செவ்வாய், டிசம்பர் 31, 2013

கி.பி : 2014



மீண்டும் சூரியன் உதயமானது!

கல்விக்கட்டணங்கள் உயர்ந்தன

மழைக்கு சாலைகள் இடம் மாறின

சாமியார் கைதானார்

ரயில் பெட்டிகள் தகர்க்கப்பட்டன.

பெட்ரோல் விலையால் பர்ஸ் கிழிந்தது

பாரளுமன்றத்தில் அமளி செய்தனர்

ஒரு நடிகன் முதல்வராக ஆயத்தமானான்

வெள்ளத்திலும் பஞ்சத்திலும் இறந்தனர்

டாஸ்மாக்கில் சாதனை முறியடிக்கப்பட்டது

கூட்டணிகள் உடைந்தன: உருவாகின

நதிகளுக்காகவும் அணைகளுக்காகவும்

பேச்சுவார்த்தை நடத்தினர்: பேசாமலே திரும்பினர்

தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தினர்

பாராட்ட யாருமில்லையானால் ஓய்வெடுத்தனர்

சில கோஷங்கள் வலுப்பெற்றன

சில கோஷங்கள் நீர்த்துப் போயின

நாத்திகர்கள் கூட்டம் போட்டனர்:

ஷாப்பிங் மால்களிலும், கோயில்களிலும் கூட்டம் முண்டியடித்தது

இடைத்தேர்தலுக்காக ஏங்கினர்


காதல்கள் காவியமானது...காமங்கள் நிஜம் ஆனது

மீண்டும் ஒரு காலண்டர்: மீண்டும் ஒரு வருஷம்!

ரசிகனின்....புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

காதலும் கற்று மற(க்காதே)!






“நீ யாரையாவது காதலிச்சிருக்கியா....”

இந்த கேள்வியை அவளிடம் கேட்பதற்கு முன்பு எவ்வளவு முறை யோசித்திருப்பேன். எத்தனை தடவை கண்ணாடி முன்பு சொல்லிப் பார்த்திருப்பேன்.

“காதல் பத்தி உங்க அபிப்ராயம் என்ன..”..ம்..ம்ம்..சரியா வரலையே..”எப்படிபட்ட ஆளை காதலிப்பீங்க….”..ப்ச்..இன்னும் கூட பிரண்ட்லியா வரலாம்..

இப்படி பல தடவை கண்ணாடி முன்னால் நின்று என்னையே அவளாக நினைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டேன்..மனதுக்குள் உள்ளூற பயம்தான்..ஆனால் என்ன பண்ண முடியும். இதற்கு அடுத்து சொல்லப்போகும் வார்த்தை தானே என் வாழ்க்கையே மாற்றப்போகிறது…

ரெஜினா..என் வாழ்க்கையில் அதிகம் உச்சரித்த, உச்சரிக்க ஆசைப்பட்ட பெயர்..விண்ணைத்தாண்டி சொல்லவேண்டுமானால், என் வாழ்க்கையே புரட்டிப்போட்டவள். என் முகத்தையும் அடிக்கடி கண்ணாடியில் பார்க்கவைத்தவள். எப்போதும் கலைந்தே கிடைக்கும் பரட்டைத்தலையே சீவுவதற்காக இரண்டு ரூபாய் கொடுத்து சீப்பு வாங்க வைத்தவள்..அனைத்தும் அவள் என்னிடம் பேச ஆரம்பித்தவுடன்.

முதுகலை கல்லூரியில் நான் சேர்ந்த முதல் நாள். அனைத்து பேரும் என்னிடம் பேசினர்..அவளைத் தவிர..

“விடுடா..ராங்கியா இருப்பா..”

“மச்சான்..ஆளைப்பார்த்தவுடனே தெரியலை..இதெல்லாம் படிப்பு கேசுடா..நம்ம மாதிரி ஆளுங்ககிட்டல்லாம் ஒட்டாது..”

“இல்லடா..மாப்பி..அவ திமிரா இருக்குறமாதிரி தெரியலை..ஒருவேளை நாமளா போய் பேசணுமோ..”

“இதோடா..இதோ..இந்த பஸ் ஸ்டாண்டுலதான் நிக்குறா….இம்புட்டு பேரு முன்னாடி “நீங்க அழகா இருக்கீங்க” ன்னு எல்லாரும் கேட்கும்படி சொல்லு பார்ப்போம்..சொல்லிட்டா மவனே..இன்னைக்கு நான் டிரீட்டு..சொல்லலே…ஒருவாரம் புல்லா நீதாண்டா டிரீட்டு..”

எனக்கு சவாலாக தோன்றியது..

“டே..வெண்ணை..டிரீட் ரெடியா வை..ஒரு நிமிசத்தில சொல்லுறேன் பாரு..”

மனதுக்குள் வைராக்கியத்துடன் சென்றேன்..பஸ் ஸ்டாண்டில் தேவதையாய் அவள். பலபேரின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தாள்…அவளருகில் சென்றேன்..

“எக்ஸ்கியூஸ்மி..”

அப்போதுதான் அவள் பார்வையை இவ்வளவு அருகில் பார்க்கிறேன். என்ன பார்வை அது..இவள் மட்டும் விடுதலைக்கு முன்பு பிறந்திருந்தால் இந்தியாவுக்கு விடுதலையே கிடைத்திருக்காது. என்னை ஒரு நிமிஷம் அடித்து போட்டது. சொல்ல வந்த வார்த்தைகள் என் மனதுக்குள்ளே அடங்கிப்போனது. என் வாழ்க்கையில் முதல்முறையாக ஊமையாகிப்போனேன்..

“எஸ்..”

அப்படியே சிலையாகிப்போனேன்…ஒரு பெண்ணின் பார்வைக்கு இப்படி ஒரு சக்தியா..

“எஸ் வாட் டூ யூ வாண்ட்..”

“ம்ம்ம்..இல்ல..நீங்க எங்க கிளாஸ்தான..”

க்ளுக்கென்று சிரித்தாள். பெண்கள் சிரிப்பதற்கு அர்த்தம் தேடினால் உலகத்தின் முதல் முட்டாள் நீங்கள்தான். ஆனால் அவள் சிரிப்பில் அர்த்தம் தெரிந்தது…”வாடா..ஜொள்ளு பார்ட்டி..”

சுதாரித்துக் கொண்டேன்..

“ஹி..ஹி..வாட் த ஸ் டைம் நௌ..”

வாய் குழறினாலும் எனக்கு அவ்வளவுதான் ஆங்கிலத்தில் பேச வரும்.. நண்பனுக்கு ஒரு வாரம் டிரீட் கொடுக்க அப்பாவிடம் நிறைய பொய் சொல்லவேண்டியிருந்தது…

அவள் பார்வைக்காகவே அடிக்கடி கல்லூரி செல்ல ஆரம்பித்தேன்..சனி ஞாயிறு வந்தாலே கடுப்பாக இருந்தது. மெல்ல, மெல்ல அவளும் என்னிடம் பேச ஆரம்பித்தாள்..பஸ் ஸ்டாண்டில் என் ஊருக்கு செல்லும் வழித்தடம் தான் அவளுக்கும் என்பது நிறைய வசதியாகிப்போனது.. நிறைய பேசுவோம்.. சம்பந்தமில்லாமல். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாள். ஆங்கில புத்தகங்கள்.. அனைத்தும் என் அலமாரியில் உறங்கின..”சிட்னி ஷெல்டன்.. என்னமா எழுதுறான் பாரேன்..” கூசாமல் பொய் சொன்னேன்…அவ்வளுக்கு கஜல் பாடல்கள்தான் புடிக்கும் என்பதால் மொழி தெரியாவிட்டாலும் என்னை நானே பழக்கி கொண்டேன்.., சில கஜல் பாட்டுகளை போட்டபோது “இழவு வீட்டுல பாடுறமாதிரி இருக்கு..முதல்ல..அந்த கருமத்தை ஆப் பண்ணுடா..” என்று அம்மாவிடம் திட்டு வாங்கியதாக ஞாபகம்...சிட்டி முழுவதும் நாங்கள் நடக்காத தெருக்களே இல்லை என்றாகி விட்டாது..”டே..ஜஸ்ட் பிரண்ட்ஷிப் தாண்டா..” நண்பர்களிடம் பொய் சொன்னாலும் மனம் குதுகலித்தது..

கடைசியாக தீர்மானித்தேன்..அவளிடன் என் காதலை சொல்லி விடுவது....நாளைக்கே…அப்படி என்னை நான் தயார் செய்ததுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது..எனக்குள் நானே பலமுறை சொல்லிப் பார்த்த பின்பு முடிவாக அவளிடம் சென்றேன்..

“ரெஜினா..”

“சொல்லுடா.”

“ப்ச்..ஒன்னுமில்ல விடு..”

“ஏதோ சொல்ல வந்த..என்ன விஷயம் சொல்லு...

“பரவாயில்லை..விடு..”

“ஹே..இப்ப சொல்லப்போறியா..இல்லையா..”

“ம்..அது வந்து..நீ யாரையாவது காதலிச்சிருக்கியா..”

டக்கென்று கேட்டுவிட்டேன்..அவள் முகத்தை பார்த்தேன்..குழப்ப ரேகைகள்..அவள் “இல்லை” என்று சொல்லவேண்டும்..திரும்ப அதே கேள்வியை அவள் என்னிடம் கேட்பாள்..அப்போது “நீதான்” என்று சொல்லவேண்டும் இதுதான் என் திட்டம்..

அவள் யோசித்தாள்..எனக்கு பயமாக இருந்தது..கடைசியாக அதை சொன்னாள்..

“எஸ்..ஐயாம் இன் லவ் வித் மை ஸ்கூல்மேட்..”

அப்படியே நொறுங்கிப்போனேன்..ஒருவருட சொர்க்கத்தை யாரோ ஒரு நிமிடத்தில் பிடுங்கியதாக இருந்தது..மனக் கோட்டை எல்லாம் மண் கோட்டையாகிப்போனது..முதல்முறையாக தற்கொலை பண்ணலாம் என்ற எண்ணம் வந்தது..

“டே..நான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லாமுன்னு நினைத்தேன்.அவன் பேர் ஆனந்த்..என் ஸ்கூல் மேட்..ஆறு வருசமா லவ் பண்ணுறோம்..அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா..ஹி இஸ் நைஸ் மேன்..”

பேசிக்கொண்டே இருந்தாள்..எதுவும் என் காதில் விழவில்லை..தற்கொலை பண்ணுவதற்கு முன்பாக ஆனந்தைப் தீர்த்துக்கட்டலாமா என்று எண்ணிக்கொண்டேன்..இதற்கு மேல் அங்கு உட்கார பிடிக்காமல் நடைபிணமாய் எழுந்து நடந்தேன்.

அதற்கு மேல் அந்த கல்லூரியே எனக்கு பிடிக்காமல் போயிற்று..அவளைப் பார்க்க பிடிக்காமல் கல்லூரியை மட்டம் தட்ட ஆரம்பித்தேன். பஸ் ஸ்டாண்டே கதியாக கிடந்த நான் பஸ்ஸில் போவதே வெறுக்க ஆரம்பித்தேன். பேர்வெல் பார்ட்டி கூட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்..வீட்டில் மிகவும் பயப்பட்டார்கள்..பேய் ஏதாவது அடிச்சிருக்கும் என்று எண்ணி கோயிலுக்கு கூட்டி சென்றார்கள்..அப்பா, அவருக்கு தெரிந்த ஒரு மேனேஜரை வைத்து ரெக்மண்டேசனில் வேலை வாங்கி தந்தார்கள்..

வேலைப் பளுவில் அனைத்து கவலையும் மறந்து போனது. வாழ்க்கை ஓட்டத்தில் ஐக்கியமாகிப்போனேன்…. படிபடியாக உயர்ந்து அதே கம்பெனியில் ப்ராஜெக்ட் லீட் ஆனேன். பெற்றோர்கள் கடமையை முடிக்க எனக்கு திருமணம் பேசினார்கள்…அதுவும் முடிந்தது..

உலகத்தில் யாருக்கும் அப்படி ஒரு மனைவி அமையாது..உள்ளங்கையில் வைத்து தாங்கினாள்..எனக்கு காய்ச்சல் வரும் முன்பே அவள் கலங்கினாள். சலிக்காமல் அனைத்து வேலைகளையும் செய்தாள். அனைத்தையும் மறந்து போனேன்..அன்பின் அடையாளமாக எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது..வாழ்க்கை இப்படியாக ஓடிக் கொண்டு இருந்தபோதுதான் அவனை சந்தித்தேன்..என் கல்லுரி நண்பன்.. ராஜேஷ்.. என்னைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவன்,....

“ஹே..ராஜேஷ்..எப்படி இருக்க..”

“நான் நல்லா இருக்கண்டா..நீ.”

“ம்..நல்லா இருக்கேன்..”

“டே..சொல்ல மறந்துட்டேன்..நேற்று அவளைப் பாத்தேன்..”

“யாரு..”

“அதுதாண்டா..காலேஜ்ஜுல விழுந்து விழுந்து லவ் பண்ணினுயே..ரெஜினா .. அவதாண்டா..”

அந்தப்பெயரை கேட்டவுடன் என் இதயம் ஒரு நிமிடம் நின்றது..எனக்கு என்ன சொல்வதென்று தெரியலை..

“டே..என்னடா..ஏதாவது பேசுடா..”

“ம்ம்…என்ன பண்றாலாம்..”

“கல்யாணம் ஆகிடுச்சு..ரெண்டு குழந்தையாம்..சந்தோசமா இருக்கா..”

“அப்படியே இருக்க சொல்லு..நான் வர்றேன்..”

எழ முயற்சித்தேன்..

“டே..அப்புறம் ஒரு விஷயம்.” நண்பன் இழுத்தான்..

“பேச்சுவாக்குல நீ அவளை லவ் பண்ணுன மேட்டரை சொல்லிட்டேன்.. அவ உங்கிட்ட பேசனும்னு சொன்னா..உன் செல்போன் நம்பரை கொடுக்க தயக்காம இருந்துச்சு..அதுதான் உன் வீட்டு நம்பரை கொடுத்துட்டேன்...”

எனக்கு அவனை ஓங்கி அறையலாம் போல இருந்தது..நாலு திட்டு திட்டிவிட்டு வீடுநோக்கி சென்றேன்.. எப்போது என்னைப் பார்த்தவுடன் அழகாக கட்டிக்கொள்ளும் என் குட்டிப்பாப்பா அன்றும் என்னை வந்து கட்டிக் கொண்டாள்..

“வாடா..வாடா..செல்லம்..அப்பா உனக்கு என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..டடாய்ங்க்..ஐஸ்கிரீம்ம்ம்..”

“ஐ..ய்..சூப்பர்..தேங்க்ஸ் டாடி..”

குதூகலித்தாள்..ஒடி வந்து முத்தம் கொடுத்தாள்..

“டாடி…ஒரு ஆண்டி உங்களை கேட்டு போன் பண்ணியிருந்தாங்க..அம்மா கிச்சன்ல இருந்ததால நான் தான் எடுத்தேன்..அப்பா வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டேன். யாரு டாடி.”

“ம்ம்..ராங்க் நம்பரா இருக்கும்பா..இனிமேல் அந்த ஆண்டி போன் பண்ணினா அப்பா செத்துட்டாருன்னு சொல்லு..”

அர்த்தம் புரியாமல் தலையாட்டினாள்..

“எங்க போன..செல்லம்….அம்மா தேடுறேன் பாரு..”

கையில் பிசைந்த சோறுடன் என் மனைவி..

“வந்துட்டீங்களா..இவ பண்ணுற சேட்டை தாங்க முடியலை பாருங்க..ஒரு வாய் சோறு வாங்க மாட்டிங்குறா... இவள கண்டிக்க மாட்டிங்களா..”

“நான் சாப்பிட மாட்டேனே..” பழிப்பு காட்டி ஓடினாள்..என் குழந்தை.. பின்னாலே என் மனைவி..

“இப்ப சாப்பிடிறயா..இல்லையா..அம்மா அடிப்பேன்..”

“ம்..ஹூம்..”

“சாப்பிடுடா..என் செல்லம்ல..”

“ம்…ஹீம்..”

“புஜ்ஜிம்மால்ல..செல்லம்ல.. குட்டி பாப்பா சாப்பிடுமாம்..அம்மா கார்ட்டுன் போடுவாங்களாம்..”

“ம்..ஹூம்..”

“ஏ..நில்லு..ஓடாத..பாப்பா..நில்லு..பாப்பா…ரெஜினா குட்டி….”


ஒரு தாவுதலுக்கும் ஒளிதலுக்கும்
நடுவே
திணறிக்கொண்டிருக்கிறது பிரியம்.
வெயில் வந்துவிட்ட மழை மதியத்தில்
முள்வேலிகளில்
பெயரறியாத அந்த பிளாஸாவின்
எஸ்கலேட்டரில்
ஆளில்லாத் தண்டவாளங்களில்
திரையரங்கின் அரையிருட்டில்
ஃபேஸ்புக்கின் கடவுச்சொல்லில்
சிவன் கோவில் அர்ச்சனைகளில்
பர்ஸுக்குள் ஒளித்துவைத்த புகைப்படத்தில்
பிறந்த குழந்தைக்கு வைக்கும்
பெயர்களில்
இப்படி ஞாபகக் குப்பையை கிளறிவிடும்
கவிதைகளில் என எவ்வெவ்வாறோ
தப்பித்து விடுகிறேன்.
எனினும் அவ்வப்பொழுது மாட்டிக்கொள்கிறேன்
அஜாக்கிரதையாகவும்
சில நேரங்களில் விரும்பியும்.


இப்படிக்கு
ர.சி.க ன் 

வியாழன், டிசம்பர் 26, 2013

நள்ளிரவின் நடனங்கள்.



"ரெஜினா...சாரி செல்லம். ஆபீஸ் ஒர்க்மா. கண்டிப்பா போயிதான் ஆகணும் . பிளீஸ்..மா புரிஞ்சுகோ"

ஜீவா ரெஜினாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

இல்ல ஜீவா ...நீ பொய் சொல்றேனு  நல்லாவே தெரியுது. என்னை விட உனக்கு கோவா போறது முக்கியமா போச்சில்ல? இந்த ஹாலிடேஸ் -ல நீ என்கூட இருப்பேன்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? உனக்காக ஹாஸ்டல்ல பிரண்ட்ஸ்கிட்ட கூட பொய்சொல்லி வச்சிருக்கேன். ரிலேசன் வீட்டுக்கு போறேன்னு. ஆனா நீ லவர் வேண்டாம்னு கோவா போய் கூத்தடிக்கப்போறே அப்படிதானே?

ரெஜினாவின் வார்த்தைகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வந்து விழுந்துகொண்டு இருந்தன.

"ரெஜினா...சொல்றத கொஞ்சம் கேளு....." ஜீவா கொஞ்சம் கோபம் காட்டினான்!

"இந்த ஃபிரெண்டு தொல்லை தாங்க முடியலை. டிக்கட் இல்லை.. ஃபுல்.

 ஆஃபீஸ்ல லீவ் வேற இல்லை.

உடம்பு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.

 நெறைய வேலை அப்படியே கிடக்கு. என்னையே ஏன் புடிச்சி எல்லாரும் தொல்லை பண்றாங்கன்னு தெரியலை.

 அங்க வேற ஒரே குளிராம், மழையாம்… வெளியில தலை காட்ட முடியாதாம், காட்டேஜஸ் ஹவுஸ்ஃபுல்லாம்.

என்னதான் செலவு எல்லாம் அவன் பண்றதா சொன்னாலும் நம்ம வேலைய யாரு செய்வா?

ஆனாலும் வேற வழியே இல்லை. ரொம்ப வற்புறுத்துறான், கடுப்பா இருக்கு.  இவனுக்காக கோவா  போய்தான் தொலையணும் போல இருக்கு செல்லம். அதனால கண்டிப்பா போயே ஆகணும்"

தீர்க்கமாக சொல்லிவிட்டான் ஜீவா!


ரெஜினாவிற்கு தெளிவாகத் தெரிந்தது, புளுகு மூட்டையை வாந்தி எடுக்கிறான் என்று. முடிவு எடுத்து விட்டான். ஆமாம் பூசாரி  போட்டுத்தான் ஆகவேண்டும். மறுத்துப்பேசினால் பெரிய சண்டை ஆகும். மெலிதாக நிமிர்ந்து பார்த்தாள்.

சரி ஜீவா , என்ன பண்றது போய்ட்டுத்தான் வாங்க என்றாள்.

சரி செல்லம் டெய்லி கால் பண்றேன். நாலு நாளில் வந்துடறேன் என்றான்.

 சென்னை விமான நிலையத்திலேயே உற்சாகம் தொற்றிக் கொண்டது. நியூ இயர் சீசனில் டிக்கட் விலை கோவாவிற்கு 25000 ரூபாய் வரை விர்ரென ஏறும் என்பதால், மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கட் எடுத்திருந்தனர் ஜீவா  அண்ட் குழுவினர். கோவாவிலேயே அழகான கடற்கரையான வகதூரில் பீச் ரிஸார்ட்டையும் மூன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்து விட்டனர். வகதூர் –  கோவாவில் அழகான சின்ன கிராமம். கடற்கரை ஓரமாக சின்ன மலை, சப்போரா கோட்டை, தென்னை மரம், இயற்கையிலேயே தானாக ஒரு இடத்தில் மட்டும் கடல் உள்வாங்கியதால் உண்டான நீச்சல் குளம் போன்ற அமைப்பு என சொர்க்கத்தின் உள்ளே ஒரு பிரைவேட் சொர்க்கம். பெரும்பாலும் ரஷ்ய பொண்ணுகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். ரஷ்ய கிடா மாடுகளும் அதிகம் திரிவார்கள் எனினும் அவ்வளவாக கண்ணில் படுவதில்லை. வெளிநாட்ட்டில் உள்ள ஒரு சிற்றூருக்கு வந்து விட்டது போன்ற ஒரு உணர்வைத் தரும்.

விமானம் கிளம்ப இன்னும் நேரமிருந்தது. தெலுங்கு  சினிமாவின் பாடல் காட்சியில்முதல் வரிசையில் ஆடுபவளைப்  போல் இருந்த ஒருத்தி ஜீவாவின் பக்கத்து சீட்டில் தன் லக்கேஜை வைத்தாள். ஹை ஹீல்ஸ் போடாமலேயே, ஹை ஹீல்ஸ் போட்டிருப்பதை போல் நின்று கொண்டிருந்தாள். குறைந்தபட்சம் அங்கிருந்த நாற்பது பேர் அவளிடம் பேசத்துடித்தனர். பேச என்ன பேச… அவளை கரெக்ட் செய்யத் துடித்தனர். அந்த சங்கல்பம் மனதுக்குள்தானே?  வெளியே பான் கீ மூனைப் போல்முகத்தை இறுக்கமாக வைத்தபடி தொப்பையை இழுத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

ஜீவா அவளைப்பார்த்து , ஹாய் என்றான்.

அவள், யாஹ் எனப் பார்த்தாள் . பல கேள்விக்குறிகள் அவள் கண்களிலிருந்து சங்கிலித்தொடராய்க் கீழிறங்குவது போல் தோன்றியது ஜீவாவிற்கு . ஆர் யூ எ ஹீரோயின்? ஆம் நாட் சோ ஃபெமிலியர் வித் இண்டியன் மூவிஸ் என்றான்.

ஒருக்கணம் மலர்ந்து, பின் “நோ” எனத் தீர்மானமாகக் கூறி விட்டு, ஹெட்போனை மாட்டிக் கொண்டாள். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டது, ஜீவாவின்  3 மூன்று நண்பர்கள் மற்றும் சுற்று வட்டார 50 மீட்டர் தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இறைவனின் திருவடியைக் கண்டது போல் ஒரு பரம திருப்தி ஏற்பட்டது. ஜீவா  வெட்டியாக யாருடனோ போனில் பேசினான். விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பு வெளியானது.


பின் மதிய நேரத்தில் மட்காவோனில்  துப்பியது விமானம். மட்காவோன் என்ற இடத்தில் இருந்து  வகதூர் செல்ல 40 கிமீ. பரபரப்பாக வெளியே வந்தனர் ஜீவா  குழுவினர். தெலுங்குப் பாட்டு முதல் வரிசைக்காரியும் வேகமாக வெளியே வந்தாள். இப்போது கண்களில் கூலர்ஸ் ஏறி இருந்தது.  ஜீன்ஸ் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தது.  இடையில் டாட்டூ தெரிந்தது. அதில் K I என இரண்டு ஆங்கில எழுத்துக்கள் மட்டும் தெரிந்தன. மீதி உள்ளே. ஜீவா  திரும்பவும் கடைசி முயற்சியாக ஏதோ பேச யத்தனிக்கையில், அவள் ஒருவனைப் பார்த்து வேகமாகக்கையை ஆட்டியபடி ஓடினாள். அந்த ஆளைப் பார்த்து பிம்ப் டா என்றான் ஜீவா  தன் நண்பர்களிடம்.


ரிஸார்ட்டிற்குப் பின்புறம் பீச்சில் குடை நட்டிருந்தார்கள். ரிஸார்ட், பீச்சில் இருந்து 300 அடி உயரத்தில் இருந்தது.

1200 ரூபாய் டாக்ஸிக்கு ஓகே, ஏர்போர்ட்டில் இருந்து இங்க வரதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்னு நினைக்கலை, காட்டெஜ் பீப்பிள் பரவாயில்லை, ஃப்ரெண்ட்லியா இருக்காங்க, வழியெல்லாம்  பாக்கறதுக்குக் கொஞ்சம் கேரளா போல இருக்கு. வழியில் வைன் ஷாப்பில் சரக்கு வாங்கிய இடத்தில் ஃப்ரெண்ட்லியாக உதவிய கடைக்காரன் என பேசிக் கொண்டு இருந்தனர்.

இன்னிக்கு என்னா பிளான் என ஜீவா ஆரம்பித்தான்.  அவனே வழக்கமாக பதிலும் சொல்வான் என்பதால் அனைவரும் கம்மென்று இருந்தனர்.

இன்னிக்கித்தான் வந்திருக்கோம், அதனால ரொம்ப ஆட வேண்டாம். டயர்டா வேற இருக்கு. வகதூர்லயே ஏதாவது பார் & ரெஸ்டாரண்ட்ல செட்டில் ஆயிடுவோம். நாளையில் இருந்து மத்ததைப்பாத்துக்கலாம் என கண் சிமிட்டினான்.

கண் சிமிட்டலில் உற்சாகமானார்கள் நண்பர்கள்.


ரஷ்யன் ஒருவன் கடலில் சர்ஃபிங்க் செய்தபடி இருந்தான். ஒரு ரஷ்யன் மார்பளவு ஆழமுள்ள கடலில் உதட்டோடு உதடு பொருத்தி ஒருத்தியை ரொம்ப நேரம் முத்தமிட்டபடியே இருந்தான்.

 ரிஸார்ட்டுக்குத் திரும்பி ஆளுக்கொரு மூலையில் ஒதுங்கி கேள்பிரண்ட்களுக்கு போன் செய்து பேச ஆரம்பித்தனர்.  இன்று மதியம் வீட்டை விட்டுக் கிளம்பியவர்கள், மாலையில் பேசுவது, ஏதோ மூன்று மாதம் பிரிந்திருந்தவர்கள் பேசுவதைப் போலிருந்தது.  ஒருவழியாய் பேசி முடிச்சுட்டேன் மச்சி என்றவாறே கடைசி நண்பன் அறையில் நுழைந்தான். சீக்கிரம் கிளம்பு என அவனை அவசரப்படுத்தினர் மற்றவர்கள்.

மேங்கோ ட்ரீ ரெஸ்டாரண்ட்.  அழகான மரங்கள் அடர்ந்த ஒற்றை ரோடு. ரோட்டை ஒட்டி ரெஸ்டாரண்ட். வெளியே ஒரு பெரிய மாமரம். மாமரத்திற்குக் கீழே பல மேஜைகள். உள்ளேயும் மேஜைகள். 80 சதவீதம் வெளிநாட்டுக்காரர்களால் நிரம்பி வழிந்தது. வெளியே சில ரஷ்யர்கள் கஞ்சாவோ வேறு ஏதோ புகைத்துக் கொண்டு இருந்தனர். ஒருவன் கிடார் இசைத்துக் கொண்டிருந்தான். அவனருகே இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டியபடி இருந்தார்கள். சிலர் செஸ் ஆடிக் கொண்டு இருந்தனர். ஒரு இந்தியன் கர்ம சிரத்தையாக ஃபேஸ்புக்கை நோண்டிக் கொண்டு இருந்தான்.

ஜீவா  குழுவினர் உள்ளே நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தனர்.   இரண்டு வெளிநாட்டு ஜோடிகள் உள்ளே நுழைந்தனர். சிலர் ஹோ எனக் கத்தியபடி அவர்களை வரவேற்றனர். கட்டிப் பிடித்துக் கொண்டனர்.


இரண்டு ரவுண்ட் உள்ளே சென்றதும்,

மாப்ள வெளியில போய் உட்காரலாம், செம ஹேப்பனிங்கா இருக்கு, வெளியில பைக்ல போற குட்டிங்களையும் சைட் அடிக்கலாம் என்றான் ஒரு நண்பன். வெளியில் டேபிள் காலியாக இல்லை என எடுத்துச் சொல்லியதும், இன்னொரு ரவுண்டு போடு, அதை எடுத்துட்டுப் போய் வெளில நிக்கிறேன், டேபிள் காலியானதும் புடிச்சிடறேன் என்றான். ரவுண்டை ஊற்றிக் கொண்டு வெளியே சென்று, டேபிளைப்பிடித்து பின், அவன் அழைத்தது – ரெஸ்டாரண்ட் உள்ளே உள்ள அனைவரையும் வெளியே அழைப்பது போலிருந்தது.

 வெளியே வந்து அமர்ந்தனர்.

வெளிநாட்டு ஜோடி வருவதும் இரண்டு ரவுண்ட் போடுவதும், வெளியேறுவதுமாக இருந்தனர். ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வந்தார்கள்தான் எனினும் அது ரொம்ப மிகவும் அபூர்வமாகவே இருந்தது.  இரண்டு ரஷ்யப் பெண்கள் தனியாக ஒரு வாடகை பைக்கில் வந்து ரெஸ்டாரண்ட் முன்புறம் ஏற்கனவே இருந்த வரிசையில் பார்க் செய்தனர். ஜீவா  குழுவுக்கு ஜிவ்வென இருந்தது. ஒருத்தி மெலிதாக மேல்தட்டு தேவதையைப் போல சின்ன உதட்டுடன் இருந்தாள். இன்னொருத்தி கொஞ்சம் கட்டையாக இருந்தாள்; ஆனாலும் முகம் மற்றும் முன்னழகில் அனைவரையும் வென்றெடுத்தாள்.

 பெண்கள் இரண்டு ரவுண்ட் போனார்கள். ஜீவா  குழுவினர்  நான்கு ஐந்து என ரவுண்டை ஏற்றிக் கொண்டே சென்றனர்.

மெலிந்த தேவதையை எப்படியாவது இன்று இரவுக்குத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என ஜீவா குழுவில் மெஜாரிட்டி நண்பர்கள் நினைத்தனர் எனில், முன்னழகு முத்தம்மாவை எத்தனை பேர் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தனர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒழுங்காகச் சொல்பவர்களுக்கு ஒரு ரவுண்ட் டக்கீலா. வாயைப் பிளந்து கொண்டு கவனமாகக் கதையைப் படிக்காதவர்களுக்கு 80 வயது ரஷ்யக் கிழவியோடு டேட்டிங்க்.

நம்மூரூப் போன்ணூங்கா போலத் தான்னே உலகப் பொண்ணுங்களும்? ம்ம்? என்னா ? நம்மூரூப் போண்ணூங்கா போலத்தான்ன்ன்னே உலகப்ப்போண்ணுங்களும்? சீ ஆல்ப்பொண்ணுங்களும் ஒண்ணுதான்… ஓகேவா? பொண்ணுன்னா பொண்ணு மச்சி, புரீயுதா? மாப்ளா போண்ணுன்னா கன்ஃபியூஸ் ஆவக் கூடாது மச்சி… க்ரெக்டா ப்ளான் போட்டா கரெக்டா பிளான் செய்யலாம். என்னா மச்சீ? என்று உளறினான் ஒருவன்.

மற்ற மூவரும் அவன் பேச்சை  போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். உதடு துடித்தது. போதை, சொற்களை உருவாக்கித் தள்ளிக் கொண்டேயிருந்தது. உடனே வெளிக் கொட்டி விட வேண்டும். இல்லையெனில் மறந்து போகும் என்கிற அவஸ்தையில் அனைவரும்,

கொஞ்சம் இரு மச்சி, ஒரு நிமிஷம் மச்சி, நான் ஒண்ணு சொல்லிடறேன் மச்சி, இதைக் கேளேன்,  ஒண்ணே ஒண்ணு சொல்லிடறேண்டா, அதான் நானும் சொல்றேன், என்ன பேச விட்டாத்தானே என மாறி மாறி கத்திக் கொண்டிருந்தனர்.

 ஜீவா  எல்லோரையும் கஷ்டப்பட்டு கையமர்த்தி விட்டு, ஒரு பிளான் சொல்றேன் கேளுங்க. அவங்க பைக் நிக்கிற இடத்தைப் பாருங்க, ஒரு பெரிய என்ஃபீல்டு புல்லட் மறைச்சாப்ல நிக்கிது. அவங்களால அதை எடுக்க முடியாது. நாம போய் ஹெல்ப் பண்றாப்ல பேசலாம். ஆனா யாராவது ஒருத்தர்தான் பேசணும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு பெண்களும் பைக்கை நோக்கி நடந்தனர்.

ஜீவா  அவர்களின் பின்னாலேயே நடக்க, மற்ற மூவரும் பின் தொடர்ந்தனர்.

ஜீவா  புல்லட்டை நகர்த்தி வைத்து அவர்களின் பைக்கை எடுத்துக்கொடுத்தான்.

தேங்க் யூ.

வெல்கம், வேர் ஆர் யூ ஃப்ரம்.

ஃப்ரம் ரஷ்யா.

ஆம் ஃப்ரம் இந்தியா.

யாஹ் யாஹ்.

ஆம் கேம் ஃபார் செலிபரேட்டிங்க் நியூ இயர்.

ஓஹ் கிரேட்.

நடுவில் புகுந்தான் ஒரு நண்பன்.

ஆக்சுவலி வீ ஆர் ப்ளானிங்க் டூ டு செலிபரேட் நியூ இயர். வீ ஆர் இஞ்சினியர்ஸ், வீ ஆர் ஸ்டேயிங்க் இன் தி ரிஸார்ட் நியர் பை ஒன்லி. வீ ஆர்  ஃபோர் பர்சன்ஸ். கேன் யூ ஜாயின் வித் அஸ் என்றான்.


ஓஹ் சாரி, வீ ஹேவ் எ ஃப்ளைட் டுநைட் டூ அவர் கண்ட்ரி. வீ நீட் டூ ரஷ். எஞ்சாய் தி ஹாலிடே என சொல்லிப் பறந்து விட்டனர்.


அதற்குப் பின் நண்பர்களுக்குள் நடந்த சண்டை காலையில் பெரிதாக யாருக்கும் நினைவில்லாததால் பெரிய பிரச்சனை எதுவும் ஆகவில்லை. பில் செட்டில் செய்து விட்டு, சிகரட் அடித்துக் கொண்டே நடந்து வந்ததும், ரிஸார்ட்டில் தொண்டை எறிய எறிய சிகரட் குடித்துக் கொண்டே இருந்ததும் மட்டும் நினைவிருந்தது.


மறுநாள் மதியம் வரை நான்கு டீ, டிஃபன் மற்றும் ஹெவியான லன்ச்சை ரிசார்ட்டிலேயே முடித்து விட்டு மயங்கிக் கிடந்தனர். இரவு கர்லீஸ் பீச் நைட் பார்ட்டிக்கு போகலாம் என திட்டம். கர்லீஸ் பீச் பார்ட்டி வாசல் வரை ஒன்றாகப் போகலாம். உள்ளே நுழைந்ததும் பிரிந்து விட வேண்டும். அப்போதுதான் ஃபிகரை மடக்க வசதியாக இருக்கும் என ஜீவா கூறி விட்டான். பார்ட்டி நைட்தான் சூடு பிடிக்கும் என்பதால் அதுவரை ஒவ்வொரு பார் ஆகச் சென்று ஒரு ரவுண்ட் மட்டும் அடிக்கலாம் என்பதும் ஜீவாவின் கில்லாடித் திட்டம். ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நான்கு பார்களில் பில் செட்டில் செய்து விட்டு கர்லீஸ் பீச் பார்ட்டிக்கு வரும்போது இரவு பதினோரு மணி. ஆளுக்கு எத்தனை ரவுண்டு குடித்திருப்பார்கள் என்றே தெரியவில்லை.


தன் மூன்று நண்பர்களையும் முதலில் உள்ளே அனுப்பி விட்டான் ஜீவா . நுழைவுக் கட்டணம் ரூபாய் 1000 /-  சில வெளிநாட்டு ஃபிகர்கள் தனியாக வந்து நுழைவுக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து திரும்பச் சென்றனர். மிதமான போதையில் இருந்தனர். அவர்களில் யாரையேனும் தான் பணம் போட்டு உள்ளே அழைத்துச் செல்லலாம் என யோசித்தான் ஜீவா .


அப்படித் திரும்பிச் சென்ற நீல நிற ஸ்கர்ட்டும் வெள்ளை நிற கவுனும் அணிந்த பெண்ணை ஹாய் என்றான். எனக்கு உன்னை உள்ளே அழைத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி. நீ என்னுடன் வந்தால் இந்த நாள் எனக்கு மிக அதிர்ஷடமான நாள் என்றான்.

அவள், வாட் என முகத்தை 47 டிகிரி சாய்த்துக் கேட்பதற்கும், பவுன்ஸர்ஸ் அருகில் வந்து, யாஹ் ஹௌ கேன் வீ ஹெல்ப் யூ எனக் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

ஜீவா  கடுப்பாகத் திரும்பி நடந்தான்.  அழகான பெண் யாரேனும் தனியாக உள்ளே நுழையக் காத்திருந்தான். இரண்டு  பெண்கள்  மிக மெல்லிதாக ஒரு சிகரட் பிடித்தபடி உள்ளே நுழைய, ஜீவாவும் நுழைந்தான். அவர்கள் நேராக “க்ளப்பிங்க்” என்று அழைக்கப்படும்  டேன்ஸ் ஃப்ளோருக்குச் சென்றனர். டேன்ஸ் ஃபுளோர் கடற்கரையை ஒட்டி இருந்தது. பார் & ரெஸ்டாரண்ட் பக்கத்திலேயே இருந்தது. வண்ண மயமான விளக்குகளால் ஒரு சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது. கிட்டத்தட்ட 2000 பேருக்கு மேல் கூடி இருந்தனர் அந்த பிரைவேட் பீச்சில். கிட்டத்தட்ட அனைவரும் நடனமாடியபடியும் குடித்தபடியும் இருந்தனர்.

பாடல் வரிகள் இல்லாத இசை அதிர்ந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்களும் லேசாக இடுப்பை அசைத்தபடி நடனமாடத் தொடங்கினர். ஜீவாவும் அவர்கள் அருகில் ஆடத் தொடங்கினான். இவனைப் போல் கிட்டத்தட்ட எட்டு பேர் அந்தப் பெண்களைச் சூழ்ந்து கொண்டு ஆனால் சூழாதது போல ஆட ஆரம்பித்தனர். முதலில் அந்தப்பெண்களின் உடைகளின் மீது உரச ஆரம்பித்தான் ஜீவா . மற்றவர்களும் அதே செய்தனர். கொஞ்சம் தைரியம் பெற்று அந்தப் பெண்களின் கை, இடை, பின்புறம் என உரச ஆரம்பித்தனர். அந்தப் பெண்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர். ஜீவா  சோர்வாக ஓரிடத்தில் வந்து அமர்ந்து ஒரு பியர் அடிக்க ஆரம்பித்தான்.

பேரழகி ஒருத்தி வெள்ளை நிறத்தில் தேவதை போல் உடையணிந்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த   ஜீவா ,  அவளின் அருகே சென்று பேச முயற்சிபண்ணினான்.  பக்கத்தில் மாடல் போல நின்று கொண்டிருந்த ஒருவன் 30 மினிட்ஸ், ட்வெண்டி தவுஸண்ட் பக்ஸ் என்றான். அதிர்ச்சி அடைந்து திரும்பி வந்து அமர்வதற்குள்  பேரம் படிந்து வேறு ஒரு ஆளுடன் தேவதை மிதந்து மிதந்து சென்று கொண்டிருந்தாள்.

 மறுநாள், மற்ற மூன்று நண்பர்களும், ஆள் செட்டாச்சி மச்சி, கடைசி நேரத்துல என்னாச்சின்னா என எதையோ புளுகினர். இன்னும் இரண்டு நாள்தான் மச்சி இருக்கு, அதுக்குள்ள ஃபிகர் செட்டாகுமா? என்னா மச்சி செய்யறது என பதற்றத்துடன் முகம் வெளிறி ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.


நண்பர்கள் அனைவரும் பகலிலேயே வகதூர் பீச்சுக்குச் சென்றனர்.


பீச் முழுவதும் குடை நட்டு, படுக்கை போட்டு மல்லாக்கவும் குப்புற அடித்தும் படுத்திருந்தனர் வெளிநாட்டினர். கணிசமான அளவில் வட இந்தியர்களும்.

வட இந்தியப் பெண்ண்ணுக்கும் வெளிநாட்டுப் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் காண முடியவில்லை. சிலர் ஜோடியாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கடலில் இடுப்பளவு ஆழத்தில் ஜோடியாக கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி தன் காதல் எவ்வளவு சிறப்பானதென்று காதலியின் பிருஷ்டங்களை அமுக்கியவாறே விளக்கிக் கொண்டிருந்தனர். பீர், கடல் தண்ணீருடன் போட்டி போடும் அளவுக்கு நுரை ததும்பப் பொங்கிக் கொண்டே இருந்தது.  பீச் ஓரத்தில் இருந்த ரெஸ்டாரண்டுகளில் இருந்து துள்ளலான இசை கலவையாக ஒலித்துக் கொண்டே இருந்தது. மீன் வறுபடும் வாசனை தொடர்ந்து மூக்கின் வழியாக வயிறோடு பேசிக் கொண்டே இருந்தது. வ்வ்வ்ர்ரரூம் என்ற சத்தத்தோடு வாட்டர் ஸ்கூட்டர் கிளம்பிக் கொண்டே இருந்தது. வாட்டர் ஸ்கூட்டரில் எவளோ ஒருத்தி எவனோ ஒருத்தனின் முதுகில் காமமின்றி பயத்தோடு கட்டிக் கொண்டிருந்தாள். நம்ம ஊரில் தற்செயலாக நம்மீது துப்பட்டா படுவது போல, பீச்சில் உட்கார்ந்து இருப்பவர்களின் முகத்தில் மினி ஸ்கர்ட் அடிக்கடி உரசியது. தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொப்பைக் கூட்டம் தனியே வாந்தி எடுத்தபடி கிடந்தது. வாந்திக்கு நடுவில் ஒரு தொப்பை கர்ம சிரத்தையாக செந்தமிழ் தேன்மொழியாள் என சீரியஸாக பாடியபடியே ஆடிக் கொண்டிருந்தது. நிறைய வெளிநாட்டு சிங்கிள்ஸ் ஏதாவது ஒரு புத்தகம் படித்தபடி பீரையும் போனால் போகட்டும் என சிப்பியபடி இருந்தனர். இந்திய டீன் ஏஜ் பெண்கள் குரூப் எல்லாவற்றையும் அடக்க முடிந்த குறுஞ்சிரிப்போடு சூரிதார் பேண்டை லேசாகத் தூக்கிப் பிடித்தபடி கடந்து சென்றனர்.


இங்கேயே யாராவது தனியாக இருக்கும் வெளிநாட்டுப் பெண்ணிடம் பேசி வொர்க் அவுட் ஆகிவிட்டால், இரவு டிஸ்கோவுக்கு அழைத்துச் செல்லலாம் எனத் திட்டம் பிளான். தனித்தனியாகப்பிரிந்தனர்.


ஹாய், வேர் ஆர் யூ ஃப்ரம் ?

ரஷ்யா பை பை.


ஹாய்

ஹேய்  குட் டே.


ஹாய் வெல்கம் கோவா.

தேங்க் யூ, பை பை.


ஹாய் வாட் ஈஸ் யூர் டுடேஸ் ப்ளான்?

ப்ளான்? நோ ப்ளான்… ஹா ஹா ஹா, பை பை.


அசந்து போய் ஹோட்டல் வந்து டீ ஆர்டர் செய்தனர். விறுவிறுவென குளித்துத் தயாராகி, நான்காவது ஆள் வரும் வரையில் மூன்று பேரும் ஆறு சிகரட்களை புகைத்துக் கொண்டிருக்க , நான்காவது ஆள் பாத்ரூமில் சிகரட் புகைத்துக் கொண்டு இருந்தான். இன்று மாலை சன்பேர்ன்(sun burn) பார்ட்டி செல்வதாகத் திட்டம். நுழைவுக் கட்டணம் மட்டும் 5500 ரூபாய். இந்தியாவிலேயே நம்பர் ஒன் பார்ட்டி. ஓப்பன் ஏர் பீச் பார்ட்டி மற்றும் இசை ரகளை. வெளிநாட்டு டீஜேக்கள், அற்புதமான சவுண்ட் சிஸ்டம் என இளமை இசைக்கொண்டாட்டம்.


ஏழு மணிக்கு உள்ளே நுழைந்தனர். பல ஏக்கரை பீச்சில் வளைத்து பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். மொத்தம் நான்கு அரங்குகள். ஒரு லட்சம் பேர் கூடலாம்.  நடனமாடலாம். நுழைவாயிலிலேயே ஒரு டிஸ்கோ அரங்கு. லேசர் ஒளி. சியர் லீடர்ஸ். வாண வேடிக்கை.  பார்.  செக்யூரிட்டி ஓரமாக. ஸ்மோக்கிங்க் ஏரியா தனியாக. டீஜேக்கு வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. கடற்கரை மணலில் இசையின் அதிர்வுகள் தெரிந்தன. கால்கள் தானாகவே ஆட ஆரம்பித்தன. கால்கள் மட்டுமல்ல, மொத்த உடலுமே இசைக்கு ஏற்றவாறு ஆட ஆரம்பித்தது.


ஒரு ஜோடி பின்னிப் பிணைந்து ஆடிக் கொண்டிருந்தது. அவள் ஹை ஹீல்ஸ் போட்டிருந்தாள். அவன் அவளை சற்றே மேலே தூக்கி தன் இடுப்போடு ஒட்ட வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான். அவளையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தான். அவள் நளினமாக தலையை மட்டும் விதவிதமாக ஆட்டியபடி இருந்தாள்.


இங்கேயும் நால்வரும் தனியாகப் பிரிவதற்கு முன் டிரிங்க்ஸ் அடித்தனர். சிகரட் பிடித்தனர். டேன்ஸ் ஆடினர். யூ டியூபில் இந்த நிகழ்ச்சியை, லைவாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஒரு சதுரத்தில் போய் நடனமாடினர். போதை ஏறியது. தனியாகச்சென்றான் ஜீவா.


வேறொரு இடத்தில் பெரிய டேன்ஸ் ஃப்ளோர். மிகப் பெரிய மேடை. மேடையில் டீஜே. அவ்வளவு பெரிய மேடையில் சவுண்ட் சிஸ்டத்தைத் தவிர டீஜே மட்டுமே. அவன் பக்கத்தில் ஒரு பியர் கேன்.  கீழே ஆயிரக் கணக்கில் மக்கள். இசைத்த இசைக்கு அன்று கண்டிப்பாக கடலில் உள்ள மீன்கள் கூட நடனமாடி இருக்கும். கூட்டம் பித்துப் பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் செட்டிலாக ஒரு இடம் தேடினான் ஜீவா  இரண்டு பெண்கள் கூட்டத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். ஜீவா லேசாக ஆடியபடி இருந்தான். அதில் ஒரு பெண் ஜீவாவை நோக்கி ஒரு விரலை குவித்தபடி ஆடியபடியே அருகில் வந்தாள். ஜீவா  சிரித்தான். அவள் சென்று விட்டாள்.  இவன் திரும்பிப் பார்த்தான். அவள் சென்று கொண்டிருந்தாள். பின்னால் ஓடினான். மறைந்து விட்டாள்.  தலையில் அடித்துக் கொண்டான். ஒரு நொடி தாமதித்து விட்டான். ஹாய் சொல்லி இருக்க வேண்டும். அவளை வளைத்து நடனமாடி இருக்க வேண்டும். டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்…ச்சே ச்சே எல்லாம் போச்சு என நொந்து கொண்டான். கோவா கடவுள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தருகிறார். எல்லோரும் பயன்படுத்திக் கொள்வதில்லை. வெறுப்போடு ஒரு பியர் அடிக்க ஒதுங்கினான். இங்கும் லேடீஸுக்குத் தனியாக ஒரு பார் அமைத்து வெறுப்பேற்றி இருந்தார்கள். பியர் அடித்துக் கொண்டிருக்கையில் பார்த்தான். ஒருத்தி கழுத்தில் ஏதோ கம்பனி டேக் அணிந்து கொண்டு வந்து கொண்டிருந்தாள். வழியில் மடக்கி ஒருவன் பேசினான். அவனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டே நடனமாடினாள். அவன் முத்தமிட்டான் . நாசூக்காக அதை ஏற்றுக் கொண்டு, அவன் காதில் ஏதோ சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தாள். அவன் சென்று மறைந்து விட்டான். ஜீவாவிற்கு ஜிவ்வென்றது. பியரைக் காலி செய்து விட்டு லேசாக தள்ளாடியபடி அவளை நோக்கிச்சென்றான். அவள் எதிரில் போய் நின்றான் . அக்கம் பக்கத்தில் அனைவரும் ரிதமாக ஆடிக் கொண்டு இருந்தனர்.


ஹாய், ஹேப்பி நியூ இயர், ப்ளீஸ் டான்ஸ் வித் மீ என்றான்.


அவள் தயங்கி நிற்க, சடாரென அவள் கையைப் பற்றி, ப்ளீஸ் என்றான் மன்றாடுவதைப் போல.  ப்ளீஸ் டான்ஸ் வித் மீ  என கூறியவாறே ஆட ஆரம்பித்தான். அவளும் லேசாக சீராக அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே ஆட ஆரம்பித்தாள். அவளை சற்றே நெருக்கமாக இழுத்தான். தேங்க்ஸ் என்றான். யூ மேட் திஸ் நியூ இயர். ஆம் தி ஹேப்பியஸ்ட் பெர்சன் திஸ் நியூ இயர் என்றான். தப்பு செய்கிறோம் என அவனுக்கு உறைத்தது. உறைத்துக் கொண்டு இருக்கையிலேயே என்ன செய்வது எனத் தெரியாமல் அவளை முத்தமிட்டான். அது எஇசகு பிசகாக மூக்கில் பட்டது. அவள் இவனை விலக்கியவாறே, காதில் ஏதோ சிரித்தபடியே கூறியவாறு  இயல்பாக மின்னி மறைந்து விட்டாள்.


துக்கம் தொண்டையை அடைத்தது. தண்ணி அடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காக ஹேண்டில் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. தண்ணி அடிக்காமல் இருந்திருப்பின் இதைக் கூட செய்திருக்க மாட்டோம் எனவும் தோன்றியது. மறுநாள் இரவு “ஹில் டாப் டிஸ்கோ” ஆடி முடித்து இரவு ரிஸார்ட் திரும்பும் வரை இந்த துக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஹில் டாப்பில் ஒன்றும் சுவாரசியமாக நடக்கவில்லை.  அனைவரும் ஜோடியாக வந்திருந்தனர்.  தனியாக வந்திருந்த வெளிநாட்டுப் பெண்களும் பாட்டிகள். அவர்கள் வெற்றிலை போடுவதைப் போல அன்று இரவு கனவு கண்டான்.


டிசம்பர் 31. இன்றே இந்த கோவா கடைசி. இன்று இரவு ஒரு டிஸ்கோவில் மாட்டிக் கொள்ளாமல் பல டிஸ்கோ செல்வது எனத் திட்டம்.  இரவு பத்து மணிக்கு தனியே பிரிந்து விட்டனர். ஜீவா ஒவ்வொரு டிஸ்கோவாக போதை ஏற்றிக் கொண்டே இருந்தான்.  கூடியவரை தனியாள் யாரும் சிக்கவில்லை. ஜோடியாக ஆடிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க பொறாமையாக இருந்தது. மனைவியா, காதலியா, இல்லை நம்மைப் போல இங்கே வந்து நண்பனாகி இருப்பானா என யோசனை செய்தபடியே ஒவ்வொரு டிஸ்கோவாக காலி செய்தபடி பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான்.  நியூ இயருக்காக வெடி வெடிக்க ஆரம்பித்து விட்டனர். காலங்கூட் பீச்சில் ஒதுங்கினான். பிகினியோடு ஒருத்தி வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தது வித்தியாசமாக இருந்தது. ஒரு பெண்ணை இருவர் தூக்கியபடி அனாயாசமாகச் சென்று கொண்டிருந்தனர்.  ஒரு மணி நேரம் வாண வேடிக்கை நடந்தது. பீச்சிலேயே மூன்று ரவுண்ட் முடித்திருந்தான். போதை உச்சதில் இருந்தது. ஒரே நேரத்தில் ஜாலியாகவும் சோகமாகவும் இருந்தது. இனி நேரம் இல்லை… வழியில் ரோட்டில்  பார்க்கும் அனைத்து வெளிநாட்டுப் பெண்களிடமும் ஹேப்பி நியூ இயர் சொல்ல வேண்டியதுதான் என போதையான மூளை முடிவெடுத்து இருந்தது. பைக் பார்க்கிங்க் அருகில் வந்தான்.  ஒரு கடையில் பாட்டி ஒருத்தி கண் விழித்து சோடா விற்றுக் கொண்டிருந்தாள்.  ஒரு சோடா வாங்கினான். திறந்தான். யாரோ ஒருவன் பிடுங்கி குடிக்கத் தொடங்கினான். இன்னொன்று வாங்கிக் குடித்து விட்டு போதையோடு வண்டியைக் கிளப்பினான்.

 ரோடு இருட்டாக இருந்தது. போக்குவரத்து இருந்து கொண்டே இருந்தது. கூச்சல்களோடு கார்கள் கடந்து சென்ற வண்ணம் இருந்தன. நியூ இயர் முடிந்து கொண்டிருக்கிறது. மணி அதிகாலை மூன்று. வழி நெடுக  எந்திரகதியில் ஹேப்பி நியூ இயர் சொல்லியபடியே வந்தான். ஒரு நாலு ரோடு சந்திப்பில் ஒரு ரஷ்ய அழகு தேவதை நின்று கொண்டிருந்தாள். அங்கே மனித நடமாட்டமே இல்லை.  எப்படி சப்போரா செல்வது எனக் கேட்டாள். சடக்கென உற்சாகமான ஜீவா. என்னுடன் வா, நான் வகதூர்தான் செல்கிறேன் என்று கூறி அவளைப் பின் தொடரச் சொன்னான். வகதூர் பக்கத்தில்தான் சப்போரா. அவளோடு இணையாக பைக் ஓட்டினான். அவள் பெயர், அவள் எவ்வளவு நாட்கள் இங்கு தங்குகிறாள், என்ன வேலை செய்கிறாள் எனப் பேசியபடி வந்தான்.


ஒரு இடத்தில் கும்பலாக இருந்தது. ஒரு வெள்ளைக்காரி, கிழிந்த உடையுடன்,  ஹௌ கேன் தீஸ் பாஸ்டர்ட்ஸ்  ஃபக் மீ எனக் கொலைவெறியோடு கத்திக் கொண்டிருந்தாள். சிலர் அவளை ஆசுவாசப்படுத்தியபடி இருந்தனர்.


அந்தக் கூட்டத்தைக் கடந்ததும் ஒரு இடத்தில் ரோடு V போல இரண்டாகப் பிரிந்தது. ஒருக்கணம் திடுக்கிட்டான். போதையாக இருந்ததால் எப்படிச் செல்வது எனக் குழப்பமாக இருந்தது. அவள் சிரித்துக் கொண்டே, உனக்கும் வழி குழம்பி விட்டதா என்றாள்.  இந்த இடத்தில் சரியான ரோட்டைத் தேர்ந்தெடுத்தால் வகதூர் வந்து விடும்.  அங்கே இருக்கும் மேங்கோ ட்ரீயில் இவளுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லி ஒரு பியர் வாங்கித் தர வேண்டும் என அவனுக்கு யோசனை. தலை கிண் கிண் என்றது.

 இவர்களைத் தாண்டி ஒரு கார் சென்றது . பின் ரிவர்ஸில் வந்தது. இவள் சப்போராவுக்கு வழி கேட்டாள். அவர்கள் தங்களைப் பின் தொடரச் சொல்லிச் சென்றனர். அவள் பை சொல்லி அந்த காரில்  சென்றுவிட்டாள்.

 பைக்கை ஆஃப் செய்து விட்டு ஒரு சிகரட் பிடித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு வகதூர் வந்தான். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் திறந்திருந்தது. ஒரு பியர் வாங்கி எரிச்சலோடு குடித்தான். அதிகாலை மணி  நான்கு ஆகியது. ரிஸார்ட்டுக்கு வந்தான். நண்பர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. போதை கடும் உச்சத்தில் இருந்தது. மடக் மடக்கென தண்ணீர் குடித்தான். சிகரட் பற்ற வைத்தான். இழுக்கவே பிடிக்கவில்லை. தூக்கி எறிந்தான். கட்டிலில் அப்படியே சரிந்தான்.


தூங்குவதற்கு சற்று முன், கண் இழுத்துக் கொண்டு செல்கையில், கஷ்டப்பட்டு தூங்காமல் மொபைலை எடுத்துப் பார்த்தான். பல மிஸ்டு கால்கள். பல மெசேஜஸ். எல்லாமே ரெஜினாவிடமிருந்து

காதலியின்  நினைப்பு வந்தது.  காதல் பொங்கியது. பாவம் தூங்கியிருப்பாள். ஆழ்ந்த நித்திரையில் இருப்பாள் என நினைத்துக் கொண்டே அரைத் தூக்கத்தில்,ரெஜினாவின்  மொபைலுக்கு  ஐ லவ் யூ செல்லம் என டைப் செய்து செண்ட் செய்து விட்டு ஃபிளாட் ஆனான்.

 ஐ டூ லவ் யூ டியர் என்ற பதில் தாமதிக்காமல் உடனே வந்து ஒளிர்ந்து கொண்டேயிருந்தது .

செவ்வாய், டிசம்பர் 24, 2013

Merry Christmas!


You make the world 
a better place 
and so much brighter too, 
because there's so much 
thoughtfulness 
in all you do. 
Your light shines through. 
That's why I'm 
sending a Christmas wish 
from my heart to you. 





Merry Christmas! 

I hope your dearest 
Christmas wish comes true.


With Love
Rasigen

வெள்ளி, டிசம்பர் 20, 2013

கடவுளும் காதலும் - By Irin




ரெஜினாவுக்கு  அன்று இரவு தூக்கம் வரவில்லை....புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் அவளைவிட்டு எங்கையோ தூரமாக சென்றுகொண்டிருந்தது. மனதில் கேள்விகள் அலையாய் அடித்துக்கொண்டிருந்தது. நான் செய்தது சரிதானா? அவன்  வாழ்க்கையில் நான் வந்தது சரிதானா? காதல் என்பது கடவுள்தானே? காதலை வேண்டாம் என்று சொல்வது கடவுளை வேண்டாம் என்று சொல்வது போலாகுமா? சிந்தனைகளினுடே மனமும் பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது. கண்களை வலுக்கட்டாயமாக மூடினாலும்...மனது எங்கையோ போய்க்கொண்டிருந்தது.

வாழ்க்கையில் இந்த காதல் என்பதை எல்லாரும் புரிஞ்சுக்கிறாங்க. ஆனா அதை சரியாக புரிஞ்சுக்கவில்லை என்பதுதான் உண்மை. நானும் அதுமாதிரிதான். பள்ளி கல்லூரி நாட்களில் சுட்டித்தனமாக சந்தோசமாகத்தான் இருந்தேன். இல்லை இல்லை...அப்படி இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டேன். என்னதான் அழகா இருந்தாலும் காதல் என்பது புரியாமலே இருந்ததால அந்த அழகு என்பது இரண்டாம் பட்சமாகவே என்னை தள்ளியது. எல்லோரும் ஒரு பாய் ப்ரெண்ட் உடன் சுத்தும்போதும் தனிமை மட்டுமே என்னை கொண்டாடிகொண்டிருந்தது. காரணம்.. காதலை பற்றி சரியாக புரிதல் இல்லாமல் நந்தவனத்தில் ஒரு ரோஜாவாக என்னால் இருக்க முடியவில்லை.

ஆனாலும் அவன் என்னை கொண்டாடினான். உலக அழகியே வந்தாலும் ரெஜினா தான் என்று எனக்காக காத்திருப்பான். ஹ்ம்ம் ..என்னோட ஜான்! எனக்கு காதல் பிடிக்கும் என்றாலும் அவன் காதலை என்னால் தீவிரமாக உணர முடியவில்லை. அனால் ஜான் என்னை நிறைய லவ் பண்ணான். உயிருக்கு உயிராக என்னை காதலித்தான். அவனை வாழ்கையில் இரண்டாவது முறையாக பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. கல்லூரியின் கடைசி வருடத்தில் எங்கிருந்து வந்தான் என்றே தெரியவில்லை. ஒரு மழை நாளின் மாலை பொழுதில் சற்றே பக்கத்தில் உரசுகிறமாதிரி பக்கத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வந்தான். மனதிற்குள்...யார் இவன் என்று நினைக்கும்முன்னே..

ஹாய்...நீ....ரெஜினாதானே?

............ ஆமா....நீங்க?

ஹேய் ரெஜினா ....நிஜமா என்ன தெரியல?

எங்கையோ பார்த்த மாதிரி ..இருக்கு.ஆனா..

கம் ஆன் யா........நான் தான் ஜான்....!! உன் கூட பத்தாம் கிளாஸ் வரை படிச்சேனே....! ஞாபகம் இல்லையா?

ரெஜினாவின் கண்களில் இப்போது சந்தோசம் தெரிந்தது...ஆனாலும் மனதிற்கும் எதோ இனம் புரியாத கலவரம்..

"சாரி...உங்கள எனக்கு தெரியாது"...ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள்.

மழை இன்னும் வலுத்திருந்தது.

வீட்டிற்கு வந்து கண்ணாடி முன் தலைதுவட்டும்போது..இதழோரம் சின்னதாக புன்னைகை ..பூத்தது. படுக்கையில் தொப்பென விழுந்தேன்..காதல் இது என்று புரியாத காலத்தில் எனக்கு காதலை சொன்னவன். எப்படி திடீர்னு வந்தான்? பத்தாம் வகுப்பு படிக்கிறப்போ டியூஷன் கிளாசில் வைத்து "ரெஜினா உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன்..ஆனா கடவுள் மேல சத்தியமா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுனு" சத்தியம் வாங்கிகொண்டு "உன்னை நான் ரொம்ப லவ் பண்றேன் ரெஜினா"னு என்கிட்ட முதன்முதலாக காதலை சொல்லி கொஞ்சம் வெட்கப்பட வைத்தவன். அப்போது எனக்கு சிரிப்புதான் வந்தது என்றாலும் முதன்முதலாக காதல் என்ற பூ பூக்க வைத்தவன். அவன் சொன்னதற்கு என்ன பதில் சொல்றது என்று தெரியாமல் என்னை திணறடித்தவன். இருந்தாலும் பள்ளி நாட்கள் முடியும்வரை மனதினுள் எதோ ஒரு இனம்புரியாத சந்தோசத்தை குடுத்தவன். படிப்பு முடிந்து அவன் வேறு கல்லூரிக்கு சென்றுவிட்டான். பார்த்து பல வருடங்கள் ஆனாலும் முதல் காதல் மனதின் ஓரத்தில் எங்கேயோ மின்மினி பூச்சி போல ஒளிந்துகொண்டுதான் இருந்தது. இனி பார்க்கவே மாட்டோம் என்று நினைத்தவன் மீண்டும் வந்து புன்னகை பூக்கவைக்கிறான்.

ஞாயிற்றுகிழமை சர்ச்க்கு போகும்போது மீண்டும் அவனை பார்க்க மாட்டோமா என்று மனம் ஏங்கியது. தூரத்தில் சர்ச்க்கு பக்கத்தில் அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் பார்வையில் ஒரு தேடல் இருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. என்னை பார்த்ததும் நண்பர்களை பிரிந்தது என்னிடம் வந்து..

"ரெஜினா ...ஸ்தோத்திரம்"

"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" இது நான்.

"ரெஜினா....உனக்கு என்னை மறக்க முடியாது. என்னை உனக்கு தெரியாது என்று ஏன் சொல்கிறாய் என்று தான் புரியவில்லை".."கடவுள் மேல் சத்தியமாக...உன்னை இப்போதும் நான் மனதார காதலிக்கிறேன் ரெஜினா.." 

மனதிற்குள் மீண்டும் வானவில் வர்ண கோலம் போட்டது..."நானும் உன்னை காதலிக்கிறேன்...நீ அன்று சொன்ன காதல் எனக்குள் பத்திரமாக இருக்கிறது என்று சொல்லத்தான் மனசு துடித்தது". ஆனாலும் எதோ என்று என்னை தடுத்துக்கொண்டே இருந்தது. பதில் ஏதும் சொல்லாமலே சர்ச்சுக்குள் சென்று விட்டேன்.

"நீரே எனது வழி...நீரே எனது வாழ்வு'

கோரஸ் பாடும்போதும் கண்கள் என்னை அறியாமல் அவனை தேடியது. ஆனாலும் வெட்கம் ஒரு பக்கமும், இனம் புரியாத ஒரு குழப்பம் ஒரு பக்கமுமாக அவன் பார்வையை தவிர்த்துக்கொண்டு தவித்துகொண்டிருந்தேன். சர்ச் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும்..அவன் நினைப்பை தவிர்க்க முடியவில்லை. இந்த தனிமை இரவில் நான் மட்டும் தூங்க முடியாமல் புரண்டுகொண்டிருக்கிறேன். நான் அவன்கிட்ட பேசியிருக்க கூடாது. என் மனது இப்படி அலைபாய விட்டிருக்க கூடாது. வாழ்க்கையின் வலிகளை தாங்கி இனி கடவுள் தான் எல்லாமே என்று "கன்னியாஸ்திரியாக" போக நினைகிறவள் நான். என் வாழ்க்கை என்பது கடவுளுக்காக அற்பணிக்கப்பட்டது. இதை எல்லாம் மனசுக்குள் போட்டு குழப்புவதே பாவம் என்று கண்களை மூடுகிறேன். இதோ மீண்டும் ஜானின் முகம்...!

ஒரு மெழுகுவர்த்தி ஏத்திவைத்து....கடவுளின் முன்பாக முழம்தாளிட்டு கண்ணீர் மல்க கை கூப்பி நிக்கிறேன்.

"அன்பான என் கடவுளே...ஜான் என்னை காதலிக்கிறான்..என்னையே நேசிக்கிறான்...சுவாசிக்கிறான். அனால் என்னால் அவன்கிட்ட எதுவுமே சொல்ல முடியவில்லை. ஒரு சாதாரண கடவுள் பிள்ளையாக என் ஆசைகளுக்கும் அணை போட தெரியவில்லை. அவன் காதலை நான் ஏற்க்காதபோது..அவன் மனது எவ்வளவு வலிச்சிருக்கும் என்று புரியுது கடவுளே. அடுத்தவங்களை காய படுத்துறது கூட ஒரு பாவம். என்னுடைய இந்த பாவத்தை மன்னிதருள்வீராக. நாளைக்கு நான் எடுக்க போகும் முடிவுக்கு என் ஆண்டவரே என்னுடன் துணை நிற்பீராக!...நான் எப்போதும் கடவுள் பிள்ளையாக உமக்கு ஊழியம் செய்பவளாக என்னை ஆசீர்வதித்தருளும்...ஆமென்!"

அடுத்த நாள் எப்படியும் ஜான் சர்ச் பக்கத்தில் நிற்பான் என்று நினைத்து போனது வீண் போகவில்லை. மழை லேசாக தூறல் போட்டுக்கொண்டிருந்தது. காருக்குள் அவன் உட்காந்து இருந்ததை பார்த்து நேராக அவனிடம் சென்றேன். என்னை பார்த்ததும் காரின் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு சிநேகமாக புன்னகைத்தான். இப்போதும் அவன் புன்னகையில் என் காதல் கட்டுக்களை அவிழ்த்து வெளிவந்துவிடுமோ என்று அவன கண்களை பார்ப்பதை தவிர்த்தேன்.

"ஹேய்...ரெஜினா மழையில நனையாதே...காருக்கு உள்ள வா.." பரிவுடன் சொன்னான்.

"தேங்க்ஸ்" என்று சொல்லிக்கொண்டு காருக்குள் நுழைந்ததும் அவன் காருக்கு வெளிய நின்றுகொண்டான்.

"ஜான்....நீ ஏன் வெளியில நிற்க்கிறே? உள்ள வா ஜான்..."

"இல்ல ரெஜினா பரவால்ல....நான் இங்க நின்னுகிறேன்..."

"ஜான் ...உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வா..."

ஜான் ஆச்சரியமாக நம்ப முடியாமல் என்னை பார்த்தான்...

"ஹேய்...நிஜமாவா? உனக்கு என்னை தெரியுமா?"

"ஜான் ப்ளீஸ்....உள்ள வான்னு சொல்றேன்ல...என் பக்கத்துல வந்து உட்காரு"

ஜான் என்ன நடக்கிறது என்று ஆச்சர்யம் கலந்த முகத்துடன் ரெஜினா பக்கத்தில் வந்து உட்காந்தான். இருவருமே மழையில் கொஞ்சம் நனைந்திருந்தார்கள். சில நிமிடங்கள் மௌனமாகவே கழிந்தது.

"ஜான் ..உன் கைய கொஞ்சம் புடிச்சுக்கலாமா"

ஜான் இன்னும் ஆச்சர்யத்துடன் "ஹ்ம்ம் ரெஜினா"

ரெஜினா மெதுவாக அவன் வலது கையையை தன் விரல்களுடன் கோர்த்துகொண்டாள்.

"இங்க பாரு ஜான்....என் கண்களை பாரு.....நான் உன்னை தெரியாதுன்னு சொல்ல வேண்டிய ஒரு நிலமையில இருந்தேன் அன்னைக்கு...இப்போதும் அப்படி தான் ஜான். ஆனா எனக்கு தெரியும் என் ஜான் என்னை எவளவு லவ் பண்றான் என்று. நீ முதன்முதலாக சொன்ன ஐ லவ் யு..இன்னும் எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை குடுத்துக்கிட்டுத்தான் இருக்கு ஜான். ஆனால் ஜான் என்னால எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. காலம் என்னை ரொம்பவே மாதிடிச்சு ஜான்...நான் கடவுளின் பிள்ளையாக அவருக்கு ஊழியம் செய்பவளாக மட்டுமே இருக்க நினைக்கிறேன். சரி இப்போ கேட்கிறேன்..கடவுள் மேல சத்தியமாக சொல்லு...நான் என்ன சொன்னாலும் செய்வியா ஜான்?"

என்ன என்பது போல ரெஜினாவை ஏறெடுத்து பார்த்தான் ஜான் 

"சொல்லு ஜான் கடவுள் மேல் சத்தியமாக ...நான் சொல்வதை செய்வியா?

"சொல்லு என்ன பண்ணனும்? சந்தோசமாக பண்றேன் ரெஜினா..."

"என்னை மறந்துடு ஜான்"!!!!

ஒரு கணம் கூட யோசிக்காமல் அவனிடமிருந்து அந்த பதில் வந்தது..

"சரி....ரெஜினா...மறந்துடுறேன்...!!"

ரெஜினாவுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் அதே நேரம் கொஞ்சம் ஏமாற்றமுமாக இருந்தது.

"ஜான் ...!!"

"கேட்கிறது என்னோட ரெஜினா...அதுவும் கடவுள் மேல சத்தியம் பண்ண சொல்லி கேட்கிற..எனக்கு கடவுளும் காதலும் ஒன்னு தான் ரெஜினா..."

"தேங்கியு...ஜீசஸ்....தேங்கியு ஜான்...இப்போ தான் என் மனசு லேசான மாதிரி இருக்கு....என்னை மன்னித்துவிடு ஜான்" என்று சொல்லிக்கொண்டு காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டாள்!

ஜான் காரிலிருந்து இறங்கி....அவள் கொஞ்சம் கொஞ்சமாக நிழல்போல் அவன் வாழ்க்கையிலிருந்து அவள் கரைவதை பார்த்துகொண்டிருந்தான்...

ரெஜினா...நான் சத்தியம் பண்ணதும் உன்னை மறக்கிறேன் என்று சொன்னதும் கடவுள் மேல உள்ள பயத்திலோ, அன்பிலோ இல்லை..ரெஜினா மேல இருக்கிற காதலில பண்ணது... உன்மேல இருக்கிற பாசத்தில பண்ணது..உனக்காக நான் விட்டுக்குடுக்கலேன்னா...என் காதல் போலிஆகிடும். நான் உன்னை நேசிக்கிறது பொய்யாகிடும். உன் சந்தோசத்தை மட்டுமே நான் எதிர் பார்க்கிறேன் ரெஜினா. நீ கடவுள் பிள்ளையாக மாறலாம். அவருக்கு ஊழியம் செய்பவளாக இந்த உலகம் உன்னை மாற்றலாம். உனக்கு கூட என் காதல் புரியாமல் போகலாம். அனால் என் ரெஜினாவின் நினைவுகள் அழகானது. ரெஜினாவின் காதல் இந்த ஜான் மனசுல எப்போதோ விதையாக விழுந்தது. நீ என் காதலை வேண்டாம் என்று சொல்லிவிடலாம். அனால் கடவுளின் பிள்ளையை காதலித்துக்கொண்டு தான் இருப்பேன். 

மழை.....அடைமழையாக பிறவி எடுத்தது....ஜானின் கண்ணீர் துளிகளை கழுவிகொண்டிருந்தது.

இப்படிக்கு
ரெ.ஜி.னா 

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

காதல்கள்...





உன்னை சைக்கிளில் பின் தொடர்ந்து

நீ படிக்கும் டியூஷனில் சேர்ந்து

உனக்கு முன் கோவிலில் நெய்விளக்கேற்றி

உனக்காக அர்ச்சனை செய்து

உனக்காக ஃபுட்போர்டில் தொங்கி

உன் பெயரை பஸ் சீட்டின் பின்புறம் எழுதி

உனக்காக ரிசல்ட் பார்த்து

உனக்காக ட்ரீட் வைத்து

கேண்டீன் அருகே காதலை சொல்லி

உன் அட்வைஸ் எல்லாம் கேட்டு

ஏதோ ஒரு மியூசிகல்ஸில்

இளைய நிலா பொழிகிறதில் ஆரம்பித்து

நிலாவே வா வில் முடிகிறது

சிறுநகரத்துக் காதல்கள்!
*******************************************************



அரட்டை பக்கங்களில் ஆரம்பித்து 

கூகிளில் ஹாய் சொல்லி...

பேஸ்புக்கில் ஜோடி சேர்ந்து.

வெப்காம்களில்...முத்தம் பகிர்ந்து 

டிஸ்கோதேவில்...காமம் தொடர்ந்து..

ஆளில்லாத வேளைகளில்....

கட்டிலில் ..கலவி கூடி...

இட்ஸ் ஆல் பன் யா...வில் முடிகிறது

பெருநகரத்து காதல்கள்..


இப்படிக்கு
ர.சி..க.ன் 

லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….




எனக்கு சின்ன வயசுல இருந்தே வளர்ப்பு பிராணிகள் புடிக்காம போச்சு. அது ஏன்னு தெரியல எனக்கும் அதுகளுக்கும் ராசி ஒத்து போறதே இல்ல. அப்படி இருந்தும் பிரண்ட்ஸ் கூட வெளிய போறப்போ அவங்கள பார்த்து நானும் சில சமயங்களில் கலர் மீன்கள் வாங்கி வந்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வளர்க்க ஆரம்பிப்பேன். அவங்க வீடு மீன்கள் எல்லாம் துள்ளி குதிச்சு சந்தோசமா விளையாடும். நான் வாங்கிட்டு வர்ற மீன்கள் மட்டும் அடுத்த நாளே மல்லாக்க படுத்து உசுர விட்டிருக்கும்.

ஊர்ல பார்த்தீங்கன்னா...எங்க பார்த்தாலும் நாய்கள். நம்ம தமிழ் சாட் ரூம் மாதிரி ஒரு பொட்ட நாய் ஓடும் அதுக்கு பின்னால நாலைஞ்சு ஆம்புள நாய்ங்க டோக்கன் வாங்கிட்டு வரிசையா பின்னால விரட்டிக்கிட்டு போகும் "மேட்டர்" பண்றதுக்கு. இங்க அந்த மாதிரி நாய்ங்கள (நிசமாவே டாக்ஸ் தான்பா..உங்கள சொல்லல) ரோட்ல அவ்வளவா பார்க்கிறது அபூர்வம். அதுக்கு பதிலா ஆண்டவன் படைச்சு விட்டிருக்கான் நிறைய பூனைகள். எங்க பார்த்தாலும் பூனைகள். டெய்லி ரோட்ல ரெண்டு மூணு அடிபட்டு செத்துக்கிடக்கும். வண்டிய கொண்டு நிப்பாட்டுனா அதுக்கு மேல ஏறி ரெண்டு பூனைங்க ஜட்டி போடாம மல்லாக்க படுத்து கவர்ச்சி காமிச்சுக்கிட்டு படுத்திருக்கும். வண்டிக்கு அடியில நாலைஞ்சு, பக்கதுல ரெண்டுமூணு இப்படி எங்க பார்த்தாலும் பூனைங்க. எங்க இருந்து வருதுனே தெரியல. அலம்பல் தாங்கல. நம்ம ஊர்ல எதாச்சும் பூனைக்கு பக்கத்துல போய் சும்மா தலைய சொறியுரமாதிரி கைய தூக்குனாலே போதும். பூனை ரெண்டு கிலோமீட்டர் அந்தபக்கம் ஓடிகிட்டு இருக்கும். ஆனா இங்க உள்ள பூனைகள் இருக்கே...யம்மா...நீ கையில மெசின் கண்ணு வச்சுக்கிட்டு அதுகிட்ட காமிச்சாலும் "போடா போடா போக்கத்தவனே"...னு எக்கதாளமா நம்மள பார்த்துகிட்டு மயிரே போச்சுன்னு அதுபாட்டுக்கு படுத்துக்கும். நமக்கு கோபம் வந்தது பிளட் பிரசர் ஏறுறதுதான் மிச்சம். அம்புட்டு கொழுப்பு புடிச்ச பூனைங்க! மொதல்ல பார்கிறதுக்கு லைட்டா நோஞ்சான் மாதிரி இருக்கும். நாம போடுற எச்சி சோத்த தின்னுட்டு ஒரு வாரத்துல சிக்ஸ் பேக் காமிச்சிட்டு நிக்கும். ஒழுங்கா சாப்பிடுற நமக்கே உடம்பு வைக்கல. இதுக இப்படி வந்து நின்னா நமக்கு கடுப்பாகுமா ஆகாதா? நீங்களே சொல்லுங்க.

இப்போ இங்க குளிர் காலம் வேற. ராத்திரி பகல்னு பார்க்காம வெட்கம் மானம் சூடு சொரண எதுமே இல்லாம நம்ம முன்னாடியே குஜால் பண்ணிக்கிட்டு நடக்குதுங்க. அட வெட்கம் கெட்ட வெண்ணைகளா அந்த பக்கம் மறைவா போய் பண்ணுங்கனு தொரத்துனா "போடா வெறும்பய மவனே ...உனக்கு எவளும் இல்ல பண்றதுக்கு..அதுக்காக ஏன்டா வெட்கம் கேட்டு நாங்க பண்றத பார்க்கிற?...பொறாமை புடிச்சவனே"னு மனசுக்குள்ள திட்டிகிட்டு ஆட்டத்த கண்டினியு பண்ணுதுங்க.

என்னடா இவன் திடீர்னு நாய், பூனை பத்தி எழுதுறானேனு  யோசிக்கிறீங்களா? அது மேட்டர் ஒன்னுமில்லீங்கோ..இன்னைக்கு ஆபீஸ் போகிறப்போ ரெண்டுமூணு பொடியனுங்க ஒரு நாயை போட்டு விரட்டிக்கிட்டு இருந்தாங்க..அப்போ நினைச்சு பார்த்தேன் ...நாய்ங்க என்ன விரட்டுன கதைய...

எங்க ஏரியாவில் தெருநாய் கொஞ்சம் ஜாஸ்திண்ணே..எப்ப பார்த்தாலும் ஒரு வெறியோடே திரியுங்க….அதுவும், தெருவுல பிகர் போறப்ப அதுக பண்ற அலப்பறை இருக்கே..ஆத்தாடி… இளவட்ட பசங்க பண்ற மாதிரியே ஒரே அலும்பு..பொண்ணுங்க பக்கத்துல கடிக்கிற மாதிரியே போய் “உர்ருன்னு” ஒரு சத்தம் கொடுக்குங்க..பயத்துல பொண்ணுங்க “ஓ மை காட்” அப்படின்னு அலறி அடிச்சுட்டு ஓடுறதுல அதுகளுக்கெல்லாம் அப்படி ஒரு சந்தோசம்..

யாராவது ரோட்டோரமா ஒரு பிகர் கூட கடலை போட்டிக்கிருந்தா அதுக பார்க்குற நக்கல் பார்வை இருக்கே..சீ..சீ..உடம்பே கூசிடும் , என்னமோ அதுக எல்லாம், “காபிடே” யில காப்பி குடிச்சுக்கிட்டு லவ் பண்ற மாதிரி..ஏரியாவுக்குள்ள ஒரு பெண்நாய் வந்துற கூடாதுண்ணே..இதுக பண்ற அட்டூழியம் தாங்க முடியாது..அப்படியே ஸ்டைலா யூ.டர்ன் போட்டு திரும்பி, வாலை அப்படியே டான்ஸ் மாஸ்டர் மாதிரி ஆட்டிக்கிட்டு “எங்க ஆளு டோய்..” ன்னு பந்தாவா போறப்ப அப்படியே பத்திக்கிட்டு வருமுண்ணே..அன்னைக்கு புல்லா காலரை.. சாரி, வாலை பெருமையா ஏத்தி விட்டுக்கிட்டே அலையும்.

இதெல்லாம் எனக்கு கடுப்பு இல்ல.. நைட் 1 மணிக்கு வீட்டுக்கு வர்றது குத்தாமா? பஸ்ஸ்டாண்ட் வாசலில இருந்து, வீடு வரைக்குமுண்ணே..சும்மா, வெறி புடிச்ச மாதிரி துரத்தும் பாருங்க...உசிரே போயிடுமுண்ணே.. அதுகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்..சரி, ஹெல்மெட் போட்டதனால்தான் துரத்துதுன்னு, ஹெல்மெட்டை கழட்டினா, ஏதோ, பேயைப் பார்த்தமாதிரி, அதுக எல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுறத பார்க்குறப்ப எப்படி இருக்கும் சரியான நக்கல் புடிச்ச நாய்ங்க...

இதுகள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்குறப்ப, நண்பன் ஒரு ஐடியா சொன்னான்..நாய் துரத்துறப்ப 2 பாக்கெட்டு நாய் பிஸ்கட் மறறும் புரை எடுத்து வீசினோமுன்னா, அதுக பிஸியா இருக்குற சமயம் பார்த்து நம்ம எஸ்கேப் ஆயிடலாமுல்ல,,வெளிய  கிளம்புறப்பயே, தயாரா 2 பிஸ்கெட் பாக்கெட், புரை வாங்கி வைச்சுக்கிட்டேண்...நைட் வழக்கம்போல துரத்த ஆரம்பிச்சவுடனே, ஒரு இடமா பார்த்து வண்டியை நிறுத்துக்கிட்டேன்..ஒவ்வொரு பிஸ்கெட்டா தூக்கி போட்டேன் பாருங்க..வொர்க் அவுட் ஆகிடிச்சு. அப்படியே தூரம் தூரமா பிஸ்கெட்டை எறிய, அதுக எல்லாம் பிஸ்கெட் தேடுறதுல மும்மரமாக, நான் அப்படியே பைக்கை ஸ்டார் பண்ணி கிளம்பு வந்துட்டேண்ணே..என் நேரம் பாருங்கண்ணே..எல்லா நாய்களும் டின்னர்ல பிசியா இருக்குறப்ப, ஒரு நாய் மட்டும் வெறி புடிச்ச மாதிரி துரத்துது..ஒருவேளை நான் வெஜ் எதிர்பார்க்குதோ..?ஆத்தாடி, இந்த ராத்திரி வேளையில நான் வெஜ்ஜுக்கு எங்கே போவேன்..இப்ப கறி குடுக்கலைன்னா, அதுவே உடம்புல இருந்து எடுத்துக்கும் போலேயே..

எனக்கு குலையே நடுங்கிருச்சு..சரி ஆனது ஆகட்டுமுன்னு, பைக்கை விரட்டுனா, என்னா துரத்தல்..நான் என் பைக்குல 70க்கு மேல போனதில்லைண்ணே..அன்னைக்கு 90 கி,மீ வேகம்ணே..வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சப்பறம்தான் உசிரே வந்தது..அப்புறம் அதே நாய்..தினமும் துரத்தல்..அது என்னன்னு தெரியலைண்ணே.. ஒரு நாய் மட்டும்தான் எதுக்கும் மசிய மாட்டிங்குது..நல்லா பழுப்பு கலருல இருக்கும்  அந்த நாய்…அது கொட்டாவி விடுறப்ப, பல்லைப் பார்த்தோமுன்னா, ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டோமுண்ணே..சரி, ஒரே வழியா வந்தால்தான் துரத்துதுன்னு, வேற வழியா வந்தா, கரெக்டா கடன் குடுத்த மாதிரி, வீட்டு வாசலுல நிக்குது..இதுல கேலியா ஒரு பார்வை வேற..எப்படித்தான் கண்டுபிடிக்குதோ..?ஒருவேளை கூகில் செர்ச் போட்டிருக்குமோ..எனக்கு கடுப்பா இருந்தது..ஒரு நாளைக்காவது அது கூட ஒரு மீட்டிங் போட்டு, பேசி தீர்த்துக்குலாமுன்னு நினைச்சேன் ..

அந்த நேரத்துலதான் எங்க அபார்ட்மெண்ட்ல ஒவ்வொரு மாதமும் நடக்கும் மீட்டிங் நடந்தது..நான் இந்த மீட்டிங்குல எல்லாம் கலந்துக்குறது இல்லைண்ணே….பப்ஸ், சமோசா சாப்பிடமுன்னா பேக்கரிலயே சாப்பிட்டிக்கிறது..இன்னைக்கு பார்த்து அபார்ட்மெண்ட் செகரட்டரி, ஒரே அடம்..வேற வழியில்லாம போய் உக்கார்ந்தேன்..வழக்கம்போல் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம் தவிர எல்லாத்தையும் பேச ஆரம்பிச்சாயிங்க.. மெல்ல, மெல்ல பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்தது..

“சார்..இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..”

“என்ன பிரச்சனை..”

“என் பொண்ணு அபார்மெண்ட்ல நடக்கவே முடியலைங்க..கீழ் வீட்டுல உள்ள இருக்குற பையன் போற வர்றப்ப எல்லாம்,ஒரே கிண்டலுங்க..”

கீழ் வீட்டுக்காரர் கொதித்தார்..

“ஆமா..உங்க பொண்ணு பெரிய ஐஸ்வர்யாராய் பாரு….போயா..”

“யோவ்..நாக்கை அடக்கி பேசு..மரியாதை கெட்டு போயிடும்..”

“யோவ்..உனக்கென்ன மரியாதை..நீயெல்லாம் பெரிய மனுசன் மாதிரியா இருக்க,,”

“டேய் .,,கையை நீட்டக்கூடாதுன்னு பார்க்குறேன்..”

“அடிச்சுடுவியா..நீ மட்டும் அடிடா பார்ப்போம்..அடிச்சுட்டு உசிரோட இருக்க முடியாதுடி..நான் எல்லாம் ரவுடியா இருந்துட்டுதான்டா இங்க வந்துருக்கேன்..”

“த்..தூ..உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா..தெருவுக்கு ஒரு பொம்பளை வைச்சிருக்கேயேடா..சொன்னா நாறிப் போகும்..”

அவ்வளவுதான்னே..ஒரே கெட்ட வார்த்தை..தமிழுல இவ்வளவு வார்த்தை இருக்குறதே எனக்கு அப்பதான்  தெரியும்..

“போடா..நீதாண்டா மாமா வேலை பார்க்குற..”

“டே..மொள்ளமாறி….நீதாண்டா முடிச்சவிக்கி…பக்கத்து தெருல பிச்சைக்காரன்ட புடிங்கி தின்னவந்தான நீ..”

“போடா..நாயி…”

“நீதாண்டா சொறி நாய்..

“நீதாண்டா வெறி நாய்..”

காது மட்டுமல்ல, கண்ணையும் மூடிக்கொண்டேன்..சத்தம் அதிகம் ஆகி, “லொள்..லொள்” ன்னு சத்தம் மட்டும் கேட்கிற மாதிரி இருந்தது ..அது வெளியிலிருந்து வந்ததா..உள்ளிருந்து வந்ததா என்று எனக்கு ஒரு சந்தேகம்..சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன்..என்னை எப்பவும் துரத்தும் நாய் சன்னல் அருகில் நின்று கொண்டிருந்தது..ஒருவேளை அதையும் மீட்டிங்க்கு கூப்பிட்டுருப்பாயிங்க போல..ஆனால், என்னைப் பார்த்து ஏளனமா ஒரு சிரிப்பு..”நீங்க எல்லாம் மனுசங்களாடா..இதுக்கு நாங்க எவ்வளவோ பரவாயில்லைடா..” என்று கேட்பது போல இருந்தது..தலையை குனிந்து கொண்டேன்..

அடுத்த நாள், பக்கத்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்..அங்கே ஒரே, பரபரப்பு..எல்லா நாய்களும் தெருவில் தறி கெட்டு ஓடுக்கொண்டுருந்தன..சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தேன்..அங்கு ஒரு நாய் பிடிக்கும் வண்டி நின்று கொண்டிருந்தது..அங்கிருந்து 3 தடியான ஆட்கள், நாய்களை விரட்டி, விரட்டி பிடித்து கொண்டிருந்தனர்..

தூரத்தில் எங்கயோ எனக்கு பழக்கப்பட்ட குரல் போல கேட்டது..அவசரமாக பார்த்தால்..எனக்கு தூக்கி வாரி போட்டிருச்சுண்ணே..என்னை தினமும் விரட்டும் அதே நாய்..நாய் பிடிப்பவர் அதன் கழுத்தில் ஒரு பெரிய வளையத்தை போட்டு இறுக்கியிருந்தார்….அப்படியே அதை தெருவில் அதை தரதரவென்று கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனார்..அந்த நாய் முடிந்த வரைக்கும் போராடியது..வெறி கொண்ட போராட்டம்..உயிருக்கான போராட்டம் அது..ஆனால் முடியவில்லை..அந்த ஆள் லாவகமாக அதை இழுத்துக் கொண்டு போனார்..தன் காலை எடுத்து தலையில் மாட்டிய கம்பியை எடுத்து விட முயற்சித்தது.. முடியவில்லை..

அப்போதுதான் அதை கவனித்தேன்..கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனதில், நாய் உடம்பு முழுவதும் காயம்..அதிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது..உயிருக்கான போராட்டத்தில் களைப்புற்று அதன் நாக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தது..சன்னமாக அதனுடைய மூச்சு காற்று மட்டும் வெளியே கேட்டது..கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போனது..அமைதியாகி அப்படியே நின்றது..நாய் பிடிப்பவர், அதை அப்படியே இழுத்துக் கொண்டு போய் வேனுக்குள் தள்ளினார்..அதன் சன்னல் வழியே எட்டிப் பார்த்தது.. என்னைப் பார்த்ததுமே, குரைத்தது,,”என்னைக் காப்பத்துடா..” என்று கெஞ்சுவது போல் இருந்தது..நான் அப்படியே தலையை குனிந்து கொண்டேன்..நாய் வண்டி மெதுவாக நகர, நகர என்னை விட்டு ஏதோ ஒன்று போனது போல இருந்தது..தலையை தூக்கி வண்டியின் சன்னலைப் பார்த்தேன்..அந்த நாய் இன்னும் என்னை வெறித்துக் கொண்டே இருந்தது..அதன் கண்களை என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை..நாய் வண்டி தூரமாக செல்ல செல்ல, ஒரு புள்ளியாக தெரிந்தது..கடைசியாக பார்வையிலிருந்து அகலும் முன் அந்த நாயின் குரல் மட்டும் சன்னமாக கேட்டது…

“லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….”


இப்படிக்கு
ரசிகன்  

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

அழகு பொண்ணுங்களும் கியூட்டான பொய்களும்!




அழகான பொண்ணுங்க சொல்ற பொய் கூட அழகுதாங்க.. அந்த பொய் கியூட்டா இருந்தா அது இன்னும் அழகு..

அந்த மாதிரி ஜீவா ரசிச்ச பல அழகு பொய்களின் கியுட்டான கலெக்சன் இதோ...

பொண்ணுகளால மட்டும் தான்  ஒரே நேரத்துல பிரெண்டுகிட்ட போன்ல பேசிகிட்டு,ஒரு  கைல மொபைல்ல மெசேஜ் அனுப்பிகிட்டு ,இன்னொரு கைல காலுக்கு நெயில் பாலிஸ் போட்டுகிட்டே டிவில ஓடற மெகா சீரியல பார்த்து அழுதுகிட்டே தோசைய திருப்பி போட முடியும்...ஆனா பசங்க பாடு பாவம்க.. ஒரு பையன்கிட்ட அவன்  டீ குடிக்கிறப்ப , மணி என்னடா மச்சான்னு கேட்டு பாருங்களேன்....கன்னாபின்னான்னு கன்பியுஸ் ஆய்டுவான்.. ஆம்பளைங்களால ஒரு நேரத்துல ஒரு வேலையத்தான் செய்ய முடியும்....மனுஷன் உடம்போட இன்ஜினியரிங் அப்டி...

ஆனா இவ்ளோ வேலைய ஒரே நேரத்துல செய்ற பொண்ணுங்க ஒரே ஒரு எடத்துல மட்டும்தான் ஒரே ஒரு வேலைய மட்டும் செய்வாங்க... எப்போ தெரியுமா அவங்க தான் பாய் பிரெண்டோட இருக்கும்போது இன்னொரு அழகான பொண்ணு வந்துட்டா...

அந்த பொண்ணு மேல இவங்க பார்வை நிலைகுத்தி ஒரு வெறி கலந்த பொறாமை தெரியும்.. அய்யோயோ நம்பள விட அழகா இருக்காளேன்னு... மூஞ்சிக்கு ஏன் இவ்ளோ பவுடர் போட்ருக்கா..ச்சே கேரக்டர் சரியில்லாத பொண்ண இருக்கும்னு மனசுக்குள்ளயே நெனைச்சுகிட்டு கொஞ்சம் கீழ பார்ப்பாங்க...ஒரு செகண்ட் "அத" உத்து பார்த்துட்டு (நம்ம கூட "அத" அப்டி பார்த்துருக்க மாட்டோம்..) . ஒரு வேளை  பொய்யா இருக்குமோன்னு மனசுக்குள்ளயே கணக்கு போடுவாங்க...    நல்லா கவனிசீங்கன்னா உங்க காதுக்கு கேக்கும் அவங்க மனசுக்குள்ள கணக்கு போடறது...இதேப்டி இங்க. அது இப்டி இருக்கு..அப்டியில்ல இருக்கணும்னு ஏதேதோ செக் பண்ணிட்டு ரொம்ப நேரம் கழிச்சு ச்சே இவளுக்கும் பொய்தான்னு மனசுக்குள்ள ஒரு திருப்தி வந்த உடனே பார்வை இன்னும் கொஞ்சம் கீழ இறங்கும்...உதடு மைல்டா சிரிக்கும்..ச்சே...நம்ப அளவுக்கெல்லாம் இல்லைன்னு..நம்ப பையன் நம்பள விட்டு போகமாட்டான்னு ஒரு முடிவுக்கு வந்த பிறகு தான் அவங்க சுயநினைவுக்கே வருவாங்க...அப்போ அவங்ககிட்ட ஏண்டி அந்த பொண்ண இப்டி பார்க்கரன்னு கேட்டீங்கன்னா வரும் பாருங்க அந்த சூப்பர் பொய்..

"ச்சி....நான் எங்க பார்த்தேன்...?"

ப்ளூ பிலிம் பார்த்துருகியாடின்னு பாய் பிரெண்ட் கேக்கற கேள்விக்கு ஜாதி மதம் இனம் பேதம் இல்லாம எல்லா ஊரு குட்டிகளும் பட்டுன்னு சொல்ற ஒரே பொய் இதாதாங்க இருக்கும்.."சீ சீ அசிங்கம் அதெல்லாம் நான் பார்த்ததில்லப்பா...ஆனா என் பிரெண்ட்செல்லாம் பார்ப்பாளுக..எனக்கு புடிக்காதுப்பா ..குமட்டிகிட்டு வரும்"னு ஆன்சர் வரும்.ஏண்டி நீ பார்க்கலேன்னு கேட்டீங்கன்னா ..."ச்சே ச்சே நான் அது எல்லாத்தையும் என் புருசன்கிட்டதான் கத்துப்பேன்"னு கன்னமெல்லாம் கூசி போய் கூசாம போய் சொல்லுவாளுக... கொஞ்சம் பேச விட்டு கேட்டீங்கன்னா உண்மை குடம் குடமா கொட்டும்...பீசு விடிய விடிய பிரெண்ட்சோட  சேர்ந்து கண்ணுகிழிய  ப்ளூ பிலிம் பார்த்துட்டு குளிர்ஜுரம் வந்து கெடந்த கதை...இந்த லட்சணத்துல அவுக புருஷன் சார்ட்டதான் எல்லாத்தையும் கத்துபான்களாம்...எதோ நம்மல்லாம் நயன்தாராகிட்டையும் த்ரிஷாகிட்டயும் போய் ஒன் வீக் கோர்ஸ் கட்டிப்புடிக்கறது எப்டின்னு கத்துகிட்டு வர்ற மாதிரி...

இது எல்லாத்துக்கும் மேல டாப்பான பொய் ஒன்னு இருக்குங்க...பீச் காத்துல, காதுகிட்ட லேசா  மூச்ச விட்டுகிட்டு காலோடகால உரசிகிட்டு "என்னடி ஒரு கிஸ் தாறியா?னு மெதுவா கேட்டுப்பாருங்க... இளஞ்சூடான குரல்ல முனகலாட்டமா சொல்லுவாங்க அந்த பொய்ய....

ச்சீ...அசிங்கம்...எனக்கு கிஸ் குடுக்கறதெல்லாம் புடிக்காதுடா..!

பொண்ணுக நம்மள க்ராஸ் பண்றப்போ அவங்க டிரஸ் சரி பண்ணிகிறத பார்த்தா..எங்கடா தேடிகிட்ருக்க மரமண்ட.."அது" இங்க இருக்குன்னு சொல்லி குடுக்கற மாதிரியே இருக்கும்...அவளுக அத சரி பண்றத பார்க்கும்போதுதான் நமக்கு ஒரு அபிப்ராயமே வரும்...அட இத நம்ம பார்க்கனும்ல அப்டீன்னு!...நீயும் கேனப்பய மாதிரி "அத" உத்து பார்ப்பே...அவளோ தான் நீங்க காலி...கூட நின்னுகிட்டு ஷால சரிபண்ணியும் பசங்களோட அபிப்ராயத்த பெற முடியாத அட்டு டிக்கட்டுகிட்ட போய் கொந்தளிப்பாங்க...

பொறுக்கி பய ..எப்டி பார்க்கறான் பாரு..அக்கா தங்கச்சியோட பொறக்கல்ல போலிருக்கு...! (ஆனா மனசுக்குள்ள இப்டி ஓடிகிட்ருக்கும்..எப்டி பார்க்காம இருப்பான்..கெளம்பும்போது ஒரு மணி நேரம்ல மேக் அப்போட சேர்த்து தேவையான அரெஞ்மண்ட்ஸ்லாம்  பண்ணோம்னு...!) அதுக்கு பக்கத்துல உள்ள அட்டு பிகரும் கொதிச்சு போய் கருத்து சொல்லும்.."அதுவும் கட்டம் போட்ட சட்ட போட்டுக்கிட்டு, தூக்கி சீவிருக்கற பையன் ரொம்ப மோசம். உன்னையே வெறிச்சு பார்க்கறான்டி ..சரியான பொம்பள பொறுக்கியா இருப்பான் போலன்னு"... ஆனா அதோட பிஞ்சு மனசுல இப்டி ஓடிற்றுக்கும்...(எனக்கும்தான் இருக்கு... ஹ்ம்ம்...எவனாச்சும் பார்கிறானா....என்னமோ போ...!)

கொஞ்ச நாள் பேசி பழகுன பொண்ணுகிட்ட அழகா இருக்கீங்கன்னு சொல்லி பாருங்க...ரொம்ப கேசுவலா "ஓ..அப்டியா" அப்டீன்னு சொல்லிட்டு அடுத்த விசயத்த பத்தி பேச ஆரம்பிச்சுருவாங்க...ஆனா அதே பீசு வீட்டுக்கு போயிட்டு "அழகா இருந்தேன்னு சொன்னானே அவன் எத சொன்னான்-ன்னு விடிய விடிய கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு சுத்தி சுத்தி பார்த்து தனக்குதானே தன்ன ரசிச்சு கொழம்பிகிட்ருப்பாங்க ...கருத்து என்னன்னா.. பொண்ணுங்களுக்கு டீட்டைல்ஸ் ரொம்ப முக்கியம் தலைவரே...அழகா இருக்கீங்கன்னு பொதுவா சொல்லாதீங்க...உங்க மனசுல அந்த புள்ளைகிட்ட எந்த கருமம் அழகா தோணுச்சோ அத அழகா ஒரு பிட்டாக்கி அப்டியே பேசும்போது அங்க அங்க மழைசாரல் மாதிரி  தூவி விடுங்க...!

ஒரு உதாரணத்துக்கு..

"எல்லாரும் சிரிச்சு பார்த்துருக்கேன்...ஆனா நீங்க சிரிக்கும்போது மட்டும் சிரிப்பும் சேர்ந்து சிரிக்குது...! கியூட் டு ஸீ...!.."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேட்டா வந்ததுக்கு உதட்ட சுளிச்சு என்னமோ செஞ்சீங்கள்ள..ப்ச்..அப்போ உங்க லிப்ஸ் ஐயோ ...செம கியூட் ..அப்டித்தாங்க இருந்துச்சு.."

"நீங்க ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கும்போது உங்க முகத்த பார்த்தா ஒரு ஸ்ட்ராபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கற மாதிரி இருக்கு... "

இப்டி மனச கல்லாக்கிட்டு பிட்டு பிட்டா போட்டு பாருங்க...! அந்த ஒரு வரில அவுக மனசு சந்தோசத்துல குதிச்சு கொந்தளிச்சு , செத்துப்போன அவுக தாத்தாவோட ஆத்மா ஆந்தி அடைஞ்சிரும்னா பார்த்துக்கங்க...! ஆனா அவுககிட்டேர்ந்து, அய்யனார் சத்தியமா இப்டி ஒரு ரியாக்சன்தான் வெளில வரும்.அழகா சிரிச்சுகிட்டே, லேசா தலைய சாய்ச்சுகிட்டே கியூட்டா சொல்லுவாங்க...

"போடா ஜொள்ளு..ஓவரா வழியாத...!"

கடைசியா சொன்னாலும் ரொம்ப முக்கியமான பாய்ண்ட் தம்பி...கவனமா கேட்டுக்கோ...உஷார் பண்ணிகிட்ட்ருக்கற பிகரோ..இல்ல லவ்விக்கிட்ருக்கற பிகரோ...இல்ல கல்யாணம் கட்டிகிட்ட பிகரோ..எல்லா பிகருங்களும் ஈகோங்கற ஒரே குட்டைல ஊறுன , வேற வேற கட்டைங்கதாங்க்ரத மனசுல வெச்சுக்க.! வாழ்க்கைல எதாச்சும் பிரச்சன வர்றப்போ நான் கீழ சொல்லிருக்க்கிற வார்த்தை மட்டும் அவகிட்ட இருந்து வந்தா, மச்சி ...அடுத்த செகென்ட் உஷார் ஆகிடு...

ஏம்ப்பா டல்லா இருக்க..? ஏதும் பிரச்சனையா...? இது நீ.

ச்சே ச்சே...அதெல்லாம் ஒன்னும் இல்ல...! இது அவுக...

மச்சான் சத்தியமா சொல்றேன்.எழுதி வெச்சுக்கோ..பீசு மனசுக்குள்ள பெருசா எதையோ போட்டு கொழப்பிகினு செம காண்டுல இருக்குன்னு அர்த்தம்...நீ அத புரிஞ்சுக்காம "அதான் அவளே ஒன்னும் இல்லைன்னு" சொல்லிட்டாளேன்னு நெனைச்சுகிட்டு, முட்டிய மடக்கிகினு, குஷி மூட்ல, ஜீவான்னு ஒரு பிக்காளிபய ஒருத்தன் ப்ளாக் எழுதுராண்டி..... அப்டீன்னு மொக்கைய ஆரம்பிச்சிராத...! தேவை இல்லாம அந்த புள்ள மனசுக்குள்ள என்ன திட்டும்..நாசமா போறவன்..ஜீவா கம்னாட்டின்னு...! (தேவை இல்லாம எனக்கு ஏச்சு  வாங்கி தராதே...வெட்டிருவேன்!)

அந்த மாதிரி சூழ்நிலையில ஆம்பள சிங்கங்களாகிய நாம, நம்ம உசுரையும் வாழ்க்கையையும் காப்பாதிக்கறக்கு நடிச்சே ஆக வேண்டிய அபாக்ய கட்டாயத்துல இருக்கொம்ங்க்ரத மனசுல வெய்ச்சுக்க.. நேரா பாத்ரூமுக்கு போ..மூக்க நல்லா சிந்து...உன் பிகரோட அப்பாவையோ...உன் லவ்வுக்கு வில்லனா இருக்கிற அவ அண்ணன் தம்பிகளையோ மனசுல நெனைச்சு நல்லா காரி வாஷ் பேசின்ல துப்பு..மூஞ்ச கழுவு..பிரெஷ் ஆகிக்க..வக்காளி தோக்கடிக்கரண்டா சிவாஜி கணேசனன்னு மனசுல நெனைச்சுகிட்டு நேரா போ அந்த பிகருகிட்ட...மூஞ்ச அப்பாவிய மாத்து..கீழ உள்ள டயலாக செண்டிமெண்டா அடி...!

"என்னடா பிரச்சன என் கண்ணுகுட்டிக்கு...? ஏன் டல்லா இருக்க...? சொல்லு அம்மு..என்ட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லபோற..! சொல்லு குட்டி...!"

பீசு குடம் குடமா கொட்டும்..மொக்கயாதான் இருக்கும்..இருந்தாலும் கேட்டுக்க....உன் பிரச்சனை ஓவர்...நீ அன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்...!

வக்காளி அஞ்சு தடவ பொறுமையா கேட்டும் பதில் சொல்லாத ஆங்காரம் பிடித்த அடங்காபிடாரி பிகர்  வாய்க்கபெற்ற   அன்பர்கள், கீழே உள்ள வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுகொள்ளபடுகிறார்கள்...!

“திரும்ப திரும்ப கேக்றேன்ல...சொல்லி தொலைடி எருமைமாட்டு முண்டம்...சோத்த திங்க்ரியா இல்ல…இல்ல உங்கப்பன மாதிரி  ..!”

இப்படிக்கு
ர.சி.க.ன்

எனக்கான உலகம் யாவும்...


எனக்கான உலகம் யாவும்...
நீயாக இருக்கிறாய்.

கொட்டும் மழை..
சாரல் அடிக்கும் ஜன்னலோரம்...
இந்த பாடல்...
உன் நினைவலைகள்...
எனது சொர்க்கம்...




இப்படிக்கு
ரசிகன்

செவ்வாய், டிசம்பர் 03, 2013

“மரியாதை”யா ஓடிடு...




நான் அப்போது வேலைக்கு சேர்ந்த புதுசு. அசைன்மென்ட் ஒன்னும் செட் ஆகாததால சிங்கப்பூர் ஹெட் ஆபீஸ்ல ஒரு இரண்டு வாரம் உட்கார வச்சிட்டாங்க.

என்னோட ஆபீஸ்-ல ஒரு வெள்ளைக்கார பய இருந்தான். பெயரு ஆலன் ஹாட்பீல்ட் (சுருக்கமா ஆலன்). அமெரிக்காகாரன்.  அந்த ஆபீஸ்-ல டெக்னிகல் மானேஜரா இருந்தான். என்னைய கொல்றதே அவனுக்கு பொழுதுபோக்கு. திடீர்னு வருவான் தஸ்ஸு புஸ்சு -னு இங்க்லிஷ்ல என்ன எல்லாமா உளறுவான். ஆமா எனக்கு அது உளறல்தான். ஏன்னா எனக்குதான் இங்க்லீஷ் சுத்தமா தெரியாதே. அதுவும் வேலைக்கு சேர்ந்த புதுசு. நம்ம ஊருக்கார பயலுக இஸ் ..வாஸ்...தாட் -னு பேசுற இங்க்லிசுக்கே எனக்கு கண்ண கெட்டும். இவன் வேற வாயில வெத்தலைய போட்டமாதிரி பேசுற இங்க்லீஷ் எனக்கு சுத்தமா புரியாது. நானும் பேந்த பேந்த முழிப்பேன். கால்மணி நேரமா மூச்சுவிடாம இங்க்லீஷ்-ல என்னமோ பேசி என் மூஞ்சில வாமிட் அடிப்பான். எல்லாம் பேசிட்டு லாஸ்ட்ல...யு டோன்ட் அண்டர்ஸ்ட்டாண்ட்  வாட் ஐயாம் டாக்கிங்...டு யு? அப்படின்னு முடிப்பான். நானும் தலைய சிலுவை மாதிரி அங்கையும் இங்கையும் ஆட்டிகிட்டு யா..யா..னு சொல்லி அவன வழியனுப்பி வைப்பேன். அவன் நக்கலா ஒரு பார்வை பார்த்திட்டு சிரிசிட்டு போவான்.

அவன் போனபிறகு..பக்கத்தில இருக்கிற ப்ரெண்ட் நம்ம ஊருக்கார பயகிட்ட "மாப்ள அவன் என்ன சொன்னான்-னு ஒண்ணுவிடாம தமிழ்ல சொல்றா"-னு சொல்லசொல்லி எப்படியோ அந்த பீட்டர் மாமா (பிச்சகார பய) சொன்னத செஞ்சு முடிச்சி ஈமெயில் அனுப்பிருவேன்.

ஆனா எனக்கு மனசுக்குல வக்காளி இவன எப்படியாச்சும் பழிவாங்கணும்-னு எண்ணம் இருந்துகிட்டே இருக்கும். அவன பழி வாங்குறதுக்கு சரியான சந்தர்ப்பத்த எதிர் பார்த்துகிட்டே இருந்தேன்.

அந்த சந்தர்ப்பத்தை பரமண்டலங்களிலிருக்கிற பரமபிதா எனக்கு குடுத்தார்...

ஒரு நாள் சரியா எங்கிட்ட மாட்டினான்..அவனுக்கு இந்தியாவோட கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்க ஆசை வந்துருச்சி போல..

“ஜீவா ..என்னை ஒருநாள் இண்டியன் சினிமாவுக்கு கூட்டிட்டு போயேன்..”

ஆஹா..பட்சி செமையா வந்து மாட்டிகிச்சு..அந்த நேரம் பார்த்து இங்க ஒரு தியேட்டர்ல விஜயகாந்த் நடிச்ச “மரியாதை படம்” ரீலிஸ் ஆச்சு.

“ஆலன் , இந்த வாரம் ஒரு இண்டியன் படத்துக்கு கூட்டிட்டு போறேன்..”

வெட்டப் போறோம்னு தெரியாம பலியாடு தல ஆட்டுச்சு.

ஆளை “மரியாதை”(சப்டைட்டில்) படத்துக்கு கூட்டிட்டு போயிட்டேன்.

நியுஸ் ரீல் போடுறப்ப நம்ம ஆளு..

“ரொம்ப தேங்க்ஸ் மேன்..ஒரு நல்ல இண்டியன் மூவி பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இது நல்ல மூவியா இருக்கும்னு நினைக்கிறேன்..”

இருடி மவனே..போக, போக பாரு…

விஜயகாந்த் அறிமுகக் காட்சி..விஜயகாந்த் மூஞ்ச குளோஸ்-அப்.....

“ராஜா, இது யாரு..இந்த படத்தோட காமெடியனா..”

“இல்ல ஆலன்....இதுதான் ஹீரோ..”

அப்படியே மயக்கம் போட்டு விழப்போனான்...விடுவேனா நான்...

ஆலன் ...படத்த பாருங்க படத்த பாருங்க-னு எழுந்திரு அஞ்சலி எழுந்திரு அஞ்சலி ஸ்டைல்-ல அவன உலுக்கி விட்டு மயக்கமாகாம பார்த்துகிட்டேன்.

இவன அவளோ சீக்கிரம் சாகடிக்க கூடாது...வச்சு அடிக்கணும்.

“பார்க்க வயசானவர் மாதிரி இருக்காரேப்பா..”

“உங்க ஊர்ல ஹாரிசன் போர்டு இல்லயா..அது மாதிரி..” நான் அடிச்சு விட்டேன்..

எங்கே சுவர் ஏறி குதிச்சுறுவானோன்னு முன்னெச்சரிக்கையா சொன்னேன்..

“ஆலன்...எங்க இந்தியாவுல ஒரு பழக்கம் இருக்கு..யாராவது படத்துக்கு கூட்டிட்டு போனா முழுப்படமும் பார்க்கணும், அதுதான் அவுங்களுக்கு குடுக்குற மரியாதை..”

“ஓ.கே..ஜீவா ..”

நல்லா கேட் போட்டு வச்சிட்டேன் ..நேரம் ஆக, ஆக விஜயகாந்த் நடிப்ப பார்த்துட்டு பய துடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..

“ஜீவா ..அது என்ன படத்துல லா..லா..லா..ன்னு ஒரு சத்தம்”

“எங்க வூருல செண்டிமென்ட் சீனுக்கு இதுதான் பின்னனி இசை ஆலன்”

ஒரு கட்டத்துல பையன் வாய் விட்டு கதறிட்டான்...குமுறி குமுறி அழ ஆரம்பிச்சிட்டான்.

“ஜீவா ..எனக்கு ஒரு வேலை இருக்கு..நான் வேனா இன்னொரு நாள் பார்க்கட்டா..”

எங்கடி எஸ்கேப் ஆகப் பார்க்குற..

“இல்ல ஆலன் , முழுப்படமும் பார்க்கனும்..அதுதான் நீங்க எனக்கு குடுக்குற மரியாதை..”

பாவம்னே அவன்..எனக்கே கஷ்டமா போச்சு..துடிக்குறாண்ணே..

நேரம் ஆக, ஆக நாக்கு வெளியே தள்ளாத குறை தான்..படம் முடிஞ்சதும் எங்கிட்ட ஒன்னுமே பேசலை.. வெளியே வந்து கேட்டேன்

“என்ன ஆலன் , படம் எப்படி இருந்துச்சு..” நமக்கு ஒரு ஆனந்தம் அவன் மூஞ்ச பார்க்கிறப்ப. இருந்தாலும் காமிச்சுக்கல.

அவன் என்னை ஒரு கொலைவெறி பார்த்தான் பாருங்கண்ணே..நான் நாலைஞ்சு வாட்டி எட்டி மிதிச்ச எங்க பக்கத்து வீட்டு பொட்டநாய் கூட அப்படி என்ன பார்த்ததில்ல.

ஒன்னுமே சொல்லாம காரை எடுத்துட்டு போயிட்டான்..

எனக்கு அவன சரியா பழி வாங்கிட்டோம்னு ஒரு திருப்தி..மனசுக்குள்ள ஒரே டண்டனக்கா டான்ஸ்.

அடுத்த நாள் ஆபிஸ் போறேன்..சீட்டுல ஆளை காணோம்..என் பிரெண்ட்கிட்ட கேட்டேன்.

“ஆலன் எங்க ஆளைக் காணோம்..”

“உனக்கு விசயம் தெரியாதா ஜீவா ..நேத்து நைட்டுல இருந்து அவருக்கு செம காய்ச்சல்..கூட வாந்தி பேதி ஆயிடிச்சாம்..ஆஸ்பத்திரி போயிருக்காரு.... டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு..”

இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர்பார்க்கலைண்ணே.."


இப்படிக்கு
கொலைகார பாவி 
ரசிகன்