வியாழன், நவம்பர் 03, 2016

பச்சையாய் ஒரு கொலை (Part 2)





ரெஜினா ஆறாவது மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்து கான்கிரீட் தரையில் மோதி சிதறியதும் ஜீவா பதட்டமில்லாமல் அவளிடம் இருந்து பறித்த சங்கிலியையும் லெட்டரையும் கடிதத்தையும் பிளஸ் அவுட் சிங்கில் போட்டு தண்ணீரை பீச்சி உள்ளே போக செய்துவிட்டு சிட்டவுட் கதவை தாளிட்டு முன்னறைக்கு வந்தான். டிரஸ் மாத்தி சூட்கேஸ் எடுத்துவிட்டு ஒருதடவை அறையை நன்றாக நோட்டமிட்டான். எதுவும் விட்டு போகவில்லை என்று நம்பிக்கை வந்தவுடன் அறையிலிருந்து வெளிப்பட்டு யாருமில்லாத இருட்டான வராண்டாவில் நடந்து காலியாக இருந்த லிஃப்டுக்குள் நுழைந்தான். பட்டனை தட்டி ஜி ப்ளோருக்கு வந்து ரிஷப்சனை அடைந்தான்.

ரிசப்ஷன் கவுண்டரில் லேசான பதட்டம் 

வாட்ச்மேனுக்கு பின்னல் ரெண்டுபேர் ஓடிக்கொண்டிருந்தார்கள். ரிசப்ஷன் பெண்ணின் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை.

ஜீவா அவள் முன்னே பொய் நின்றான்.

"பில் பிரிப்பர் பண்ணிடீங்களா?"

"இ ....தோ ..."

"என் பிளைட் டிக்கெட் ?"

"ரெடி சார்.."

"நான் எவ்வளவு பணம் தரணும்."

தொகையை சொன்னாள் அவள். ஜீவா முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு பர்ஸிலிருந்து பணத்தை எண்ணி கொடுத்தபோது  - வாச்மேன் பேரர்களோடு ஓடிவந்தான். 

"போலீசுக்கு போன் பண்ணுங்கம்மா?"

"யாருன்னு அடையாளம் தெரிஞ்சுதா ?"


"தெரியலை  - ஆனா கீழ விழுந்து செத்துப்போன பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முந்தி மெயின் கேட் வாசல்ல என்கிட்ட வந்து உள்ள போக பர்மிசன் கேட்டுச்சு. நான் அல்லோவ் பண்ணல. ஆனா எப்டியோ உள்ள வந்திருக்கா."

"அவ யாரை பார்க்கணும் சொன்னா?"

"அவளும் சொல்லல...நானும் அதை பத்தி கேட்கலம்மா. பத்து மணிக்கு மேல அந்நிய பெண்களை உள்ள விடறதில்லைனு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்."

ஜீவா  பணத்தை ரிசப்ஷன் பெண்ணிடம் நீட்டிகொண்டே கேட்டான் - 

"என்ன விஷயம்? யாருக்கு என்ன நடந்தது?

"யாரோ ஒரு பெண் மாடியிலிருந்து விழுந்துவிட்டாள்."

"மை ..குட்னஸ்!" - ஜீவா போலி அதிர்ச்சி காட்டியதை அவள் கவனிக்காமல் அவசரம் அவசரமாக போலீசுக்கு போன் செய்துகொண்டிருந்தாள்.

ஜீவா காத்திருந்தான். அவள் போலீசுக்கு போன் செய்துவிட்டு வியர்த்து போய் திரும்பினாள்.

"நீங்க பணத்தை பே பண்ணிடீங்களா?"

"பண்ணிட்டேன் ..."

"பிளைட் டிக்கெட்?"

"இன்னும் நீங்க தரல .....தந்தா புறப்படுவேன்."

அவள் மேஜை டிராயரை திறந்து டிக்கெட்டை எடுத்துக்கொண்டே சொன்னாள் .."சாரி சார் அந்த பெண் மாடியிலிருந்து விழுந்த சம்பவத்தின் காரணமா  கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிட்டேன்."

"நான் கிளம்பலாமா ?"

அவள் தலையாட்டினாள்

ஜீவா வெளியே வந்தான். போர்டிகோவை கடக்கும்போது ஹோட்டலின் இடதுபக்க கோடியில் கொஞ்சம் பேர் சின்ன கும்பலாய் தெரிந்தார்கள். டார்ச் லைட் ஒன்று அவசரமாய் அலைந்துகொண்டிருந்தது.

குரல்கள் கேட்டது 

"போலீசுக்கு போன் பண்ணியாச்சா?"

"ஆச்சு ..."

"எந்த மாடியிலிருந்து விழுந்திருப்பா?"

"ஹெட்டொட ஸ்மேஷ் கண்டிஷனை பார்த்தா எட்டாவது மாடியிலிருந்து விழுந்திருப்பானு தோணுது"

"எப்பிடி விழுந்தான்னு தெரியலியே"...குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஜீவா ஹோட்டலின் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியே வந்து அங்கிருந்த டாக்ஸி ஸ்டாண்டை நெருங்கி ஒரு பிரைவேட் டாக்ஸியை பிடித்தான்.

"ஏர்போர்ட் போகணும்."

"ராத்திரி நேரம் எக்ஸ்ட்ரா ஆகும் சார்."

"ஹ்ம் ....வாங்கிக்க"

மார்ச்சுவரி வேன், போலீஸ் வேன் பக்கம் பக்கமாய் நின்றிருக்க - மண்டை இரண்டாய் உடைந்து கான்கிரீட் தரைக்கு உடம்பு ரத்தம் முழுவதும் தானமாய் கொடுத்திருந்த மிருதுளாவை சுற்றி போலீஸ் தலைகள். பிரகாசமாய் இரண்டு எமர்ஜன்சி விளக்குகள். ஹோட்டலின் பெரும்பாலான அறை ஜன்னல்கள் திறக்கப்பட்டு தலைகள் எட்டி பார்த்துக்கொண்டிருந்தன.

ரிசப்ஷனில் இருந்தவர்களிடம் இன்ஸ்பெக்டர் சத்யா விசாரித்து கொண்டிருந்தாள். "இறந்த பெண் உங்க ஹோட்டலில் ஸ்டே பண்ணிருந்தாளா?"

"இல்லை மேடம்"

"ஹோட்டலில் தங்கியிருந்த யாரையோ பார்க்க வந்தவ ...ஆனா அவ ரிசப்ஷன் வழியா உள்ள போகல..அப்படித்தானே?"

"ஆமா மேடம்..."

"அப்படின்னா அந்த பொண்ணு யாரையோ பார்க்கிறதுக்காக திருட்டுத்தனமா மேல போயிருக்கா. போன இடத்துல சம்பவம் நடந்திருக்கு. பை த பை இப்போ ஹோட்டல்ல எத்தனை பேர் தங்கிருக்காங்க?"

"அல்மோஸ்ட் ஃபுல் மேடம். ரெண்டு ரூம் மட்டும் காலியா இருக்கு. அதிலும் அரைமணி நேரத்துக்கு முன்னாடி தான் ஒருத்தர் ரூமை காலி பண்ணிட்டு மிட்நைட் பிளைட் பிடிக்க ஏர்போர்ட் போனார்."

"அவர் பேரு ?"

"மிஸ்டர் ஜீவா. ஆனா அவரை இது சம்பந்தமா சந்தேகப்பட முடியாது சார். அவர் சாயந்திரம் ஆறு மணியிலிருந்தே கோயமுத்தூர் போக பிளைட் டிக்கெட்டுக்காக அலைமோதிட்டு இருந்தார். சம்பவம் நடக்கிறதுக்கு பத்து நிமிசத்துக்கு முன்னால தான் டிக்கெட்டே அவருக்கு கன்பார்ம் ஆச்சு. டிக்கெட் கன்பார்ம்ஆனதும் புறப்பட்டு போயிட்டார்.  "

"அவர் எந்த ரூம்ல தங்கியிருந்தார்?"

"சிக்ஸ் நாட் டூ"

"எந்த ஃப்ளோர்?"

"சிக்ஸ்த்  ஃப்ளோர் மேடம்"

பக்கத்தில் இருந்த சப் - இன்ஸ்பெக்டரிடம் திரும்பினாள் இன்ஸ்பெக்ட்டர். "மதன் நீங்க அந்த ரூமை போய் ஒரு க்ளான்ஸ் பாருங்க. ரூம்ல ஸ்டரக்ளிங் சிம்ப்டம்ஸ் இருக்கானு பாத்துருங்க."


சப்-இன்ஸ்பெக்டர் மதன் தலையாட்டிவிட்டு ஒரு கான்ஸ்டபிளோடு லிஃப்டை நோக்கி போனார். அவர் போனதும் போலீஸ் போட்டோகிராபர் பக்கத்தில் வந்து "மேடம்" ...

"எஸ்..."


"இந்த பொண்ணோட முகத்தை பேப்பர்ல போடறதுக்கு வசதியா ஸ்நாப் பண்ண சொன்னாங்க"

"ஆமா.."

"தட் இஸ் இம்பாசிபிள் மேடம்"

"ஏன்?"

"முகம் முழுவதும் தரையில் மோதி சிதைஞ்சு போயிருக்கு மேடம்"

வாட்ச்மேனிடம் திரும்பினார் இன்ஸ்பெக்டர் 

"காம்பவுண்ட் கேட்டுக்கு பக்கத்துல வச்சு அந்த ...பொண்ண பார்த்தது நீ தானே?"

"ஆமா மேடம் "

"செத்துக்கிடக்கிற பொண்ணோட முகம் அடையாளம் தெரியாம சிதைஞ்சு போயிருக்கும்போது, இது அந்த பொண்ணுதான்னு எப்படி சொல்றே?"

வாட்ச்மேன் லேசாக பயத்துடன் எச்சில் விழுங்கிக்கொண்டே சொன்னான். "மேடம் அந்த பொண்ணு கட்டியிருந்த சேலை நிறத்தை வச்சுதான் அப்பிடி சொன்னேன்."

"முகம் அழகா இருந்துதா?"

"ஓரளவுக்கு லட்சணமான பொண்ணு மேடம்."

"ஏதாவது அடையாளம் சொல்லு பார்க்கலாம்."

வாட்ச்மேன் ஷேவிங் செய்யப்படாத தாடையை சொறிந்துகொண்டே "எனக்கு எப்பிடி சொல்றதுன்னு தெரியல மேடம்"

"உன் மனசுல அவ முகத்தை பத்தி என தோணுதோ அதை சொல்லு." 

"ஹ்ம்ம்.....ஓரளவுக்கு நடிகை அஞ்சலி மாதிரி இருப்பாங்க மேடம்."

"ஹோட்டலுக்குள் அவ யாரை பார்க்கணும்னு சொன்னா?"

"யாரையும் குறிப்பிட்டு சொல்லல மேடம். ஒருத்தரை பார்க்கணும்னு பொதுவாத்தான் சொன்னா. ராத்திரி பத்து மணிக்கு மேல அந்நிய பெண்களை உள்ள விட்றதில்லனு சொன்னதும் ...அவ உடனே போயிட்டா மேடம்."

ஜீவா தங்கி இருந்த ரூமுக்கு போன சப்-இன்ஸ்பெக்டர் திரும்பி வந்தார்.

"மேடம் செக் பண்ணிட்டேன். உள்ள ஸ்டரக்ளிங் சிம்ப்டம்ஸ் ஏதும் இல்லை. ஆல் திங்ஸ் அட் பொசிசன் மேடம்."

"ரூம் சிட்டவுட் ல இருந்து பார்த்தா பொண்ணு விழுந்த இடம் ஸ்ட்ராங்கா இருக்கா?"

"இல்ல மேடம் கொஞ்சம் தள்ளி இருக்கு."

"அப்படின்னா அந்த பொண்ணு மிஸ்டர் ஜீவா தங்கியிருந்த ரூம்ல இருந்து விழுந்திருக்க சான்ஸ் இல்ல...அப்பிடித்தானே?"

"எஸ் மேடம்..."
சத்யா தொப்பியை கழட்டி கையில் வைத்துக்கொண்டு கலைந்த முடியை லேசாக சரி செய்தபடியே..."என்ன மதன் இந்த கேஸ் ரொம்ப கன்பியூஸ் பண்ணும் போல....ஹ்ம்ம். செத்துப்போனவ யார்னும் தெரிய வாய்ப்பில்லை. எப்பிடி செத்தா கொலையா தற்கொலையானும் ஒரு அவுட்லைன்க்கு வர முடியல?"


டக்கென்று தலையில் தொப்பியை மாட்டிவிட்டு ...."சரி நீங்க ஒன்னு பண்ணுங்க ஃபர்தர் ப்ரொசீஜர்ஸ் கொஞ்சம் ஸ்பீடப் பண்ணுங்க. மொதல்ல டாக்டர் ரங்கராஜனை காண்டாக்ட் பண்ணி இன்னைக்கு நைட்டே போஸ்ட்மார்ட்டம் முடிச்சிர சொல்லுங்க. டுமாரோ எர்லி மார்னிங் ரிப்போர்ட் என் கைக்கு வந்தாகணும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல ஏதும் தெரியுதா பார்க்கலாம்."


சப்-இன்ஸ்பெக்டர் விறைப்பை உடம்பில் காட்டிக்கொண்டே - "எஸ் மேடம்"


தூக்கம் தொலைத்த கண்களுடன் இன்ஸ்பெக்டர் சத்யாவும் சப்-இன்ஸ்பெக்டர் மதனும் காலையிலே மார்ச்சுவரி டாக்டர் அறையில் உட்காந்திருந்தார்கள். காலைநேரம் மார்ச்சுவரி கும்பல் எதுவும் இல்லாமல் வெறிச்சோடிப்போயிருந்தது.


டாக்டர் ரங்கராஜன் காலையிலே நெற்றியில் தீட்டிய பட்டையுமாக தனது ரூமுக்குள் நுழைந்தார். "சாரி மேடம் ரொம்ப காக்க வச்சுட்டேனோ?"

"ஓ...இட்ஸ் ஓகே டாக்டர். வி ஜஸ்ட் அரைவ்ட்"


 டாக்டர் மேஜை டிராயரை திறந்து ஒரு பையிலை எடுத்து சத்யாவிடம் நீட்டினார் - "இந்தாங்க மேடம் நீங்க கேட்ட ரிப்போர்ட்...கிளியர் ஹெட் ஸ்மாஷ் ஆன் த புளோர் அண்ட் சடன் டெத். வேற எதுவும் பெருசா அப்நார்மல் ஃபைண்டிங்ஸ் இல்ல."

ஓகே ...டாக்டர். பாடிய பார்க்கலாமா?

எஸ்..ஷுர்


சத்யாவும் மதனும் மருந்து நெடி அடிக்கும் காரிடோரில் ரங்கநாதனை பின்தொடர்ந்து பிணவறையை அடைந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக தகர டேபிளில் பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன. ரெஜினாவின் பாடியை நெருங்கி அதன்மேல் போர்த்தியிருந்த காடாத்துணியை டாக்டர் உருவினார்.பார்மலின் திரவத்தின் வாசனை நாசியில் ஏற இருவரும் கர்சீப்பினால் மூக்கை பொத்திக்கொண்டார்கள். உள்ளாடைகளோடு விறைத்த ரெஜினாவின் உடல் பார்வைக்கு வந்தது. முகம் சுத்தமாய் நாசம்.


சத்யா நிமிஷ நேரம் அந்த உடம்பை பார்த்தாள். உடம்பின் ஒவ்வொரு அங்குலமாய் பார்வையை நகர்த்திக்கொண்டே வந்தாள்.
குங்குமம் அப்பிய மாதிரி ரத்த முகம். அதில் ஒட்டியிருந்த தலை முடிகள். வளையல்கள் நசுங்கியிருந்த கைகள், தொடை முறிந்து சிம்பு சிம்பாய் நீட்டி இருக்கும் எலும்புகள். குதிகால்களில் கொலுசுகள்.


"உடம்பை மூடிடலாம்.." என்று டாக்டருக்கு சைகை காட்டிய சத்யா நகர முயன்று சட்டென்று நின்றாள்.


"ஒரு நிமிஷம் டாக்டர்" என்று ரங்கராஜனை கையமர்த்திவிட்டு ரெஜினாவின் கால்களுக்கு பக்கத்தில் வந்து நின்றாள்.


அந்த இரண்டு கொலுசுகளையும் சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு மதனிடம் திரும்பி - "இந்த இரண்டையும் கழற்றுங்கள்" என்றாள்.

மதன் கழற்றினான்


அதை கொஞ்சம் நேரம் கையில் வைத்து புரட்டி பார்த்துக்கொண்டே....ஒரு சிறு புன்னகையுடன் மூச்சு விட்டாள் சத்யா. கொலுசுகளை கர்சீப்பில் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டே மதனை ஏறிட்டாள்.


"ஹ்ம்ம் சரி....வண்டி எடுங்க...நாம மறுபடியும் அந்த ஹோட்டலுக்கு போறோம்"

சத்யாவும் மதனும் மறுபடியும் அந்த ஹோட்டலுக்கு போனபோது ராத்திரி நடந்த மோசமான சம்பவத்தின் சுவடே தெரியாமல் ஹோட்டல் கலகலப்பாக இருந்தது.கஸ்டமர்கள் அறைக்காக சோபாவில் காத்திருக்க - ரிஷப்சனிஸ்ட் பெண்கள் இரண்டுபேரும் - ஒருத்தி லெட்ஜரிலும் ஒருத்தி டெலிபோனிலும் கவனமாய் இருந்தார்கள்.ஹோட்டலின் மேனேஜர் இன்ஸ்பெக்டரை அடையாளம் கண்டுகொண்டு எழுந்து வந்தார்.

"எஸ் மேடம்."

"நேத்து ராத்திரி மாடியிலிருந்து விழுந்து இறந்துபோன பொண்ணை பற்றி ஃபர்தர் என்கொயரிக்கு வந்திருக்கோம். "

"வெல்கம் மேடம்."

"ஆமா ..நேத்தைக்கு அந்த பொண்ணு மாடியிலிருந்து விழுந்து இறந்துபோன பத்தாவது நிமிடத்தில் ஜீவா என்கிற நபர் ரூமை காலி செய்துவிட்டு போனார் இல்லையா?"

"ஆமாம்"

"அவர் தங்கியிருந்த அறையை வேற நபர் யாருக்காவது குடுத்துடீங்களா?"

"இன்னும் இல்லை மேடம்."

"சரி ...அந்த அறையை ஒருதடவை பார்க்கணும்."

"ஒரு நிமிஷம்" ...சொன்னவர் கீபோர்டுக்கு போய் சாவியை எடுத்துக்கொண்டு வந்தார்..."வாங்க"

மூன்று பெரும் லிப்டில் மேலே போய் அறை எண் "602"குள் நுழைந்தார்கள். சத்யா அறையை ஒருதரம் பார்வையால் அலசிவிட்டு சிட்-அவுட் கதவை திறந்து கொண்டு அந்த கிரில் வைத்த குட்டை சுவருக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டாள். குனிந்து கீழே பார்த்தாள்.

அறுபது அடிக்கு கீழே கான்கிரீட் தளம் சதுரம் சதுரமாய் தெரிந்தது.

"பிறகு மதனை நோக்கி....மிஸ்டர் மதன் இங்கேயிருந்து அந்த பெண் கீழே தள்ளப்பட்டிருந்தால் நேத்தைக்கு பாடி கிடந்த இடத்தில அவள் விழுந்திருக்க சான்ஸ் இருக்கே. நீங்க நேத்தைக்கு சான்ஸ் இல்லைனு சொன்ன மாதிரி எனக்கு நியாபகம்."

"மே ...மேடம் ...வாய்ப்பு இருக்கு ஆனா அதே வாய்ப்பு இதே வெர்டிகிள் லைனில் இருக்கிற மற்ற அறைகளின் சிட் - அவுட்டுக்கு உண்டே மேடம்."

"யு...ஆர்...கரெக்ட். அவ விழுந்தது எந்த சிட் - அவுட் என்கிறதைத்தான் நாம கண்டுபிடிக்க இங்க வந்திருக்கோம்."

"சரி ...நீங்க ஒன்னு பண்ணுங்க. கீழ ரிசப்ஷன் போயி அந்த ஜீவாவோட வீட்டு அட்ரெஸ்ஸ கலெக்ட் பண்ணுங்க.... அண்ட் மேக் ஷ்யூர் அது அவரோட ப்ராப்பர் அட்ரஸ்தான்னு.  எனக்கு இங்க ஃபர்தரா கொஞ்சம் செக்கிங் இருக்கு. நீங்க நான் சொன்னதை முடிச்சிட்டு கால் பண்ணுங்க. "

மதன் ஒரு சல்யூட்டை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சத்யா அந்த குட்டை  அங்குலம் அங்குலமாக கண்களை மேயவிட்டுக்கொண்டே ...

"மேனேஜர் ..."

"எஸ் மேடம் ..."

"இந்த ஜீவா உங்க ஹோட்டல் ரெகுலர் கஸ்டமரா?"

"எஸ் மேடம். அடிக்கடி இங்க வந்து தங்குவாரு?"

"ஆள் எப்பிடி? ஐ ..மீன் ....ஸ்டே வித் எனி கேர்ள்ஸ்?"

"நோ...நோ மேடம். ஸ்டே ஆல்வெய்ஸ் அலோன்."

"ஹ்ம்ம்...."

சத்யாவின் செல்போன் சிணுங்கியது.

"எஸ்.. மதன் சொல்லுங்க."

"மேடம் நீங்க சொன்ன மாதிரி அட்ரஸ் கலெக்ட் பண்ணி செக் பண்ணிட்டேன். இட்ஸ் ஜெனூன்."

"எந்த லொகேஷன்?"

"கோயமுத்தூர் மேடம்."

"குட்....நீங்க உடனே ஹோட்டல் ரிசப்ஷன்ல சொல்லி உங்களுக்கு எனக்கும் நெஸ்ட் எதாவது ஒரு பிளைட்ல டிக்கெட் புக் பண்ண சொல்லுங்க."

"மேடம்..."

எஸ்...நாம உடனே கோயமுத்தூர் போறோம். அப்பிடியே அந்த அட்ட்ரஸ்ல இருக்கிற ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு தகவல் சொல்லுங்க.

"ஓகே ...மேடம் "

"போனை அணைத்துவிட்டு...மேனேஜரிடம் திரும்பி...ஓகே மிஸ்டர்ர் ர் ......"

"ராகவன்...."

"ஓகே.. மிஸ்டர் ராகவன். தேங்க்ஸ் பார் யுவர் கைன்ட் கோவாப்பரேஷன்." சொல்லிவிட்டு ரூமைவிட்டு வெளியேறி லிஃப்டை நோக்கி நடந்தாள் சத்யா.

தொடரும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக