புதன், ஏப்ரல் 04, 2012

காதல் எனும் சாபம்.

ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு..ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறு"


அவள்..எதற்காக என் வாழ்வினில் வந்தாள்? எத்தனை தடவை யோசித்தும் பதில் தெரியாத புதிராகவே இருக்கிறது எனக்கு. வாழ்க்கை ஆரம்பிக்கும் இடத்தில் அவள் ...வாழ்க்கை முடிவின் விளிம்பில் நான்..கல்யாணம் ஆகாத கன்னி பருவத்தில் அவள். கையில் குழந்தையுடன் நான். மனதில் 1000 தடவை எனக்கும் அவளுக்கும் பொருந்தாது என்று காதல் தொடங்கும் முன்னமே...கை மேல் சத்தியம் பண்ணி தான் பழக ஆரம்பித்தோம். அடுத்த ஜென்மத்தில் நீ நீயாக பிறக்கவேணும் நான் நானாகவே பிறந்து உன்னை உருகி உருகி காதலிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு தான் பழக ஆரம்பித்தோம். ஒரு பெண்ணின் பேச்சில் இவ்வளவு வசீகரம் இருக்கும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை நான். அவளின் பேச்சுக்கள், சிணுங்கல்கள், செல்லமாய் என் காதில் விழுந்த கண்டிப்புகள் இது எல்லாம் என் மனதின் ஒரு மூலையில் எங்கையோ விதையாய் விழுந்து அது ஒரு விருட்சமாக வளர்வது தெரியாமலே பழகினோம். ஒரு கட்டத்தில் சத்தியம், தீர்மானம் எல்லாம் உடைத்துவிட்டு எங்களுக்குள்ளும் காதல் மலர்ந்தது. மனதின் ஒரு ஓரத்தில் மட்டும்நாங்கள் போட்ட சத்தியமும், தீர்மானமும் இந்த காதல் கண்டிப்பாக கை கூடாது என்று ஓலமிட்டு கொண்டு இருந்தது. அனால் காதல் என்னும் விஷம் கொஞ்சம் கொஞ்சம் மயக்கத்தில் கொண்டு போனது மனதின் ஓலங்களை எல்லாம் மறைத்தது.




அந்த ஒரு நாள் வரும் என்ற நினைவே இல்லாமல் நேரம் காலம் எல்லாம் மறந்து அவளின் நினைவுகளில் அவளுடனே வாழ என்னை பழக்கிகொண்டேன். காதல் தொடங்கும் நேரத்தில் அதன் முடிவு எப்படி இருக்கும் என்று யார் தான் அறிய ஆசை படுவார்? அவளுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடம் தான் நிஜம் இவள் மட்டும் தான் நிஜம் என்று நம்ப ஆரம்பித்தேன். எனக்கு ஒரு கஷ்டம் என்றால் அவள் மடியில் தலை சாய்த்தால் எல்லாம் மாயமாய் மறைத்து போனது. எனக்கு ஒரு சந்தோசம் என்றல் அவளுடம் பகிர்ந்துகொள்வதால் சந்தோசம் இரட்டிப்பு ஆனது. எனக்கு எல்லாமாக அவள் ஆகி போனாள். அவள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்னும் தாரக மந்திரம் என்னும் ஒலிக்க தொடங்கியது. அவளின் காதல், அவளின் கரிசனம் எல்லாம் எப்போதும் கூடவே வேண்டும் என்று மனது ஆசைப்பட்டு அதற்காகவே ஏங்க ஆரம்பித்து.



வரவே வராது என்று நினைத்திருந்த அந்த ஒருநாள் வந்துவிட்டது. அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது, ஒரு வேலை, ஒரு கலியாணம், குழந்தை இத்யாதி இத்யாதி இது எல்லாம் கை கூடும் நேரம் வந்தது. முதலாவதாக அவள் வேளைக்கு போக ஆரம்பித்தாள். தாயின் முந்தானையை பிடித்து கொண்டு சுற்றும் குழந்தை போல அவளையே சுத்தி சுத்தி வந்த எனக்கு அவள் வேலைக்கு போன பிறகு தனிமை ஒரு கொடுமையாக தோன்ற ஆரம்பித்து. அவன் வேலை விட்டு வந்த பிறகு பழக வாய்ப்பு கிடைத்தும், அவள் எப்போதும் வேண்டும் எனது மனது சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்தது. அவளுக்கும் வாழ்க்கை இருக்கு அவளும் எல்லாரையும் போல சந்தோசமாக இருக்கவேணும் என்று மூளை சொன்னதை மனது ஏற்க மறுத்தது. என் மனதின் காயத்துக்கு எல்லாம் மருந்து போட்டவளுக்கு என் சொல்களால் காயம் பண்ண ஆரம்பித்தேன். என்னுள் வளர்ந்த காதல் என்னும் விருட்சத்தின் வேர்கள் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதின் சுவர்களில் விரிசல் விழ வைத்தது. தூக்கம் தொலைந்தது, உணவு கசந்தது, உறவுகள் எதுவுமே பிடிக்கவில்லை. இதில் அவளின் தப்பு எதுவுமே இல்லை. தேவதைகள் ஒருநாளும் அழ வைத்து பார்ப்பதில்லை. எனக்கு தான் அது புரியாமல் போனது. அவளின் இந்த பிரிவு எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொல்ல ஆரம்பித்து. நான் வாழனும்..என் குழந்தைக்காக வாழனும்...அவள் தந்த காதலுக்கு களங்கம் வராமல் அவளின் ஆசைகளையும் நான் புரிந்துகொள்ள வேண்டும்...எனக்காக கண்ணீர் சிந்தியவளுக்காக நான் மாறனும். ஒரே வழி அவளின் நினைவுகளை என்னுள் இருந்து அழித்து விடுவதுதான். அவளின் சுவாச சுவடு இல்லாத இடத்தில் என்னை நான் புதைப்பது தான் ஒரே வழி.



"சத்யா ....நாம பிரிஞ்சிடலாம்"



ஒரே சொல்லில் என் கண்ணீர், என் காதல் அவள் காலடியில் புதைத்துவிட்டு எங்கோ திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்..

கண்ணீருடன் விடைபெறும்
ஜீவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக