வழியெங்கும் இறைந்து கிடக்கின்றன பூக்களின் மௌனம்
மௌனமா மரணமா தெரியவில்லை.
பூக்களுக்கு மயக்கம் கூடாது
வாசனைகளின் இயக்கம் பூக்களாலானது!
ஆம்பல் அனிச்சம் ரோஜா மல்லிகை செங்காந்தள்
சிலர் மிதிப்பர் சிலர் பூஜிப்பர்
சிலர் கவிதைகளாக்குவர்
நான் மௌனிக்கிறேன்
எனக்கொருமுறை பைத்தியம் பிடித்திருந்த போது
பூக்களே வைத்தியம் பார்த்தன.
நான் ஒருமுறை சாவின் விளிம்பிளிருந்தபோது
தன் வரலாறு கூறி என்னை உயிர்ப்பித்தன..
பிரபஞ்சம் ஒளியாலானது என்பர்
சிலர் இழைகளாலானது என்பர்
அவ்வளவும் பூக்களாயிருந்தால் எத்தனை ரம்யமாயிருக்கும்
பூக்கள் என் பிரஜைகள்
அதனாலேயே நான் கடவுளுமானேன்.
பின்பு காரணமில்லாமல் நான் பூக்களை ஒதுக்கியபோது
என் ஸ்னேகிதத்தை துண்டித்து
என்னை உடைத்துப் போட்டன பூக்கள்.
இனி விமோட்சனமில்லை
நான் பூக்களின் பைத்தியமானேன்!
இப்படிக்கு
ர.சி க ன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக