ஞாயிறு, ஜனவரி 13, 2013

செல்போன் (பல்பு வாங்கிய கதை)



செல்போன் பிரபலமான ஆரம்பகாலத்தில் ஒரு மோட்ரோலா போன் வைத்திருந்தேன். ஜிம் போக வேண்டிய அவசியம் இல்லாமல் இரண்டரை செங்கல் சைஸுக்கு இருக்கும் அந்த ஃபோனை வைத்தே ஆர்ம்ஸ் ஏத்துவேன். மெட்ராஸ் வெய்யில் மாதிரி அதற்கு ரிங்டோன் வால்யூம் high higher highest என்று தான் இருக்கும். யாராவது அழைத்தால் பக்கத்திலிருப்பவரையும் சேர்த்து பதறவைக்கும். "ஆங் நல்லா இருக்கேங்க..அப்புறம் என்ன விசேஷம்" என்று ஆரம்பிக்கும் போது படக்கென்று கோவித்துக் கொண்டு ஆஃப் ஆகிவிடும். அதனாலேயே சார்ஜ் போட்டுக்கொண்டே பேச வேண்டிய நிர்பந்தம். ஒயர் வேறு நீளமாக வராது குனிந்து கொண்டே பேச வேண்டி இருக்கும். அதை விட கார்ட்லெஸ் ஃபோனிலேயே நடந்து கொண்டு மொபைல் மாதிரி பேசலாம் என்பதால் இந்த சனியனுக்கு நீங்க லேண்ட் லைன்லயே கால் பண்ணுங்கன்னு சொல்லிவிடுவேன். அப்புறம் நோக்கியா வந்து கைகொடுத்தது. செல்லமாய் சத்தமே இல்லாமல் சினுங்கும். பேட்டரியும் ஒரு நாள் முழுக்க வரும். கேமிரா கலர் ஸ்க்ரீன் என்று டெக்னாலஜி வளர்ந்து எங்கேயோ போய் விட்ட போதும் ரொம்ப நாள் ப்ளாக் அண்ட் வொயிட் நோக்கியாவிலேயே இருந்தேன்.

அப்புறம் சோனி,சாம்சங் என்று பலதும் வந்து போனாலும் எல்லா மாடல்களுமே மார்க்கெட்டிற்கு வந்து பழசாகி இரண்டு வருடங்கள் கழித்தே பிராப்தியாகியிருக்கின்றன. இந்த ஃபோனா வைச்சிருகீங்கன்னு துக்கம் கேட்கும் அளவிற்கு சில போன் மாடல்கள் வைத்திருந்திருக்கிறேன். சமீபத்தில் GREECE போனபிறகு தற்போதைய லேட்டஸ்ட் மாடலான SONY XPERIA வாங்கினேன். போன் வந்ததிலிருந்து நீங்க என்ன மாடல் போன் வைச்சிருக்கீங்க என்று பார்ப்பவரை எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பத்துக்கு ஆறுபேர் மட்டுமே திரும்பவும் என்னிடம் நீங்க என்ன மாடல் வைச்சிருக்கீங்கன்னு கேட்டு நோக்கத்தை பூர்த்தியாக்குகிறார்கள்.

போன வாரம் பஸ்ஸில் ஒரு ஒரு சுமார் ரகம் பிகரு பக்கத்துல வந்து உட்காந்துது. உடனே எனக்கு கால் வந்து "ஹலே துபாயா" என்று பேசவேண்டியதாகிவிட்டது."ஹீ ஹீ மை ப்ரதர் மார்க்" என்று அந்தப் பெண்ணிடம் சமாதானம் சொல்லி முடிக்கும் போது அந்தப் பெண் ஐபோன் 5ஐ கையில் வைத்திருந்தாள். இந்த முறை விடுவதாயில்லை என்று SONY XPERIA ஐபோனைவிட எப்படி உசத்தி என்று பதினைந்து நிமிடம் போட்டு தாக்கி விட்டேன். அந்த பெண்ணும் பொறுமையாய் கேட்டுக்கொண்டு ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டார். ஹ..யாரு கிட்ட என்று எனக்குள் பெருமைபட்டிக்கொண்டிருக்கும் போது அந்தப் பெண் அசால்டாய் இன்னொரு பாண்ட் பாக்கெட்டிலிருந்து SONY XPERIA எடுத்து அதில் அவருக்கு என்ன என்ன பிடிக்கவில்லை என்று பட்டியிலட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் என்க்கு வெறும் காத்து தான் வந்தது என்பதை விட முக்கியமான விஷயம்  - இப்போதெல்லாம் ப்ரதர் மார்க் துபாயிலிருந்து என்னை அழைப்பதே இல்லை. 


முக்கியமான விஷயம்: எங்கிட்ட  இருந்த போன்ல கால் வரவே வராது. நானாகவே கால் வர மாதிரி அலாரம் செட் பண்ணி வச்சிருந்தேன். பிகரு யாராச்சும் பக்கத்துல சிக்குனா உடனே எடுத்து பீட்டர் விட ஆரம்பிச்சிடுவேன். (இந்த ரகசியம் கடுகளவு வெளிய கசிஞ்சா கூட சேகரு செத்துருவான். Please இந்த டீலிங் நமக்குள்ள சீக்ரெட்டா இருக்கட்டும்.)



இப்படிக்கு
பல்பு வாங்கிய ரசிகன்

செவ்வாய், ஜனவரி 01, 2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


இப்படிக்கு
ரசிகன்