ஒரு படைப்பாளி எதை சொல்ல வேண்டும் என்பதை இந்த சமூகம் தான் தீர்மானிக்கிறது. சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டினால் அதை இந்த சமூகம் எப்போதும் மறுத்து தான் வந்திருக்கிறது. அதற்காக போராட்டம் ஒரு பக்கம், கொடும்பாவி எரிப்பு ஒரு பக்கம், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எதிர் விமர்சங்கள் ஒரு பக்கம், போதாதற்கு இப்போது ப்ளாக்! எதையாவது எழுதி ஓட்டு வாங்கி விட வேண்டும், அதற்கு பின்னூட்டமாக நாலு பேர் போடக்கூடிய அச்சு பிச்சு கமெண்ட்ஸ் இதை பார்த்து பூரித்து போகும் கூட்டம் இருக்கும் வரை ஒரு நேர்மையான விமர்சனம் எதிர்பார்க்க முடியாது.
ஒரு ஆயிரம் பேர் வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் ஒருவன் மட்டும் வேண்டும் என்று குரல் கொடுத்தால் அவன் பைத்தியக்காரன். நான் அப்படியே இருந்துவிட்டு போகிறேன். அதற்காக சொல்ல வந்ததை சொல்லாமல் போகும் கோழை அல்ல நான். சமூகம் சொல்கிறது என்பதற்காக வால்ஆட்டிக்கொண்டு பின்னே செல்லாமல் மனசாட்சி படி உள்ளதை ஒத்துகொள்ளும் பாங்கு வேண்டும்.
நடுநிசி நாய்கள்....இது தான் இன்றைய ப்ளாக் உலகின் தாரக மந்திரம். ரேட்டிங் ஏறணுமா உடனே நடுநிசி நாய்கள் படத்தை பற்றி கேவலமா எழுது. கண்டிப்பா முதல் பத்து ரேட்டிங்-க்குள் உன் பிளாக் வந்துவிடும். படத்தோட டைரக்டர் எதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திவிட்டாரம். ஊருல உலகத்துல நடக்காததை சொல்லிட்டாராம். இந்திய கலாசாரத்தையே குறை சொல்லிவிடாரம். எது எதுக்கோ மல்லுகட்டும் பல சங்கங்கள் மௌனம் காக்கும் வேளையிலும் இந்த பிளாக் பிக்காளி பசங்களின் தொல்லை தாங்க முடியலப்பா. இந்தியன் சினிமா உலகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல இவங்க கிட்ட தான் எதோ ஐடியா கேட்கணும் போல வரவன் போறவன் எல்லாம் ப்ளாக்-ல எழுதி கிழிக்கிறான் இந்த படத்தை பத்தி. ஒரு காலத்துல கமல்ஹாசனின் 2 - ம் தர படத்துக்கும் ரஜினியின் கற்பனையிலும் நடக்காத ஸ்டைல்-க்கும் முன் வரிசையில் உட்காந்து விசில் அடிச்சு படம் பார்த்தவனுக எல்லாரும் இன்னைக்கு எதோ இன்டர்நெட்-ல் நாலு படத்தை பார்த்துவிட்டு உலக சினிமா பத்தி சிலாகிக்கிறார்கள். இவர்களின் மேதாவித்தனத்தை காமிக்க ஒரு படம் கிடைத்தால் போதும் பக்கம் பக்கமா எழுதி கிழிக்கிறாங்க.
ஓ...கண்னியவான்களே கடந்த 5 மாதம் தினமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்திகளை எடுத்து குத்த வச்சு படித்து பாருங்கள். அப்போது புரியும். கெளதம் மேனன் இந்த படம் எடுக்கிறதுக்கு முன்னாலே எவளோ கலாசார சீரழிவு இந்த தமிழ் நாட்டில் நடந்து கொண்டு இருந்தது என்று. எத்தனை கள்ள காதல், அப்பா மகளை கர்ப்பிணி ஆக்கிய கதைகள், மகன் அம்மா உறவுகள், பொருந்தாத காதல் களியாட்டங்கள் என்று எத்தனையோ செய்திகள். இதை எல்லாம் செய்தவர்கள் கெளதம் வாசுதேவ் மேனனிடம் ஐடியா கேட்டா செய்தார்கள்? தமிழ் நாட்டில் பெரும்பாலும் வருகின்ற முன்னணி நடிகர்களின் மசாலா படங்களில் நடிகைகளின் தொப்புளையும், அவர்களின் மார்பையும், பின் பக்கத்தையும், ஹீரோ கை வைக்கும் மற்றும் பல இடங்களையும் close-up ல் காமித்தால் அது கலாசார சீரழிவு இல்லையா? அதை பார்த்து எல்லாரும் முக்தி நிலை அடைவார்களா? அதை பார்க்கும் ஒருத்தனுக்கு அது போல செய்யணும் என்று எண்ணம் வராதா? நடுநிசி நாய்கள் படத்தில் இந்த கலாசார சீரழிவு எதுவுமே இல்லையே. தந்தை - மகன் பாலியல் உறவாகட்டும், மகன் - வளர்ப்பு தாய் உறவாகட்டும் எதுவுமே அப்பட்டமாக காமிக்க படவில்லை. சில சினிமா நுணுக்கங்கள் அறிந்தவர்களால் மட்டுமே அனுமானிக்க கூடியவகையில் தான் காட்சி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் அதை ஊருக்கு ஊரு மேடை போட்டு ஐயோ அம்மா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு பரப்பி வருகிறீர்கள்.
இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழும் உங்களை போன்ற ப்ளாக் மேதாவிகள் தான் மிஸ்கின்-ன் யுத்தம் செய் படத்தை அஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதினீர்கள். அந்த படத்தின் ஒருவரி கதையை சின்ன புள்ளைங்க கூட புரிஞ்சுகிட்டு சொல்லுமே. வயதான கிழடுகள் பெண்களை மற்றவர்கள் வன்கலவி செய்வதை பார்த்து இன்பம் அடைபவர்கள் என்று. இந்த கதையை படமா எடுத்ததற்கு ஏன் யாருமே வாய்கிழிய கத்தவில்லை? இந்த படத்தை பார்த்து கிழவர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையா?
இதை நான் எழுதுவதற்காக நான் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு பல்லாக்கு தூக்குவதாகவோ, மேலே சொன்ன உறவுகளுக்கு நான் சம்மதம் சொல்வதாகவோ அர்த்தம் கொள்ளுபவர்கள் அப்படியே நினைத்து கொள்ளுங்கள். எனக்கு கவலை இல்லை. நடப்பதை நடக்கிறது என்று உண்மை பேசி நாலு பேரிடம் கேட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லை எதுவுமே நடக்காதது போல முகமூடி போட்டு சாக்கடை பன்றிகளாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.
இப்படிக்கு
ரசிகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக