ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,
நான்
ஒரு புன்னகை கேட்டபோது
ஒரு கோப்பை தேனீர் கேட்டபோது
ஒரு சந்திப்பு கேட்டபோது
ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,
நான்
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியபோது
ஒரு குளிர் பார்வை தந்தபோது
ஒரு எதிர்பாராத நெருக்கத்தில் நின்றபோது
ஒரு ஏக்கபெருமூச்சு தந்தபோது
ஒரு கதை சொன்னபோது
ஒரு கவிதை எழுதியபோது
ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,
நான் ஒரு காதல் கேட்டபோதும் கூட
ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,
இன்று
நானும் மௌனத்திலேயே உழலுகிறேன் !