ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

வெண்ணிலா பக்கங்கள்..


"பாளையம்கோட்டை பஸ் ஸ்டாண்ட் எல்லாம் எறங்கு..."

கண்டக்டர் - ன் குரல் கேட்டு ஜீவாவிற்கு தூக்கம் கலைந்தது. மடியில் அவனோட பொண்ணு யுவாஞ்சலி நிம்மதியாக தூங்கிகொண்டு இருந்தாள். அவளை தூக்கி தோளில் போட்டுகொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினான். மதியம் வெயில் முகத்தில் சுளீர் என்று அடித்தது.

எங்க போறது யாரை பார்க்க போறது ஒண்ணுமே புரியவில்லை அவனுக்கு. ஒரு கணம் யாருமே இல்லாத உலகத்தில் அவனும் யுவாஞ்சலியும் நிற்பது போல தோன்றியது அவனுக்கு. கொஞ்சம் யோசித்தவனாக வீரகேரளம்புதூர் ல இருக்கிற அவனோட சித்தி வீட்டுக்கு போலாம்னு முடிவு பண்ணி பக்கதில் இருக்கும் டைம் கீப்பெரிடம் போனான்.

சார்...வீரகேரளம்புதூர் போகிற பஸ் எப்போ இருக்கு?
காலையில ஒரு பஸ் போயிடிச்சே தம்பி. அடுத்த பஸ் 3 மணிக்கு தான்.

ஜீவா டைம் பார்த்தான். மணி 1:24 .. இன்னும் டைம் இருக்கு என்று யோசித்தவனாக அங்கிருந்த பெஞ்ச்-ல் உட்கார்ந்தான். பசிக்குது ஆனா சாப்பிடனும்னு தோனல. மண்டியில யுவாஞ்சலியை படுக்க வைத்தான். பூ போல அவள் படுத்திருக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்தான். ஹ்ம்ம் எனக்கு புள்ளையா பொறந்து இந்த அழகு குட்டி இப்படி கஷ்டப்படனுமா? கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது.

"தம்பி...ஏன்டா இந்த பச்சை புள்ளையா தூக்கிட்டு போறே? எங்க கிட்ட விட்டா நாங்க பார்த்துக்க மாட்டோமா?"
அப்படி இல்லம்மா, உங்களுக்கெல்லாம் இப்ப என் புள்ளைனா உசுரு..அது எனக்கு நல்லாவே புரியுது..
"அப்புறம் ஏன்டா இப்படி பண்றே..."
எனக்கு இவளை விட்டா வேற யாருமில்லைமா....நான் உசுரோட இருக்கனும்மா....அதுக்கு என் புள்ளை என் கூட இருக்கனும்மா ..
"நீ உன் புள்ளை கூட இருக்கலாம்...அதுக்கு தான் சொல்றேன் பேசாம எங்க கூட நீயும் புள்ளையும் இருக்க கூடாதா?"
ஐயோ அம்மா புரியாம பேசாதே..கால போக்கில எல்லாம் என் மனச விட்டு போனாலும்...என்னதான் நான் பழசை எல்லாம் மறந்தாலும்..உங்களை எல்லாம் பார்க்கிறப்ப திடீர்னு எனக்கு நீங்க பண்ணதெல்லாம் நினைவுக்கு வருது. நான் உங்க பக்கத்திலே இருந்தா உங்களை எல்லாம் வெறுத்துடுவேனோ-னு பயமா இருக்கும்மா. உங்களை எல்லாம் விட்டு நான் தூரமா இருந்தாலும் எபோதும் உங்களை எல்லாம் அன்போட நினைச்சுகிட்டே தான் இருப்பேன்மா..
"சரி அப்படி எங்கதான் போறே? ....சொல்லிட்டாவது போ ஜீவா.."
எல்லா விடுகதைக்கும் விடை தெரிஞ்சா வாழ்க்கையில சுவாரஸ்யம் போயிடும்..

எதோ ஒரு பஸ்-ன் ஹாரன் சத்தம் கேட்டு நிகழ்காலத்துக்கு வந்தான் ஜீவா. மடியில் யுவா தூக்கம் கலைத்திருந்தாள்.

என்ன செல்லோ ...நல்ல தூங்குநீன்களா செல்லோ..
என்னை பார்த்து சிரித்தாள்..
கடைவாயில கொஞ்சம் எச்சில் ஒழுகியிருந்ததை துடைத்து விட்டேன்..
பால் குடிகிறீங்களா செல்ல குட்டி...
பேக்கில் இருந்த பால் புட்டியை எடுத்து....குடுத்தேன்.. அவசர அவசரமாக அதை வாயில் வைத்துகொண்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் என் மடியில் சாய்ந்தாள்..
மடியில் படுத்துக்கொண்டு கைய தூக்கி அப்படி எப்படி என்ன என்னமோ காமித்தாள்...என் முகத்தில் அவள் பிஞ்சு கைகளால் விளையாடினாள்...
எப்போதுமே என் யுவா-வின் வாசம் எனக்கு புடிக்கும்..
பேபி பவுடர் & மில்க் கலந்த ஒரு வாசம்...அவள் கன்னத்துடன் கன்னம் வைத்து விளையடுரப்போ வர வாசம்..... எனக்கு புடிச்ச பூ வாசம் அது..
யுவாஞ்சலி கூட விளையாடிகிட்டே நேரத்தை கடத்தினேன்..

சரியாய் 3 : 15 ஆகுரப்போ வீரகேரளம்புதூர் போகிற பஸ் வந்தது. பஸ்-ல் ஏறவும் இறங்கவும் அவளவா கூட்டம் இல்லை. ஜீவா வசதியாக ஒரு ஜன்னல் ஓரத்து சீட் பார்த்து உட்காந்தான்.

வீரகேரளம்புதூர்......
ஹ்ம்ம்...கேட்கிறதுக்கு கேரளா ஊரு மாதிரி தெரியும்...ஆனால் ....பக்கா தமிழ்நாடு..
என்னுடைய சித்தி அங்க ஒரு அரண்மனை வீட்டில வேலைக்காரியா வேலை பார்கிறாங்க....ஒரு காலத்துல அரண்மனை தான் அது....எப்போதும் கூட்டமா நிறைய பேரு வருவாங்க போவாங்க....பெரிய வீடு....எப்பவும் விருந்துகாரங்க..ஜெ ஜேன்னு இருக்கும் எப்போதும். பிறகு காலபோக்கில் அவங்க மகன், மகள் பேரன், பேத்திகள் எல்லாரும் அங்க இங்கனு போய் செட்டில் ஆனதால அதுக்கு அப்புறம் அவ்வளவா அங்க கூட்டம் இருக்கிறதில்லை. எதையோ இழந்தது போல சில நினைவுகளுடன் அந்த அரண்மனை வீடு இப்பவும் இருக்கு. மூணு வருஷதுக்கு முன்னால போனப்ப பார்த்தது. அந்த குடும்பதுல மூத்த மகன் அவங்க பேமிலி கூட அங்க தங்கி இருந்தான். பழைய டாம்பீகம் ஒன்னும் இல்லை. இருந்தாலும் என்னோட சித்தி அங்க ஒரு வேலைக்காரி. நான் அடிக்கடி வீட்டில சண்டை போடுகிரப்ப அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாம வந்து ஒளிஞ்சுகிற இடம் இந்த சித்தி வீடு. சித்தியோட புருஷன் அவங்களை விட்டு வேற எவளையோ இழுத்துகிட்டு ஓடிட்டாரு. சித்திக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரி எல்லை. எதோ மூளையில கோளாறாம். அதனால அவளுக்கு அடிக்கடி வலிப்பு மாதிரி வரும் போகும். சித்திக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. அதனால குடும்ப காரங்க கூட எல்லாம் சண்டை. அவங்களும் அவளவா யாரும் சித்தி வீட்டுப்பக்கம் வருவது கிடையாது. எதாவது விஷேசத்துக்கு சித்திய கூப்பிடுவாங்க அவங்களும் கடமைக்கு வந்து போவாங்க...அவளோதான்.

ஆனால் எனக்கும் சித்திக்கும் கொஞ்சம் ஒத்துபோகும். அதுக்கும் காரணம் இருக்கு. நான் வீட்டில சண்டை போட்டு சித்தி வீட்டுக்கு வந்து எங்க குடும்பதுல நடக்குற எல்லாத்தையும் சித்திகிட்ட ஒன்னு விடாம சொல்லுவேன். அவங்க இந்த நியூஸ் எல்லாம், எப்பவாது யாருகூடையாவது சண்டை போடுறப்ப, உன்னை பத்தி தெரியாதா அப்படி இப்படி-னு நான் சொன்ன தகவல் வச்சு அடிச்சி விடுவாங்க. இவங்க கூட சண்டை போடுறவங்க அப்படியே அதிர்ச்சியில நிப்பாங்க. இவளுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்-னு. இப்படி நான் கோள் சொல்றதால சித்திக்கு என்னை கொஞ்சம் புடிக்கும். அது மட்டுமில்லை...வீட்டில சண்டை போட்டு இங்க வந்து நிக்கிறப்ப, நான் கண்ணன்-னு ஒரு பிரண்டு கூட வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்க போவேன். அதுல எதாவது காசு கிடைக்கும். அதுல கொஞ்சம் என்னோட சித்திக்கு குடுப்பேன். அவங்களுக்கு என்னை புடிக்க இதும் கூட ஒரு காரணம்.

கண்ணன் எப்படியோ எனக்கு பழக்கம் ஆனான். பெயிண்ட் அடிக்கிறது எப்படி-னு எனக்கு கத்து குடுத்த குரு. வீரகேரளம்புதூர்-ல அவளவா பெரிய வீடு எல்லாம் இல்லை. அவ்வளவா ஜன நெருக்கடியும் கிடையாது. வரக்கூடிய பஸ் கூட எப்பவாச்சும் வரும் போகும். மத்தபடி அது ஒரு பட்டிக்காடு. அங்க கண்ணன் தான் பெரிய பெயிண்டர். எல்லாமே வெள்ளை சுண்ணாம்பு அடிக்கிற வீடுதான். எதோ ஒன்று இரண்டு வீட்டில கொஞ்சம் கலர் அடிச்சிருப்பாங்க. அதனால தான் கண்ணன் அங்க பெரிய பெயிண்டர். நான் சித்தி வீட்டுக்கு போனா எப்படியாவது அவன்கூட பேசி கூடவே பெயிண்ட் அடிக்க போயிடுவேன். பெயிண்டிங் மட்டுமில்ல எனக்கு தண்ணி அடிக்க, பீடி புடிக்க எல்லாம் கத்து குடுத்த குரு அவன். சில நேரம் பகலில் வேலை செய்வான். சில நேரம் இரவு தான் வேலை செய்வான். எப்படி ஆனாலும் அவனுக்கு பீடி வேணும். இரவு என்றால் கண்டிப்பா குவாட்டர் அடிக்காமல் வேலை செய்ய மாட்டான். அவன் கூட போய் போய் நான் பீடி குடிக்க தண்ணி அடிக்க பழகினேன். சில நேரம் சித்தியே சொல்வாங்க...ஏன்டா உன்னை எல்லாம் பார்த்த படிச்ச பையன்-னு யாராச்சும் சொல்வாங்களா. நீயும் உன் லுங்கி கட்டும், பனியனும் போதாததுக்கு வாயில பீடி வேற. என்னைக்காவது உன் அப்பா அம்மாக்கு தெரிஞ்சு என் பையன நீ தான் கெடுத்துட்டே-னு எங்கிட்ட கேட்டா நான் சும்மா விட மாட்டேன்.

வெண்ணிலா பக்கங்கள் தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக