சில வாரங்களுக்கு முன்னால்...
ஏய் ...என்னடி உன் மச்சான் ரொம்ப நாள் கழிச்சு ஊர்ல இருந்து வந்திருக்கேன். ஒன்னும் கண்டுக்க மாட்டேன்கிறியே. ஊர்ல உள்ள பொண்டாடிங்க எல்லாம் புருஷன் வீட்டுக்கு வந்த வகை வகையா வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு அசத்துவாங்க. நீ என்னடான்னா எப்போ பார்த்தாலும் இட்லி, தோசை, ரசம், சாதம், பொடலங்காய்-னு போட்டு கொல்றியே டி. என் மேல உனக்கு இம்புட்டு தான் அன்பா?
ஏனுங்க மச்சான் இப்படி சொல்றீங்க. போங்க உங்க கூட நான் இனிமேல் பேசல. இப்படி சொல்லிடீங்க இல்ல.. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க இன்னைக்கே சமைச்சு தாரேன்.
என் பொண்டாட்டி கண்ணா கசக்குனதும் எனக்கு மனசு தாங்கல...
அட சீ அசடு...நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி. நீ எனக்கு கத்திரிக்கா கொழம்பு வச்சு குடுப்பியாம். நான் அதை ஆசை ஆசையா சாப்புடுவேனாம்.

ஐயோ மச்சான் எனக்கு கத்திரிக்கா கொழம்பு வைக்க தெரியும்...ஆனா உங்க அம்மா வைக்கிறமாதிரி எனக்கு பண்ண தெரியாது. ஹ்ம்ம் எப்படியாச்சும் உங்களுக்கு வச்சு குடுக்கிறேன்.
அடி போடி....ஆக மொத்ததுல ஒன்னே ஒன்னு கேட்டேன் அதுக்கும் இந்த இழுவையா...விளங்கிடும் போ..
போன வாரம்...காலையில

வீட்டில சும்மா....பெட்-ல படுத்து கிடந்தேன். லீவ் வேற. ஒரே சோம்பல்! எங்கயும் போகணும்-னு தோனல. அப்போ என் பொண்டாட்டி குளிச்சிட்டு வந்தா. நீல கலர்-ல சாரி கட்டிக்கிட்டு சும்மா தேவதை மாதிரி கொஞ்சம் காய்ந்தும் காயாத ஈர தலையுடன். வந்தவ நேரா பெட்ரூம் ல வந்து அங்க இருந்த பெரிய கண்ணாடி முன்னால நின்னுகிட்டு தலைய துவட்ட ஆரம்பிச்சா. என்னோட ஆறாவது அறிவு விழித்துகொண்டது. வள்ளுவனின் காமத்துபாலில் கரைய ஆரம்பித்தேன்.
ஏய் ...சும்மா சூப்பரா இருக்கே டி.
என்னங்க மச்சான். இன்னைக்கு தான் புதுசா பாக்குற மாதிரி. (செல்லமாய் கோபித்துகொண்டாள்).
ஏய் ...சும்மா சூப்பரா இருக்கே டி.
என்னங்க மச்சான். இன்னைக்கு தான் புதுசா பாக்குற மாதிரி. (செல்லமாய் கோபித்துகொண்டாள்).
ஒன்னுமில்லடி இந்த சாரி உனக்கு சூப்பரா இருக்கு. அப்படியே உன்னை கட்டிக்கலாம் போல இருக்கு. இப்படி பெட்ல வந்தது கொஞ்சம் உட்காரேன்..
ஒருமாதிரி மோகமாய் கைய புடிச்சு இழுத்தேன்..
ஐயோ போங்க மச்சான்...சீ ...என்ன இது பட்டப்பகலிலே....
இதுக்கெல்லாம் என்னடி நேரம் காலம்....
ஹ்ம்ம்....என்று செல்லமாய் முனகிக்கொண்டே பக்கத்தில் வந்தாள்.
அஹா ஷாம்பூ சோப்பு வாசனை அப்படியே சும்மா தூக்குது ...ஹ்ம்ம்....இன்னைக்கு மார்னிங் ஷோ பாத்துர வேண்டியது தான்....
இப்படியே சிணுங்கலும் கொஞ்சலுமாக கொஞ்சம் கொஞ்சம் என்னை இழந்து ...அவளை கட்டி அணைக்க போகும் நேரத்தில்....
டொக்...டொக்....டொக்...
என்னங்க யாரு கதவை தட்டுறாங்க....போய் பார்த்துட்டு வாறேன்...
அட சும்மா இருடி..கொஞ்சம் நேரம் தட்டிகிட்டு அவங்களே யாரும் இல்லைன்னு போயிடுவாங்க..
போங்க மச்சான், நான் போய் பார்த்துட்டு வாறேன்...
கலைந்திருந்த சாரியை சரி பண்ணிக்கிட்டே போய் என் பொண்டாட்டி கதவை திறக்க....அங்க என்னோட மாமியாரு ஒரு கூடை நிறைய கத்திரிக்காயுடன்.
ஐயோ அம்மா....வாங்கம்மா உள்ள....என்ன காலையிலே....
ஒன்னுமில்லடி...அன்னைக்கு நீ உன் புருசனுக்கு கத்திரிக்காய் கொழம்பு புடிக்கும்னு போன்ல சொன்னியே...அதான் மார்க்கெட் போயிருந்தப்ப நல்ல நாட்டு கத்திரிக்கா பார்தேன் அப்படியே வாங்கி குடுத்துட்டு உன்னையும் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
என் பொண்டாட்டி அவ அம்மாவை ஹால்ல உட்கார வச்சுட்டு என்கிட்டே வந்து...
என்னங்க என்னோட அம்மா வந்திருக்காங்க...
ஹ்ம்ம் கேட்டேன்....உங்கம்மா சொன்னது எல்லாம் கேட்டேன் டி....ஆனா ஒன்னு மட்டும் நல்ல புரியுதுடி..இன்னைக்கு எனக்கு வில்லன் "கத்திரிக்கா" அப்படின்னு தலைய கைய வச்சுக்கிட்டு சோகமா....ஏக்கமா என் பொண்டாட்டிய பார்க்க...
அவ....அட சீ....குறும்புக்கார மச்சான்னு என் கன்னத்துல ஒரு கிள்ளு கிள்ளிகிட்டு அவங்க அம்மாவை கவனிக்க போயிட்டா..
பேசாம ரூம் போட்டு அழலாமா-னு யோசனை பண்ணேன்....ஹ்ம்ம் வேண்டாம்....!!!
ரொம்ப நாளா...."காதலாவது கத்திரிக்காயாவது" அப்படின்னா என்னனு விளக்கம் தேடிகிட்டு இருந்தேன்....இன்னைக்கு விளக்கமா விளக்கிட்டாங்க!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக