சனி, மே 12, 2012

கசக்கும் சர்க்கரை


எனக்கு எப்போதும் ஒரு கனவு வரும். அதில் ஒரு சின்ன தென்னம்தோப்பு பக்கதில் அழகான ஒரு சின்ன வயல். அந்த வயலில் நாள் முழுக்க வேலை பார்த்து அந்த தென்னம்தோப்பில் ஒரு கயித்து கட்டிலில் களைத்து உறங்கும் நான். அஆஹா இப்படி ஒரு ஆனந்தமான கவலை இல்லாத வாழ்க்கை என் கனவுக்குள் எப்போதும் வருவதுண்டு. ஆனால் எனக்கு கொஞ்சம் கூட சொந்தமாக நிலமும் இல்லை, நான் அப்படி வயலில் நாள் முழுக்க வேலை செய்ய முற்படவும் இல்லை. ஒருவேளை கைகளில் அழுக்கு படியாமல் கணினியில் தட்டிக்கொண்டே மாசம் பிறந்தால் சம்பளம் வாங்கும் ஒரு சராசரி வாழ்க்கைக்கு என்னை பழக்கிகொண்டதால்கூட இருக்கலாம். எப்படியோ நான் ஆஹா அருமையான ஆனந்தமான வாழ்க்கை விவசாயின் வாழ்க்கை என்று சொல்வதை நிறுத்திகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் தினசரிகளில் வரும் விவசாயிகளின் போராட்டம் நிறைத்த வாழ்க்கையை பார்கிறபோது, என்னுடைய கனவு கனவாகவே இருக்கவேணும் அது நனவாக வேண்டாம் என்று தான் மனது பிரார்த்திக்கிறது. டி.வி ஆன் பண்ணினால் விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அது பண்றோம் இது பண்றோம் என்று கூப்பாடு போடுகின்றன. தினசரிகளிலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், மானிய விலையில் விதைகள் தறோம், அது பண்றோம் இது பண்றோம் என்று அரசு துறைகளின் ஒரே பல்லவியை தான் பாடிகொண்டிருகின்றன. இவ்வளவு செய்தும் ஏன் இன்னும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடும் நிலைமை?


அண்மையில் தினசரிகளில் வந்த இந்த செய்திகளை பார்கிறபோது, நீங்க புடுங்குன ஆணி எல்லாமே வேஸ்ட்னு நல்லா புரியுது. வரும் காலத்தில் மக்களுக்கு பசி வந்தால் ஐ சி சிப்ஸ், மவுஸ் பேட் எல்லாம் எப்படி கடிச்சு சாப்பிடுறதுன்னு சொல்லி குடுங்கள். ஏன் என்றால் நீங்கள் இப்படியே அறிக்கை மேல அறிக்கை விட்டுகிட்டு இருந்தா இதை எல்லாம் தான் சாப்பிடுகிற நிலைமை வரும். கீழே வந்திருக்கும் செய்திகளை பாருங்கள்.

1. கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் ஒப்புதல்



2. கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் விரக்தி : கரும்பு பயிரை தீயிட்டு கொளுத்திய விவசாயி

தீயிட்டு எரிப்பு



இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிவேல், 34 என்பவர் மூன்றரை ஏக்கர் கரும்பு சாகுபடி செய்திருந்தார். கட்டிங் ஆர்டர் கிடைத்து கரும்பு அறுவடை செய்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட கரும்பை ஆலைக்கு அனுப்ப முடியாமல் விரக்தியடைந்து, மீதமிருந்த ஒன்றரை ஏக்கர் கரும்பை நேற்று தீயிட்டு கொளுத்தினார்.


கண்ணீர் விட்ட விவசாயி


இது குறித்து விவசாயி மணிவேல் கூறுகையில்,"கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மூன்றரை ஏக்கர் கரும்பை பதிவு செய்திருந்தேன். கடந்த 2 மாதத்திற்கு முன் கட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பிய நிலையில் திடீரென ஆலை ஊழியர்கள் பேராட்டத்தால் கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்ப முடியவில்லை. போதிய தண்ணீர் இல்லாததாலும், மின்வெட்டு பிரச்னையாலும் கரும்பை பராமரிக்க முடியாமல் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஒன்றரை ஏக்கர் கரும்பை தீயிட்டு கொளுத்தினேன்' என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த லட்சணத்தில இருக்கிறது உங்களின் விவசாயிகளின் மேல் உள்ள அக்கறை. அட நீங்கள் நான் கண்ட கனவை கூட காண வேண்டாம், பாவப்பட்ட விவசாயிகள் வியர்வை சிந்தி உருவாக்கும் உணவு தானியங்களை வாங்குவதற்கும் அதை சேமித்து வைத்து விநியோகம் செய்யவுமா உங்க பாழாப்போன அரசாங்கதால செய்ய முடியல.


யாரோ சொன்னது (யார் என்று ஞாபகம் இல்லை) "என்றைக்கு ஒரு நாடு விவசாயத்தை அடிப்படையாக வைத்து பட்ஜெட் போடுகிறதோ, அந்த நாடு வல்லரசாகும் நான் வெகு தொலைவில் இல்லை". ஒரு நாடு என்பது உணவு தானிய விளைச்சலில் மட்டுமில்லை, அதன் கையிருப்பு அளவிலும் தன்னிறைவு பெற்று இருந்தால் தான் அந்த நாடு வளமான நாடாக இருக்கும். ஆனால் இங்கே எல்லாமே தலை கீழாக நடக்கிறது. ஒருவேளை உணவு இல்லாமல் அல்லல்படும் மக்கள் ஒரு பக்கம், இருப்பதை வீணாக்கும் அரசாங்கம் ஒரு பக்கம். எம். ஆர் ராதா சொன்னதுபோல் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"


அந்த விவசாயியின் கவலை நிறைந்த முகத்தை பார்க்கிறபோது...."சர்க்கரை பாயசம் கூட உப்பு பாயசமாக தொண்டைக்குழியில் கரிக்கிறது!"


இப்படிக்கு



ரசிகன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக