செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மகிழம்பூ..


ஊருக்கு போனதும் முதல் வேலையாக ஜீவா படித்த காலேஜ் க்கு போக தீர்மானித்தான். தீபாவளி டைம் ஆனதால..மழைகொஞ்சம் சாரலாக அவன் முகத்தை நனைத்து. சில் என்ற காற்றில் மனம் படபடக்க அவன் படித்த காலேஜ் முன்பாக வந்து நின்றான். தீபாவளி லீவ் என்பதால் காலேஜ் ல யாருமே இல்லை. வாட்ச்மன் மட்டும் இருந்தான். பார்த்த உடனே அடையாளம் கண்டுகிட்டாரு


தம்பி நீங்க ஜீவா தானே
ஆமா தாஸ் அண்ணே..நல்லாருக்கீங்களா?
ஆமா தம்பி எதோ இருக்கேன்.. என்ன இந்த பக்கம்..
இல்லண்ணே...சும்மா காலேஜ் பார்த்திட்டு போலாம்னு ...என்று இழுத்தேன்..
வாங்க தம்பி இது உங்க காலேஜ் நல்லா பாருங்க...மழை நேரத்தில வந்திருகீங்களே தம்பி...அப்படின்னு சொல்லிட்டு சிரித்தார்..
இல்ல தாசண்ணே...இனி இது மாதிரி டைம் கிடைக்காது இல்ல...அப்படின்னு நான் சொல்லும்போதே...தாசண்ணன் காலேஜ் மெயின் கேட் திறந்து விட்டாரு...


ஜீவா ஓட்டமும் நடையுமாக....கண்களை அந்த காலேஜ் முழுவதும் சுழல விட்டான்.. ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஜீவா என்று ரகசியமாக யுவாஞ்சலி கூப்பிடுவது போல ஒரு உணர்வு. கால்கள் மட்டும் தன்னிச்சையாக அந்த மகிழம்பூ மரம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது.


அதோ...அந்த விளையாட்டு மைதானத்துக்கு பக்கதுல ...மஞ்சள் நிற பூக்களை சூடிக்கொண்டு....என்னை போலவே மழை சாரலுடன் கொஞ்சி கொண்டு....எங்கள் காதல் மகிழம்பூ மரம்...


ஜீவா மெதுவாக அடி எடுத்து வைத்து அந்த மகிழம்பூ மரத்தின் அடியில் வந்தான். தரை எல்லாம் மகிழம்பூகள் மஞ்சள் நிறத்தில்....ஒரு பூவைகூட மிதிக்க கூடாது என்று எவளவோ முயற்சி செய்தும் சில பூக்கள் அவன் காலடியில் உயிரை விட்டன. மனம் பதறி விட்டது ஜீவாவுக்கு. ஐயோ என் காதல் பூக்கள் என் காலடியில் கல்லறையை தேடுவதா... மெதுவாக மரத்தை தொட்டு பார்த்தான். மனசு பூரா எதோ ஒரு சொல்ல முடியாத சந்தோசம் .


ஜீவா...வாடா அந்த மகிழம்பூ மரத்துக்கு அடியில போய் உட்காருவோம்..
ஹ்ம்ம் வாடி யுவா...நமக்கு புடிச்ச இடமே அது தானே..
என்னடா ஜீவா இவளோ பூ தரையில கிடக்குது..
அது ஒண்ணுமில்ல..நாம காதலர்கள் வாரோம்னு இந்த மகிழம்பூ மரத்துக்கு தெரியும். அதான் நம்மளை வரவேற்க இவளவு பூக்கள் டி
ஏன் ஜீவா இந்த மகிழம்பூ மரத்துக்கு நம்ம காதல் புரியுமா டா
கண்டிப்பா என் கண்மணி.. நம்முடைய காதல், சிரிப்பு, சிணுங்கல், அழுகை, சண்டை எல்லாமே இந்த மகிழம்பூ மரத்துக்கு நல்லாவே தெரியும் டி.
ஏன்டா ஜீவா இந்த பூக்கள் எல்லாம் பூக்கிறது நமக்காக தானே?
கண்டிப்பா யுவா...எப்போ எல்லாம் இந்த மகிழம்பூ மணம் எனக்கு கிடைக்குதோ அப்போ எல்லாம் கண்டிப்பா எனக்கு உன் நினைவு வரும்டி..
எல்லோருக்கும் காதலுக்கு என்ன எல்லாமா அடையாளம் வச்சிருப்பாங்க...நமக்கு இந்த மகிழம்பூ & அதோட மணம் வச்சுக்கலாமா ஜீவா
ஹ்ம்ம் கண்டிப்பா .... இந்த மகிழம்பூ மரம் எப்போதும் நமக்காக பூக்கும் நம் காதலை சொல்லும்டி..
ஜீவா ...I Love U ...டா ......யுவாஞ்சலி ஜீவா-வின் தோள்களில்
சாய்ந்துகொண்டாள்...கண்ணீருடன்..!


எதோ ஒன்று கன்னத்தில் ஊர்வது போல இருந்தது ஜீவா-வுக்கு...
அப்போதுதான் நினைவு வந்தவனாக அண்ணாந்து அந்த மகிழம்பூ மரத்தை பார்த்தான்..
ஜீவன்-வின் கண்களில் கண்ணீர் முட்டியது..
யாருக்காக இன்னும் பூக்கிறாய்......!!!


மகிழம்பூ மரம் சிரித்தது....

நாளைக்கும் நிலவு வரும்...நாமிருக்க மாட்டோம்...
நாளைக்கும் பூ மலரும்...நாமிருக்க மாட்டோம்...
காதலை தான் வாழவைத்து..
காதலர்கள் போகிறோம்...
ஜீவன் போன பின்னாலும் செடி கொடியாய் வாழ்கிறோம்...


செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

கனவு காதலர்கள்


காதலை கொண்டாடும் உலகத்தில் காதலி இல்லாமல் வாழ்வது பெரும் துயரம். எல்லோருக்கும் எப்படியாது காதல் வேண்டும். செல்போன் சிணுங்கல்களில், அரட்டை பக்கங்களில் காதில் headphone மாட்டிகொண்டு முத்த மழைகளில் முகம் தெரியாதவளின் காதலுடன் எப்படி எல்லாமோ காதலில் வாழ்கிறோம்.


காதலிப்பது, காதல் வயப்படுவது,காதலில் ஈடுபடுவது என இத்யாதி இத்யாதிகளுக்கும் அத்தியாவசியத்தேவை , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாலினபேதமில்லாமல் ஒரு ஆள்!. காதலை உணர வாய்ப்பே இல்லாமல் இருப்பது உலகிலேயே மிகவும் கொடியது. அது மனம் சார்ந்தது , உடலுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் டுபாக்கூர் விடமுடியாது. பெண் வாசனையே இல்லாத ஊரில் புடவை கட்டிய பொம்மை , குச்சி , கம்பு எது கிடைத்தாலும் கூட காதலிக்க (கற்பழிக்கவும்) நேரிடலாம். மேன்சன்களில் பார்த்திருக்கிறேன். அங்கே இருக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குள்ளேயும் காமம் எப்போதும் விழிப்போடேயிருக்கும். அதனாலேயோ என்னவோ சிவராஜ் சித்த வைத்தியர் தொடங்கி சகல வைத்தியர்கள் மீதும் அவர்களுக்கு தீராத பயம். கைமாறும் காமக்கதை புத்தகங்களினூடாகவும் , புளூடூத்தில் பரவும் ஆபாச வீடியோவாகவும் எப்போதும் காமம் அவர்களினூடே நிறைந்து இருக்கும்.பசி,தூக்கம்,வறுமை இத்தனையையும் தாண்டி அவர்களுக்கான காமத்தை எப்போதும் அவர்கள் தீவிரமான உயிர்ப்போடு வைத்திருந்தனர்.


அதற்கான காரணத்தை எப்போதும் நான் அறிந்திருக்கவில்லை. எனக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது. சேவல்கள் நிரம்பி வழிகிற பண்ணைகளில்தான் கோழிகளுக்கான தேவை அளவுக்கு மீறியே இருக்குமோ என்னவோ!


மேன்சன் நண்பர்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி இருந்தனர். ஒரு சிலருக்கு பல காதலிகள் இருந்தனர். சிலருக்கு காதலன்கள் இருந்தனர். இரவெல்லாம் செல்போன் சூட்டில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். செல்லம் குட்டி புஜ்ஜிமா , என்னடி பொண்டாட்டி மாதிரியான வார்த்தைகள் சகஜமாக காதில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். காதலிகள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிலருக்கும் மட்டுமே வாய்த்திருந்தது. சிலரது காதலிகள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிருந்து காதோடு கட்டியணைக்க வேண்டியதாயிருக்கும். பலருக்கு தூரத்துமனைவிகளைக்கூட செல்போனில் அணைத்து முத்தமிடுகிற பாக்கியமேயிருந்தது. பேச்சிலர்களைக்காட்டிலும் இவர்களுடைய நிலை பரிதாபகரமானது.


எங்களோடு புதிதாக இணைந்த அவனுக்கு காதலிகள் யாருமேயில்லை. எங்களை எப்போதும் ஏக்கமாக பார்த்துக்கொண்டேயிருப்பான். எப்போதும் அருகிலிருந்து நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டேயிருப்பான். அவனுக்கான காதலிக்காக அவனால் காத்திருக்க முடியவில்லை. யாராவது பொண்ணுங்க நம்பர் குடு மச்சான் , நான் பேசி கரெக்ட் பண்ணிக்கறேன் என்பான். பாவப்பட்டு ஒரு பெண்ணின் எண்ணை கொடுப்போம். சில நாள் போன பின் திரும்பி வருவான்.. மச்சான் அந்த பொண்ணு பேச மாட்டேங்குது திட்டுதுடா என்பான். இன்னொரு பெண்ணின் செல்போன் எண் தருவோம்.. சில நாட்களுக்கு பின் அதே பதில்தான். தொடர்ச்சியாக நான்கு முறையும் தோல்வி.. ஐந்தாவது முறை கொடுத்த எண் வேலை செய்ய ஆரம்பித்த்து.தினமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பான். எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பான். அவளுடைய அழைப்புக்காக காத்திருப்பான். அவளுடைய போன் பிஸியாக இருந்தால் கடும் கோபமாத்துடன் எங்கள் மீது பாய்வான். பார்க்க பாவமாக இருந்தாலும் கிடைக்காதது கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் திளைப்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கும். அவளை அவன் உயிருக்கு உயிராக காதலிப்பதாக சொன்னான். (அவன் அவளை பார்த்தது கூட இல்லை. பேச்சு மட்டும்தான். அவள் சென்னையை சேர்ந்தவள் என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும். வேறேதும் தெரியாது.


மேன்சன்களில் வசிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. சரியான சாப்பாடு கிடைக்காது. சுத்தமான தண்ணீர்கிடையாது. கொசுக்கடிக்கு நடுவில் தூங்கமுடியாது.. மாதம் முழுவதும் காசிருக்காது. சென்னை மேன்சன்களில் மிக நல்ல வசதியான பல மேன்சன்களும் உண்டு. ஆனால் பெரும்பாலானவை நரகமாகத்தான் இருக்கும். இதையெல்லாம் தாண்டியும் எப்போதாவது குடிப்பதுவும், இரவுக்காட்சி சினிமாவுக்கு போவதும், கும்பலாய் அமர்ந்து கொண்டு விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை மூட்டி தங்களுடைய மூக்கில் குத்திக்கொள்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. என்னுடைய ஹீரோ மார்க்கெட்டிங் வேலை பார்த்தவன். அவனுடைய எல்லா பிரச்சனைகளையும் மறக்க அவளுடைய செல்போன் அழைப்பு அவனுக்கு பேருதவியாய் இருந்தது.
அந்தப்பெண் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் தெரியாது.. அவனுடையே பேச்சு சமயங்களில் சென்டிமென்ட்களை கடந்ததாகவும், ஆபாசங்களாக அறியப்பட்டவையாகவும் இருக்கும். உன்னை கட்டிபிடிச்சிருக்கேன்.. நீ என் கன்னத்தில் முத்தமிடுகிறாய்.. நான் உன் இதழ்களை கடிக்கிறேன் என்று இரவு முழுக்க பேசித் தீர்ப்பான். அவனுடைய காமத்திற்கான அந்த வடிகால் காதல் என்கிற பெயரோடு அவனுடன் வாழ்ந்தது. அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அவள் ஒரு முறை அவனை சந்திக்க விரும்புவதாய் சொல்ல இவனோ பேண்ட் சட்டையெல்லாம் புதிதாய் மாட்டிக்கொண்டு கிளம்பத்தயாரானவன், ஏனோ போகவில்லை. அவளுக்கு தன்னை பிடிக்காமல் போயிருச்சுனா என்றான். ஆனாலும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். பேசிக்கொண்டேயிருந்தவன். திடீரென ஒருநாள் அமைதியானான். அந்தபெண்ணின் எண் உபயோகத்தில் இல்லாமல் போனது. அவளை காணவில்லை. அவள் யாரென்றே தெரியாது. அவளுக்கு என்னாச்சு தெரியாது.. ஆனால் அவளுடைய எண்ணுக்கு அழைத்தால் எப்போதும் ஒரு பெண் இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்று சொல்லி சொல்லி அவனை நோகடித்தாள்.


மேன்சன் நண்பனை அடிக்கடி சந்திப்பதுண்டு. திருமணமாகிவிட்டது. சொந்த கார பெண். எனக்கு பிறகு இரண்டு வருடங்கள் அந்த மேன்சனில் தங்கியிருந்தான். என்ன மச்சான் ஆச்சு அந்த செல்போன் பொண்ணு என்று அண்மையில் விசாரித்தேன். சிரித்தான்.. அடிக்கடி போன் பண்ணி பார்ப்பேன்.. என்னைக்காவது அந்த போன் சுவிட்ச் ஆன் ஆகும்னு நம்பிக்கை போக மாட்டேங்குது... நேத்து கூட போன் பண்ணி பார்த்தேன் மச்சான் சுவிட்ஆஃப்னுதான் வருது என்றான் புன்னகையுடன்.


அவளைப்பற்றி பேசும்போது அவன் கண்ணில்தான் என்ன ஒரு உற்சாகம்..

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

ரசிகன் நான்..

எப்போதும் மழை தான் அழகு...
எனக்கு புடிச்ச மழை ....அதுல காதலி கூட பைக் ல போகணும்னு ரொம்ப ஆசை..
கட்டிக்கிட்டு..போகணும்..




ஐயோ ..ராக்கி ....ரக்க்ஷா பந்தன்...

எனக்கு புடிக்காத பண்டிகை....குஜ்லீஸ் எல்லாம் என்னை அண்ணான்னு சொன்னா..அப்பப்ப நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு!


காதல் வழி சாலையிலே... வேக தடை ஏதுமில்லை..

நானகுடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை.....

எட்டில் அழகு பதினெட்டில் அழகு...
எந்த பெண்ணும் இருபதில் இரட்டை அழகு......

சைட் அடிக்காம போனா இந்த அழகு தேவதைகளை படைத்த ஆண்டவனுக்கு எவளோ கோபம் வரும்.. ஆமா இதுல என்னோட ஆளு யாருன்னு கண்டு புடிங்க பார்க்கலாம்.



மழை சில நேரம் கொஞ்சம் திமிரா தான் நடக்குது..

பரவாயில்ல ....அழகுக்கு எப்போதும் திமிர் கொஞ்சம் அவசியம் தான் ..


எப்போதுமே எனக்கு புடிச்ச Fruite Salad....Colorfull - ஆ இருக்கணும்...



கம்ப்யூட்டர் மழை!


சில்லு சில்லாய் ...என்னை சிதற செய்தாய் !
ஆஹா மழை .... என் கண்ணாடி அறைக்குள்..


எத்தனை நாள் ஆச்சு மழையில நனைஞ்சு...
எத்தனை நாள் ஆச்சு மழையுடன் பேசி..
எத்தனை நாள் ஆச்சு மண்வாசனை மணம் நுகர்ந்து...
எத்தனை நாள் ஆச்சு முதல் துளியின் ஸ்பரிசம் பட்டு..


போகணும் ஊருக்கு போகனும்
மழையில நனைஞ்சு இரண்டு நாளாவது காய்ச்சல்ல படுக்கணும்..
தூக்கம் தொலைத்த இரவுகளில் மழையின் சத்தம்...
மீண்டும் தூக்கம் கொண்டு வரணும்...


அதுவரை ....
கீழே உள்ள இந்த இணைப்பை கிளிக் பண்ணிக்கலாம்..
கண்ணாடி அறைக்குள் மழையை ரசிக்கலாம் !


Note: Please turn on your speakers / headphones

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

காதல் = Ctrl + Alt +Del


இறந்தகாலம் (அன்பு)


ஜீவா....நான் ஓன்று கேட்பேன் தருவாயா?
என்ன வேணும்டி செல்லம்....நீ கேட்டு நான் தரமாட்டேனு சொல்வேனா?
பேச்சு மாறமாட்டியே....
ஹ்ம்ம்..இல்லை என் செல்லம் என்ன வேணும் கேளு
Promise?
ஹ்ம்ம் promise!
இல்ல வேணாம் ....நீ தரமாட்டே..
அடி என் ராசாத்தி...கேளுமா.
சரி..எனக்கு உன்னோட Yahoo login id & Password venum.....தருவியா?


ஜீவா ஒரு கணம் என்ன சொல்றதுன்னு புரியாம மௌனம் ஆனான்....
ஆஹா ...என்ன திடீர்னு இப்படி கேட்கிறாள்....எதுக்காக கேட்கிறாள்..
என்னை spy பண்ண கேட்கிறாளோ?
ச்சே ச்சே...காதலனை யாராச்சும் spy பண்ணுவாங்களா
ஐயோ ....என்ன பண்ண இப்ப..promise வேற பண்ணிட்டோம்...
அதுவும் கேட்கிறது என்னோட உயிரின் உயிரான காதலி...


ஏய்...ஜீவா என்ன பதிலே காணோம்...பாத்தியா...அப்பவே கேட்கமாட்டேன்னு சொன்னேன்..
நீ தான் ராசாத்தி செல்லம் தரேன்னு எல்லாம் சொன்னே..
இப்போ யோசிக்கிறே பாத்தியா..
சேச்சே...அப்படி ஒன்னும் இல்ல..உனக்கு இப்போ என்னோட longin id & password வேணும் அவளோ தானே..
இந்தா இது தான் என்னோட login id & password
Login id : XXXXXXXX
Password : XXXXXXX
wow ...தேங்க்ஸ் டா என் இனிய காதலா....really I Love you da
நாளைக்கு உனக்கு கால் பண்றேன் ..


அடுத்த நாள்..
"நிலவே நீ வர வேண்டும்...
தனியே உன் துணை வேண்டும்.."
என் செல்போன் ரிங்க்டோன் சிணுங்கியது.
அவளே தான்....என் கனவுகளின் காதல் தேவதை...அவளே தான்.
ஹலோ செல்லம்....சொல்லுடி..சௌக்கியமா?
ஹ்ம்ம்..நல்லாருக்கேன் டா..
என்னடி என்னோட login id & password use பண்ணியா?
அட கருமம்...என்னடா அது...உன்னோட மெயில் inbox - ல இவ்வளவு sexy போட்டோ வச்சிருக்கே...
இதை தான் நாள் full - ஆ பார்த்துகிட்டு இருப்பியா?
ஐயோ...அது என்னோட friends எல்லாம் அனுப்புனது டி....delete பண்ண மறந்துட்டேன்..
கொடுமை டா சாமி...இதை பார்க்க தான் என்னோட login id & password கேட்டியா?
இல்லை டா கண்ணா...என்னோட friend ஒருத்தி சொன்னா..
எவளோதான் லவ் பண்ணாலும்....யாரும் இதுமாதிரி secret எல்லாம் தர மாட்டாங்கனு...
நான் அவள் கிட்ட challenge பண்ணேன்... என்னோட ஆள் அப்படி ஒன்னும் இல்லை..கண்டிப்பா எல்லாமே என்கிட்டே share பண்ணுவாருன்னு சொன்னேன்..
என்னோட நம்பிக்கை வீண் போகலை டா...
அடி பாவி...காதல் என்பதே ஒரு நம்பிக்கைதான் டி..


நம்பி தான் காதலிச்சோம்.....ஒரு இனிய பொழுது.....என் காதல் Ctrl +Alt + Deleted


நிகழ்காலம் (அடாவடி)


இப்போதும் ஒரு மரம்கொத்தி பறவை....
என்னுடைய Login id & Password கேட்டது..
அதை குடுத்த முஹூர்த்தம்......அவள் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போயிட்டா..
மொத்தத்தில்....இதுவும் காதல் இல்லையாம்...
அட...என்னோட வாழ்க்கையில இன்னொரு Ctrl + Alt + Deleted

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

ரோசி என்கிற அழகு ரோஜா!


ஜீவா I hate you da..
நீ ஒரு நம்பிக்கை துரோகி..
என் மூஞ்சில இனிமேல் முழிக்காதே


என் கூட friendship வச்சுக்கவும் உனக்கு இனி உரிமை இல்லை..
என்னை பத்தி பேசவும் உனக்கு எந்த அருகதையும் இல்லை..
I hate you...I hate u...


வார்த்தைகள் படபட என அவளிடம் இருந்தது வந்ததை பார்த்து ஜீவா ஒரு கணம் ஆடி தான் போயிட்டான். கண்களில் லேசாக கண்ணீர் எட்டி பார்க்க ஆரம்பித்தது. அவளுடைய கோபத்தை முதன்முதலா பார்கிறான், ஆனாலும் உருகி உருகி இவ்ளோ நாளும் பழகிட்டு திடீர்னு இந்த வார்த்தைகள் அவ சொன்னதும் என்ன செய்யுறதுன்னு ஒரு கணம் புரியாமல் உறைந்து தான் போனான் ஜீவா. நிலவு ஏன் எப்படி சுடுகிறது? அவள் ரொம்பவும் பிடிவாதக்காரி, கொஞ்சம் திமிரும் கூட அவளுக்கு. ஒருவேளை அவளோட திமிரும் பிடிவாதமும் தான் நான் அவளை விரும்ப காரணமா இருந்ததோ?


"இதயம் என்ற தோட்டத்திலே பாசம் என்னும் பூக்கள் வளர்த்து...
பூஜை செய்யும் வேளையிலே..... பறிகொடுதேனோ?"

ஹ்ம்ம் ...15 நாள் ஓடியே போச்சு.......எவ்வளவோ offline messages எல்லாம் குடுத்து பார்த்தாச்சு...ஹ்ம்ம் அவதான் பிடிவாதகாரியாச்சே...ஒரு பதிலும் காணோம். அவ இனி வரமாட்டா...ஐயோ...எனக்கு என்னாச்சு...மனசு ஏன் பிடிவாதமா அவளையே நினைக்குது...!

எங்கேயோ ஒரு "Buzz" sound..
டேய் எப்படிடா இருக்கிறே?
ஹய்யோ...உன்ன பார்த்து எத்தன நாள் ஆச்சுடா..

கண்ணு முழிச்சு பார்கிறேன் ....ஆஹா ....ரோசி....
Yahoo messenger - ல Message வந்திருக்கு ரோசிகிட்ட இருந்து..

அப்போ இவளோ நேரமும் ரோசி என்னை விட்டு போன மாதிரி எல்லாம் .....கனவா?....
மெல்ல மெல்ல மேகம் விலகி..நிலவு முகம் காட்ட தொடங்கியது...கூடவே ரோசி என்கிற ரோஜா பூவின் வாசமும்..!!!

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

மனதை மயக்கிய பாடல் (Adults Only)

சில பாடல் கேட்டால் மனதை மயக்கும் ... சில பாடல் மனசுக்குள் புகுந்து மூளை நரம்பு எல்லாம் தூண்டி விட்டு மெஸ்மரிசம் பண்ணும்...

அப்படி ஒரு பாடல்...

http://www.youtube.com/watch?v=bLlY0UF9VDU&feature=avmsc2

ஞாயிறு, ஆகஸ்ட் 01, 2010

மழை முத்தம் ...



ஏய். ...ஜீவா...!!
(ரகசியமாய் குரல் கேட்க திரும்பி பார்தேன். யுவாஞ்சலி நின்றுகொண்டிருந்தாள்.)

என்னடி யுவா? ...கிளாஸ் முடிஞ்சாச்சு...வீட்டுக்கு போலாமா?

இருடா ....கொஞ்சம் வெயிட் பண்ணு...போலாம்...

ஐயோ யுவா...மழை வரும் போல
இருக்குடி ....இப்பவே லேசா மழை தூறிக்கிட்டு இருக்கு, உன்னை வீட்டில விட்டுட்டு நான் போகணும் டி வீட்டுக்கு..



(கிளாஸ் ல எல்லோரும் போயிட்டாங்க....ஒரே நிசப்தமா இருக்கு)



டேய் ...நீங்க இன்னும் கிளம்பலியா....வாட போலாம்.
(இது சிவா ...என்னை தேடி பார்த்துட்டு...மறுபடியும் கிளாஸ் ரூம் வந்திருக்கான்)

மச்சி ப்ளீஸ் டா...நீ கிளம்பு யுவா எதோ என் கூட பேசணுமாம்....நான் கொஞ்சம் கழிச்சு வரேன் டா.

ம் ம் ..நடக்கட்டும் நடக்கட்டும்....(கன்னடித்துகொண்டே போயிட்டான்)

ஹ்ம்ம் ..நீ சொல்லு யுவா...என்ன மேட்டர்?

ஆமா என்னடா அந்த லவ் லெட்டர் ல ...எழுதியிருந்தே?
என்ன எழுதியிருந்தேன்? (புரிந்தும் புரியாத மாதிரி நடித்தேன்)

"முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்று கேட்பதெப்போ"
"முத்த தமிழ் வித்தகியே இரண்டில் ஒன்று என்னை பார்ப்பதெப்போ"

(சிரித்தேன்) ஹ்ம்ம் ...படிச்சியா? புரிஞ்சுதா?
ஜீவா...எவளோ நாளாடா நாம லவ் பண்றோம்? என்னை நீ புரிஞ்சுகிட்டியோ இல்லையோ ...உன் ஒவ்வொரு அசைவுக்கும் என்ன அர்த்தம்னு எனக்கு நல்லாவே தெரியும் டா.
ஏஏய்...என்ன சொல்றே...தெளிவா சொல் டி (மறுபடியும் நடித்தேன்)
உனக்கு என்னை கிஸ் பண்ணனுமா?
(மனசு படபடனு அடிக்க ஆரம்பிக்குது.....காட்டிக்காம சமாளித்தேன்)
ஜீவா ......(யுவா-வின் சத்தம்...கொஞ்சம் ரகசியமாய் ஒலிக்க ஆரம்பித்தது).
என்னடி யுவா குட்டி...(எனக்கே தெரியாமல் என் சத்தமும் ரகசியம் பேச ஆரம்பித்து)
இங்க யாருமே இல்ல....
அதனால.
அதனால.....என்னை நீ கிஸ் பண்றே

(வெளியே மழை ..கொஞ்சம் வலுத்திருந்தது)

நிஜமா கிஸ் பண்ணிடுவேண்டி ....
ஹ்ம்ம் நானும் நிஜமா தான் சொல்றேன் ஜீவா
ஏய் ..கொஞ்சம் தள்ளி வாடி..மழை சாரல் அடிக்குது இல்ல..
பரவாயில்ல ஜீவா....நீ என்னை என் உடம்பு பூரா தொடுற மாதிரி ...இந்த மழை சாரல் ஒரு சிலிர்ப்பு தருது.....புடிச்சிருக்கு ஜீவா..

(மழை சத்தம்....எங்களின் ரகசிய சிணுங்கலில் கொஞ்சம் வெட்கித்தான் போனது. யுவா-வின் உடம்பு சிலிர்ப்பதை பார்த்துக்கொண்டே...அவளை நெருங்கினேன்..)

ஜீவா (என்று சிணுங்கலாய் சொன்னாள்).....ஒரு விரலால் என் பக்கம் வராதே என்று செல்ல கோபம் காட்டினாள்..
இனி பின்னால் போவதற்கு இடம் இல்லை....சுவரோடு ஒட்டிக்கொண்டு என்னை பார்த்து புன்னகை பூத்தாள்..

(வெளியே அட மழை ...எங்களுக்குள்ளும் அதே மழை ...கொஞ்சம் சூடான மழை)

அவளை நெருங்கி என் கைகளுக்குள் அவளை கொண்டு வந்தேன்...
மூச்சு காற்றும்....என் மேல் சுகமாய் ரீங்காரம் பாட...
கண்களை மூடி தேவதையாய் நின்றாள் என் யுவா..

கிசுகிசுப்பாய் அவளிடம் கேட்டேன்...
ஏய்...உன் பெயர் என்னடி?
தெரியாது
நீ எந்த ஊர் டி?
தெரியாது
என்னை தெரியுமா?
தெரியும்
இடுப்புல கை வைக்காதே ஜீவா....கூச்சமா இருக்கு டா
உன்னோட லோ ஹிப் டிரெஸ்ஸிங் ...எனக்கு ரொம்ப புடிக்கும் டி..
அப்படியா?
ஆனா அதுல ஒரு சிக்கல் ....அது என்னான்னு இப்போ கேட்க கூடாது.
இப்போ எனக்கு மழை....நீ....உன் ஸ்பரிசம் மட்டும் தான் ...வேற எதுவும் என் மனசுக்குள்ளே இல்லை ஜீவா..
ஜீவா உன்னை கட்டி புடிக்கணும் போல இருக்கு....ஆனா பண்ண மாட்டேன்..
யுவா-வின் இடுப்பை கட்டிக்கிட்டு....
அவள் உதடுடன்...என் உதடு மெதுவாக சேர்த்து..

மழை இன்னும் பெய்கிறது...
மழை துளிகள் சங்கீதமாய்...
எங்கோ தூரத்தில்..பெயர் தெரியாத ஒரு பறவையின்....மழை பாடல்..
வாழ்க்கை எப்போதுமே அழகு தாண்டி ...யுவா !