தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் இதுவாக தான் இருந்தது...பிரபுதேவா - நயன்தாரா காதல். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தவர்கள் போல மூலைக்கு மூலை இதை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். நேரடியாக பேசாவிட்டாலும் மனிதர்களின் பேச்சு அவர்களின் காதல் கள்ளகாதல் போலவே சித்தரிக்க பட்டது. எனக்கு என்னமோ அவர்கள் காதலிக்கும் விதம் தப்பாக இருந்தாலும் காதல் என்பது நிஜமாகவே பட்டது.
எவ்வளவு தான் நாம் கண்களில் காதலில் பொய்யாக காட்டினாலும்..அதாவது பொய்யாக காதலித்தாலும்...மனம் ஏதாவது ஒரு கணத்தில் அதை நிஜமாக உணர்வுபூர்வமான காதலாக உணர்கிறது. காதலை நிஜமாக காதலிக்கும் ஒருவனால் அல்லது ஒருத்தியால் தான் தன்னை சுற்றி இருக்கும் உலகத்தை காதலுடன் உணர முடியும். தன்னுடைய எதாவது ஒரு செயலில் அந்த காதலின் வீரியம் வெளிப்படும்.
எங்கேயும் காதல்...இது பிரபுதேவா - நயன்தாரா காதலில் கட்டுண்டு கிடந்த நேரம் வெளிவந்த படம். நிறைய பேருக்கு இந்த படம் பிடிக்கவே இல்லை. ஆனால் இந்த படத்தில் கண்டிப்பாக பிரபுதேவா தன்னுடைய காதலின் வீரியத்தை இந்த படம் வாயிலாக சொல்லியிருப்பார். காதலை உண்மையாக காதலிக்கும் ஒருவரால் தான் இதுமாதிரி படைப்புகளை கொடுக்க முடியும். கீழே வரும் இரண்டு பாடல்களை பாருங்களேன்.
காதல் என்பது...காதலிப்பது....காதலிக்கப்படுவது...! பிரபுதேவா - நயன்தாரா காதலில்...காதல் பொய் இல்லை. !
இப்படிக்கு
ரசிகன்
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக