அப்ரசண்டிகளா......இப்பவே சொல்லிடுறேன். செட்டப்ன்னா நீங்க நினைக்கிற "அந்த" செட்டப் கிடையாது. இது வேற..
சரி விஷயத்துக்கு வருவோம்.
ஆபிஸில் பாலிடிக்ஸ் என்பது சர்வ சாதாரணம். அதுவும் மிடில் மேனேஜ்மெண்ட்டில் இது தான் ஐநூறு ஆயிர ரூபாய் மாதிரி - ஜீவாதாரமே. ஒரு பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவர் இந்த பாலிடிக்ஸ் காரணமாக கைமாற்றும் சூழல் வந்தால் செத்தான் சிவனாண்டி. என்ன தான் எழவு ஹாண்ட் ஓவர் ப்ரொசீஜர்சை கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு சரி பார்த்து வாங்கியிருந்தாலும் குடுக்கறவன் ஒள்ளிச்சு வைச்சிருப்பான் பாருங்க ஒரு கன்னிவெடி. திரில்லிங்கான ஒரு கேம். எல்லாம் சரின்னு திருப்திப்பட்டு "நானும் அடிக்கிறேண்டா சிக்ஸர்"- னு பேட்டை சுழட்டுறப்போ கரெக்ட்டா படக்கூடாத இடத்துல பால் படுமே அது மாதிரி ஒரு கண்ணிவெடி உள்ளுக்குள்ள வச்சிருப்பாங்க.
நீங்கள் எப்பேற்பட்ட தில்லாலங்கடியாக இருந்தாலும் இதையெல்லாம் ஜுஜுபி என்றாக்கிவிடும் மேலே சொன்னதை விட த்ரில்லிங்கான விளையாட்டு ஒன்று இருக்கிறது. பொண்டாட்டியை மூனு நாள் ஊருக்கு அனுப்பிவிட்டு வீட்டை சமாளித்துப் பாருங்கள்...அதுதான் கேம். இதுக்கு ஒரு எம்.பி.ஏ எவனாவது ஆரம்பிக்கக் கூடாதான்னு மனசு ஏங்கும்.
செல்லக்குட்டி மூணு நாள் அவ நண்பிகளுடன் ஹாலிடே. போகிறதுக்கு முன்பாக ஏகப்பட்ட ஹான்டோவர் ப்ரொசீஜர்கள்.
ஒரு வாரமாய் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படி (ஹாண்ட் ஓவர்) ஒரே நச்சரிப்பு. (பொலிடிக்கல் கரெக்ட்னஸ்). அது வாங்கி ஸ்டாக் பண்ணவா இது வாங்கி ஸ்டாக் பண்ணவா... சமைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு போகவா ...
நோ நோ நோ எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். வீ ஆர் க்ரோன் அப்ஸ் அண்ட் வீ நோ டு ஹாண்டில் சிச்சுவேஷன்ஸ்..கெத்தா சொல்லியாச்சு. இனி இம்ப்ளிமென்ட் பண்ணவேண்டியது தான் பாக்கி.
குக்கர் இங்க இருக்கு, அது அங்க இருக்கு... இது எங்க இருக்குன்னு தெளிவா ஹாண்ட் ஓவர் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அரிசி வைக்கப் போனால் குக்கர் வெயிட்டைக் காணோம். புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து தான். ஜேம்ஸ் வாட் இப்படித் தான் ஸ்டீம் இஞ்சினைக் கண்டுபிடிச்சாரா தெரியவில்லை. போனை போட்டு ஹி ஹி என்று அசடு வழிந்து "அந்த குக்கர் வெயிட்" என்று சொன்னதும், "தெரியும் உங்க லட்சணம்...” என்ற கெக்கலிப்பில் ஆரம்பித்து அங்க பாரு இங்க பாருன்னு கடைசியில் ஒரு ட்ராவில் இருந்தது. என்ன ஒரு வில்லத்தனம். பரமசிவன் என்னிக்காவது பாம்பை கழட்டி வைச்சிருக்காரா...குக்கர் வெயிட் பாத்திரம் தேய்த்து (உணர்த்திய கையோடு) மூடியிலேயே இருக்க வேணாமா?...
பாத்திரம் தேய்ப்பதெல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல அசால்ட்டா செய்வேன் என்றாலும் கரெட்டாய் ஒரு ஷிப்ட் பாத்திரத்துக்கு அப்புறம் டிஸ்பென்சரில் லிக்விட் சோப் காலி. ரீபில் மெகா பாட்டிலை காணோம். மறுபடியும் போன்...ஹி ஹி என்ற அசடு வழிதல். "சை ... ”இதுக்குத் தான் என்ன வேணும் என்ன வேணும்ன்னு ஒரு வாரமா கேட்டேன்” - ஈஸ்வரா இந்த indispensable factor". செல்லக்குட்டி தலையில் அடித்துக்கொண்டது எனக்கு துல்லியமாக போனில் கேட்டது.
டீ போடறதுக்கு என்னிடம் கண்ணன் தேவனே வந்து டியூஷன் எடுத்துக்கணும். அதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்ற சவுடாலெல்லாம் கரெக்ட்டா தான் போச்சு. ஏலக்காய் இஞ்சியை இடிக்க குட்டி மசாலா இடிக்கும் உரலைத் தேடினால் உரல் இருக்கு இடிக்கும் கம்பியைக் காணோம். இனி இதற்க்கு போன் போட்டால் செல்லக்குட்டி ப்ரோக்ராம் கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு நேராகவே வந்து உரலில் இடிக்கும் கம்பியால் என்னை இடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால்....இந்த வாரம் ...க்ரீன் டீ வாரம்...!
ச்சை... போதும் நிறுத்திக்கிறலாம் என்று தற்சமயம் சரவணபவன் அண்ணாச்சியும், பிட்ஸா ஹட் பாயும் சேர்ந்து நம்ம வீட்டு சிச்சுவேஷன்ஸை ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பின்குறிப்பு: இதெல்லாம் எங்களுடன் வேலை பார்க்கும் சிவராம ஐயரின் அரட்டை குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட இன்பர்மேஷன்.
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக