வெள்ளி, செப்டம்பர் 23, 2016

யட்சி




எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும் தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவதில் கூட சில தருணங்களில் தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில் தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கு அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம் அவ்வளவு தான்.அந்தக்கணங்களையே நீட்டி காலமாக்கினால் அதில் வாழ்பவள் தான் "யட்சி". அப்படி ஒரு யட்சியை நான் இன்று வாழ்வில் முதன்முதலாக பார்த்தேன். அவள் மறைந்தாலும் அவள் பிம்பம் மட்டும் கண்களை விட்டு இன்னும் அகலாமல் என் கருவிழிகளில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்.

இப்படிக்கு 
ரசிகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக