வெள்ளி, பிப்ரவரி 17, 2012

வ்வேவேவேவே.... (மீள் பதிவு)




நன்றி: வெளியூர்க்காரன்!



உலகத்துலேயே பொண்ணுங்க சொன்னா மட்டுமே அழகா இருக்கற ஒரே வார்த்தை......."வெவ்வெவே"..ஆண்கள் நாம என்னதான் பொண்ணுங்கள விட அழகுலையும் திறமைலையும் படிப்புலையும் பண்புலையும் இன்னும் இங்கு விட்டு போன மற்றும் சில இத்யாதிகள்ளையும் பெண்களால தொடவே முடியாத அளவுக்கு உயரத்துல இருந்தாலும் இந்த வேவேவேவே விசயத்துல நாம பொண்ணுங்ககிட்ட தோத்து போறோம்ங்கரத ஈகோ இல்லாம ஒத்துகிட்டுதாங்க ஆகணும்... ஆமாம்க...ஒரு பொண்ணு உதட்ட சுளிச்சு வேவேவேவே சொல்லும்போது...ப்ச்.அதாங்க..அது மட்டும்தாங்க...ஆனா பாருங்க இதே வார்த்தைய நான் தனியா கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி பார்த்தேன்...வண்டலூர் ஜூ ல ஆண் கொரில்லா குரங்கு, பெண் குரங்க செக்சுக்கு கூப்டுற மாதிரி இருந்துச்சு...அதனால இது பெண்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தைன்னு இந்த ஜீவா அங்கீகரிசிட்டான்.இது பெண்கள் சாம்ராஜியத்தோட ஆட்சி மொழி...ஒரு பொண்ணு வேவேவேவே சொல்லும்போது எந்த ஒரு ஆணா இருந்தாலும் அவன் மனசு தடுமாருவாங்கறது ஜீவா சைகாலஜில ப்ரூவ் பண்ணப்பட்ட உண்மை...

ஆனா இந்த வெவேவேவால நான் பட்ட பாட்டதாங்க உங்களால தாங்கிக்கவே முடியாது..உங்களுக்கே தெரியும் ஐந்தே ஜீவா இளைய தளபதி விஜயோட அதிதீவிர ரசிகன்னு..எந்த விஜய் படம் பார்த்தாலும் அந்த படத்துல வர்ற விஜய் கேரக்டர் மாதிரியே கொஞ்ச காலம் வாழ்ந்து வருவான்..நான் சொல்லபோற சம்பவம் நடந்தது சச்சின் ரிலீஸ் ஆன காலகட்டம்..அப்பல்லாம் எந்த அழக யாருகிட்ட பார்த்தாலும் உடனே ஓடி போய் பாராட்டி சொல்லிடறது வழக்கம் ..பக்கத்துக்கு வீட்ல குனிஞ்சி கோலம் போடற ஆண்ட்டி,ஷால் போடாம சுடி போட்டுகிட்டு மிடுக்கா வர்ற கூட படிக்கற ஷீலா,ஜீன்ஸ் பேன்ட்ட டைட்டா போட்டுக்கிட்டு லேடீஸ் பேக ஆட்டிகிட்டே வர்ற சரளா இவங்க எல்லார்கிட்டயும் போய் முறையே கோலம் நல்லாருக்கு,சுடிதார் நல்லாருக்கு,லேடீஸ் பேக் நல்லாருக்குன்னு பாராட்டி சொல்லி அலப்பறைய குடுத்து அப்லாசுகள அள்ளிகிற்றுந்த காலகட்டம்..அப்படியே கட் பண்ணீங்கன்னா...

ஒரு பொண்ண பார்த்தேங்க...அவ ரெண்டு கண்ண பார்த்தேங்க..அயோயோ.அயோயோயோயோ..அதே அதே அதே அதேதாங்க....அப்போதான் அதையும் பார்த்தேங்க..எது..? எதையா..இருயா சொல்றேன்..தோழிகள் புடை சூழ சிரிச்சு பேசிகிட்டே வந்த அந்த தேவதை பீசு திடீர்னு அவ பிரெண்டு அந்த குள்ளச்சிய பார்த்து வேவேவேன்னு பலிப்பு காமிச்சா..ச்சே,என் சித்தப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ அவருக்கு எப்டி வலிசிருக்கும்னு எனக்கு அப்போதாங்க தெரிஞ்சுது...ஒரு ஸ்மால் கட்டிங் பலிப்புல,பயபுள்ள என்ன இழுத்துபோட்டு அவ காலடில கவுத்தீட்டாங்க...விட்டனா..நம்மதான் சச்சின் ஆச்சே...நேர அந்த புள்ளைகிட்ட போனேன்..எக்ஸ்கியூஸ் மீ..எனக்கு எதாச்சும் அழகா தெரிஞ்சா உடனே போய் பாரட்டிருவேன்.நீங்க இப்போ வேவேவேணு சொன்னது உங்கள விட ரொம்ப அழகா இருந்துச்சுன்னு சொல்லிட்டேன்..நாம யாரு...சச்சின்ல....

அந்த மாதிரி சீனுக்கு எல்லா படத்துலயும் கூட நிக்கற பிரெண்ட்ஸ் வாய கையால மூடிட்டு சிரிச்சுகிட்டே ஷாக்கிங்கா ஒரு எபக்ட் குடுப்பாங்க..ஆன அன்னிக்கு விதயாசமா நடந்துச்சு..எல்லாம் பேயடிச்ச மாதிரி நின்னாலுக .நாம்தான் ரொமான்ஸ் காமெடி மூட்ல இருந்தமா...அவளுக ரியாக்சன் ஒரு பெரிய விஷயமா தெரியல .அப்பதாங்க நானே எதிர்பார்க்காத மாதிரி ஒரு விஷயம் நடந்துச்சு...சட்டுன்னு திரும்பி அந்த வேவேவே பலிப்புக்காரி என் மொபைல் நம்பர கேட்டா..தக்காளி அந்த செகண்ட் இருக்கே..மறுபடியும் வாழ்க்கைல வரவே வராதுயா..காலுல விழுந்தாலும் பிகர் மடியாத நமக்கு தானா வந்து காலடியில ஒரு பிகர் விழுதேன்னு அங்காலம்மனுக்கு நன்றி சொல்லிட்டு என்னோட ஆபீஸ் விசிட்டிங் கார்ட எடுத்து நீட்னேன்..(காதல்ல விளம்பரம் ரொம்ப முக்கியம் பா..)

அன்னிக்கு ஈவினிங் வரைக்கும் மொபைல கைல வெச்சுகிட்டே வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன்..நாதாரி பயலுக அன்னிக்குன்னு பார்த்து எந்த நாயும் எனக்கு கால் பண்ணவே இல்ல..கரெக்டா மணி 7.48pm...ஜெர்மனியின் செந்தேன்மலரே....(என்னோட ரிங்க்டோன்..)..அட்டென்ட் பண்ணேன்.....................!

யாருன்னே தெரிலங்க...ஒருத்தன் போன் பண்ணி எங்கப்பாவே பச்சை பச்சையா திட்டுனான்...நான் அப்பவும் சொன்னேன்...நீங்க என் அப்பாவ திட்றத பத்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல பிரதர்...பட் நீங்க யாருன்னு சொல்லிட்டு திட்டுங்கன்னு..சண்டாளப்பாவி..கோவக்காரன் போலருக்கு...என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டான்...உங்களுக்குத்தான் என்ன பத்தி தெரியுமே..கன்னாபின்னான்னு கோவம் வந்தா போன கட் பண்ணிட்டு நேரா பாத்ரூம் போய் பேன்ட்லையே யூரின் இருந்து பயத்த கண்ட்ரோல் பண்ணிடுவேன்னு..அன்னிக்கும் அப்டிதான் பண்ணேன்..ஆன என் கேட்ட நேரம்..!

அந்த புள்ளைக்கு அஞ்சு அண்ணனுகளாம்...உலகத்துலேயே கொடுமையான விஷயம் அழகான ஜிகுடிகளுக்கு முரட்டு அண்ணணுக இருக்கறதுதான்..ஏன்டா செகண்ட் லைன் ஆக்டிவேட் பண்ணோம்னு அன்னிக்குதாங்க பீல் பண்ணேன்.ஒருத்தன் திட்டிகிட்டு இருக்கான்..இன்னொருத்தன் செகண்ட் லைன்ல வெயிட் பண்ணிகிற்றுகான்..ஒரு நிமிஷம் இருங்கன்னேன் உங்க தம்பி வெயிட் பண்றாருன்னு 2 வது அண்ணன் சார்கிட்ட(இன்னும் பயம் போகல.) அனுமதி வாங்கிட்டு 3 வது அண்ணன்கிட்ட போனேன்..ஆன சும்மா சொல்லகூடாது...அவர் ரொம்ப டீசெண்டுங்க..அந்த குடும்பத்துலயே நல்ல வேலைல இருக்கறது அவரு மட்டும்தானாம்..(வெல்டிங் பட்டறை வெச்சுருகாராம்..).திட்றதுக்கு முன்னாடி இன்ட்ரோ பண்ணிகிட்டாறு.ஆன கெட்ட வார்த்தைல திட்றதுல அவரு எந்த கம்ப்ரமைசும் பண்ணிக்கல...தொழில் நேக்கா திட்னாறு..எனக்கெல்லாம் திட்டு வாங்கறது புதுசிள்ளதான்..ஆன அன்னிக்கு திட்டு வாங்கினது ரொம்ப புதுசா இருந்துச்சு...புதுசு புதுசா திட்னாங்கே...வேவேவே நல்லாருக்குன்னு சொன்னியாம்ல..உனக்கு தாடையே இல்லாம பேத்து எடுதுருவேன்னு 4 வது அண்ணன் ரொம்ப அன்போட எச்சரிச்சாறு..அப்போ ரெண்டாவது அண்ணன் மறுபடியும் லைன்ல வந்தாரு..

நீ நாளைக்கு உன் ஆபீஸ் வாடி அங்க வெச்சுக்குவோம் கச்சேரியன்னு மிரட்டல் விடுத்தாறு....நானும் வழக்கம் போல வாய் சும்மா இல்லாம உங்களுக்கு எப்டின்னேன் என் ஆபீஸ் தெரியும்னு கேட்டுபுட்டேன்...அதுக்கு ரொம்ப அழகா பாசத்தோட ஒரு பதில் சொன்னாரு...நீதானடா விசிட்டிங் கார்ட என் தங்கச்சிக்கு குடுத்த எருமைமாட்டு உலக்கைன்னு...

இப்பவும் கூட அந்த அஞ்சு அண்ணனுங்களுக்கும் குடும்பத்துல எதாச்சும் பிரச்சனைனா கூட எனக்குதான் போன் பண்ணி திட்டுவாங்கன்னா பார்த்துகோங்க..அவ்ளோ பழகிட்டோம்..அந்த மூணாவது அண்ணன் இந்த பொங்கலுக்கு கூட கால் பண்ணி உன் கால வெட்டி காக்கைக்கு போட்ருவண்டா நாயேன்னு திட்னாறு..ஏதோ அன்னிக்கு பொங்கல் சரியா பொங்கல போலருக்கு..ஆன அதோட விட்டுடேங்க...விஜய பார்த்து விஜயா வாழற வழக்கத்த...

இப்பல்லாம் பொண்ணுங்க வேவேவேன்னு பலிப்பு காமிச்சா ரொமான்ஸ் மூடே வரமாட்டேன்குதுங்க...

பயத்துல யுரின்தான் வருது..கருமம் அதுவும் பேன்ட்லையே ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக