திங்கள், ஆகஸ்ட் 03, 2009

காதல் எப்போதும் புதுசுதாங்க....



வார்த்தைகள் வேண்டாமே....!!! இந்த கிளிபிங்க்ஸ் பாருங்க..!!


உறவாடி கலந்தோம் ...மறந்தோம்!


எப்படி இருந்த நாம் எப்படி ஆயிட்டோம்...


ஞாபகங்கள் எப்போதும் பின்னோக்கி செல்லும்போது மறக்க முடியாதது மழை..மழைக்காலம்!


சின்ன வயசில மழை நமக்கு எல்லாம் ஒரு விளையாட்டு தோழன் / தோழி. தண்ணீரிலே பிறந்தாலோ என்னவோ தண்ணீர், மழையை பார்த்தால் அப்படி ஒரு ஆர்வம் நமக்குள்.


டேய் ...மழையில விளையாடதே! அம்மாவின் குரல் கேட்டதும் மழையில கை நனைத்து விளையாடுறத கொஞ்சம் நிறுத்திக்குவோம். இருந்தாலும் மனசு அலை பாயும். அம்மா பார்க்காத நேரம் பார்த்து ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு மறுபடியும் விளையாட ஆரம்பிச்சிடுவோம். மழையில நனைந்து விளையாடும் பக்கது வீட்டு புள்ளைங்களை எல்லாம் ஏக்கத்தோடு பார்த்துகிட்டு நிப்போம். சாரல் முகத்தில வந்து அடிக்கிறப்ப உடம்பு சிலிர்க்க அந்த கணமே கண்ணை மூடி ரசிப்போம். மழை கொஞ்சம் விட்டதும், வெளிய போய் என்ன எல்லாம் மாற்றம் நடந்திருக்குன்னு ஒரு ரவுண்டு பார்த்துகிட்டு வருவோம். இப்படி மழை காலத்தின் ஒவ்வொரு அசைவையும் அணு அணுவா ரசிச்ச நாம...எப்படி இருந்த நாம....இப்படி ஆயிட்டோம்..

எப்படி???????

மழை வந்த ஓடி ஒளிஞ்சுக்கிறோம். கேட்டால் ஆயிரம் காரணம் சொல்கிறோம். மழையில நனைந்தா காய்ச்சல் வந்துடும்பா ! மழையில நனையாட்டி காய்ச்சல் வரதா? அது ஒண்ணுமில்ல காய்ச்சல் பழகிடிச்சு ஆனால் மழை தான் பழக்கமில்ல!
-----மழை இன்னும் பெய்யும்...

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2009

துளி துளியாய்...


ஏய் ...அங்க என்னப்பா நடக்குது? ஒரே கூட்டமா இருக்கு?
அது ஒண்ணுமில்ல, ஊருல மழை பெய்யலேனு தவளைக்கும் தவளைக்கும் கண்ணாலம் பண்ணி வைக்குறாங்கலாம்!
அட என்ன கொடுமைடா சாமி !... இவங்கள திருத்தவே முடியாது.

உஷ் .....அப்பாடா என்ன வெயிலு என்ன வெயிலு ...மனுஷனுக்கு வெளிய எறங்க முடியுதா? இந்த மழை எப்ப தான் பெய்யுமோ?

மழை சிரித்தது ...ஹ்ம்ம் இந்த மனுசங்க நம்மளை ரொம்ப தான் தேடுறாங்க..
சரி போய்தான் பார்ப்போமே ....!

சே...சனியன் புடிச்ச மழை எப்ப பெய்யனும்னு ஒரு வெவஸ்தையே இல்ல....
இன்னைக்கு பார்த்து பெய்யுது பாரு...இப்ப எப்படி வெளிய போறது?

மழை அழுதது ....

இரண்டு நாள் பெய்த மழையில் வாழை தோட்டம் எல்லாம் நாசமா போச்சுங்க..ரொம்ப நஷ்டமா போச்சு ...கவர்மென்ட் பார்த்து எதாவது செஞ்சாதான் எங்களால வாழ முடியும்..

மழை இன்னும் அழுதது...