்தா : ம்….A) மன்மோகன்சிங்க்

சூர்யா : வாவ்..கரெக்டான ஆன்சர்..பொது அறிவுல நீங்க எங்கயோ போயிட்டிங்க…எப்படி இதெல்லாம்..நிறைய புத்தகம் படிப்பீங்களா..

சோனமுத்தா : ரொம்ப புக்ழாதிங்க சார்..கூச்சமா  இருக்கு..சிம்பிள் மேட்டர் சார்..இளைய தளபதி விஜய் தமிழக முதல்வர்..அப்படி இருக்குறப்ப அவர் எப்படி பிரதமர் ஆக முடியும்..ஆக இருக்குறது..மன்மோகன்சிங்க்.. அவராத்தான இருக்க முடியும்,.ஆமா ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்..யார் சார் மன்மோகன்சிங்க்?.. ஹர்பஜன்சிங்க் அண்ணனா?….

சூர்யா : (டென்சனாகி) ங்கொய்யால..யோவ் விஜய் டிவி..அந்த கேமிராவை ஆப் பண்ணுய்யா..இன்னைக்கு செட்டுல ஒரு கொலை நடக்கப்போகுது..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டுடா..என்று அங்கிருக்கும் கம்ப்யூட்டரை பிடிங்கி அடிக்கப் பாய..

கோவாலு…தலைதெறிக்க ஓட..விளம்பர இடைவேளை இப்படித் தொடங்குகிறது..

(உலகத்துலேயே, லைவ்வாக ஒரு கொலை..உங்களுக்காக வழங்குவது….கொக்க கோலா..பெப்சி..மிரிண்டா..பேரண்லவ்லீ…ஸ்வீட் எடு கொண்டாடு..)

பின்குறிப்பு: சோனமுத்தா யார்னு தெரியாதவங்க...தமிழ் சாட் - ல BruteForce - னு ஒரு டோமரு சுத்திகிட்டு இருக்கும். அதை நிக்க வச்சு எந்த ஆங்கிள்ல வேணாலும் பாருங்க...!

இப்படிக்கு..
நிகழ்ச்சி தயாரிப்பாளர்.
ராஜ்ஜ் மாமா & ரசிகன் 

காதலில் சொதப்புவது எப்படி..



"ரெஜினா ..." இந்தப் பெயரை சொல்லும்போதே அவனுக்கு ஜிலீரென்றிருந்தது. மீண்டும் ஒருமுறை அந்தப்பெயரைச் சொல்லிப் பார்த்தான்.இதோடு, 48 முறை சொல்லியிருக்கிறான் இந்தப்பெயரை, இன்று மட்டும். இன்னும் சொல்லுவான்...100 தடவை சொன்னாலும் அலுக்கவில்லை.தன்னுடய பெயர் "ஜீவாவை " கூட அவன் இவ்வளவு முறை சொல்லியதில்லை..

ஒரு மாதத்திற்கு முன்புவரை, எந்தப் பெண்ணோ, அல்லது பெயரோ, அவனை ஈர்த்ததில்லை. ஆனால், எல்லாம் அவளை பார்க்கும்வரைதான்.அவளை, ரயில்வே ஸ்டேஷனில்தானின் முதலில் பார்த்தான்...இல்லை விழுங்கினான்...அவள் அந்த பக்கம் வரும்போது, மனது படபடத்தது.. "கடவுளே..இவள் என் கம்பார்ட்மெண்டுக்கு மட்டும் வந்துவிட்டால்..ஊருக்கு வந்து நேர்த்தி செலுத்துகிறேன்.."

ஆனால், பழம் நழுவி, பீரில் விழுந்தார் போல் அவனை நோக்கியே வந்தாள்...

"எக்.ஸ்.க்யூஸ்..மீ"

அவனுக்கு நா ஓட்டிக்கொண்டது..என்ன பேசுவதென்று தெரியவில்லை... சொல்லப்போகும் இரண்டு எழுத்துக்களையே முழுங்கினான்..

"எ...ஸ்..."

"இதுதானே எஸ் 6 கம்பார்ட்மெண்ட்"

இல்லையென்றாலும், அவன் ஆமாம்தான் சொல்லியிருந்தான்..

"யா..யா..."

"தேங்க்ஸ்..." சிரித்தாள்..ஆஹா..இன்று தேவதை என் அருகிலா..அதுவும், இவ்வளவு அருகிலா..இன்று கண்டிப்பாக தூங்கக்கூடாது..என்று முடிவெடுத்தான்...எப்படி ஆரம்பிக்கலாம்..ஹ்ம்ம்...

"எக்.ஸ்.கியூஸ்..மி..ஐ. ஆம் ஜீவா ..மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்.."

ம்..ஹீம்..இது செட் ஆகாது..

"ஹே..ஹவ் ஆர்..யூ....."

ம்..இன்னும் இன்னோவேட்டிவாக இருக்கவேண்டுமே...

"ப்ச்..எப்படிங்க..இவ்வளவு அழகா இருக்கீங்க..."

வாவ்..இதையே சொல்லிவிட்லாம்..தீர்மானத்துடன் அவளை நோக்கினான்..இதயம் பட்டென்று வெடித்தது..அவளை காணவில்லை.. ஓ..மை..காட்..எங்கே அவள்..மெல்லியதாக குரட்டைச் சத்தம் கேட்கவே, குழப்பத்துடன் மேல் பெர்த்தைப் பார்க்க...அவள் தான் இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கிறாள்..வெறுத்துப் போய்விட்டது..சரவணபவணில், அம்மாவாசை இலை சாப்பாடு போட்டு, படாரென்று "சாரி..சார்..நோ..மீல்ஸ்..ஒன்லி பிட்சா" என்று சொன்னால் எப்படி இருக்கும்.அனைத்து கனவுகளும் ஒரு நிமிஷத்தில் நொறுங்கிப் போயின.. அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்..ஏதாவது கொசு கடித்தாலாவது, அவள் முழிப்பாளா என்று ஏங்கினான்..அன்று பார்த்து பாழாய்ப்போன ஒரு கொசு கூட காணவில்லை..ஏதாவது மேட் வாங்கி வைக்காலாமோ என்று யோசித்தான்..இப்போதெல்லாம், மேட்டுகளை தேடித்தானே கொசுக்கள் வருகின்றன..

வெறுத்துப்போய் தூங்கியவன், காலையில் விழித்துப் பார்த்தபோது, அவளை காணவில்லை..நடுவிலேயே எங்கயோ இறங்கியிருந்தாள்..முதன்முதலாக, அவன் மேலே அவனுக்கே வெறுப்பு வந்தது.."சே..மிஸ் பண்ணிட்டயேடா..."

இரண்டு நாட்களாக, அவள் நினைவாக இருக்க..மூன்று நாட்களில், வேலைப் பளு காரணமாக மறந்து போனான்..ஆனால் "வாழ்க்கை ஒரு வட்டம்டா.." என்று இளைய தலைவலி சொன்னது போல, அவனுக்கு அவள் காட்சி கொடுத்தாள்., அன்று..அதுவும், தினமும் அவன் ஏறும் பஸ்ஸ்டாப்பில்.."வாட்..இவள் நம்ம ஏரியாவா..இதுநாள் வரை எப்படி பார்க்கவில்லை..."

ஆனால், இந்தமுறை அவளை மிஸ் பண்ண அவன் விரும்பவில்லை..சிறிது சிறிதாக அவளருகில் சென்றவன்..

"எக்..ஸ்..கியூஸ்,,மி.."

சட்டென்று காதில் உள்ள ஓயர் போனை துண்டித்தாள்..தேவதைக்கும் கூட பாட்டு பிடிக்கும்போல..

"எஸ்.."

"ஏங்க...என்னை ஞாபகம் இருக்கா..அன்னைக்கு டிரெயினுல பார்த்தோமே.. நீங்க கூட.."

அவள் சற்று குழப்பமானாள்..

ஐயய்யோ..தெரியாது என்று சொல்லிவிடுவாளோ..

"ஓ..எஸ்..நௌ ஐ ரிமெம்பர் யூ..ஹவ் ர் யூ.." என்று கையை நீட்டினாள்..

வாவ்,,அதுக்குள் கையா..கையை கர்ச்சிப் வைத்து துடைத்துக்கொண்டான்.. கையை நீட்ட, முதன் முதலாக ஒரு பெண்ணின் கை..முதல் ஸ்பரிசம்.. ஆயிரம் முதன் மழை அவனை நனைத்ததுபோல்இருந்தது.. அன்று அவன் கையை கழுவவேயில்லை..சாப்பிடும் போது கூட ஸ்பூன்தான்..கையை அடிக்கடி மோந்து பார்த்துக்கொண்டான்.

அன்றிலிருந்து..அவனுக்கு அப்ரைசலே, அவளிடம், பேசுவதுதான்.. மெதுமெதுவாக அவளிடம் பேச ஆரம்பிக்க..அவளும், அவனிடம் சகஜமாக நெருங்கினாள்..அதுவும் ஒரு வாரத்துக்குள்..வாவ்..ஒரு வாரத்தில் ஒரு பெண்ணை ஈர்த்துவிட்டேனா.. அதுவும்.. தேவதையை. நம்பாமல் இருக்கமுடியவில்லை..வானமும் வசப்படுமோ..அவளும் என்னை விரும்புகிறாளோ..காதல் முரளி மாதிரி இருக்க விரும்பவில்லை..கண்டிப்பாக சொலலியே ஆக வேண்டும்..மிகவும் காஸ்ட்லியான காபி ஷாப்பிற்கு கூட்டி செல்லவேண்டும்..அங்கே வைத்து நேரம் பார்த்து சொல்லவேண்டும்.. "ஐ.லவ்.யூ.."......சே......எடுத்தவுடனே சொல்லக்கூடாது..ஏதாவது கதை பேசிக்கொண்டே..பட்டென்று சொல்லிவிடவேண்டும்..நிறைய முறை ப்ராக்டிஸ் செய்து,ஒரு முறையை தேர்ந்தெடுத்தான்..அவளிடம் அரை மணிநேரம் கேட்டு இருந்தான், இதோ, தேவதை, அவனருகில், காபி கோப்பையுடன்..

"ஹே..ரெஜினா.."

"சொல்லுப்பா.."

"ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்..சொல்லலாமா..."

பீப்..பீப்..அவள் செல்போன், மெசெஜ் ரிங்க்டோன் கேட்கவே..

"ஒன்மினிட்யா.." என்று, மெசெஜ் பண்ணியவள்..நிமிர 5 நிமிடங்கள் ஆனது..

"ம்..சாரிப்பா..One of my friend name is Dinesh...அவனுக்கு வேற வேலையே இல்லை..நிமிஷத்துக்கு ஒரு மெசெஜ் பண்ணுவான்...ரிப்ளை பண்ணலைனா கத்துவான்.....ப்ச்..சரி..நீ சொல்லுப்பா..."

"அது..வந்து..என்னைப் பத்தி என்னை நினைக்குற.."

"ஹே..என்ன இது புது கேள்வி..யூ..ர்..மை..டியர்..."

இப்போது, ரிங்க்டோன்...திரும்பவும் அவள் போனில் இருந்துதான்..

"கம்..ஆன்....ஒன் மினிட்யா"...போனை எடுத்தவள் முகம் மாறியது..

"ஹே..ராகுல்..What is this?..Come on ya...I can't come now..I will meet you tomorrow.. please...understand பண்ணிக்கையா..ஆபிசுல எவ்வளவு வேலை தெரியுமா..Hey..Shall we meet in weekend? What? Come on..Don't scold me ok dear...see you."போனை மடக்கியவள் நிமிர்ந்து பார்த்தாள்..

"சாரியா..எகெய்ன் அனதர் கால்..இவனுக்கும் வேற வேலையே இல்லை...பத்து நிமிசத்துக்கு ஒரு கால் பண்ணிருவான்..பட் ஓகெ....நீ ஏதோ சொல்ல வந்தியே..வாட் இஸ் தேட்.."

இப்போது, அவனுக்கு சொல்லவந்தது மறந்தே விட்டது..நான் என்ன சொல்ல வந்தேன்..அவளிடமே கேட்டான்..

"நான் கடைசியா என்ன சொன்னேன்.."

"ஓ..ஐ..பர்காட்..என்ன சொல்ல வந்து.."

"அது வந்து..ஐ...ஐ...."

எச்சில் முழுங்கினான்..

திரும்பவும், அவளுக்கு ரிங்க்டோன்..

"ஹே...ரியலி சாரியா..திஸ் ஸ் மை க்ரேட் பிரண்ட்..ஹெர் நேம் இஸ் திவ்யா..ஐ..நீட் டூ அட்டெண்ட்.."

"ஹல்ல்லோ திவ்யா..எங்கடி இருக்க..நான் தான் சொன்னேன்ல..ஐ..ஆம் இன் மீட்டிங்க் வித் ஒன் ஆப் மை ப்ரண்ட்..."

இதற்கு மேல் அவனால் பொறுக்கமுடியவில்லை...அப்படியே எழுந்து நின்றவன்..

"ரெஜினா .."

போன் பேசிக்கொண்டே நிமிர்ந்தவள்,

"ஒன் மினிட்யா.." என்றாள்....

"நோ ரெஜினா யூ டேக் யுவர் ஓன் டைம்..பட்..நான் சொல்ல வந்ததை சொல்லிர்றேன்..ஐ தாட், ஐ லவ் யூ..பட் நாட் நௌ..உன்னை என்ன மாதிரி லவ் பண்ணினேன் தெரியுமா..உன்மேல பைத்தியாமா இருந்தேன்..ப்ச்..டெய்லி, உன் முகத்தைப் பார்க்கலைனா, என்னால தூக்கம் வராது..ஆனால்....உங்கிட்ட அரை மணிநேரம் தானே கேட்டேன்..எனக்காக ஒரு அரை மணி உன்னால ஒதுக்க முடியல..அதுக்குள்ள..4 மெசேஜ்ஜூ..நாப்பத்தெட்டு காலு..உன்னோட வாழ்க்கை முழுவதுமா இருக்குணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனால், உன்னால ஒரு அரை மணிநேரம் கூட எனக்காக ஒதுக்க முடியலைலே...லவ்வரா கூட வேணாம்..அட்லீஸ்ட் பிரண்டா கூடவாவது, ஒரு அரை மணிநேரம்...அப்புறம் எப்படி நம்ம வாழ்நாள் பூரா..சாரி..ரெஜினா ..ஐ.ஹேட்..யூ.."

சொல்லிக்கொண்டே அவள் முகத்தைகூட பார்க்காமல் நடந்து சென்றான்...தூரமாய் சென்றவன் , அவள் பார்வையில் புள்ளியாய் மறைந்தான்..

மூன்று மெசெஜ் பீப்கள் அவள் மொபைல் போனுக்கு வர ஓபன் பண்ணி பார்த்தாள்..மெசெஜ்கள், ராகுல், தினேஷ்..திவ்யா" விடமிருந்து..அனைத்தும் ஒரே செய்தியையே சொல்லின..

"ஹே..என்னய்யா..உன் ஆளு ஜீவா  ஒரு வழியா ப்ரபோஸ் பண்ணிட்டானா...இல்லாட்டி , தயங்காம நீயே ப்ரபோஸ் பண்ணிடு.."