
டேய் வாசு ...வாடா வாடா மச்சி. நல்லாருக்கியாடா? பார்த்து எம்புட்டு நாள் ஆச்சுடா.. என்னடா மச்சி எங்களை எல்லாம் மறந்துட்டியா?
ச்சே ச்சே ...அப்படி ஒன்னும் இல்லடா ... எல்லோரையும் பார்க்கனும்னு ஆசை தான்..டைம் எங்கடா கிடைக்குது?
நானும் எங்கயும் போறதில்லைடா... வீடு...வேலைன்னு லைப் போய்கிட்டு இருக்கு...காலேஜ் முடிஞ்சதோட எல்லாம் போச்சுடா ...
ஆமா ஜீவா நீ நம்ம காலேஜ் பிரெண்ட்ஸ் யாரையாச்சும் பார்த்தியாடா?
ப்ச் ...பார்க்கல மச்சி....கீதாவை மட்டும் பார்க்கணும் போல இருக்கு..
என்னது ..கீதாவா? அவளை எதுக்குடா நீ தேடுறே?
அது ஒண்ணுமில்ல ....காலேஜ் ல அவளை கொஞ்சம் கட்டம் கட்டுனேன்..சிக்குவான்னு பார்தேன் ....ஹ்ம்ம் ஒன்னும் வேலைக்கு ஆகலடா...ச்சே ..என்ன கலரு ..என்ன பிகரு...லேப் பக்கம் இரண்டுவாட்டி தனியா சிக்குனா ...எதாச்சும் பண்ணிடலாம்னு பார்த்தேன்....மிஸ் ஆயிட்டா மச்சி மிஸ் ஆயிட்டாடா.. ஹ்ம்ம் யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..
பாரு பேசிகிட்டே நீ எதுக்கு வந்தேன்னு கேட்க மறந்துட்டேன் பாரு...கூல்ட்ரிங்க்ஸ்...டீ ...எதாச்சும்...
நோ நோ ...ஒன்னும் வேண்டாம்...நான் என்னோட கல்யாண பத்திரிகை குடுத்துட்டு போலாம்னு வந்தேண்டா
அட மாப்ள சொல்லவே இல்ல.... வாழ்த்துக்கள்...ஆமா பொண்ணு யாரடா எந்த ஊருடா?
பொறுமை...பொறுமைடா .....சொல்லத்தானே போறேன்...உன்கிட்ட சொல்லாம இருக்க முடியுமா ...பொண்ணு வேற யாரும் இல்ல...இவளோ நேரம் நீ கட்டம் கட்டுனியே ....கீதா....அவ தாண்டா...எனக்கு வர போற பொண்டாட்டி...
!!!!!!!!!!!....@@@@@
காலேஜ்ல இருந்தே நாங்க லவ்வர்ஸ்....அதனாலதான் அவ யார் கிட்டயும் சிக்கல...இந்தா புடி கல்யாண பத்திரிகை....
பத்திரிகை குடுக்க வேண்டியது என்னோட கடமை......கல்யாணதுக்கு வராம இருகிறது உன்னோட கடமை.....மவனே கட்டமா கட்டுறே....வீட்டுப்பக்கம் உன்ன பார்தேன்....அம்புட்டுதான்டியோ....
பத்திரிகை குடுக்க வேண்டியது என்னோட கடமை......கல்யாணதுக்கு வராம இருகிறது உன்னோட கடமை.....மவனே கட்டமா கட்டுறே....வீட்டுப்பக்கம் உன்ன பார்தேன்....அம்புட்டுதான்டியோ....
*&^%!))(((
அடேய் வெங்க பயலே...வாய பொளந்துகிட்டு நிக்காதே...போய் தண்ணிய குடி.....நான் கிளம்புறேன்..
பின்குறிப்பு:
வாசு அவன் வீட்டுல ஒரு நாய் வளர்க்கிறானாம்....அது பேரு கூட ஜீவான்னு வச்சிருக்கானாம். அதோட கழுத்துல என்னோட ஒரு போட்டோ மாட்டி விட்டு....நீ யாரை கடிக்கிறியோ இல்லையோ ...இந்த போட்டோல இருக்கிறவன் வந்தா மட்டும் கண்டிப்பா அவன் பின்னால கடிச்சி வைக்கிறே - னு அதுகிட்ட சொல்லி சொல்லி வளர்த்துகிட்டு வரானாம் ...!
சத்தியமா சொல்றேன் மாப்ள.....உன்னோட பொண்டாட்டி எப்பவுமே எனக்கு சிஸ்டர் தாண்டா.....நம்புடா ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக