மழை எப்போதும் எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வுகளை தூண்டிவிடுகிறது. என்னுடைய மனநிலையை பொறுத்து மழை பெய்கிறதா இல்லை அதனுடைய தாக்கம் என்னுள் உணர்வுகளை தட்டி எழுப்புகிறதா எனக்கு புரியவில்லை.
சாலையை கடக்கும் பொழுது அவள் பார்வை என்னை கடந்தது.
அங்கே பெய்தது சாரல் மழை...
மீண்டும் மீண்டும் கண்கள் சந்தித்தபோது...
அங்கே பெய்தது சந்தோஷ மழை..
அவளுடனான காதல் எனக்குள் வந்தபோது
எனக்குள் பெய்தது காதல் மழை
அவளை காணமல் தவித்த பொழுதுகளில்
அப்போதும் பெய்தது கண்ணீர் மழை
பிரிந்தவர்கள் மீண்டும் சந்தித்தபொழுது
எங்களுக்குள் பெய்தது சங்கீத மழை...
தனிமையில் இரண்டற கலந்த பொழுது..
இரவெல்லாம் பெய்தது முத்த மழை..
எதையும் அந்த சூழ்நிலைக்கு தன்னை மாற்றி கொள்வதுதான்....மழை !....எனக்கு புடிச்ச மழை !!!!
காதலுடன்
ரசிகன்
காதலுடன்
ரசிகன்