ஆத்துல எல்லாரும் கலையிலே சேச்சு மாமா வீட்டு விஷேசத்துக்கு கிளம்பிண்டிருந்தாள். எனகென்னமோ இந்த லேப்டாப் வந்த பிறகு எங்கயும் போக பிடிக்கல. அதையே கட்டிண்டு அதையே ஈஷிண்டு அதுல எதாச்சும் பண்ணிண்டு இருக்கிறதுல ஒரு சந்தோசம். அம்மா கூட முந்தநாள் சொன்னா...ஏன்டா கலியாணம் கட்டிண்டு பொம்மனாட்டிய கொஞ்சுவியோ இல்ல அப்போவும் இந்த கருமத்த கட்டிண்டு மாரடிப்பியோ-னு. இவாள் எல்லாரும் இன்னக்கு சேச்சு மாமா வீட்டு விஷேசத்துக்கு போவாள் னு தெரிஞ்சுண்டு தான் நேத்திக்கே ஒரு பிரண்டுகிட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு பலான படம் CD வாங்கி பத்திரமா வச்சுட்டேன். அப்பிடி இதுல என்னதான் இருக்குனு இன்னைக்கு பாத்துடனும்-னு முடிவு பண்ணி நேத்தைக்கு நைட்டே எனக்கு லேசா ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்குனு சொல்லி சேச்சு மாமா வீட்டு விஷேசத்துக்கு போறதுல இருந்து கண்டம் தப்பிச்சேன்.
வீட்டில எல்லாரும் போனதும் வாசல் கதவ லாக் பண்ணிண்டு ஒரு சிகரெட் எடுத்து பத்த வச்சான் ஜீவா. வாய அஷ்டகோணலா வச்சுண்டு வளையம் வளையமா புகை விட ட்ரை பண்ணான். என்ன கருமாந்திரமோ வரவே மாட்டேனுடுத்து. சரின்னு சிகரெட்ட தூக்கி போட்டான். டைம் பார்த்தான். ஹ்ம்ம் நாழி ஆகுது, போனவா எல்லாரும் திடுப்புன்னு வந்துட்டா நம்ம போட்ட பிளான் எல்லாம் காலியாயிடும்.
மெதுவா அந்த CD எடுத்தான். ஈஸ்வரா இந்த கருமத்த பாக்குறதுக்குள்ள பிராணன் போயிட்டு பிராணன் வந்துடுது. என்னாச்சு நேக்கு உடம்பு நெருப்பா கொதிக்கிற மாதிரி இருக்கு. கை எல்லாம் நடுங்குது. CD லாப்டோப்ல சொருகி ப்ளேபண்ணி கண்கொட்டாம அதையே பார்துண்டிருந்தான். என்னமோ போ ஜீவா இன்னைக்கு நோக்கு நாளு நல்லாருக்கு காலம் காத்தாலே காலண்டர்ல போட்டிருந்தான்னு மனசுல நினைச்சுண்டு படத்தை பார்க்க ஆரம்பிச்சான். படத்துல முக்கியமான கட்டம்.
டொக்...டொக்.....டொக்...
கதவை யாரோ தட்டுற சத்தம் கேட்டு கை கால் எல்லாம் நடுங்கிடுத்து. ஐயையோ போனவா எல்லாரும் திரும்பி வந்துட்டாள் போலிருக்குனு ஒரு ஷனம் என்ன செய்றதுன்னு தெரியாம ஆடி போயிட்டான் ஜீவா. உடனே படத்தை ஸ்டாப் பண்ணா அதுவேற stuck ஆகி அப்படியே monitor ல நின்னுடுது. கதவை யாரோ மறுபடியும் மறுபடியும் தட்டிண்டு இருந்தாள். சரி CD -யாச்சும் வெளிய எடுக்கலாம்னு பார்த்தா, கஷ்ட காலம் அதுவும் வெளிய வர மாட்டேங்குது. ஸ்க்ரீன் ல முக்கியமான கட்டம் அப்படியே stuck ஆகி நிக்குது. போச்சு போச்சு இன்னைக்கு நம்ம மானம் போக போகுதுன்னு ஜீவா என்ன என்னமோ பண்ணான். பேசாம ஸ்க்ரீன்-ஐ உடைச்சுடலாமனு கூட யோசிச்சான் ஜீவா. ஐயோ ஆசை ஆசைய வாங்குன புது லேப்டாப். கை கால் எல்லாம் இப்படி வியர்க்குது. பக்கத்துல கிடந்த டவல் எடுத்து லேப்டாப் முழுசும் மூடி வச்சுண்டு ஓடி போய் ஜன்னல் துணிய விலக்கி பார்த்தா...பக்கத்தாத்து பரிமளம் மாமி நின்னுடிருந்தாள். அட ச்சே இந்த மாமிக்கு நேரம் காலமே தெரியாதா. இந்த நேரத்துல வந்து கதவ தட்டிண்டிருக்காளே.
என்ன மாமி என்ன வேணும். ஜன்னல் வழியே குரல் குடுத்தான் ஜீவா.
ஏன்டா அம்பி எவளோ நேரமா கதவ தட்டிண்டிருக்கேன். சித்த தொறக்கபடாதோ நோக்கு!
மாமி ஆத்துல யாரும் இல்லே..எல்லாரும் சேச்சு மாமா ஆத்துக்கு போயிருக்காள். வர நாழியாகும்-னு சொல்லிடு மாமிய விரட்டி விடுறதுலே குறியாய் இருந்தான் ஜீவா.
நீ மொதல்ல கதவ தொறடா கடன்காரா.
ஜீவா இன்னொருவாட்டி லேப்டாப் ஒழுங்கா மூடி இருக்கானு செக் பண்ணிண்டு மாமிய மனசுக்குள்ள வஞ்சுண்டு போய் கதவ தொறந்தான்.
மாமி வந்ததும் வராததுமா பெரிய குண்ட தூக்கி போட்டாள்.." கேட்டியோ...நம்ம விச்சு US - ல இருந்து நேக்கு ஈமெயில் போட்டிருக்கானாம். அவனும் அவன் ஆத்துகாரியும் போட்டோ எடுத்து அனுப்பிருக்காண்டா. உங்கிட்ட லேப்டாப் இருக்குனு நீ அவன்கிட்ட சொல்லிட்டியோன்னோ.அவனும் இங்க வந்து ஈமெயில் ஓபன் பண்ணி பார்க்க சொல்லிட்டான். அம்பி சித்த அந்த ஈமெயில் கொஞ்சம் ஓபன் பண்ணி காட்டுடா. நோக்கு புண்ணியமா போகும். இதை கேட்க கேட்க ஜீவக்கு தலை சுத்தல், வாந்தி, மயக்கம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வர மாதிரி இருந்து.
மாமி பேசிண்டே லேப்டாப் இருக்கும் ரூம் வரைக்கும் போயிட்டாள். நான் சித்த பிரம்மை புடிச்சவன் போல நின்னுண்டிருந்தேன். சட்டுன்னு சுதாரிச்சு மாமி லேப்டாப் வொர்க் ஆகலன்னு சொல்றதுக்குள்ளே..ஏன்டா அம்பி லேப்டாப் மேல டவல் போட்டு வச்சிருக்காய். ஓ..அம்புட்டு ஆசாரமா வசுண்டிருக்கியா னு சொல்லிண்டே மாமி செயர் இழுத்து போட்டு நல்ல சவுகரியமா லேப்டாப் முன்னால உட்காந்துட்டாள்.
மாமி அது ஒன்னுமிலே லேப்டாப்க்கு ஜூரம், அதான் டவல் போட்டு மூடி வச்சிருக்கேன் னு சமாளிச்சான் ஜீவா.
மாமி தாடையில கைய வச்சுண்டே ஏன்டா அம்பி மனுசாளுக்கு தானே ஜூரம் எல்லாம் வரும், இதுக்கு கூட வருமா னு எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.
மாமி இதும் மனுசாள் மாதிரி தான். சில நேரம் ஜூரம் எல்லாம் வரும். ஆனா மாமி நம்புன மாதிரி தெரியல. நீ அந்த டவல் எடுடா..நான் உன்னோட லேப்டாப் கொஞ்சம் பார்க்கட்டு னு மாமி அடம் புடிக்க ஆரம்பித்தாள். ஏன் மாமி இப்படி படுத்தறேள். நேக்கு என்ன செய்றதுன்னே தெரியல. மாமி அதை கொஞ்சம் ரிப்பேர் பார்துட்டு நான் நோக்கு சொல்றேன் அப்புறம் நீங்க வந்து ஈமெயில் பார்க்கலாம் னு என்ன எல்லாமா கதாகாலேட்சபம் மாதிரி சொல்லி ஒருவழியா மாமிய இழுத்து கொண்டாந்து வாசல்ல விட்டேன்.
என்னமோ அம்பி நோக்கு ஒண்ணுமே சரியாய்படலே-னு மாமி முனுமுனுதுண்டே நடைய கட்டினாள்.
மாமி போனதும் அப்பாட கண்டம் தப்பிச்சது பெருமாள் புண்ணியம் னு...ஜீவா ஓடி போய் லேப்டாப் மேல இருந்த டவல் எடுத்து உடனே லேப்டாப் பாட்டரி கழட்டி எடுத்த பிறகு தான்....எமகண்டம் ஸ்க்ரீன் பரலோகம் போச்சுது. அதுக்கு பிறகு லேப்டாப் ON பண்ணா ஒரு 108 error மெசேஜ் கந்தசஷ்டி கவசம் போல வந்துண்டே இருந்தது. எடுத்துண்டு கடைகாரன்கிட்ட போனா எதோ எதோ சொல்லி 300 ரூபாய் தண்டம்.
தெரியாமலா சொன்னார் புத்தர் ...ஆசையே துன்பத்துக்கு எல்லாம் காரணம்னு.!