எனக்கு சின்ன வயசுல இருந்தே வளர்ப்பு பிராணிகள் புடிக்காம போச்சு. அது ஏன்னு தெரியல எனக்கும் அதுகளுக்கும் ராசி ஒத்து போறதே இல்ல. அப்படி இருந்தும் பிரண்ட்ஸ் கூட வெளிய போறப்போ அவங்கள பார்த்து நானும் சில சமயங்களில் கலர் மீன்கள் வாங்கி வந்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வளர்க்க ஆரம்பிப்பேன். அவங்க வீடு மீன்கள் எல்லாம் துள்ளி குதிச்சு சந்தோசமா விளையாடும். நான் வாங்கிட்டு வர்ற மீன்கள் மட்டும் அடுத்த நாளே மல்லாக்க படுத்து உசுர விட்டிருக்கும்.
ஊர்ல பார்த்தீங்கன்னா...எங்க பார்த்தாலும் நாய்கள். நம்ம தமிழ் சாட் ரூம் மாதிரி ஒரு பொட்ட நாய் ஓடும் அதுக்கு பின்னால நாலைஞ்சு ஆம்புள நாய்ங்க டோக்கன் வாங்கிட்டு வரிசையா பின்னால விரட்டிக்கிட்டு போகும் "மேட்டர்" பண்றதுக்கு. இங்க அந்த மாதிரி நாய்ங்கள (நிசமாவே டாக்ஸ் தான்பா..உங்கள சொல்லல) ரோட்ல அவ்வளவா பார்க்கிறது அபூர்வம். அதுக்கு பதிலா ஆண்டவன் படைச்சு விட்டிருக்கான் நிறைய பூனைகள். எங்க பார்த்தாலும் பூனைகள். டெய்லி ரோட்ல ரெண்டு மூணு அடிபட்டு செத்துக்கிடக்கும். வண்டிய கொண்டு நிப்பாட்டுனா அதுக்கு மேல ஏறி ரெண்டு பூனைங்க ஜட்டி போடாம மல்லாக்க படுத்து கவர்ச்சி காமிச்சுக்கிட்டு படுத்திருக்கும். வண்டிக்கு அடியில நாலைஞ்சு, பக்கதுல ரெண்டுமூணு இப்படி எங்க பார்த்தாலும் பூனைங்க. எங்க இருந்து வருதுனே தெரியல. அலம்பல் தாங்கல. நம்ம ஊர்ல எதாச்சும் பூனைக்கு பக்கத்துல போய் சும்மா தலைய சொறியுரமாதிரி கைய தூக்குனாலே போதும். பூனை ரெண்டு கிலோமீட்டர் அந்தபக்கம் ஓடிகிட்டு இருக்கும். ஆனா இங்க உள்ள பூனைகள் இருக்கே...யம்மா...நீ கையில மெசின் கண்ணு வச்சுக்கிட்டு அதுகிட்ட காமிச்சாலும் "போடா போடா போக்கத்தவனே"...னு எக்கதாளமா நம்மள பார்த்துகிட்டு மயிரே போச்சுன்னு அதுபாட்டுக்கு படுத்துக்கும். நமக்கு கோபம் வந்தது பிளட் பிரசர் ஏறுறதுதான் மிச்சம். அம்புட்டு கொழுப்பு புடிச்ச பூனைங்க! மொதல்ல பார்கிறதுக்கு லைட்டா நோஞ்சான் மாதிரி இருக்கும். நாம போடுற எச்சி சோத்த தின்னுட்டு ஒரு வாரத்துல சிக்ஸ் பேக் காமிச்சிட்டு நிக்கும். ஒழுங்கா சாப்பிடுற நமக்கே உடம்பு வைக்கல. இதுக இப்படி வந்து நின்னா நமக்கு கடுப்பாகுமா ஆகாதா? நீங்களே சொல்லுங்க.
இப்போ இங்க குளிர் காலம் வேற. ராத்திரி பகல்னு பார்க்காம வெட்கம் மானம் சூடு சொரண எதுமே இல்லாம நம்ம முன்னாடியே குஜால் பண்ணிக்கிட்டு நடக்குதுங்க. அட வெட்கம் கெட்ட வெண்ணைகளா அந்த பக்கம் மறைவா போய் பண்ணுங்கனு தொரத்துனா "போடா வெறும்பய மவனே ...உனக்கு எவளும் இல்ல பண்றதுக்கு..அதுக்காக ஏன்டா வெட்கம் கேட்டு நாங்க பண்றத பார்க்கிற?...பொறாமை புடிச்சவனே"னு மனசுக்குள்ள திட்டிகிட்டு ஆட்டத்த கண்டினியு பண்ணுதுங்க.
என்னடா இவன் திடீர்னு நாய், பூனை பத்தி எழுதுறானேனு யோசிக்கிறீங்களா? அது மேட்டர் ஒன்னுமில்லீங்கோ..இன்னைக்கு ஆபீஸ் போகிறப்போ ரெண்டுமூணு பொடியனுங்க ஒரு நாயை போட்டு விரட்டிக்கிட்டு இருந்தாங்க..அப்போ நினைச்சு பார்த்தேன் ...நாய்ங்க என்ன விரட்டுன கதைய...
எங்க ஏரியாவில் தெருநாய் கொஞ்சம் ஜாஸ்திண்ணே..எப்ப பார்த்தாலும் ஒரு வெறியோடே திரியுங்க….அதுவும், தெருவுல பிகர் போறப்ப அதுக பண்ற அலப்பறை இருக்கே..ஆத்தாடி… இளவட்ட பசங்க பண்ற மாதிரியே ஒரே அலும்பு..பொண்ணுங்க பக்கத்துல கடிக்கிற மாதிரியே போய் “உர்ருன்னு” ஒரு சத்தம் கொடுக்குங்க..பயத்துல பொண்ணுங்க “ஓ மை காட்” அப்படின்னு அலறி அடிச்சுட்டு ஓடுறதுல அதுகளுக்கெல்லாம் அப்படி ஒரு சந்தோசம்..
யாராவது ரோட்டோரமா ஒரு பிகர் கூட கடலை போட்டிக்கிருந்தா அதுக பார்க்குற நக்கல் பார்வை இருக்கே..சீ..சீ..உடம்பே கூசிடும் , என்னமோ அதுக எல்லாம், “காபிடே” யில காப்பி குடிச்சுக்கிட்டு லவ் பண்ற மாதிரி..ஏரியாவுக்குள்ள ஒரு பெண்நாய் வந்துற கூடாதுண்ணே..இதுக பண்ற அட்டூழியம் தாங்க முடியாது..அப்படியே ஸ்டைலா யூ.டர்ன் போட்டு திரும்பி, வாலை அப்படியே டான்ஸ் மாஸ்டர் மாதிரி ஆட்டிக்கிட்டு “எங்க ஆளு டோய்..” ன்னு பந்தாவா போறப்ப அப்படியே பத்திக்கிட்டு வருமுண்ணே..அன்னைக்கு புல்லா காலரை.. சாரி, வாலை பெருமையா ஏத்தி விட்டுக்கிட்டே அலையும்.
இதெல்லாம் எனக்கு கடுப்பு இல்ல.. நைட் 1 மணிக்கு வீட்டுக்கு வர்றது குத்தாமா? பஸ்ஸ்டாண்ட் வாசலில இருந்து, வீடு வரைக்குமுண்ணே..சும்மா, வெறி புடிச்ச மாதிரி துரத்தும் பாருங்க...உசிரே போயிடுமுண்ணே.. அதுகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்..சரி, ஹெல்மெட் போட்டதனால்தான் துரத்துதுன்னு, ஹெல்மெட்டை கழட்டினா, ஏதோ, பேயைப் பார்த்தமாதிரி, அதுக எல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுறத பார்க்குறப்ப எப்படி இருக்கும் சரியான நக்கல் புடிச்ச நாய்ங்க...
இதுகள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்குறப்ப, நண்பன் ஒரு ஐடியா சொன்னான்..நாய் துரத்துறப்ப 2 பாக்கெட்டு நாய் பிஸ்கட் மறறும் புரை எடுத்து வீசினோமுன்னா, அதுக பிஸியா இருக்குற சமயம் பார்த்து நம்ம எஸ்கேப் ஆயிடலாமுல்ல,,வெளிய கிளம்புறப்பயே, தயாரா 2 பிஸ்கெட் பாக்கெட், புரை வாங்கி வைச்சுக்கிட்டேண்...நைட் வழக்கம்போல துரத்த ஆரம்பிச்சவுடனே, ஒரு இடமா பார்த்து வண்டியை நிறுத்துக்கிட்டேன்..ஒவ்வொரு பிஸ்கெட்டா தூக்கி போட்டேன் பாருங்க..வொர்க் அவுட் ஆகிடிச்சு. அப்படியே தூரம் தூரமா பிஸ்கெட்டை எறிய, அதுக எல்லாம் பிஸ்கெட் தேடுறதுல மும்மரமாக, நான் அப்படியே பைக்கை ஸ்டார் பண்ணி கிளம்பு வந்துட்டேண்ணே..என் நேரம் பாருங்கண்ணே..எல்லா நாய்களும் டின்னர்ல பிசியா இருக்குறப்ப, ஒரு நாய் மட்டும் வெறி புடிச்ச மாதிரி துரத்துது..ஒருவேளை நான் வெஜ் எதிர்பார்க்குதோ..?ஆத்தாடி, இந்த ராத்திரி வேளையில நான் வெஜ்ஜுக்கு எங்கே போவேன்..இப்ப கறி குடுக்கலைன்னா, அதுவே உடம்புல இருந்து எடுத்துக்கும் போலேயே..
எனக்கு குலையே நடுங்கிருச்சு..சரி ஆனது ஆகட்டுமுன்னு, பைக்கை விரட்டுனா, என்னா துரத்தல்..நான் என் பைக்குல 70க்கு மேல போனதில்லைண்ணே..அன்னைக்கு 90 கி,மீ வேகம்ணே..வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சப்பறம்தான் உசிரே வந்தது..அப்புறம் அதே நாய்..தினமும் துரத்தல்..அது என்னன்னு தெரியலைண்ணே.. ஒரு நாய் மட்டும்தான் எதுக்கும் மசிய மாட்டிங்குது..நல்லா பழுப்பு கலருல இருக்கும் அந்த நாய்…அது கொட்டாவி விடுறப்ப, பல்லைப் பார்த்தோமுன்னா, ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டோமுண்ணே..சரி, ஒரே வழியா வந்தால்தான் துரத்துதுன்னு, வேற வழியா வந்தா, கரெக்டா கடன் குடுத்த மாதிரி, வீட்டு வாசலுல நிக்குது..இதுல கேலியா ஒரு பார்வை வேற..எப்படித்தான் கண்டுபிடிக்குதோ..?ஒருவேளை கூகில் செர்ச் போட்டிருக்குமோ..எனக்கு கடுப்பா இருந்தது..ஒரு நாளைக்காவது அது கூட ஒரு மீட்டிங் போட்டு, பேசி தீர்த்துக்குலாமுன்னு நினைச்சேன் ..
அந்த நேரத்துலதான் எங்க அபார்ட்மெண்ட்ல ஒவ்வொரு மாதமும் நடக்கும் மீட்டிங் நடந்தது..நான் இந்த மீட்டிங்குல எல்லாம் கலந்துக்குறது இல்லைண்ணே….பப்ஸ், சமோசா சாப்பிடமுன்னா பேக்கரிலயே சாப்பிட்டிக்கிறது..இன்னைக்கு பார்த்து அபார்ட்மெண்ட் செகரட்டரி, ஒரே அடம்..வேற வழியில்லாம போய் உக்கார்ந்தேன்..வழக்கம்போல் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம் தவிர எல்லாத்தையும் பேச ஆரம்பிச்சாயிங்க.. மெல்ல, மெல்ல பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்தது..
“சார்..இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..”
“என்ன பிரச்சனை..”
“என் பொண்ணு அபார்மெண்ட்ல நடக்கவே முடியலைங்க..கீழ் வீட்டுல உள்ள இருக்குற பையன் போற வர்றப்ப எல்லாம்,ஒரே கிண்டலுங்க..”
கீழ் வீட்டுக்காரர் கொதித்தார்..
“ஆமா..உங்க பொண்ணு பெரிய ஐஸ்வர்யாராய் பாரு….போயா..”
“யோவ்..நாக்கை அடக்கி பேசு..மரியாதை கெட்டு போயிடும்..”
“யோவ்..உனக்கென்ன மரியாதை..நீயெல்லாம் பெரிய மனுசன் மாதிரியா இருக்க,,”
“டேய் .,,கையை நீட்டக்கூடாதுன்னு பார்க்குறேன்..”
“அடிச்சுடுவியா..நீ மட்டும் அடிடா பார்ப்போம்..அடிச்சுட்டு உசிரோட இருக்க முடியாதுடி..நான் எல்லாம் ரவுடியா இருந்துட்டுதான்டா இங்க வந்துருக்கேன்..”
“த்..தூ..உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா..தெருவுக்கு ஒரு பொம்பளை வைச்சிருக்கேயேடா..சொன்னா நாறிப் போகும்..”
அவ்வளவுதான்னே..ஒரே கெட்ட வார்த்தை..தமிழுல இவ்வளவு வார்த்தை இருக்குறதே எனக்கு அப்பதான் தெரியும்..
“போடா..நீதாண்டா மாமா வேலை பார்க்குற..”
“டே..மொள்ளமாறி….நீதாண்டா முடிச்சவிக்கி…பக்கத்து தெருல பிச்சைக்காரன்ட புடிங்கி தின்னவந்தான நீ..”
“போடா..நாயி…”
“நீதாண்டா சொறி நாய்..
“நீதாண்டா வெறி நாய்..”
காது மட்டுமல்ல, கண்ணையும் மூடிக்கொண்டேன்..சத்தம் அதிகம் ஆகி, “லொள்..லொள்” ன்னு சத்தம் மட்டும் கேட்கிற மாதிரி இருந்தது ..அது வெளியிலிருந்து வந்ததா..உள்ளிருந்து வந்ததா என்று எனக்கு ஒரு சந்தேகம்..சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன்..என்னை எப்பவும் துரத்தும் நாய் சன்னல் அருகில் நின்று கொண்டிருந்தது..ஒருவேளை அதையும் மீட்டிங்க்கு கூப்பிட்டுருப்பாயிங்க போல..ஆனால், என்னைப் பார்த்து ஏளனமா ஒரு சிரிப்பு..”நீங்க எல்லாம் மனுசங்களாடா..இதுக்கு நாங்க எவ்வளவோ பரவாயில்லைடா..” என்று கேட்பது போல இருந்தது..தலையை குனிந்து கொண்டேன்..
அடுத்த நாள், பக்கத்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்..அங்கே ஒரே, பரபரப்பு..எல்லா நாய்களும் தெருவில் தறி கெட்டு ஓடுக்கொண்டுருந்தன..சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தேன்..அங்கு ஒரு நாய் பிடிக்கும் வண்டி நின்று கொண்டிருந்தது..அங்கிருந்து 3 தடியான ஆட்கள், நாய்களை விரட்டி, விரட்டி பிடித்து கொண்டிருந்தனர்..
தூரத்தில் எங்கயோ எனக்கு பழக்கப்பட்ட குரல் போல கேட்டது..அவசரமாக பார்த்தால்..எனக்கு தூக்கி வாரி போட்டிருச்சுண்ணே..என்னை தினமும் விரட்டும் அதே நாய்..நாய் பிடிப்பவர் அதன் கழுத்தில் ஒரு பெரிய வளையத்தை போட்டு இறுக்கியிருந்தார்….அப்படியே அதை தெருவில் அதை தரதரவென்று கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனார்..அந்த நாய் முடிந்த வரைக்கும் போராடியது..வெறி கொண்ட போராட்டம்..உயிருக்கான போராட்டம் அது..ஆனால் முடியவில்லை..அந்த ஆள் லாவகமாக அதை இழுத்துக் கொண்டு போனார்..தன் காலை எடுத்து தலையில் மாட்டிய கம்பியை எடுத்து விட முயற்சித்தது.. முடியவில்லை..
அப்போதுதான் அதை கவனித்தேன்..கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனதில், நாய் உடம்பு முழுவதும் காயம்..அதிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது..உயிருக்கான போராட்டத்தில் களைப்புற்று அதன் நாக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தது..சன்னமாக அதனுடைய மூச்சு காற்று மட்டும் வெளியே கேட்டது..கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போனது..அமைதியாகி அப்படியே நின்றது..நாய் பிடிப்பவர், அதை அப்படியே இழுத்துக் கொண்டு போய் வேனுக்குள் தள்ளினார்..அதன் சன்னல் வழியே எட்டிப் பார்த்தது.. என்னைப் பார்த்ததுமே, குரைத்தது,,”என்னைக் காப்பத்துடா..” என்று கெஞ்சுவது போல் இருந்தது..நான் அப்படியே தலையை குனிந்து கொண்டேன்..நாய் வண்டி மெதுவாக நகர, நகர என்னை விட்டு ஏதோ ஒன்று போனது போல இருந்தது..தலையை தூக்கி வண்டியின் சன்னலைப் பார்த்தேன்..அந்த நாய் இன்னும் என்னை வெறித்துக் கொண்டே இருந்தது..அதன் கண்களை என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை..நாய் வண்டி தூரமாக செல்ல செல்ல, ஒரு புள்ளியாக தெரிந்தது..கடைசியாக பார்வையிலிருந்து அகலும் முன் அந்த நாயின் குரல் மட்டும் சன்னமாக கேட்டது…
“லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….”
இப்படிக்கு
ரசிகன்
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக