புதன், ஏப்ரல் 25, 2012

கவிதை இரவு



நீ என் எதிரில் நிற்கையில் உன்னை பார்க்க


என் கண்களை திறக்க வேண்டியிருக்கிறது,

நீ என்னை விட்டு செல்கையில் உன்னை காண

என் கண்களை மூடவேண்டியிருக்கிறது..



ஒரு துளி

ரத்தம் கூட

சிந்தவில்லை..

ஆனாலும்

வலிக்கிறது

மனதுக்கு

பிடித்தவர்களின்

மௌனம்...



காலில் ஈரம் படாமல் கடற்கரையில்

நடைபயின்றவர்கள் உண்டு...

ஆனால் கண்களை ஈரம் தொடாமல்

வாழ்க்கையை கடந்தவர்கள் இருக்க முடியாது.



ஐ லவ் யு சொல்ல 3 செகண்ட்ஸ் போதும்...

அதை விளக்க 3 மணி நேரம் ஆகும்..

அதை நிரூபிக்க வாழ்நாள் முழுதும் தேவைப்படுகிறது..



ரோஜாவை கூந்தலில் சூடும்

மென்மையான மனம் கொண்ட பெண்கள்..

அதன் இலைகளை கிள்ளி ஏறிய

மனமில்லாமல் அப்படியே சூடிகொள்கிரார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக