
அன்புள்ள ரோசிக்கு,
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதை விட, நீ எப்படி இருப்பாய் என்று தான் மனசு கேட்கிறது. என்னவோ இன்னைக்கு மனதில் உள்ளதை கொட்டிவிடதால் கொஞ்சம் சந்தோசமாகவும் இருக்கிறது.
தென்றலாய் என் வாழ்வில் வந்து புயலாய் நீ வீசிக்கொண்டிருக்கும் அதிசயம் என்னவென்று எனக்கு இன்னும் புரியவில்லை. என்னை பற்றி உனக்கு ஏற்கனவே தெரியும் என்று நீ பொய் சொன்னபோதும் கூட என்னால் உன்னை வெறுக்க முடியவில்லை. பதிலாக நான் என்னை பற்றி உன்னிடம் மனம் திறக்க வைத்துவிட்டாய். என் வாழ்வில் புதிய அத்தியாயம் எழுத வந்தவளா நீ? உன்னில் இருக்கும் புதிர்கள் எல்லாம் எனக்கு விளங்காமல் இருந்தாலும் மனம் ஏனோ உன்னையே நினைத்து தடுமாறுகிறது. சில நேரம் நீ சொல்வது மறுக்கனும் போலதான் இருக்கிறது ஆனாலும் உன் வார்த்தை ஜாலங்களில் என் வார்த்தை தந்தி அடிக்கிறது.
இதெல்லாம் காதல் இல்லை வெறும் இன்ஃபாக்ச்சுவேஷன் தான் என்று என் மனது சொல்கிறது. அது உண்மை என்றால் காதலை விட இன்ஃபாக்ச்சுவேஷன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இது எல்லாம் ஒரு கனவு போலதான் இருக்கிறது எனக்கு. என்றைக்காவது என்னை விட்டு நீ விலகி சென்றால் நீ கனவிலிருந்து நிஜத்திற்கு போய்விட்டாய் என்று தான் நான் நினைப்பேன். இந்த கனவுக்குள்ளிருந்து நான் வெளியே வருவேனா என்று எனக்கு தெரியாது.
இதோ தொட்டு விடும் தூரத்தில் நீ இருந்தாய்...என்னை பற்றி உன்னிடம் சொல்லியபின்பு விலகி செல்கிறாயா இல்லை என்னை மறுபடியும் விரும்பி உன் ரகசிய குரலில் என்னை அழைப்பாயா எனக்கே தெரியாது. போகும் பாதை எது என்றாலும் இதுவரை உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில் உன் காலடி சுவடுகள். ஒரு ஜென்மம் இல்லை...நூறு ஜென்மம் ஆனாலும் எந்த கனவு காதல் எனக்கு போதும்.
உன் நினைவுகளில் என் சுவாசம் கூட சீராக வர மறுக்கும் தருணத்தில் நீ மூன்றாம் ஜாமத்தின் கனவுகள் முடியும் தருவாயில் இருப்பாய் . இந்த பின்னிரவு கடிதத்தை முடிக்கும் போதும் காற்றினூடாக இதன் அலைகள் உன்னை வந்து எழுப்பும் வரை நீ தூங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசையுடன் இந்த கடிதத்தை எழுதி முடிக்கிறேன் .
இப்படிக்கு..
ஜீவா L/O ரோசி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக