ஜீவா இன்டெர்காமில் ஹோட்டல் ரிஷப்சனிஸ்ட்டிடம் சற்று பதட்டமாக பேசிக்கொண்டிருந்தான். இரவு மணி 10:12.
"நோ..நோ..நான் நாளைக்கு கோயமுத்தூரில் இருந்தே ஆகணும். ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மை வேர்ட்ஸ். நாளைக்கு எனக்கு பெர்த்டே. வீட்டில எல்லாரும் க்ராண்டா கொண்டாடணும்னு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. எப்படியாவது பிளைட் டிக்கெட்க்கு ஏற்பாடு பண்ணுங்க."
"அட் எனி காஸ்ட் டிக்கெட் வாங்கிருங்க."
"இன்னும் பத்து நிமிசத்துல தகவல் சொல்றோம் சார் ....அப்பிடி மிட்நைட் பிளைட் கிடைக்கலைனா நாளைக்கு மார்னிங் வாயுதூட் பிளைட்ல போறீங்களா சார் ?"
"நோ...நோ....அந்த மாவுமில்லில் என்னால ட்ராவல் பண்ண முடியாது. மிட்நைட் பிளைட்டுக்கே ட்ரை பண்ணுங்க.."
"எஸ்...சார்"
ஜீவா ரிஸீவரை சாத்திவிட்டு....கிளாசில் மீதி இருந்த விஸ்கியை வாயில் கவிழ்த்தான் .நரம்பு மண்டலத்தில் விஸ்கி தீ மூட்டி உடம்பெல்லாம் வெப்பம் பரவி இருந்தது.சிகரெட் ஓன்று பத்தவைக்கலாமா என்று யோசிக்கும்போதே டேபிளில் இருந்த செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான்..."அப்பா." போனை காதுக்கு குடுத்தான்
"எஸ் ..டாட் "
எடுத்த எடுப்பிலேயே கோபமாக கேட்டார்
"என்னடா ...இன்னுமா சென்னைல உட்காந்துட்டு இருக்கிறே?"
"சாரி டாட்......கொச்சி பிளைட்ல டிக்கெட் கிடைக்கல..மிட்நைட் பிளைட்டுக்கு ட்ரை பன்னிட்டு இருக்கிறேன். ஏர்லி மார்னிங் மூணு நாலு மணிக்கெல்லாம் நான் வீட்டுக்கு வந்துருவேன்."
"வராம இருந்துடாதே...நிறையபேரை உன்னோட பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிருக்கேன். மார்னிங் எட்டு மணிக்கு நீ கேக் வெட்டியாகணும். உங்க அம்மா வேற பர்த்டேனு தெரிஞ்சும் உன்னை நான் சென்னைக்கு பிசினஸ் விஷயமா அனுப்பிட்டேன்னு என்னை கரிச்சு கொட்டிட்டு இருக்கிறா."
"நான் எப்படியும் மார்னிங் மூணு நாலு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துருவேன்னு அம்மாகிட்ட சொல்லுங்க டாட்."
"நான் ஏதாவது சொல்லி சமாளிசிக்கிறேன்...ஆமா ஏர்போர்ட்க்கு கார் அனுப்பவாடா?"
"வேண்டாம்.....டாட்....நானே ஏதும் டாக்ஸி பிடிச்சி வந்துடுறேன்."
"ஜீவா .."
என்ன டாட்
"நாளைக்கு உன்னோட பிறந்தநாள் மட்டுமில்ல .."
"தெரியும் டாட்...நாளைக்கு பிரபல தொழிலதிபர் கிருஷ்ணா தன்னோட ஒரே பொண்ணு மாளவிகாவை எனக்கு மேரேஜ் பண்ணி தர போறதா அத்தனை பேர் முன்னாலையும் அனவுன்ஸ் பண்ணப்போறாரு இல்லையா?"
"எஸ் மை டியர் சன் ...இது ஏறக்குறைய ஒரு நிச்சயதார்த்தம் மாதிரி. ஒரே பொண்ணு நிறைய சொத்து. ஐ ஹோப் யு வில் அண்டர்ஸ்டாண்ட்?"
"எஸ் டாட்,,,,,அதனால தானே நீங்க பொண்ணு யார்னு டிசைட் பண்ணதும் நானும் ஓகே சொன்னேன். டோன்ட் ஒர்ரி டாட். நாளைக்கு சொன்ன மாதிரி உங்க முன்னாடி டான்னு வந்து நிப்பேன்."
போனை துண்டித்துவிட்டு தலையை தேய்த்துக்கொண்டே பக்கத்திலிருந்த சோபாவில் தொப்பென்று உட்காந்தான்..சே ...பத்துமணி பிளைட் டிக்கெட் கிடைக்காதுனு மொதல்லையே தெரிஞ்சிருந்தா ட்ரைன்லயாவது போயிருக்கலாம்.
இப்போ கோயமுத்தூர் போய் சேர ஒரே வழி? மிட்நைட் பிளைட் தான்...அதில் எப்பிடியாவது டிக்கெட் வாங்கியாகணும்.
இதில் டிக்கெட் கிடைக்கலைனா .....வேற வழியே இல்ல அந்த மாவுமில் வாயுதூட் தான். அந்த மாவுமில்லுக்குள் இரண்டு மணிநேரம் உட்காந்து இருக்கணும். கோயமுத்தூர் போயி சேரத்துக்குள்ள உடம்பு ஒருவழி ஆகிரும்.
அப்போதுதான்....ஜீவாவின் யோசனையை அறுத்துக்கொண்டு வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.
பொய் கதவை திறந்தான்.
வெளியே அவள் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் கலைந்த தலை முடி....லேசாக சொருகிய கண்கள்...வறண்டு போன ...மொத்தத்தில் தூசி படிந்த ஆயில் பெயிண்டிங்க் போல.
"ரெ ...ரெஜினா ...நீயா..."
ஜீவை தலையை அங்குமிங்கும் சாய்த்து யாராவது காரிடாரில் நிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே அவளை உள்ளே இழுத்தான்...
கதவை தாழிட்டுக்கொண்டே ..."ரெஜினா....நீ...."
நானே தான் ஜீவா ....உதடுகளில் ஒரு விரக்தி சிரிப்பை காட்டினாள்..."என்னை இங்க நீங்க எதிர்பார்க்கல இல்ல?
"ரெஜினா....நீ ஹாஸ்பிடல்லருந்து?"
"போன மாசமே டிஸ்சார்ஜ் ஆகிட்டேன்...லெட்டர் போட்டிருந்தேன் கிடைக்கலையா?"
"கி.....கிடைக்கல.."
"ஏன் பொய் பேசுறீங்க.....கவர் மேல என்னோட கையெழுத்தை பார்த்ததுமே கிழிச்சு குப்பையிலே போட்டிருப்பீங்க."
"ரெஜினா....நா....வந்து.....வந்து..."
"வாங்க.....அப்படி உட்காந்து பேசலாமா?"
"நான் அவசரமா ஊருக்கு கிளம்பிகிட்டு இருக்கேன்..."
"நானும் அவசரமாத்தான் உங்கள பார்க்க வந்தேன்...பத்து மணிக்குமேல ஹோட்டலுக்குள்ள விடமாட்டேன் சொல்லிட்டாங்க. நான் பின்பக்கமா கேட்டரிங் செக்சன் ஸ்டோரும் வழிய யாருக்கும் தெரியாம உள்ள வந்துட்டேன்."
"நான் இங்க ஸ்டே பண்ணிருக்கிறது உனக்கெப்படி தெரியும்?"
"நீங்க ஒவ்வொரு மாசமும் ரெண்டாவது சனிக்கிழமை ஷேர் மார்க்கெட் நிலவரம் தெரிஞ்சுகிறதுக்காக இங்க வர்றது ஏற்க்கனவே எனக்கு தெரிஞ்ச விஷயம் தானே. ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால தான் இன்னைக்கு இந்த மாசம் ரெண்டாவது சனிக்கிழமைன்னு ஞாபகம் வந்துச்சு.டெலிபோன் பூத்துக்கு பொய் உங்க பெயரை சொல்லி நீங்க இங்க ஸ்டே பண்ணிருக்கிறீங்களானு கேட்டேன். சிஸ் நாட் டு வில் நீங்க தங்கிருக்கிறதா சொன்னாங்க.உடனே புறப்பட்டு வந்தேன். கேட்ல வாட்ச்மன் பத்து மணிக்குமேல லேடீஸ் விசிட்டர்ஸ் உள்ள அலோ பண்றதில்லன்னு சொன்னான். உங்கள பார்த்தே ஆகணும் என்கிற பிடிவாதத்துல ஹோட்டல் பின் பக்கம் ஸ்டோர் ரூம் வழிய உள்ள வந்தேன்."
ஜீவா லேசாக வியர்த்தபடி அவளை ஏறிட்டான்.
"சரி ...இப்போ எதுக்காக இங்க வந்தே?"
"ஆறு மாசம் முன்னாடி நாம சந்திச்சோம்....காதலிச்சோம்....கிடைத்த சந்தர்ப்பத்துல எல்லை மீறியும் பழகிட்டோம். உங்க பேச்சை கேட்டு இரண்டு தடவ அபார்சன் பண்ணி...அதன் விளைவா ...உடம்பு கேட்டு பொய் ஹாஸ்பிடல்ல ஒரு மாசம் அட்மிட் ஆகி - இதனால வேலை பார்த்த இடத்துல விஷயம் தெரிஞ்சு பெயர் கெட்டு டெர்மினேஷன் லெட்டர் கையில வாங்கி நடு தெருவுக்கு வந்துட்டேன். உங்களுக்கே தெரியும் எனக்கு சொந்தபந்தம் யாருமில்லை. எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் நீங்க தான். சோ...உங்க கிட்ட வராம வேற யாரு கிட்ட போக?"
ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
ஜீவா ....முகத்தில் இருக்கும் வியர்வையை தன்னை அறியாமல் கர்சீப்பால் ஒற்றிக்கொண்டான்..."இதோ பார் ரெஜினா...நான் இப்போ அவசரமா கோயமுத்தூர் போயிட்டிருக்கேன். அடுத்த வாரம் நான் சென்னைக்கு வரப்போ உன்னை வந்து பார்க்கிறேன்."
"இனி நீங்க அடுத்த மாசம் தானே வருவீங்க?"
"இல்லை...உனக்காக நான் அடுத்த வாரம் வரேன்."
"எனக்கு நம்பிக்கையிலீங்க....இன்னைக்கே எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்."
"எ ...என்ன மு...முடிவு?"
"உங்களுக்கும் எனக்கும் எப்ப கல்யாணம் என்கிற முடிவு."
"க.....கல்யாணம்??"
ஜீவாவின் அடி வயிற்றில் ஒரு பனிப்புயல் உருவாவதை உணர்ந்தான்.
"பின்னே ....எதுக்காக என்னை விரட்டி விரட்டி காதலிச்சீங்க ?"
"ரெஜினா.....நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க தான் காதலிச்சோம்.. இல்லைனு நான் மறுக்கலை. ஆனா ...என்னோட வீட்டில அப்பாவும் சரி அம்மாவும் சரி என்னோட கல்யாண பேச்சை இன்னும் எடுக்கவே இல்லை."
"நீங்க பேச்சை எடுக்க வேண்டியது தானே?"
"உடனே எடுக்க முடியுமா? அப்பாவும் அம்மாவும் என்னோட கல்யாணத்தை பற்றி பேசும்போதுதான் உன்னை பற்றி நான் சொல்ல முடியும்."
"என்னை பத்தி நீங்க உங்க வீட்டில சொல்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லீங்க...அதனால நானே ஒரு முடிவோட தான் வந்திருக்கேன்."
ஜீவா சற்று எரிச்சலானான்.
"என்ன முடிவு?"
"நாளைக்கே உங்களுக்கும் எனக்கும் கல்யாணம். கன்னிகா பரமேஸ்வரி கோயில்ல பொய் சிம்பிளா முடிச்சுக்கலாம். கல்யாணம் முடிஞ்சதும் நேர உங்க வீட்டுக்கு போறோம் உங்க அப்பா அம்மா கால்ல விழுறோம்."
ஜீவா திடுக்கிட்டு பின் சிரித்தான்.
"கல்யாணம்?...நாளைக்கேவா??"
"ஆமா...ஆமா"
"உனக்கொண்ணும் பைத்தியம் இல்லையே?"
"நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி....நாளைக்கே நம்ம கல்யாணம் நடந்தாகணும்."
இன்டெர்காம் கிணுகிணுத்தது
ஜீவா ரெஜினாவிடம் அமைதியாய் இருக்கும்படி சைகை காமித்துவிட்டு ரிசீவரை கையிலெடுத்தான்.
ரெஜினா மௌனமாகிக்கொள்ள.....ஜீவா பேசினான்
"எஸ்..."
ரிசெப்ஷனிலிருந்து பேசினார்கள்.
"சார்....உங்க பிளைட் டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சு. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க ஏர்போர்ட் கிளம்பணும்."
"தாங்க் யூ ....பில்லை ப்ரிபேர் பண்ணி வைங்க ...வர்றேன். ரிசீவரை வைத்துவிட்டு ரெஜினாவை ஏறிட்டான். எனக்கு பிளைட் டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சு. பிளைட் பனிரெண்டு மணிக்கு. நான் இன்னும் அரை மணி நேரத்துல இங்க இருந்து கிளம்பணும்."
ரெஜினா மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு மெலிதாக புன்னகைத்தாள்.
"நீங்க இன்னைக்கு புறப்பட முடியாது?"
"ரெஜினா....அடம் புடிக்காதே. நாளைக்கு எனக்கு பிறந்த நாள்."
"ஓ ...உதட்டை குவித்தாள் ரெஜினா. நாளைக்கு உங்கள் பிறந்த நாளா? மெனி ....மெனி...ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப்.. த.. டே!.....உங்களுக்கு உண்மையிலே அதிர்ஷ்டம் இருக்கு ஜீவா. இல்லேன்னா பிறந்த நாளும் கல்யாண நாளும் ஒரே தேதியில அமையுமா?"
"விளையாடாதே.....ரெஜினா" - ஜீவாவின் கோபம் தெர்மோமீட்டர் அளவை போல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமாளித்தான்.
"நான் விளையாடலை ...சீரியஸா தான் சொல்றேன். நாளைக்கு பிறந்த நாள் அதுவுமா என் கழுத்துல தாலி காட்டுறீங்க."
ஜீவா முகம் சிவந்தான்.
"கட்டலைனா?"
"இன்னைக்கு என்னோட இறந்த நாளாகிடும்."
"எ ....என்ன....சொ ...ல்றே நீ .."
ரெஜினா புன்னகைத்து, தனது மார்பு சேலையை விலக்கி - கழுத்திலிருந்த இமிடேஷன் சங்கிலியை எடுத்து காட்டினாள். சங்கிலியில் மடித்து வைத்த நிலையில ஒரு காகிதம் கட்டப்பட்டிருந்தது.
"எ ....என்ன இது?"
"போலீசுக்கு நான் எழுதி வைத்திருக்கிற லெட்டர். என் மரணத்துக்கு நீங்க தான் காரணம் என்று விலாவரியாக எழுதி வைத்திருக்கிற லெட்டர். நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் தர்லைன்னா இந்த நிமிஷமே இந்த ஆறாவது மாடியிலிருந்து கீழே குதிச்சுட போறேன்."
"நோ...ஓ ...ஓ... ஓ" - முகம் வியர்த்து வீறிட்டான் ஜீவா.
"ரெ.....ரெஜினா."
"ம்ம் .."
"ரெண்டு நாள் கழிச்சுக்கூட உங்க பிறந்த நாளை கொண்டாடிக்கலாம்."
"ரெஜினா.....நான் சொல்றதைக் ..."
நோ ...ஓ ....ஓ என்று வீறிட்ட ஜீவாவை புன்னகையோடு பார்த்தாள் ரெஜினா. கழுத்து செயினில் கோர்த்திருந்த கடிதத்தை காட்டிக்கொண்டே சொன்னாள். "இது வெறும் மிரட்டல் இல்லை. எனக்கு நீங்க தரப்போறது வாழ்வா -சாவாங்கிறதை முடிவு பண்ணிக்கிற துணிச்சலோடு தான் நான் வந்திருக்கேன்".
"ரெ.....ரெஜினா."
"ம்ம் .."
"நா...உன்னை ஏமாத்திருவேன்னு பயப்படுறியா? அந்த பயமே உனக்கு வேண்டாம். எனக்கு ஒரு மூணு மாசம் டயம் குடு. என் அப்பா அம்மாகிட்ட உன்னை கூட்டிகிட்டு போய் அறிமுகப்படுத்தி...."
"எனக்கு நம்பிக்கை இல்லை...உங்க முடிவான பதில் எனக்கு இங்க இப்பவே வேணும்.."
"ரெஜினா! இது அடம் பிடிக்கிற நேரமில்லை. நாளைக்கு நான் கோயமுத்தூரில் இருந்தாகணும். என்னோட பிறந்த நாள்."
"ரெண்டு நாள் கழிச்சுக்கூட உங்க பிறந்த நாளை கொண்டாடிக்கலாம்."
"ரெஜினா.....நான் சொல்றதைக் ..."
"கேட்கமாட்டேன்...இந்த ரூமை விட்டு நீங்க வெளிய போன நான் குதிச்சிருவேன்."
சொன்னவள் வேக வேகமாக பொய் அறையின் சிட்டவுட் கதவை திறந்துகொண்டு கிரில் வைத்த குட்டை சுவருக்கும் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள்.
ஜீவாவின் மனதில் ஆத்திரப்புயல் அடித்தாலும் அதை வெளிக்காட்ட இது நேரமில்லை என்று புரிந்துகொண்டு நிதானமாக பேசினான்.
"ரெஜினா!....அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போயிராதே. எனக்கு கொஞ்சம் அவகாசம் குடு."
மெதுவாக நகரத்து அவள் பக்கத்தில் வந்து அவளை சமாதான படுத்த முயன்றான்.
"அவகாசம்...ஐந்து நிமிடம் தாரேன்...மணிக்கணக்கு நாள்கணக்கா எல்லாம் அவகாசம் தர முடியாது. எனக்கு வேண்டியது உடனடி பதில்."
"சரி...நான் இப்ப என்ன பண்ணனும்?"
"அப்படி வாங்க வழிக்கு" - தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே சொன்னாள் ரெஜினா.
"ரிசப்ஷனுக்கு போன் பண்ணி பிளைட் டிக்கெட் உடனே கேன்சல் பண்ண சொல்லுங்க."
"ம்ம்.....சரி" - அவளின் அருகில் நெருக்கமாக வந்தான். கையை அவள் கழுத்து செயின் மேல் வைத்து மெதுவாக விரல்களால் கோடிட்டுக்கொண்டே...
"அப்புறம் இன்னைக்கு ராத்திரி நான் உங்க கூடவே ஸ்டே பண்ண போறேன். இன்னைக்கு ராத்திரி நான் தூங்க போறதில்லை."
ம்ம்...கொட்டிக்கொண்டே கீழே எட்டி பார்த்தான். ஹோட்டலின் கான்கிரீட் தளம் தூரமாக தெரிந்தது.
"விடியற்காலை நாலுமணிக்கெல்லாம் நாம குளிச்சிட்டு கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு போய் கல்யாணத்தை முடிசிட்டு ஹோட்டலுக்கு வர்றோம்....வந்து.... " பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று எதற்காகவோ வெளிப்பக்கம் திரும்பி பார்த்த வினாடி - ஜீவா அந்த வினாடியை பயன்படுத்திக்கொண்டு...அவள் கழுத்தில் தொங்கிய செயினை ஒரு விரலால் கோர்த்து பிடித்துக்கொண்டு அவளின் மார்பு பகுதியில மிதமாக தள்ளிவிடவும்....ரெஜினா நிலை குலைந்து குட்டை சுவரை தாண்டி வெளிப்பக்கமாக விழ ஆரம்பித்தாள்.
அவள் உடம்பு கீழே இறங்கிக் கொண்டிருக்கும்போதே ஜீவா ரெஜினாவின் கழுத்திலிருந்த லெட்டர் கோர்த்த செயினை பற்றி இழுத்தான்...செயினும் லெட்டருடன் கைக்கு வந்துவிட - ரெஜினா ஆறாவது மாடியிலிருந்து தலைகுப்புற ஹோட்டலின் கான்கிரீட் தரை பரப்பை நோக்கி போனாள்.
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக