நான் அப்போது வேலைக்கு சேர்ந்த புதுசு. அசைன்மென்ட் ஒன்னும் செட் ஆகாததால சிங்கப்பூர் ஹெட் ஆபீஸ்ல ஒரு இரண்டு வாரம் உட்கார வச்சிட்டாங்க.
என்னோட ஆபீஸ்-ல ஒரு வெள்ளைக்கார பய இருந்தான். பெயரு ஆலன் ஹாட்பீல்ட் (சுருக்கமா ஆலன்). அமெரிக்காகாரன். அந்த ஆபீஸ்-ல டெக்னிகல் மானேஜரா இருந்தான். என்னைய கொல்றதே அவனுக்கு பொழுதுபோக்கு. திடீர்னு வருவான் தஸ்ஸு புஸ்சு -னு இங்க்லிஷ்ல என்ன எல்லாமா உளறுவான். ஆமா எனக்கு அது உளறல்தான். ஏன்னா எனக்குதான் இங்க்லீஷ் சுத்தமா தெரியாதே. அதுவும் வேலைக்கு சேர்ந்த புதுசு. நம்ம ஊருக்கார பயலுக இஸ் ..வாஸ்...தாட் -னு பேசுற இங்க்லிசுக்கே எனக்கு கண்ண கெட்டும். இவன் வேற வாயில வெத்தலைய போட்டமாதிரி பேசுற இங்க்லீஷ் எனக்கு சுத்தமா புரியாது. நானும் பேந்த பேந்த முழிப்பேன். கால்மணி நேரமா மூச்சுவிடாம இங்க்லீஷ்-ல என்னமோ பேசி என் மூஞ்சில வாமிட் அடிப்பான். எல்லாம் பேசிட்டு லாஸ்ட்ல...யு டோன்ட் அண்டர்ஸ்ட்டாண்ட் வாட் ஐயாம் டாக்கிங்...டு யு? அப்படின்னு முடிப்பான். நானும் தலைய சிலுவை மாதிரி அங்கையும் இங்கையும் ஆட்டிகிட்டு யா..யா..னு சொல்லி அவன வழியனுப்பி வைப்பேன். அவன் நக்கலா ஒரு பார்வை பார்த்திட்டு சிரிசிட்டு போவான்.
அவன் போனபிறகு..பக்கத்தில இருக்கிற ப்ரெண்ட் நம்ம ஊருக்கார பயகிட்ட "மாப்ள அவன் என்ன சொன்னான்-னு ஒண்ணுவிடாம தமிழ்ல சொல்றா"-னு சொல்லசொல்லி எப்படியோ அந்த பீட்டர் மாமா (பிச்சகார பய) சொன்னத செஞ்சு முடிச்சி ஈமெயில் அனுப்பிருவேன்.
ஆனா எனக்கு மனசுக்குல வக்காளி இவன எப்படியாச்சும் பழிவாங்கணும்-னு எண்ணம் இருந்துகிட்டே இருக்கும். அவன பழி வாங்குறதுக்கு சரியான சந்தர்ப்பத்த எதிர் பார்த்துகிட்டே இருந்தேன்.
அந்த சந்தர்ப்பத்தை பரமண்டலங்களிலிருக்கிற பரமபிதா எனக்கு குடுத்தார்...
ஒரு நாள் சரியா எங்கிட்ட மாட்டினான்..அவனுக்கு இந்தியாவோட கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்க ஆசை வந்துருச்சி போல..
ஆஹா..பட்சி செமையா வந்து மாட்டிகிச்சு..அந்த நேரம் பார்த்து இங்க ஒரு தியேட்டர்ல விஜயகாந்த் நடிச்ச “மரியாதை படம்” ரீலிஸ் ஆச்சு.
“ஆலன் , இந்த வாரம் ஒரு இண்டியன் படத்துக்கு கூட்டிட்டு போறேன்..”
வெட்டப் போறோம்னு தெரியாம பலியாடு தல ஆட்டுச்சு.
ஆளை “மரியாதை”(சப்டைட்டில்) படத்துக்கு கூட்டிட்டு போயிட்டேன்.
நியுஸ் ரீல் போடுறப்ப நம்ம ஆளு..
“ரொம்ப தேங்க்ஸ் மேன்..ஒரு நல்ல இண்டியன் மூவி பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இது நல்ல மூவியா இருக்கும்னு நினைக்கிறேன்..”
விஜயகாந்த் அறிமுகக் காட்சி..விஜயகாந்த் மூஞ்ச குளோஸ்-அப்.....
“ராஜா, இது யாரு..இந்த படத்தோட காமெடியனா..”
“இல்ல ஆலன்....இதுதான் ஹீரோ..”
அப்படியே மயக்கம் போட்டு விழப்போனான்...விடுவேனா நான்...
ஆலன் ...படத்த பாருங்க படத்த பாருங்க-னு எழுந்திரு அஞ்சலி எழுந்திரு அஞ்சலி ஸ்டைல்-ல அவன உலுக்கி விட்டு மயக்கமாகாம பார்த்துகிட்டேன்.
இவன அவளோ சீக்கிரம் சாகடிக்க கூடாது...வச்சு அடிக்கணும்.
“பார்க்க வயசானவர் மாதிரி இருக்காரேப்பா..”
“உங்க ஊர்ல ஹாரிசன் போர்டு இல்லயா..அது மாதிரி..” நான் அடிச்சு விட்டேன்..
எங்கே சுவர் ஏறி குதிச்சுறுவானோன்னு முன்னெச்சரிக்கையா சொன்னேன்..
“ஆலன்...எங்க இந்தியாவுல ஒரு பழக்கம் இருக்கு..யாராவது படத்துக்கு கூட்டிட்டு போனா முழுப்படமும் பார்க்கணும், அதுதான் அவுங்களுக்கு குடுக்குற மரியாதை..”
“ஓ.கே..ஜீவா ..”
நல்லா கேட் போட்டு வச்சிட்டேன் ..நேரம் ஆக, ஆக விஜயகாந்த் நடிப்ப பார்த்துட்டு பய துடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..
“ஜீவா ..அது என்ன படத்துல லா..லா..லா..ன்னு ஒரு சத்தம்”
“எங்க வூருல செண்டிமென்ட் சீனுக்கு இதுதான் பின்னனி இசை ஆலன்”
ஒரு கட்டத்துல பையன் வாய் விட்டு கதறிட்டான்...குமுறி குமுறி அழ ஆரம்பிச்சிட்டான்.
“ஜீவா ..எனக்கு ஒரு வேலை இருக்கு..நான் வேனா இன்னொரு நாள் பார்க்கட்டா..”
எங்கடி எஸ்கேப் ஆகப் பார்க்குற..
“இல்ல ஆலன் , முழுப்படமும் பார்க்கனும்..அதுதான் நீங்க எனக்கு குடுக்குற மரியாதை..”
நேரம் ஆக, ஆக நாக்கு வெளியே தள்ளாத குறை தான்..படம் முடிஞ்சதும் எங்கிட்ட ஒன்னுமே பேசலை.. வெளியே வந்து கேட்டேன்
“என்ன ஆலன் , படம் எப்படி இருந்துச்சு..” நமக்கு ஒரு ஆனந்தம் அவன் மூஞ்ச பார்க்கிறப்ப. இருந்தாலும் காமிச்சுக்கல.
அவன் என்னை ஒரு கொலைவெறி பார்த்தான் பாருங்கண்ணே..நான் நாலைஞ்சு வாட்டி எட்டி மிதிச்ச எங்க பக்கத்து வீட்டு பொட்டநாய் கூட அப்படி என்ன பார்த்ததில்ல.
ஒன்னுமே சொல்லாம காரை எடுத்துட்டு போயிட்டான்..
எனக்கு அவன சரியா பழி வாங்கிட்டோம்னு ஒரு திருப்தி..மனசுக்குள்ள ஒரே டண்டனக்கா டான்ஸ்.
அடுத்த நாள் ஆபிஸ் போறேன்..சீட்டுல ஆளை காணோம்..என் பிரெண்ட்கிட்ட கேட்டேன்.
“ஆலன் எங்க ஆளைக் காணோம்..”
“உனக்கு விசயம் தெரியாதா ஜீவா ..நேத்து நைட்டுல இருந்து அவருக்கு செம காய்ச்சல்..கூட வாந்தி பேதி ஆயிடிச்சாம்..ஆஸ்பத்திரி போயிருக்காரு.... டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு..”
இப்படிக்கு
கொலைகார பாவி
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக