எத்தனை உலக அதிசயங்கள்!
உன்னை மட்டுமே சுற்றி சுற்றி
மகிழ்ச்சி கொண்டேன்..
எத்தனை இயற்கை அதிசயங்கள்!
உன் அன்பான வார்த்தைகளில் மட்டுமே
தெரிந்துகொண்டேன்..
எத்தனை விபத்துக்கள்!
பூகம்பம் செய்யாத மாற்றத்தை
உன் இதழோர புன்னகையில் தான் உணர்ந்துகொண்டேன் !
இறந்து போவது உடல் மட்டுமல்ல
உணர்வுகளும் தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்று தந்தது....
உன்மடியில் தலைசாய்த்து
உறங்கிப்போன நிமிடங்கள் எல்லாம்
மீண்டும் புதுபிக்க நினைத்து தோற்றுப்போகிறேன்..
இறந்து போவேனோ என்பதற்காக சுவாசிக்கவில்லை..
ஒருவேளை
உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டும் சுவாசிக்கிறேன்..
இப்படிக்கு
ஜீவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக