புதன், செப்டம்பர் 04, 2013

ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்...

Chill பியர் மாதிரி என்னோட ஊரு...நறுக்குன்னு நாலு பிரண்ட்ஸ். பறக்கறதுக்கு Bike...சினிமா, பீச், Shopping Malls, பொண்ணுக காலேஜ்-னு இருந்த ஜீவா லைப்ல திடீர்னு உள்ள வந்து யு டேர்ன் அடிச்சு திரும்பி போன சாக்லேட் தருணங்கள்... நினைகிறப்பவே மனசுக்குள்ள ஜில்லுன்னு ஏசீ போட்ட மாதிரி குளிர வெக்கற அந்த ஐஸ் கிரீம் வினாடிகள்...அந்த ஐஸ் க்ரீமோட செர்ரிஸ்..ஜீவாவோட கேர்ள் பிரண்ட்ஸ்..




ஆமாம்க...எல்லா பசங்களுக்கும் படியளக்கற எங்க ஊரு...எனக்கும் அளந்துச்சு...சில ஹைக்கூ கவிதைகள...மௌனராகம் கார்த்திக்கோட சந்திரமௌலி ஸ்டைல்ல கொஞ்சம்,மோகனோட ஓவர் ஆக்டிங்ல கொஞ்சம்னு ஒரு மாதிரியா கலந்து கட்டி பெர்பார்ம் பண்ணி தலைகீழ நின்னு தண்ணிகுடிச்சு குட்டிகரணம் அடிச்சு உஷார் பண்ண ஆண்டவனோட லிமிடெட் எடிசன் அவளுக...


எல்லாத்துக்கும் சிரிச்சிகிட்டே இருப்பா ஒருத்தி...எது சொன்னாலும் சிரிப்பா,ஏண்டி லூசு மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னா அதுக்கும் சிரிப்பா...அழகா இருக்கேன்னு சொன்னா சிரிப்பா..மழை பெஞ்சா சிரிப்பா..பைக்ல வேகமா போனா பயத்துல சிரிப்பா..அட காபி சூடா இருந்தா சிரிப்பான்னா பார்துக்குங்களேன்....மொத்ததுல சிரிப்பா..அவளுக்கு ரொம்ப புடிச்சது சிரிக்கறது..எனக்கு புடிச்சது அவ சிரிக்கறது...அவ சிரிக்கறது நெனச்சு என்ன போர்வைக்குள்ள தனியா சிரிக்க வெச்ச சிரிப்பு பட்டாம்பூச்சி அவ...அதுவும் பூ போட்ட ப்ளூ கலர் சுடிதார்ல அவ சிரிக்கற அழக பார்த்து சிரிச்சிகிட்டே செத்துடலாம் போல இருக்கும்...பயபுள்ள அவ்ளோ அழகு...


இன்னொருத்தி கண்ணாலேயே கம்பராமாயணம் பேசற பழைய பட்டுபாவடை...புத்திசாலித்தனத்தால என்ன ஆச்சர்யப்பட வெச்ச க்யுட்டான பெய்ண்டிங் ..1923 ல போறந்துருக்க வேண்டியவ...நெறைய பேசுவா..நெறைய அட்வைஸ் பண்ணுவா..அவள பேசவிட்டு கேட்டுகிட்டே இருக்கலாம்..என்ன ஒன்னு..கேட்டுகிட்டு மட்டும்தான் இருக்கலாம்..அவளுக்கு அடுத்தவங்க பேசுனா புடிக்காது..அவ்ளோ அகம் புடிச்ச அழகான கழுதை...மூக்குக்கு மேல மட்டும் இல்ல, மூக்குக்கு சைட்ல,மூக்குக்கு பக்கவாட்லனு எல்லா சைட்லயும் கோவம் பொத்துக்கிட்டு வரும்,நான் ரசிச்சு பழகுன திமிர் புடிச்ச ராட்சஷி...அந்த ராட்சசிகிட்ட புடிச்சதே அந்த திமிர்தான்..திடீர்னு ஒரு நாள்,என் ஸ்டேஷன் வந்துடுச்சு நான் ஏறங்கிக்கறேனு சொல்லி விடுவிடுன்னு விட்டுட்டு போய்ட்டா..ஏன் என்ன திடீர்னு புடிக்காம போச்சுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் தெரியல..


இன்னும் சில பொண்ணுங்க வந்து போனாங்க...சிலர் வந்த வேகத்துல போனாங்க...பார்த்த ரெண்டாவது நாளே ஏன் இன்னும் சாப்டாம இருக்கேன்னு உரிமையா இருக்றதா நெனச்சு நடிச்ச பொண்ணுங்களயெல்லாம் ஏன் புடிக்காம போனுச்சுன்னே தெரில...சட்டுன்னு புடிக்காம போய்டுச்சு...அவளுக பேர் கூட நினைவுல இல்ல..முகமும்தான்....


புடிக்குதோ புடிக்கலையோ...பொண்ணுங்க வேணும்ங்க...வாழ்க்கைய அழகாக்கறது அவங்கதான்..தலைய கோதி விட, சிகரட்ட புடிங்கி ஏறிய, என்ன வெச்சுகிட்டு இன்னொருத்திய சைட் அடிக்காதடா பொறுக்கின்னு இடுப்புல கிள்ள,எத்தன மணிக்குடா என்ன பார்க்க வருவேன்னு ஏக்கமா கேக்க,பீச்ல வெச்சு காதோரமா மூச்சு விட்டுகிட்டே இன்டர்நேஷனல் பொலிடிக்ஸ் பேசி மனுசன மானாவாரியா குழப்ப,பைக்ல போகும்போது பயத்துல புடிக்கற மாதிரி கட்டிபுடிசிக்க,செல்லமா குட் நைட் செல்லம்னு மெசேஜ் அனுப்ப, குழந்தைதனதோட க்யூட்டா ஒரு கேர்ள் பிரென்ட் கண்டிப்பா வேணும்ங்க..


எனக்கு இந்த பொண்ணுங்க மேல இருந்தது காதலா இல்ல நட்பான்னு சொல்ல தெரில...ஆனா,அவங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்படும்போது ஏன்னே தெரியாம அவங்கள கட்டிக்கபோற பசங்க மேல கொஞ்சமா பொறாம வந்துது...வரக்கூடாதுதான் ஆனாலும் வருது...குடுத்து வச்சவன்டான்னு மனசு மைல்டா பொலம்புது...


காலம் என்ன அவங்ககிடேர்ந்து பிரிக்கல...பிச்சு போட்டுடுச்சு...ரொம்ப தூரம் போய்டாங்க...இனி பார்ப்பனானு கூட தெரில...எப்பவாவது ஊருக்கு போகும்போது எங்கயாவது பார்துடமாட்டமான்னு மனசு ஏங்கி கண்ணு கண்டிப்பா தேடும்... நெல்லையப்பர் கோயில், RMKV காம்ப்ளெக்ஸ், தென்காசி போகிற வழி, அம்பாசமுத்திரம், அக்ரகார தெரு, நான் படிச்ச institute, நான் இருந்த தெரு..இப்டி எங்கயாவது....கண்டிப்பா பார்க்கணும்...நான் பார்க்கிறதை அவங்க பார்க்காம..


அட சொந்த கதைல சொல்ல வந்த மேட்டர சொல்ல விட்டுட்டேன் பாருங்க...லைப்ல நடந்த ஒரு சந்தோசத்த இன்னொரு சந்தோசம் மறக்கடிக்கணும்... அதான் வாழ்க்கை....


அப்படி ஒரு சந்தோசம் என் வாழ்க்கையில இருந்துச்சு....யுவாஞ்சலி என்கிற ஒரு ரோஜா பூந்தோட்டம்...

அந்த பூந்தோட்டத்தில் ரோஜாக்கள் வாடாமல் பார்த்துக்க....இப்போது ஒரு திமிரு புடிச்ச அழகான ராட்சசியும் இருகிறதால...

ஜீவா....இன்னும் சந்தோசமா தான் இருக்கிறான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக